செல்வகணபதி, தங்கவேலு, கே.பி.ராமலிங்கம்
சென்னை, மே 30: நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி, ச. தங்கவேலு,கே.பி. ராமலிங்கம் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுவதாக முதல்வர் அறிவித்தார்.தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் திமுகவுக்கு 3 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் ஒரு இடம் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது.2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகுதான் பா.ம.க.வுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்குவது என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மூன்று இடங்களுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.வேட்பாளர்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்குப் பின் கட்சியின் தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கே.பி. ராமலிங்கம், ச. தங்கவேலு, டி.எம். செல்வகணபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.பா.ம.க. ஆலோசனைகூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்வது என்றும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி 2011-க்குப் பிறகு பாமகவுக்குத் தரப்படும் என்றும் திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பா.ம.க. தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சென்னையில் அன்புமணியின் வீட்டில் பாமக முக்கிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கூடி இந்த முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கருத்துக்கள்
மூவருக்கும் வாழ்த்துகள். காங்கிரசு சார்பின்றித் தமிழ் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்க வேண்டுகோள். வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஆறுதல்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/31/2010 5:37:00 AM
5/31/2010 5:37:00 AM