ஞாயிறு, 14 நவம்பர், 2010

மதுரையில் பதாகை விளம்பரம்: அ.தி.மு.க. கண்டனம்

மதுரையில் பேனர்கள்: அ.தி.மு.க. கண்டனம்


மதுரை, நவ.12: மதுரை நகரின் பல இடங்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் திருமணத்தை வாழ்த்தி, விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என, அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.   இதுகுறித்து அ.தி.மு.க. மாணவர் அணி மாநிலச் செயலர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:    மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மெகா சைஸ் பிளக்ஸ் போர்டுகள், பேனர், கட்-அவுட் வைக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. மாநகராட்சியில் அனுமதி பெற்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு 3 நாள்களுக்கு முன்னதாக இதுபோன்ற பேனர்கள் வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வரும் 18-ம் தேதி அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் திருமணம் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒரு வாரத்துக்கு முன்பே நகரில் எங்கு பார்த்தாலும் விதிமுறை மீறியும், மாநகராட்சியின் அனுமதி பெறாமலும் மெகா சைஸ் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.    குறிப்பாக தமுக்கம் மைதானம் பகுதியில் பஸ் நிறுத்தம்கூட மறைக்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.     கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை வரவேற்று அதிமுகவினர் வைத்த பேனர்கள் விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸôர் அகற்றினர். 3 நாள்களுக்கு முன்புகூட பேனர் வைக்க அனுமதியளிக்கவில்லை.    ஆனால், வரும் 18-ம் தேதி நடக்கும் திருமணத்துக்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே நகரில் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  
கருத்துகள்

அம்மா ஆட்சியில் இரு்நதிருந்தால் என்ன நடந்திருக்குமோ அதுதான் ஐயா ஆட்சியிலும் நடக்கிறது. ஆனால், இத்தயை விளம்பரங்கள் குறுங்காலத்தில் பயன் அளித்தாலும் ஆட்சிக்கு எதிரான வெறுப்பையே உண்டாக்கும் என்பதை உரியவர்கள் புரிந்து கொ்ண்டால் சரி. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக