ஞாயிறு, 14 நவம்பர், 2010

அலைக்கற்றை ஊழல்:கிருட்டிணசாமி

ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழர்களுக்குத் தலைக்குனிவு: டாக்டர் கிருஷ்ணசாமி


ராமநாதபுரம், நவ. 12: மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னை உலகமெங்கும் வசிக்கும் தமிழக மக்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:    1999 கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கியதில் ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.  இதன் மொத்த மதிப்பு | 15 கோடி. ஆனால், வரலாறு காணாத ஊழல் செய்துள்ள மத்திய அமைச்சர் ஆ. ராசா குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுத்தும், இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தும் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.    தானாகவே முன்வந்து ராஜிநாமா செய்திருக்க வேண்டும். அல்லது தமிழக முதல்வரே தனது கட்சிக்காரர் என்றும் பாராமல் அவரை ராஜிநாமா செய்ய வைத்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் இச் செயல் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.      உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஊழல் தொகை | 1.76 லட்சம் கோடிக்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.            காங்கிரஸ்டன் கூட்டணி வைத்துக்கொள்ள ஜெயலலிதா தயார் என் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. ஏனெனில், அவர் பதவிக்காக அவ்வாறு சொல்லவில்லை. ராசாவை நீக்கி, தமிழக மக்களைக் காப்பாற்றவே அவ்வாறு அறிக்கை விடுத்துள்ளார்.     ஏழைகளுக்கு இலவசமாக 2 ஏக்கர் நிலம் வழங்குவதாகவும், வீட்டுமனை இல்லாதோருக்கு 3 சென்ட் வீட்டுமனை வழங்குவோம் எனவும் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அந்த இரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.  கலைஞர் வீடு கட்டும் திட்டம், இலவசமாக மின் மோட்டார்கள் வழங்கும் திட்டம் ஆகியவை ஏமாற்றுத் திட்டங்கள்தான் என்பதை மக்களும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.     
கருத்துகள்

தம் இன மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்ய உதவியர்கள், படுகொலைகளைக் கண்டு கொள்ளாதவர்கள். கொலையாளிகளுடன் கை கோத்தவர்கள், கொலையாளிகளை அரியணையில் ஏற்றியவர்கள்,கொலையாளிகளுடன் கை கோக்கத் துடிப்பவர்கள் எனப் பலதரப்பட்ட அரசியல் வாதிகளின் செய்கைகளால் உலகத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவைவிடவா வேறு தலைகுனிவு வரப் போகின்றது.?
இவண் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:46:00 AM
தணிக்கை அதிகாரி அரசின் கொள்கை தவறு என்றுதான் சுட்டிக் காட்டியுள்ளார்.அதே நேரம் பொதுமக்களுக்கு இதனால் என்ன நன்மை விளைந்திருக்கிறது என்று கூறவில்லை. ஊழல் நடந்திருக்கிறது என்றும் சொல்ல வில்லை. சொல்லவும் அவறுக்கு உறிமை இல்லை. குற்றம் கண்டுபிடிகப்பட வேண்டியது CBI யின் கடமை. தண்டனை கொடுப்பது நீதிமன்றத்தின் கடமை. பொதுவாக இந்தியாவில் உள்ள மெத்தப் படித்த அதிகாரவர்க்கத்தினருக்கும்(சசிதாரூர் போன்றவர்கள்), மேல் நிலை துறை தலைவர்களுக்கும், சமுதாயம் என்பது என்னவென்றே தெறியாது.
By அன்பன்
11/14/2010 3:06:00 AM
ஊழலையும் அனுமதிக்க முடியாது. அதற்கான வழக்கு மத்தியப் புலனாய்விலும், வழக்கு மன்றத்திலும் உள்ளது. அவைகளின் மீது நம்பிக்கை வைப் போமாக.இன்றாவது இப் பிரச்சனை வழக்கு மன்றம் சென்றுள்ளது. வாஜ்பாய்/அருண் ஷோரி/மஹாஜன் காலத்தில் யாரும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உள்ள இழப்பு, மொபைல் கட்டணம் குறைக்கப் பயன் பட்டுள்லது.ஆனால் ஜெயலலிதாவால் TANSI நிலம் வாங்கப் பட்டதில் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் பொதுமக்களுக்கு எந்தவகையில் பயன் பட்டது? அவரும் இதில் ராசாவுடன் மல்லுக்கட்டுகிறார்.
By அன்பன்
11/14/2010 3:03:00 AM
மெலும் BSNL/ MTNL mobile களத்தில் இல்லா பொழுது இந்த தனியார் நிருவனங்கள் அருண் ஷோரி/மஹாஜன் தயவால் கொள்ளைதானே அடித்தனர். BSNL/MTNL Mobile களத்தில் குதித்த பின்புதான் அவர்கள் கட்டண விகிதத்தைக் குறைத்தார்கள். இன்று நிலை என்ன? 1 நொடிக்கு 1 காசு. இதனால் நன்மை அரசுக்கா இல்லைப் பொது மக்களுக்கா? ஏல முறை வைத்தால் என்ன ஆகும்? இந்த இழப்பு அரசுக்கு ஈடு செய்யப் படும். ஆனால் 1.7 லட்சம் கோடிகள் அதிகம் கொடுத்து வாங்கிய நிறுவனங்கள் பொதுமக்களின் தலையில்தானே சுமத்தும். எந்த Tata, Birlaa, Reliance, Barti களும் அவர்கள் அப்பன் பாட்டன் வீட்டுச் சொத்தை விற்று மக்களுக்குச் சேவை செய்ய மாட்டார்கள். மக்கள் நன்மைக்காக அரசு ஒன்றுதான் நட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியும். காவல், மருத்துவம், சுகாதாரம், ஆகியவை அரசுக்கு நட்டம்தான். அவற்றையெல்லாம் அரசு தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டால், சாதாரண மனிதனின் நிலைமை என்ன ஆகும்? அரசு 1800 கோடியில் தானும் தனது மனைவியும் மட்டும் வாழ வீடு கட்டிக் கொள்ளும் அம்பானிகளும் அரசும் ஒன்றல்ல.
By அன்பன்
11/14/2010 3:00:00 AM
இந்த 2G அலைக்கற்றை ஒதுக்கீடு திரு. வாஜ்பாய் பிரதமராக இருக்கும் பொழுது, திரு.அருண் ஷோரி தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராக இருக்கும் பொழுது ஆரம்பிக்கப் பட்டது.அப்பொழுதும் ஏலமுறை அமல் ந்டத்தப் படவில்லை.முதலில் வந்தவர்களுக்கு முன்னுறிமை என்றும் இல்லை. அரசே ஒவ்வொரு மானிலத்துக்கும் 4 தனியார் தொலைத் தொடர்பு இயக்குனர்கள்(Companies) என்று வரையறுத்து அலைக்கற்றையும் ஒதுக்கியது. அது மட்டும் இன்றி அரசுத் துறை நிருவனங்களான BSNL,MTNL ஆகியவைகளுக்கு அலைக் கற்றை ஒதுக்காது, அவைகள் Mobile துறையில் பங்கேற்க தடை செய்து வைத்தவர்கள் இந்த அருண் ஷோரியும் மஹாஜனும்தான். அதன் பின்பு தனியார் நிறுவனங்களால் Mobile Customer Base முழுமையாக விழுங்கப் பட்ட பின்பு அரசு நிறுவனகளை அனுமதித்தார்க்ள். அதனால் BSNL/MTNL Mobile Sector இல் தனியார் நிறுவனகளிடம் போட்டி போட முடியவில்லை.நட்டம் அடைந்தன. அரசு நிறுவனங்கள் நட்டம் அடைந்தால் யாருக்கு நட்டம்? அன்று அவர்கள் அலைக் கற்றை ஒதுக்கியது, Reliance, Tata, Barati போன்ற பெரும் உள்நாட்டு பணக்காரர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
By அன்பன்
11/14/2010 2:58:00 AM
Biggest disgrace for Tamils is that they support the governments that aided and abetted the murder of 50,000+ Tamils. Also Tamils in Tamil Nadu don't get it whereas others are very sympathetic with Eelam Tamils
By Wounded Tamil
11/14/2010 12:03:00 AM
What about Maangollai vivagaaram?
By Nallavan
11/13/2010 9:52:00 PM
Corruption by Tamilnadu politicians started many decades back with the pesticide spraying scandal, wheat scandal, diamonds inside Lincoln statue, renewal of private transport licence, auction of Engineering and MBBS seats. The Pithamahan of all scams is the present CHief Minister. Now his disciples are doing it with sophistication on a larger scale. There is a saying,,"Offering to any God ultimately reaches Lord Kesavan". In Tamilnadu MK is Kesavan.
By N. Sridharan
11/13/2010 8:53:00 PM
Sakunithevan Saptur you are great. Krishnaswamy was once upon a time a DMK. When he could not rise up and he started his own caste outfit; and he is today calling every other person by name. He is treacherous person; and he is no champion of Dalits. He will go with Amma today for money and if some else gives more money he will go there. These self centered persons are talking about Tamils and the Tamil' prestige. Shame
By Joevalan Vaz
11/13/2010 8:41:00 PM
உலகத் தமிழினம் தலை குனிய வேண்டாம். தி மு கவும் அதன் தலைவரும் வெட்கித் டலை குனிய வேண்டும். இதை அனுமதித்த காங் கட்சியும் ,சோனியாவும் தல்குனிய வேண்டும்.
By S Raj
11/13/2010 7:56:00 PM
ராசாவுக்காக உலகத் தமிழினம் ஏன் தலைகுனிய வேண்டும்? உலகத் தமிழினத்திற்காக இவரோ இவர் கட்சித் தலைவரோ என்ன நன்மை செய்தார்கள்! தமிழ் நாட்டில் இவர்களுக்கு வாக்களித்தவர்களும், வாக்குகளை வாங்கிக் கொடுத்த கூலிப்பட்டாளங்களும் கூட தலை குனியத் தேவையில்லை. ஏனென்றால் எதிரிகளுக்கு தெரிந்தே உதவிய துரோகிகள்தானே, அவர்கள். ஆனால், அதே சமயத்தில் "நமது அரசாங்கத்திற்கு சேர வேண்டிய பணம் எந்த அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளதோ அது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட வேண்டும். அரசுப்பணம் கொள்ளை போனது என்று குற்றம் சாட்டினால் அது கொள்கை முடிவு என்று கூறும் ஆளும் கூட்டணித் தலைவர்கள் அரசியலை விட்டு மட்டுமல்ல; நாட்டைவிட்டே அப்புறப்படுத்தப்பட வேண்டும். சிங்கள ராணுவத்திடம் இவர்களை குடும்பத்தோடு ஒப்படைக்க வேண்டும். சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களிடம் அரங்கேற்றிய அனைத்துக் கொடுமைகளையும் இவர்களிடமும் செய்ய வேண்டும்". முதலில் வந்து கேட்பவர்களுக்குத் தான் ஒப்பந்தம் என்று கொள்கைப் பிரகடனம் விடும் கொள்ளையர்களுக்கு முதலில் தரப்படும் எனது தீர்ப்பில் உள்ள தண்டனையே தரப்பட வேண்டும்.
By அண்ணாத்தம்பி
11/13/2010 6:24:00 PM
ANNAN KRISHNASAMY VALHA! AMMA VALARHA!SASI AMMA NEEDUDI VALHA!
By SANKUNITHEVAN,SAPTUR
11/13/2010 1:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக