திங்கள், 18 பிப்ரவரி, 2019

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறைமாணவியர் படைப்பு வெளியீட்டு விழா

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியரின்பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில்பொழில் என்றசிற்றிதழும்மாணவமணி என்ற செய்தித்தாளும் வெளியிடப்பட்டன.
விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்  செல்வி வரவேற்புரைவழங்கினார்கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி பொழில் என்றசிற்றிதழை வெளியிட்டு மாணவியர் படைப்புகளைப் பாராட்டி,மேன்மேலும் தங்கள் படைப்புத்திறன்களை வெளிப்படுத்திடவாழ்த்துக்களைக் கூறினார்மாணவியர் காலத்தால் அழியாதபதிவுகளைத் தருதல் வேண்டும் என்றும்சமூகபொருளாதாரமுன்னேற்றத்திற்கானப் படைப்புகளைப் படைத்திட வேண்டுமென்றும்வலியுறுத்தினார்.
துணைமுதல்வர் முனைவர் வாசுகி மாணவமணி என்ற செய்தித்தாளைவெளியிட்டுப்பாடம் சாரா திறன்களை மாணவியர் ஆர்வத்தோடுவளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும்உள்ள உணர்வுகளைத்தாய்மொழி வழியே வெளிக்கொணர்ந்துஇதுபோன்ற முன்மாதிரிசெய்தித்தாள்களை உருவாக்கிட வேண்டுமென்று கூறினார்.
உதவிப்பேராசிரியர் முனைவர் இராசகுமாரி நன்றி கூறினார்.
நன்றி:  ‘நம்ம திருச்சி’ இதழ்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

திராவிடர் கழக மாநில மாநாடு, தஞ்சாவூர்

மாசி 11& 12,, 2050  /  23 & 24 .02.2019, திலகர் திடல், தஞ்சாவூர்
திராவிடர் கழக மாநில மாநாடு
சமூக நீதி மாநாடு

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2343ஆம் நிகழ்வு

அகரமுதல

மாசி 09, 2050 / வியாழக்கிழமை /
மாசி 09, 2050 / வியாழக்கிழமை / 21.2.2019 மாலை 6.30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
பெரியார் நூலக வாசகர் வட்டம்  2343ஆம் நிகழ்வு
சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன்
 பொருள்: ‘ மைய அரசின் கைப்பாவையாக நீதித்துறை’

அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம், சென்னை

மாசி 06, 2050 / திங்கட் கிழமை / 18.02.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 772ஆம் நிகழ்வு
அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம்
நிகழ்ச்சித் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
கவியரங்கத் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்
கவியரங்கத் தலைமை: கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் (நிறுவனர், எழில்கலை மன்றம்)
கவி பாடுவோர் மற்றும் தலைப்பு:
கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் – அண்ணா ஒரு மாமேதை.
கவிஞர் கா.முருகையன் – அண்ணா ஒரு சொல்லேருழவர்,
கவிஞர் கவிமதி – அண்ணா ஒரு படைப்பாளி,
கவிஞர் ஆ.குமாரசாமி – அண்ணா ஓர் அரசியல் வித்தகர்,
கவிஞர் கோ.தாமோதரன் – அண்ணா ஒரு மனிதநேயர், விஞர் இளவரச அமிழ்தன் – அண்ணா ஒரு பல்கலைக்கழகம்

சனி, 16 பிப்ரவரி, 2019

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடற்கொடை



தம் 93 ஆம் அகவையில், தை 23, 2050 / பிப்.06,2019 அன்று இயற்கை எய்திய (தன்மானப் போராளி வழக்குரைஞர் சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன்) சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப் பெற்றது.
சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அரசு மருத்துவக் கல்லூரி வேலை நேரத்திற்குள் செல்ல இயலாது என்பதை உணர்ந்ததால் விண்ணப்பப் படிவம் அளித்தல், ஒப்புகை பெறல் முதலான முன் ஏற்பாடுகளைச் செய்து முடித்தோம். இதற்கு எம்ஞ்சியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மரு.சுதா சேசையன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.வெண்ணிலா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மரு. ஆனந்து, தொழிலதிபர் மனோகரன் ஆகியோர் உதவி செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் மேனாள் முதல்வர், ஓய்வு பெற்ற இணை இயக்குநர் மரு. மலர்க்கண்ணி இன்பலாதன், வழ.இன்பலாதன், மரு. இ.இராசராசன்  ஆகியோர் ஏற்பாட்டால் மின்னஞ்சல்வழி அனுப்பிய படிவங்களை மருத்துவமனையில் பெற்று முன் நடவடிக்கை எடுத்தனர்.
மாலை 4.00 மணிக்குள் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு வர முடியாது என்பதால் உடலை அமரர் அறையில் ஒப்படைக்க இசையுமாறும் மறுநாள் மருத்துவமனையில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தோம். ஆராய்ந்து பார்த்த பின் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனையக மருத்துவ அலுவலர்(RMO) மரு.மகேந்திரன் இதனை ஒப்புக் கொண்டார். இரத்த வங்கிப் பொறுப்பாளர் திரு பாண்டியன், அமரர் அறைப் பொறுப்பாளர் திரு கோபி, பிற மருத்துவர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.
மறுநாள் (24.01.2050 / 07.01.2019) காலை எளியோர் துணைவர் இரா.இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக முறைப்படி வழங்கப் பெற்றது.
அவர் கண் தானத்திற்கு விழைவு தெரிவித்திருந்தாலும் உரிய காலத்திற்குள்  கண் வங்கியில் தொலைபேசியை எடுக்காத காரணத்தால் அவர் விருப்பத்தை நிறைவேற்ற இயவில்லை.
உடல்கொடை குறித்த விழிப்புணர்வும் செயலுணர்வும் அரசிற்குத் தேவை என்பதை உணர்ந்தோம். இது குறித்துத் தனியே எழுதுகிறேன்.
உடல் கொடையை ஏற்பதற்கு வெவ்வேறு வகையில் உதவிய மேற் குறித்தோருக்கும் பிறருக்கும் குடும்பத்தினரின் நன்றி.

குவிகம் அளவளாவல் – நாடகாசிரியர் செ.இரகுநாதன்

அகரமுதல

மாசி 05, 2050 / ஞாயிறு / 17.02.2019 / மாலை 4.00
ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,
சென்னை 600 017

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், உலகத் தாய்மொழி நாள்

 அகரமுதல


கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

உலகத் தாய்மொழி நாள்

கருத்தரங்கம்

மாசி 07, 2050 செவ்வாய்

19.02.2019 மாலை 6.00

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 46

மாசி 04, 2050 சனிக்கிழமை 16.02.2019 மாலை 6.00

சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் (4, பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம்மயிலாப்பூர்சென்னை 600 004
(சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே)

எழுத்தாளர் ஆதவனும் நானும் – ஆர்.வெங்கடேசு

வியாழன், 14 பிப்ரவரி, 2019

புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா, தமிழ் மாநாடு 2019

அகரமுதல

மாசி 3-5, 2050  / பிப்பிரவரி 15-17
மாநாட்டுப்பேரணி
கண்கவர் கலை விழா
மண்ணிசை அரங்கம்
பட்டி மன்றம்
ஆடலரங்கம்
மகளிர் அரங்கம்
கவியரங்கம்
இன்னிசை யரங்கம்
பாராட்டரங்கம்