செவ்வாய், 1 ஜூன், 2010

முதல்வர் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு




முதல்வர் கருணாநிதியின் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை (12 தொகுதிகளை) குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட முதல் பிரதியை பெறுகிறார்
சென்னை, மே 31: முதல்வர் கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா, தென்பாண்டிச் சிங்கம் உள்பட 12 படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 12 நூல்களையும் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளிட, முதல் பிரதிகளை மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பெற்றுக் கொண்டார்.விழாவுக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை வகித்தார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, பன்னாட்டுத் தமிழ் இணையக் கழகத்தின் தலைவர் வா.செ. குழந்தைசாமி, கவிஞர் வைரமுத்து, மொழிபெயர்ப்பு குழுவின் தலைவரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான க. திருவாசகம், நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி. சுவாமிநாதன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.மொழிபெயர்ப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த மு.க. அழகிரியின் மகள் கயல்விழி வெங்கடேஸ், பி. மருதநாயகம், ஆர். கணபதி, வி. முருகன், சுஜாதா விஜயராகவன், தமிழச்சி தங்கபாண்டியன், திருவாசகம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோருக்கு முதல்வர் கருணாநிதி சால்வை அணிவித்து கௌரவித்தார்.வெளிடப்பட்ட நூல்கள்:தொல்காப்பியப் பூங்கா, காலப் பேழையும் கவிதைச் சாவியும், கவிதை மழை -தொகுதி 1, கவிதை மழை - தொகுதி 2, கவிதை மழை-தொகுதி 3, தென்பாண்டிச் சிங்கம், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், முத்துக்குளியல், பராசக்தி மற்றும் மனோகரா, பூம்புகார் மற்றும் ஓரங்க நாடகங்கள், கலைஞரின் சிறு கதைகள் என 12 நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலும் 1,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. நூல்களின் மொத்தப் பக்கங்கள் 2,336.
கருத்துக்கள்

நல்ல முயற்சி. பாராட்டுகள. இவை போல் தந்தை பெரியாரின் படைப்புகளும் பேரறஞர்அண்ணாவின் படைப்புகளும்ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகம் ஒவ்வொரு மொழியில் பெயர்க்கும் பணியை மேற்கொள்ளலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/1/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக