திங்கள், 31 மே, 2010

பாமக-வுடன் கூட்டணி: திமுக முடிவு

சென்னை, மே 30: பாட்டாளி மக்கள் கட்சியுடன் (பா.ம.க.) மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது என திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 2011-க்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 30) நடைபெற்றது. கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாமக-வுடன் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து கருணாநிதி கூறியது:பாமக நிறுவனர் ராமதாஸ் 26-4-2010 தேதியிட்டும், 14-5-2010 தேதியிட்டும் இரண்டு கடிதங்கள் எழுதியிருந்தார். அதில் 2011-ல் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட விரும்புகிறோம், இப்போது நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு திமுக, பாமக ஆகிய கட்சிகளிடையே உறவு முறிவு ஏற்பட வேண்டிய நிலை ஏன் உருவானது, அதற்கு திமுக காரணம் அல்ல என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.அண்மையில் பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட நிலைமைகள் குறித்தும், திமுக-தான் முதல் எதிரி என்று பாமக நிறுவனரின் பிரகடனம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.இருந்தபோதும் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்ற அடிப்படையில் மீண்டும் இரு கட்சிகளும் உறவைப் புதுப்பித்துக் கொண்டு அடுத்து வரவிருக்கும் 2011 சட்டப்பேரவை தேர்தலிலும், விரைவில் வரவிருக்கின்ற சட்டப்பேரவை மேலவைத் தேர்தல்களிலும் இரு கட்சிகளும் உடன்பாடு கொண்டு போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும், 2011-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அடுத்து நடைபெறவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பாமக-வுக்கு ஒரு இடம் வழங்குவதென்றும் உறுதிபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை பாமக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார்.பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது நல்ல எண்ணத்துடன் எடுக்கப்பட்ட முடிவு, அதில் ராஜதந்திரம் எதுவும் இல்லை.கூட்டணியில் பாமக தொடர்ந்து நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அவர்கள் ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டார்.இலங்கைத் தமிழருக்கு உதவி:இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 500 கோடியை முறையாக பயன்படுத்திட தக்க திட்ட வரைவுகளை செய்திட இலங்கை அரசு இன்னமும் முன்வரவில்லை. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களும் சரிவர விநியோகம் செய்ப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்திட இலங்கை அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தில் முகாம்களில் உள்ள 73,572 இலங்கைத் தமிழர்களை இந்திய குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மறு குடியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானித்து, ஏற்கெனவே கேட்டுக் கொண்டது. இதற்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசை இக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.மலேசியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள 75 இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற கருணை உள்ளத்தோடு முன் வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விலை உயர்வு பிரச்னை:அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சிறுதாவூர் நிலம்: நீதிபதி சிவசுப்பிரமணியம் விசாரணைக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு ஏழை மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இக் கோரிக்கை தொடர்பாக திமுக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துக்கள்

திமுகவைப் பொறுத்தவரை சரியான முடிவு. ஆனால், பாவம் பாமக. எனினும் அடுத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காகக் காங்கிரசை அண்டிப் பிழைக்காமல் அதன் கொலைவெறியை மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் தன் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறலாம். போதிய ஆதாயம் இன்றியும் தமிழ் நலனுக்காகத் தமிழ் ஓசை நாளிதழையும் மக்கள் தொலைக்காட்சியையும் நடத்தும் பாமுக பதவி வழி ஆதாயத்திற்காகக் கொள்கையை அடகு வைக்க வேண்டா; சாதி வெறியிலும் இறங்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 5:32:00 AM

இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது : ஜனாதிபதி [ ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2010, 05:22.40 AM GMT +05:30 ] இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒவ் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவருகிறது). ஆயுத கொள்வனவு என்பது இராணுவ தீர்மானமாகும். இந்தநிலையில் சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை தருவித்ததாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிடம் இருந்து அனுகூலமான அனைத்தையும் தாம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதேவேளை எவர்

By MANISANKAR
5/31/2010 4:08:00 AM

Hey, Is that one of MuKa's batli (keep) in the photo?

By asdkjfh
5/31/2010 2:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக