செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இலங்கை முகாம்களில் தமிழர்களின் இன்னல்களுக்கு முடிவு கட்டுங்கள்: கருணாநிதி



சென்னை, ஆக. 17: ""இலங்கை முகாம்களில் தமிழர்கள் அடைந்து வரும் இன்னல்களுக்கு முடிவு கட்ட வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, ராஜிய மற்றும் அரசியல் ரீதியாக, கடும் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை எழுதிய கடிதம்: ""இலங்கையில் அண்மையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலைமை மேம்பட, மத்திய அரசும், தமிழக அரசும் உதவிகளை அளித்து வருகின்றன. இலங்கையில் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. அவர்களுக்கு மருத்துவ வசதியும், கவனிப்பும் தேவைப்படுவதாக தெரிய வருகிறது. அண்மையில் அங்கு பெய்த மழையால், வெள்ள நீர் முகாம்களுக்குள் புகுந்துள்ளன. மனிதாபிமான அடிப்படையில்... இலங்கைத் தமிழர்களுக்கு ரூ. 38.83 கோடியில் நான்கு தவணைகளாக நிவாரணப் பொருள்களை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. அண்மையில், 80 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தியாவில் அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை ஏற்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டண விகிதங்கள் மாறுபாடான வகைகளில் உள்ளன. அப்படி, கட்டணம் செலுத்தினாலும் கூட நிவாரணப் பொருள்கள் இலங்கைத் துறைமுகத்தில் இறக்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டதா இல்லையா என்பது இதுவரை தெளிவாகவில்லை. தமிழகத்தில் இருந்து நான்காவது தவணையாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையில் போரால் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம். ராஜிய மற்றும் அரசியல் ரீதியிலான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இதைச் செய்திட வேண்டும். இந்தப் பிரச்னையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்'' என்று தனது கடிதத்தில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

கலைஞர் சிறந்த அரசியல் தந்திரம் மி்க்கவர்; அரசியல் வித்தகர் எனக் கூறுவனவற்றை இம்மடல் தெளிவாக்குகிறது. இலங்கைத் தமிழர் நலனில் கருத்து செலுத்துவது போல் கணக்கு காட்ட மடலைக் கணக்குப் பட்டியலில் சேர்த்தாற்போலும் ஆகி விட்டது. காங். அரசு மகிழும் வகையில் அதுவும் உதவி செய்ததாகப் பதிவு செய்தாகி விட்டது; தானும் உதவும் எண்ணம் உடையவனே என்பதை விளக்கத் தமிழக அரசு செய்யும் உதவியைக் குறித்தாகி விட்டது. சிங்கள அரசும் காங். அரசும் சினம் கொள்ளாத வகையில் தமிழர்களை முகாம்களில் இருந்து விடுவிக்குமாறு மறந்தும் குறிப்பிட வில்லை. எல்லாம் வல்ல முதல்வர் மருத்துவ வசதியும் கவனிப்பும் தேவை என்று கூடச் சொல்லவில்லை. தேவைப்படுவதாகத் தெரிய வருகிறது என்றுதான் கூறியுள்ளார். ஆகா!ஆகாகா! சொற்களை என்ன அழகாகத் தேர்ந்தெடுத்து மடல் தீட்டியுள்ளார். ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்ததுபோலும் காட்டிக் கொள்ளலாம். சிங்கள, காங். அரசுகள் மனம் வருந்தாதிருக்கும் வகையில் பூசி மெழுகி நல்ல பெயரும் சம்பாதித்துக் கொள்ளலாம். வாழ்க அவரது இனப்பற்று! வளர்க இத்தகைய பொறுப்புணர்வு!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/18/2009 2:42:00 AM

1.5 millions Tamils migrated and 200,000 Tamils dead, 300.000 are in concentration camps, 500,000 Tamils in jaffna, 700,000 Tamils in eastern province Batticaloa, 200,000 People in East Trincomale, 100,000 in South of Srilanka, 1 millions Indian tamils are in up countries. Now What you want to to do Mr. Chief Minister of Tamilnadu. Before you die please free the poor Tamis who are sufering since 1948 after end of the British colonialsm. You still want to closely watch till the rest of the Tamils mass murder or migrate.

By Peter, Kerala
8/18/2009 2:24:00 AM

what ever he say congress goverment only do harm for eelam tamils

By vithunan
8/18/2009 2:12:00 AM

Karunanidhi brings the SL tamil issue every now and then though he knows nothing is going to happpen or come out of his request from central givt. I am really pity of true DML cadres and people who still believes him,

By Jeeva Sridhar
8/18/2009 1:57:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக