சனி, 5 செப்டம்பர், 2009




முகாமில் உள்ள மக்களை விடுவிக்கக்கோரி சிட்னியில் கவனயீர்ப்பு போராட்டம்
பிரசுரித்த திகதி : 05 Sep 2009

சிட்னியில் டவுண்கோல் சதுக்கத்தில் நேற்று 4ம் திகதி எமது உறவுகளை வதை முகாம்களிலிருந்து விடுவிக்க கோரும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மாலை 4 மணி முதல் 7 மணி வரை டவுண்கோல் சதுக்கத்தில் 300க்கும் அதிகமான மக்கள் கூடி, கையில் பதாகைகள் தாங்கிய வண்ணம் விழிப்பபுணர்வை எற்படுத்தினர்.

சதுக்கத்தை சுற்றி தமிழர்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை சித்தரிக்கும் படங்கள் உள்ளடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

300 ஆயிரம் உறவுகள் இன்னும் அந்த வதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டு சொல்லனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மனிதாபிமான அமைப்புக்களை முகாம்களுக்குள் அனுமதிக்காமல் தமிழர்களை தினம் தினம் சித்திரவதை செய்து படுகொலை செய்து வெளி உலகுக்கு போலியான ஒரு தோற்றத்தை காட்டி வருகிறது சிங்கள பேரினவாதம்.

சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிட்ட தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சிகள் சிங்கள பயங்கரவாத அரசின் உண்மையாண முகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. சிங்கள அரசு தற்போதும் கூட பொய் பிரசாரங்களை செய்து தமது குற்றங்களை மறுத்து வருகிறது.

சிங்கள அரசின் போர் குற்றங்களை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களான எமது கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிங்கள காடையர்களின் கொடுர முகத்தை நாம் எம்மை சுற்றியுள்ள அந்நிய சமுதாயத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்.

அந்நோக்கத்துடனேயே நேற்றைய கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டவுண்கோல் சதுக்கத்தை சுற்றி இளைஞர்களும் சிறுவர்களும் அங்கு உலாவும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக