வியாழன், 3 ஜூன், 2010

கருணாநிதி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து



சென்னை, ஜூன் 2: முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கே.வீ. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்: மக்கள் நலப் பணிகளை உயிரெனக் கருதி, தொண்டாற்றி, பெருவாழ்வு வாழ்ந்து புகழ் சேர்த்துள்ளவர் முதல்வர் கருணாநிதி. அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்துக்காகப் பணியாற்றிட இந்நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துகிறேன். பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்: முதல்வர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் வாழவும், பல சாதனைகள் படைக்கவும், தமிழகம் செழிக்கவும் அன்னை சக்தி அருள் புரிய வேண்டும். அவரது பிறந்த நாளில் தமிழனின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையிலும், தாய்மார்கள் மகிழும் வகையிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து, ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும். கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்: ராஜதந்திரத்தில் கருணாநிதியை மிஞ்சுபவர் எவருமில்லை. அவரது வாழ்வின் நீட்டம், தமிழ் இனத்தின் வளர்ச்சிப் பாதையின் ஓட்டம். எனவே, முதல்வர் கருணாநிதி தந்தை பெரியாரின் வயதையும் கடந்து பல்லாண்டு வாழ வேண்டும்.எஸ். ஜெகத்ரட்சகன், மத்திய இணையமைச்சர்: அரசியல் போர்க்களத்தில் அதிசயமானவர் முதல்வர் கருணாநிதி. அவர், எவரையும் அசைக்கும் எழுத்ததிகாரம், எவரையும் மயக்கும் சொல்லதிகாரம் படைத்தவர். தமிழர் வாழ்வுக்குச் செம்மொழி தந்த சிலப்பதிகாரம் அவர். இந்த சிறப்புகள் இமயம் வரை எட்டட்டும்.
கருத்துக்கள்

நாமும் வாழ்த்துவோம்! நீடு வாழ்க! நலமுடன் வாழ்க! வளமுடன் வாழ்க! தமிழ் மணத்துடன் வாழ்க!செழிப்புடன் வாழ்க! சிறப்புடன் வாழ்க! புகழுடன் வாழ்க! பொலிவுடன் வாழ்க! தமிழ் வாழ வாழ்க! இத்தகைய வாழ்வு வாழ வேண்டிய ஈழத் தமிழர்களின் வாழ்வைப் பறித்த கொலைகாரக் காங்கிரசில் இருந்து விலகி வாழ்க! ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த இன்னல்களுக்குக் கழுவாயாகத் தமிழ் ஈழம் அமைய வாழ்க! தமிழர் தாயகம் தனியுரிமையுடன் திகழ வாழ்க! உலகத்தமிழர்கள் உயர்ந்தோங்க வாழ்க! தமிழ்நாட்டில் தமிழும் தமிழரும் தலைமையும் முதன்மையும் பெற வாழ்க! இந்தியக் கூட்டரசிலும் உலக அமைப்புகளிலும் தமிழ் உரிமையும் முதன்மையும் பெற வாழ்க!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2010 3:37:00 AM

இன்று பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு கருணாநிதி அவர்களை நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !!! இனி வரும் இனிய நாட்களில் மாற்றாரும் மனம் மகிழ மனித நேயத்துடன் பணி செய்து சிறந்து விளங்கிட வேண்டுகிறேன் !!! @ rajasji

By rajasji
6/3/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக