புதன், 23 பிப்ரவரி, 2011

Award to archagar: காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகருக்கு முதுபெரும் அர்ச்சகர் விருது

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கொலைகளையும் கற்பழிப்புகளையும் கண்டுகொள்ளாமல்  இருந்ததற்காக விருதா? முதுமை என்பது  இயற்கை. அதற்காக மட்டும் விருது வழங்கக்கூடாது.  இறைப்பணி யாற்றியிருந்தாலும் மக்கட் பணியாற்றியிருந்தாலும் வழங்கலாம். விலை மக்களின் கூடாரமாகத்திகழ்வதற்கு விருது வழங்குவதன் மூலம் உண்மை  இறையன்பர்களை  இழிவு படுத்துகின்றனர். (தினமணி இக்கருத்தை வெளியிடா விட்டாலும் என் வலைப்பூவில் பதிவு இருக்கும். எனவே, நடுநிலைமை காக்க தினமணியே வெளியிட்டு விடலாம்.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்   
 <  தமிழே விழி ! தமிழா விழி! > 


காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகருக்கு முதுபெரும் அர்ச்சகர் விருது

காஞ்சிபுரம், பிப். 22: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மூத்த அர்ச்சகர் நீலக்கல் சி.என்.ராமசந்திர சாஸ்திரிக்கு முதுபெரும் அர்ச்சகர் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.காரைக்கால் அம்மையார் மாதவழிபாட்டு மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் தொண்டை மண்டல ஆதீனம் சீலத்திரு திருவம்பல தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள் இந்த விருதை வழங்கினார்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பல ஆண்டுகளாக அர்ச்சகர் பணி செய்ததைப் பாராட்டி சி.என்.ராமச்சந்திர சாஸ்திரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக