சனி, 20 ஜூன், 2009

">


இன்று: சனிக் கிழமை, ஜுன் 20, 2009

வணங்கா மண் கப்பல் தற்போது சென்னை துறைமுகத்தில் தரித்து நிற்கிறது
பிரசுரித்த திகதி : 18 Jun 2009

வணங்கா மண் கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்தில் அனுமதிக்காக தரித்து நிற்பதாக அறியப்படுகிறது. இன்று சென்னைத் துறைமுகத்திற்குள் உள் நுளைந்த வணங்கா மண் கப்பலானது உணவுப் பொருட்களை இறக்க இந்திய அரசிடம் அனுமதிகோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இறக்கப்படும் உணவுப் பொருட்களும் மருந்து வகைகளும் இந்திய அரசின் உதவியுடன், வன்னி மக்களுக்கு கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்கள் இரவு பகலாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில தமிழ் இணையத் தளங்களில் வணங்கா மண் கப்பலில் உள்ள உணவுப் பொருட்கள் கடலில் கொட்டப்பட்டதாகவும், மற்றும் கப்பலை இரும்பு உடைக்கும் நிலையத்திற்கு விற்றுவிட்டதாகவும் பொய்யான பல கட்டுக் கதைகள் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளன. மதிநுட்ப காய் நகர்த்தல் காரணமாக இக்கப்பலின் நடவடிக்கைகள் சில நாட்களாக வெளியிடாமல் இருந்த வேளையை சில விசமிகள் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்தி, புலம் பெயர் தமிழ் மக்களையும், இக் கப்பலுக்கு நன்கொடை வழங்கி உதவிசெய்தவர்களையும் குழப்பும் நோக்கில் இவ்வாறான புரழிகளைக் கிளப்பிவிட்டுள்ளனர்.

வணங்கா மண் தாமதமானாலும் தனது இலக்கை அடையும். புலம் பெயர் தமிழ் மக்களால் நம்பிக்கை வைத்து அனுப்பப்பட்ட வணங்கா மண் கப்பல் நிச்சயம் வெற்றியடையும். விசமிகளின் கட்டுக்கதைகளை நம்பாது, புலம் பெயர் தமிழ் மக்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்படுவது நல்லது. தமிழர்களுக்கு தவறான செய்திகளைப் பரப்பும் இணையங்களை இனியாவது நாம் புறக்கணிப்போம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக