சனி, 20 ஜூன், 2009

கச்சத் தீவை மீட்க ஒத்துழைப்பு கேட்பது ஏன்? வைகோ கேள்வி
தினமணி


திருவண்ணாமலை, ஜூன் 19: கச்சத் தீவை கொடுக்கும்போது சிறு எதிர்ப்பை மட்டுமே தெரிவித்தவர்கள், அப்போது ஏதும் செய்யாமல் இப்போது அனைவரது ஒத்துழைப்பு கேட்பது ஏன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பினார்.திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியது:இப்போது கச்சத் தீவை மீட்க அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். கச்சத் தீவை கொடுக்கும்போது சிறு எதிர்ப்பை மட்டும் தெரிவித்தனர். அப்போது ஏதும் செய்யாமல் தற்போது ஒத்துழைப்பு கேட்கிறார்கள். அது ஏன்?செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது. அந்த மாநாடு நமக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார்.
கருத்துகள்

திமுக -வைச் சிறுபான்மை அரசு எனத் தேவையற்ற நேரங்களில் எலலாம் எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர். இப்பொழுது அதன் ஆழத்தைத் திமுக உணருகிறது. இத் தீர்மானத்திற்கு எதிராகக் காங். வாக்களித்தால் என்னாவது? எனவேதான் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்கின்றார். எனவே, பிற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பால் தீர்மானம் நிறைவேற்றப்படும் அல்லவா? இல்லையேல் தீர்மானமும் தோற்கடி்க்கப்படும்; ஆட்சிக்கும் இடர்தான். கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று சொல்லும் எதிர்க்கட்சிகள் கலைஞர் கோரிக்கையை ஏற்காமல் விதண்டா வாதம் செய்வது ஏன்? தீர்மானத்தால் பயன் இல்லை என்றாலும் சரி என்று சொல்லித் தமிழ் நாட்டு நலனில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கும் என உலகிற்கு உணர்த்த வேண்டியதுதானே! கலைஞர் ஒத்துழைப்பு கேட்கிறார் என்றால் அதற்கு ஏதோ காரணம் இருக்கும் என்பதை உணர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள்! தமிழ்நாட்டு நலனுக்கான ஒற்றுமையை உணர்த்துங்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/20/2009 4:27:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக