வியாழன், 3 செப்டம்பர், 2009

"கூட்டணி குறித்து விமர்சித்தால் நடவடிக்கை':
தங்கபாலு எச்சரிக்கை



சேலம், செப். 2: கூட்டணி குறித்து விமர்சனம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு எச்சரித்தார். சேலத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இளைஞர் காங்கிரஸýக்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. பல்வேறு மாநிலங்களில் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி நேரடி மேற்பார்வையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ராகுலின் தலைமையை ஏற்று ஏராளமான இளைஞர்கள் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.கட்சிக்கு இள ரத்தம் காங்கிரஸில் நடிகர் விஜய் சேர இருப்பதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியின் தலைமையை ஏற்கும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கிறது. கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்வதால் காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சப்படும் என்பதில் சந்தேகமில்லை. விஜயகாந்துடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் பேசப்படும். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் வரும் என்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கருத்துக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதிலளித்துவிட்டார்.உரிமை இல்லை கூட்டணி குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்ய இளங்கோவனுக்கு உரிமை இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து கூட்டணியைக் கட்டுப்படுத்தாது. காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்கள், கூட்டணி குறித்து வெளியில் தவறாகப் பேசுபவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும். உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசி, மனக் கசப்பை ஏற்படுத்தக் கூடாது என்று இளங்கோவனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.கொள்கை கூட்டணி நானும் (தங்கபாலு), முதல்வர் கருணாநிதியும் இணக்கத்துடன் செயல்படுகிறோம். எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி. காங்கிரஸ் கட்சிக்கு இணையாக எந்தக் கட்சியிலும் சரியான தலைமை அமையவில்லை. பாஜகவில் குழப்பம் ஏற்படுவது புதியது அல்ல. மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அக்கட்சிக்கு பிரச்னை ஏற்படுகிறது. பாஜகவுக்கு நல்ல எதிர்காலம் இல்லை என்றார் தங்கபாலு.
கருத்துக்கள்

பதவியைத்தக்க வைத்துக்கொள்ள நாள்தோறும் தங்கபாலு அறி்க்கை விடுவது போல் பதவியைப்பெற நாள்தோறும் இளங்கோவன்அறிக்கை விடுகிறார். கலைஞருக்கும் இவருக்கும் ஈழத் தமிழர் ஒழிப்பில் கை கட்டி வாய் பொத்தி இருப்பதில் கொள்கை ஒற்றுமை உள்ளதென்றால் எண்ணெய் ஊற்றி மூட்டுவதில் இளங்கோவன் வல்லவர். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிக்கிடக்கும் மட்டைகள்தாமே!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/3/2009 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக