செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மறைமலையடிகளார் இல்லம்: ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிப்பு



சென்னை, ஏப்.19: சென்னை பல்லாவரத்தில் உள்ள மறைமலையடிகளார் நினைவு இல்லம் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வாழ்ந்து மறைந்த இல்லம், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் அமைந்துள்ளது. அந்த இல்லம் மறைமலையடிகளார் நினைவு இல்லமாக இப்போது தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் உள்ளது.
இந்தக் கட்டடம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த இல்லத்தைப் பழுது பார்க்க, தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.15 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்தத் தொகை பொதுப்பணித் துறைக்கு அளிக்கப்படும். இந்தத் தொகை மூலம் நினைவு இல்லம் பழுது பார்க்கப்பட்டு, சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

கருத்துக்கள்

தினமணிக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள். கன்னிமாரா நூலகததில் இணைந்த மறைமலையடிகள் நூலகமும் சரியாகப் பேணப்படவில்லை. அதனையும் தினமணி சுட்டிக்காட்டினால் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக