சனி, 20 ஜூன், 2009

கச்சத்தீவில் ராணுவ தளம் இல்லை: இலங்கை துணைத் தூதரகம்
தினமணி


சென்னை, ஜூன் 19: கச்சத்தீவில் ராணுவத் தளம் எதுவும் அமைக்கப்படவில்லை என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இலங்கை துணை தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரம், ராணுவதளம் அமைப்பதற்கு முயற்சிப்பதாகவும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் கண்காணிப்பு கோபுரம் அல்லது ராணுவத் தளமொன்றை கச்சத்தீவில் அமைக்கும் எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என இலங்கை அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர், அக்குற்றச்சாட்டுகளை இலங்கை கடற்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுக்கு களங்கம் ஏற்படுத்தும் தீய நோக்கம் கொண்ட சிலரால், இத்தகைய குற்றச்சாட்டுகள் புனைந்து கூறியிருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

'கேழ்வரகில் நெய் வடிகிறது' என்று சிங்களம் சொன்னால் 'ஆமாம், ஆமாம், எனக்கும் ஒரு பானை நெய் கொடுத்தார்கள்' என்று இந்தியம் சொல்லும். 'எனக்கும் அதில் உரிய பங்கைத் தருவதாகச் சொல்லியுள்ளது' எனத் தமிழகம் சொல்லும். மீனவர்கள் துன்புறுத்தப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் நமக்கென்ன? அவர்கள் தமிழர்கள்தாமே! இந்தியர்கள் அல்லரே! எக்கேடு கெட்டாலும் கேட்பதற்கு யார் உள்ளார்? அவர்களை யார் மீன் பிடிக்கச் சொன்னது? எங்காவது ஏதிலிகள் - அகதிகள்- முகாமில் அடைந்து கிடக்க வேண்டியதுதானே! உழைத்து உண்ண வேண்டு்ம் என்று திமிர் வந்து விட்டதா? அப்படி யென்றால் அழிய வேண்டியதுதான் அவர்கள் தலையெழுத்து. நாம் என்ன செய்ய முடியும்? வீரம் மிக்க ஈழத்தமிழினத்தையே பேரழிவிற்கு உள்ளாக்கிய நமக்கு இந்தச் சுண்டைக்காய் இந்தியத் தமிழர்கள் எம்மாத்திரம்? சிங்களத்திற்கு எதிராக யார் கிளம்பினாலும் இந்தியா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. வாழ்க பக்சே-சோனியா ஒற்றுமை!- எனக் காங்.அரசு சொல்லுவது உங்கள் செவிகளில் விழவில்லையா?

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2009 4:12:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக