செவ்வாய், 16 நவம்பர், 2010

மனதுக்கு ஆறுதல்: கருணாநிதி

மார்க்சிஸ்ட் தீர்மானம் மனதுக்கு ஆறுதல்: கருணாநிதி

சென்னை, நவ. 15: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கத் தயார் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஜெயலலிதாவின் மனம் நோகக் கூடாது என்பதைப் போல, அந்தத் தீர்மானத்தில் மத்திய அரசையும் அதற்கு ஆதரவாக உள்ள திமுக அரசையும் பலவிதங்களிலும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கிறார்கள்.அவர்களது நோக்கம், அதிமுக தலைவியைக் குறை கூற வேண்டும் என்பதைவிட, மத்திய-மாநில அரசுகளையும் தாக்கிட வேண்டும் என்பதாகத்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியோடு அணி சேர வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் தானாக முன்வந்து அறிக்கை விடுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ அதைக் கண்டிக்கிறோம் என்ற அளவுக்காவது அறிவிக்கை விட முன்வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் ஓரளவுக்கு மனதுக்கு ஆறுதலாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

உண்மையாக ஆறுதல் தரக்கூடிய செய்திதான். ஏனெனில் நாளை காங். ஒட்டுதல் வெட்டப்படும் நிலை வந்தால் ஒட்டிக்க கொள்ள இதோ ஒரு கட்சி இருக்கிறது என்று சொல்லாமல் சொலலி அரசியல் புரிய வாய்ப்பாக உள்ளது அல்லவா? பறப்பதைப்பிடிக்க இருப்பதை இழக்க வேண்டா என்ற உணர்வைச் சில அரசியல் தலைவர்களுக்கும் உணர்த்துகிறது அல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 5:43:00 AM
எச்சிகலை கருமாதி!
By Truth
11/16/2010 5:18:00 AM
The CPI and CPM are dead parties of India and they have some support in West Bengal and Kerala but in the coming election they will die completely.Bharathan ,Raja,Karath,Yetzury are now digging a small ground to burry the age old parties in India.Why Karuna has given so much importance to these parties ?
By Kaaral Marx Pithan
11/16/2010 3:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக