திங்கள், 31 மே, 2010

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம்: பா.ம.க. தலைவர்கள் அதிருப்தி

சென்னை, மே 30: கூட்டணி தொடர்பாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடம் தருவது தொடர்பாகவும் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பா.ம.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.÷2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7 இடங்களில் எதிலுமே பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே மாநிலங்களவையில் உறுப்பினர் என்ற முறையில் அன்புமணி மட்டுமே நாடாளுமன்றத்தில் பா.ம.க.வின் பிரதிநிதியாக இருந்தார்.÷இப்போது நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணிக்கு இடம் கிடைக்காமல் போனால், நாடாளுமன்றத்தில் பா.ம.க.வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.÷கட்சி நிறுவனர் ராமதாஸின் மகன் என்பதற்காக இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் கட்சி என்ற வகையில் இந்த பிரதிநிதித்துவம் தேவை என்று கட்சியின் உயர் தலைவர்கள் கருதுகின்றனர்.÷சாதிவாரி மக்கள் தொகை வேண்டும் என்று கோரியது, மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் செய்ய வைத்தது போன்றவற்றில் பா.ம.க.வின் பங்கு முக்கியமானதாக இருந்தது என்று அந்தத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.÷2011-க்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு ஓர் இடம் என்று திமுகவின் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 2013 ஜூலையில்தான் கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் முடிகிறது. அப்போதுதான் அடுத்த தேர்தல் வரும். அது வரையில் பா.ம.க.வுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்று அந்தத் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 1998-ல் முதன்முறையாக மக்களவையில் காலடி எடுத்து வைத்த பா.ம.க.வுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்துக்கள்

பதவி போனால் எல்லாம் போகும் என அஞ்சிய பாமக ஈழப்போர் உச்சத்தில் இருந்த பொழுது அன்புமணியைப் பதவி விலக வைத்திருந்தால் இன்றைக்கு ஈழத்திலும் விடிவு ஏற்பட்டிருக்கும். பாமகவிற்கும் முழு வெற்றி கிடைத்திருக்கும். நல்ல கொள்கையைப் பரப்புரை செய்தாலும் எதிரிகள் எமை நத்துவாய் எனக் கோடி இட்டழைத்தாலும் தொடேன் எனும் மனஉறுதியின்றிக் கொலைகாரக் கூட்டணியில் சேரத் துடித்ததற்குச் சரியான தண்டனை. தேர்தல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேர வரும் பாமகவிற்குக்கிடுக்கிப் பிடி போடாமல் பதவியைத் தாரைவார்க்க திமுகவோ அதன் தலைவர்களோ அறிவிலிகள் அல்லர். இனியேனும் திருந்தட்டும் பாமக! தமிழ்நலக் கொள்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளட்டும்! மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடிக்கட்டும்! சாதி வெறியைச் சாக்கடையில் எறியட்டும்! சங்கத்தமிழ் மன்பதையை மீண்டும் உருவாக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 5:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++

நடுநிலையுடன் எழுதும் கருத்துகளை வீர வன்னியன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சாதிக்கட்சி என்னும் நிலையிலிருந்து மாறித் தமிழ் நலக்கட்சியாகவும் போதை முதலான நலக்கேட்டுப் பொருள்களை ஒதுக்கும் உணர்வை உருவாக்கும் கட்சியாகவும் தமிழ் ஈழத்திற்குக் குரல் கொடுக்கும் கட்சியாகவும் காட்சியளிக்கும் பாமக தேர்தலுக்கு முன்பு காங்கிரசின் கொலைவெறிச் செயல்களுக்கு எதிராகப் பதவிவிலகியிருந்தால் ஒரு மாற்றம் வந்திருக்கும் என்பதில் என்ன தவறு? இன்றைக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆனதும் கூட்டணியின் தலைமையான காங்கிரசிடம் அமைச்சர் பதவியை எதிர் நோக்கி ஈழத் தமிழர் நலனில் கண்மூடி வாய் பொத்தித் தாழும் நிலை ஏற்படலாம் அல்லவா? இப்படிப்பட்ட ஆசைகளை விட்டு விட்டுத் தேர்தல் தோல்வியால் கையில் எடுத்துள்ள சாதிக் கொடியைத் தூர எறிந்து விட்டுத் தமிழ்ச்சாதிக்காக அக்கட்சி பாடுபடவேண்டும். பாமகவின் பணி வன்னியப் பாடடாளிகளுக்கு என்று குறுகாமல், தமிழ்ப்பட்டாளிகளுக்காகச் சிறக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 1:14:00 PM

Dianamani editor vaidyanathan naradhar game started

By saravanan
5/31/2010 1:12:00 PM

The PMK party founder Dr.Ramadoss's intention is to uplift his son and family members as doing by some political leaders. if they contest in the election they will certainly lose deposits.Hence Dr.Ramadoss has made a plan to bring his son thro' indirect way,as he is not a candidate in the election.

By v.thatchanamoorthy
5/31/2010 12:52:00 PM

99.99999999999999999% tamilians will be very very very very very ..happy to hear this news.

By prasath.T
5/31/2010 12:17:00 PM

சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த தமிழக அரசுகளில் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியே பொற்காலமாக இன்னமும் மக்களின் மனதில் உள்ளது. தனக்கென்று சொத்து ஏதும் செர்காதவர், பிரதமர் பதவியையே வேண்டாமென்று விட்டுக் கொடுத்தவர், தன் தாயாரின் வீட்டுக்கு சென்ற தண்ணீர் குழாயை நிறுத்தச் சொல்லி அவரை மற்ற மக்கலோடோ போய் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சொன்னவர். அந்த மாதிரி நல்ல உள்ளம் படைத்த தலைவனுக்கு ஜாதி என்ற கரியைப் பூசி கேவலபடுத்துவது குரூர புத்தியுள்ளவன் செய்யும் செயல். அவரை தோற்கடித்துவிட்டு இன்று நடக்கும் ஆட்சியின் லட்சனத்தைப் பாருங்கள். எல்லோரையும் ஒரு ரூபாய் அரிசியில் வாழும் பிச்சைக் காரனாக மாற்றி, குடிகாரனாக்கி வைத்துள்ளான். பெருகி ஓடும் சாராய சாம்ராஜ்யம், இதைச் செய்பவன் மஞ்சள் துண்டு போட்ட, மதுவே வேண்டாமென்று ஒழிக்கச் சொன்ன பெரியாரின் தொண்டன் என்று சொல்லிக்கொள்பவன். தூ..

By இடி அமீன், உகாண்டா.
5/31/2010 11:37:00 AM

மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள். திமுக வின் எதிர்கால நன்மைக்கு வேண்டி வடக்கு மாவட்டங்களில் வலுவுள்ள ஒரு கட்சி அவர்களுக்கு தேவை கலைஞருக்கும் பிறகு நடக்கும் நடவடிக்கைகளை பற்றி ஆராயமுடியுமானால் புரியும் அதன் தற்ப்போதைய இந்த கூட்டனி. அது இதுதான் ஸ்டாலின் முதல்வராகவேண்டுமானால் அதற்க்கு பா.ம.க வின் ஆதரவு நிச்சயம் தேவை பொறுத்திருந்து பாருங்கள்.

By வீர வன்னியன், ஆத்தூர்
5/31/2010 10:53:00 AM

திமுக சார்பில் எம்பி பதவி கிடைத்துள்ள மூவரும் மிகவும் சிறப்பாக கட்சி பணியாற்றுபவர்கள். வாழ்த்துகள். பாமக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் எம்பி சீட் கிடைத்திருக்கும். கடுமையாக திட்டுவதும் தினமும் அறிக்கை விட்டு குடைச்சல் கொடுத்ததும் காடு வெட்டி பேசிய பேச்சும் கூட்டணிக்கு மதிப்பு கொடுக்காத பாமக தற்போது எம்பி சீட் எதிர்பார்ப்பதற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. தற்போதும் திமுக இல்லாவிட்டால் அதிமுகவுடன் பேரம் பேசுவதாக பத்திரிக்கையில் செய்திகள் கசிகின்றன. இப்படி ஒரு மானங்கெட்ட அரசியல் பதவி தேவையா? இனிமேலாவது எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறீர்களோ அந்த கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்காமல் இருக்கப் பாருங்கள்..தற்போது திமுகதான் வெற்றிக்குதிரை. நல்ல உறவு தொடர்ந்தால் எதிர்காலத்தில் அன்புமணி மத்தியஅமைச்சர் ஆவர்....

By veera Ganapathy
5/31/2010 10:41:00 AM

தி. மு.க. அவசர பட்டு அவர்களை கூட்டணியில் சேர்த்து இருக்க வேண்டியது இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வருவதனால் தி.மு.க. வுக்கு நஷ்டமே தவிர லாபம் ஏதும் இல்லை. தான் ஒரு ஜாதி வெறியர் என்பதை திரு. ராமதாஸ் அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த பென்னாகரம் இடை தேர்தலில் மற்றும் ஒரு முறை நிரூபித்து காட்டி இருக்கிறார். இவருடைய அரசியல் நடவடிக்கைகள் எதுவுமே ஒரு தலைவனுக்கு உள்ள ஒரு தகுதி இவருக்கு உண்டா என்பதை கேள்விகுறி ஆக்கி இருகிறதே தவிர இவர் இன்னும் தன தகுதியை வரரது கொள்ள வேண்டிய இடத்தில தான் இருக்கிறார்.

By Tamilan
5/31/2010 10:33:00 AM

"thithum nanrum pirar thara vara". Tani manitha muyarchi miga mukkiam

By Sha
5/31/2010 10:26:00 AM

மிஸ்டர் இலக்குவனார், தாங்க்ள் ஏதோ பெரியாரின் பேரன் என்பதைப்போல கருத்தெழுதியுள்ளீர்கள்! ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள்! இது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களாகிய ஒரு சமூகத்திற்க்காகமட்டும் போராடுகிற கட்சியல்ல அதில் வன்னிய மக்கள் பெரும்பாலுள்ளார்கள். அதையும் மீற கடந்த காலங்களில் பா.ம.க ஒரு பொருப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டிருக்கிறது மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரேகட்சி பா.ம.க. புகையிலைக்கெதிரான நடவடிக்கைகள், ஊடகங்களில் தமிழே முன்னிறுத்தப்பட்டும் அதிலும் வென்றிருக்கும் ஒரு உறுதியான கொள்ளை கொண்ட தலைவர் கொண்டது பா.ம.க. அதன் செயல்பாடுகளை மற்றும் விமர்சியுங்கள்! காழ்ப்புணர்ச்சியில் எதைஎதையோ எழுதாதீர்கள்.

By வீர வன்னியன், ஆத்தூர்
5/31/2010 10:25:00 AM

Mr. M.K took correct action. Weldon!! M.K.

By Tamilan
5/31/2010 10:14:00 AM

Ilakuvanar Thiruvalluvan.I am not able to understand you.why you want Anbumani to resign at that time.The main culprit is your leader Karuna and congress.Otherwise very big loss in Srilanka could hand been averted. Note: I do not know tamil typing.Other wise I can give fitting reply in tamil.

By legal fan
5/31/2010 8:22:00 AM

இலக்குனார் திருவள்ளுவனின் கருத்தே என்னுடையதும். சாதிகள் என்ற பெயரைச் சொல்லியோ, ஆட்சிக்கு வந்தபின் தங்கள் சாதிகளை ஈடேற்றும் வேலையையோ செய்யக்கூடிய அரசியல் கட்சிகள் நம் இந்தியத் திருநாட்டில் இனியும் இருக்கக் கூடாது. சில ஆண்டுகளே ஆட்சியில் இருந்த காமராசர் தன் சாதியை வாணிபத்துறையில் மேலோங்கச் செய்துவிட்டு கர்மவீரர் என்ற பட்டப் பெயரை அந்தச் சாதிமக்களிடத்தில் பெற்றுவிட்டுச் சென்றார். இப்படிப்பட்ட ஓர் அவலநிலை தமிழகத்திற்கோ இந்தியத் திருநாட்டிற்கோ இனித் தேவையில்லை. ஆகவே தொடர்ந்து சாதிகளற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் திமுகவும் மத்தியில் சோனியா அவர்களின் ஆட்சியும்தான் தொடர்ந்து நம் நாட்டிற்குத் தேவை. சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மறந்து இதனை முயன்றால் வேறு ஒரு பெரியார் பிறந்து வந்தாலும் சாதிக் கொடுமைகளை அகற்ற முடியாது. இனி ஒரு பாரதி பிறந்துவந்து சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினால் ’வேலையைப் பார்த்துக்கொண்டு போப்பா’ என்று எதிர்பாட்டுப் பாடத் தொடங்கிவிடுவார்கள். ஆகவே கலைஞர் அவர்கள் தன்னுடைய அறிப்பகலவன்களாக நினைக்கும் தந்தை பெரியார்,

By Vanan
5/31/2010 7:36:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக