சனி, 20 ஜூன், 2009

இலங்கைத் தமிழருக்கான நிவாரணப் பொருட்கள்: நெடுமாறன் புதிய கோரிக்கை
தினமணி


சென்னை, ஜூன் 20: இலங்கை அரசு திருப்பிய அனுப்பிய கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"வணங்காமண்' என்ற கப்பலில் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருள்களை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது.

அந்தப் பொருள்களை இலங்கை அரசு இறக்கிக் கொள்ள வலியுறுத்துமாறு அப்போதே மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.

இப்போது கப்பல் திரும்பிவிட்ட நிலையில் மறுபடி சென்றாலும் இலங்கை அதிபர் ராஜபக்சே அதை இறக்க முன்வர மாட்டார்.

கப்பல் சென்னைக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதுவதில் பயன் இல்லை. அந்தப் பொருள்கள் வீணாகிக் கெட்டுப் போக வழி ஏற்பட்டுவிடும். எனவே, கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு வழங்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள்

'கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்' செய்து என்ன பயன்? திரு நெடுமாறன் கூறுவது போல் பரிவுடனும் உணர்வுடனும் புலம் பெயர் தமிழர்கள் அனுப்பிய பொருள்களை வீணடித்து அவர்களின் உணர்வுகளைச் சாகடிக்காமல் ஏதேனும் பயன் விளைந்த மன நிறைவையாவது அவர்களுக்குத் தரலாமே!

அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2009 7:13:00 பம்


கருத்துகள் தொடர்ச்சி
மக்கள் நேசனாக இல்லாமல் சிவ நேசன் என்ற பெயரைப் பயன்படுத்துபவரும் சிங்களவனாக இருந்து கொண்டு இந்தியன் என்னும் பெயரைப் பயன்படுத்துபவரும் தெரிவிக்கும கருத்தும் 'நாசமாகப் போகுமாறு' சபிப்பதுமே இத்தகையோர் எக்கருத்தும் தெரிவிக்க உரிமை இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்கின்றது. சிங்கள அரசிற்கு அனுப்பப்படும் எந்த உதவியும் துன்பத்தில் நலியும் தமிழர்களுக்குக் கிடைக்காத பொழுது நேரடியாகத் தமிழ் மக்கள் பகுதிக்கு உதவி அனுப்பியதில் என்ன தவறு? அதை ஆய்வு செய்த சிங்களப் படைகள் எதில் எவ்வகை ஆயுதமும் மருந்துக்குக் கூட இல்லை எனச் சான்றளித்த பின்பும் அவற்றைத் தடை செய்வதன் நோக்கம் என்ன? அதிகாரம் மிக்க சிங்கள அரசே அதனைப் பெற்று உரிய தமிழ் மக்களுக்கு அளிப்பதில் என்ன இடையூறு உள்ளது? இவற்றை யெல்லாம் புரிந்து கொண்டே மனித நேயமின்றி எழுதுவோரே! உங்கள் தலைமுறையினரைக் கடவுள் காப்பாற்றுவாராக!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:26:00 AM

I support Mr.Srinivasan opinion. If they want tosend thegoods it shouldbe through redcross to Srilanka Govet. Why unnecessary drag India in between.These people will do all illeagal things and always in the name of humanity they exploit normal people.Why Nedumaran &co with boats try to disload the ship. Seeman Vaiko,&othere were ready to give their lives for their terror brothers. This shipwas sent during war so SL govet Suspect is nnormal. Donot curse Sonia YOu srilangan refugee will be ruined (Nasamaapovinga)

By Indian
6/21/2009 2:39:00 AM

nasama pooka soniaa kudumpam!!!!!!!!!!!!!!!!!!!!!!!

By R .Thanilaachi
6/21/2009 12:48:00 AM

How cruel these shingalese are! Even not allowing the aids given by their brothers . Allah! please punsh this Rajapkse and his cruel clooegues.

By Shahabudeen
6/20/2009 10:53:00 PM

The medical and basic aids must to be sent to Eelam Tamils in Srilanka, thru IRed Cross. They are those who are suffering the extreme conditions, as witnessed by UN secretory and SL Chief Judge, SriSri Ravishankar. 'Sivanesan' are you human? TN and India should also send more of their own. SL has no rights to stop aids, when it created all tragedy to them. It is tragic to see India and Srilanka playing on lives of people, directly and indirectly to kill them. Shame to humanity due to corrupt, inhumane govts.

By karnan
6/20/2009 10:09:00 PM

If SL Tamils want to donate humanatarian aid, they shoul give it to SL government. If you accuse government and send the goods on your own to terror group and expect the government to accept it in the absence of terror group is a joke. No civilan goverment will accept aid from the gropus which accuse them on committing genocide.

By B Sivanesan
6/20/2009 9:33:00 PM

nalla karuthu..cm must take steps according to points of nedumaran

By venky
6/20/2009 7:48:00 PM




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக