ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

வட்டார வழக்குகளை எழுத்தில் திணிக்கக் கூடாது: க. அன்பழகன்



முதல்வர் கருணாநிதியின் காலப்பேழையும் கவிதைச் சாவியும் மற்றும் உலகளாவிய தமிழ் (மொழிவுகள்) ஆகிய நூல்களை நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட தமிழ் இணைய மாநாட
சென்னை, ஏப். 17: தமிழைக் காப்பாற்றுவதில் உறுதி இருக்கவேண்டுமானால், வட்டார வழக்குகளை எழுத்தில் திணிக்கக் கூடாது என்று நிதியமைச்சர் க. அன்பழகன் கூறினார். முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியனின் 70-வது வயது நிறைவையொட்டி, முதல்வர் கருணாநிதியின் காலப்பேழையும் கவிதைச் சாவியும் மற்றும் உலகளாவிய தமிழ் (மொழிவுகள்) ஆகிய பூம்புகார் பதிப்பகம் பதிப்பித்துள்ள நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சர் க. அன்பழகன் பேசியது:மு.பி.பாலசுப்பிரமணியன் சிறந்த ஆசிரியர் என்பதைவிட, சிறந்த சொற்பொழிவாளர். சொல்லவேண்டிய கருத்துகளை, கேட்பவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இனிமையாக எடுத்துக்கூறக் கூடியவர். இந்த இரண்டு நூல்களும் அவருடைய பேச்சாற்றலுக்கு அடையாளமாக அமைந்துள்ளன.கருணாநிதியின் காலப்பேழையும் கவிதைச் சாவியும் என்ற நூலை 15 வாரங்களில், 15 சொற்பொழிவுகளில் ஆய்வு செய்து, கேட்பவர்களுக்கு புரியும் வகையில் விளக்கியிருக்கிறார். இதுபோல் மு.பி.பா. பல்வேறு இடங்களுக்கு சென்று ஆற்றிய சொற்பொழிவுகளை உள்ளடக்கிய உலகளாவிய தமிழ் என்ற நூல், பல செய்திகளை நாம் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது.வட்டார வழக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மொழிச் சிதைவு ஏற்படுóம் அபாயம் உள்ளது. வட்டார வழக்கில் நூல்கள் எழுதப்படும் போது, அதில் உள்ள கருத்துகளை அதனுடைய உண்மையான உணர்வோடு மற்றவர்கள் புரிந்துகொள்வது மிகவும் கடினம். எந்த சமுதாயத்தில் அந்த வழக்கு உள்ளதோ, அவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.எனவே, தமிழைக் காப்பாற்றுவதில் உறுதி இருக்கவேண்டுமானால், வட்டார வழக்குகளை எழுத்தில் திணிக்கக் கூடாது. இதற்கு மு.பி.பா. முன் உதாரணமாக திகழ்கிறார் என்றார்.விழாவில் மு.பி.பா.வின் பல்வேறு நூல்கள், அண்ணா பொது நூலகத்துக்கு வழங்கப்பட்டன. நூல்களை பொதுநூலகத் துறை இயக்குநர் க. அறிவொளி பெற்றுக் கொண்டார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

உண்மை. பேராசிரியருக்குப் பாராட்டுகள். இனி வட்டார வழக்குச் சொற்களைத் திணிக்கும் படைப்பாளர்களுக்குப் பரிசுகள் பதவிகள் தருவதில்லை என்ற முடிவை எடுக்கும்படி அன்புடன் வேண்டுகின்றேன். அத்தகையோரை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த அவர்களின் மொழிக் கொலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்களை அரசு புறக்கணித்தால்தான் மக்களும் புறக்கணிப்பர். ஆதலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 4:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக