சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறைமாணவியர் படைப்பு வெளியீட்டு விழா
சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியரின்பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், ‘பொழில்’ என்றசிற்றிதழும், ‘மாணவமணி’ என்ற செய்தித்தாளும் வெளியிடப்பட்டன.
விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் செல்வி வரவேற்புரைவழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி ‘பொழில்’ என்றசிற்றிதழை வெளியிட்டு மாணவியர் படைப்புகளைப் பாராட்டி,மேன்மேலும் தங்கள் படைப்புத்திறன்களை வெளிப்படுத்திடவாழ்த்துக்களைக் கூறினார். மாணவியர் காலத்தால் அழியாதபதிவுகளைத் தருதல் வேண்டும் என்றும், சமூக, பொருளாதாரமுன்னேற்றத்திற்கானப் படைப்புகளைப் படைத்திட வேண்டுமென்றும்வலியுறுத்தினார்.
துணைமுதல்வர் முனைவர் வாசுகி ‘மாணவமணி’ என்ற செய்தித்தாளைவெளியிட்டுப், பாடம் சாரா திறன்களை மாணவியர் ஆர்வத்தோடுவளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், உள்ள உணர்வுகளைத்தாய்மொழி வழியே வெளிக்கொணர்ந்து, இதுபோன்ற முன்மாதிரிசெய்தித்தாள்களை உருவாக்கிட வேண்டுமென்று கூறினார்.
உதவிப்பேராசிரியர் முனைவர் இராசகுமாரி நன்றி கூறினார்.
நன்றி: ‘நம்ம திருச்சி’ இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக