புதன், 3 ஜூலை, 2013

தடுப்பூசி காப்பீடு மாதிரி!

தடுப்பூசி காப்பீடு மாதிரி!

குழந்தைகளுக்கு த், தடுப்பூசி போடுவதன் அவசியத்தை க் கூறும், மருத்துவர் சுரேசு செல்லையா: உரிய காலத்தில், குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி, "இன்ஷூரன்ஸ்' போன்றது. இது, குழந்தையின் உயிர் காக்கும் அரணாக அமைவதோடு, பிற்காலத்தில், பெரும் செலவையும், மன உளைச்சலையும் தவிர்க்கிறது. இளம்பிள்ளைவாதம், தட்டம்மை, சின்னம்மை, புட்டாளம்மை, "ஹெபடைடிஸ் பி' எனும் மஞ்சள் காமாலை போன்ற, ஆபத்தான நோய்கள் வந்தால், அதை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள், நம்மிடம் இல்லை. தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி நோய்களால், குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகி விடும். அதனால், தடுப்பூசி போடுவதில், மிகுந்த அக்கறை காட்டுவது அவசியம். தடுப்பூசி போட அதிகம் செலவாகிறது என, பெற்றோர் காரணம் கூற முடியாது. ஏனெனில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில், பெரும்பாலான தடுப்பூசிகள் இலவசமாகவே போடப்படுகின்றன. காச நோயை தடுக்க தோல் ஊசியும், இளம்பிள்ளை வாதத்தை தடுக்க, போலியோ சொட்டு மருந்தும் தரலாம். தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி, மூளை காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலையை தடுக்க, டி.பி.டி., எனும், முத்தடுப்பு ஊசி போடப்படுகிறது.
பன்றி காய்ச்சலுக்கான வைரஸ் உட்பட, மூன்று வித வைரஸ்களை தடுக்க, "ப்ளூ' தடுப்பூசி போடப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான, கர்ப்பவாய் புற்று நோய்க்கு, எச்.வி.பி., தடுப்பூசியும் போடப்படுகிறது. நாய் கடிக்கு, "ரேபிஸ்' தடுப்பூசியும், வளர்ப்பு பிராணிகள் உள்ள வீடுகளில், முன்னெச்சரிக்கையாக, வளர்ப்பு பிராணி தடுப்பூசி போன்ற தடுப்பூசிகளை, போட வேண்டும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதும், சில சங்கடங்கள் ஏற்படுவது இயல்பானதே. காய்ச்சல் மாதிரியான, சிறு சிறு உபத்திரவங்கள் தலைக் காட்டலாமே தவிர, வேறெந்த பாதிப்பும் வரப் போவதில்லை. காய்ச்சலுக்கு, மருத்துவர் தரும் மருந்துகள் மூலமே சரி செய்யலாம்.

சமோலியில் பாராட்டு பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்சியர்

சமோலியில்  பாராட்டு  பெறும் தமிழகத்தை ச் சேர்ந்த  ஆட்சியர்

சமோலி: கடும் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, உத்தரகண்ட் மாநிலத்தில், மீட்புப் பணியில் சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த, இளம் வயதுடைய கலெக்டர் முருகேசன். இவரின் நடவடிக்கையால், ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள, கலெக்டர், முருகேசனை, பாதிக்கப்பட்டவர்கள் பாராட்டியுள்ளனர்.

கடந்த, 17ம் தேதி, பேரழிவை சந்தித்த உத்தரகண்ட் மாநிலத்தில், அதிகம் பாதிக்கப்பட்டது, சமோலி மாவட்டம். இந்த மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர், தமிழகத்தை சேர்ந்த முருகேசன், 35. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் உள்ள, செலவடை கிராமத்தை சேர்ந்த, ஆறுமுகம் என்ற ஆசிரியரின் மகன் இவர். 2005ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான முருகேசன், உத்தரகண்ட் மாநிலத்தின், தெஹ்ரி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில், கலெக்டராக பணியாற்றியுள்ளார். 2012ம் ஆண்டு மே மாதம், சமோலி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். பேய் மழை, பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய, ஆயிரக்கணக்கானோரை மீட்க, இவர் உதவி செய்துள்ளார். இவர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம், இரவும், பகலும், வெளுத்து வாங்கும் மழையில், மீட்புப் பணியில் ஈடுபடுவதை, அப்பகுதி மக்களும், மீட்கப்பட்டவர்களும் பாராட்டுகின்றனர்.

செவ்வாய், 2 ஜூலை, 2013

பழங்காலக் கல்வெட்டு கண்டெடுப்பு

பழங்கால க் கல்வெட்டு கண்டெடுப்பு

பழங்காலத் தமிழர்களின் நீர் மேலாண்மையை உணர்த்திய 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி கல்வெட்டு, மதுரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 மதுரை- மேலூர் சாலையில் அரிட்டாபட்டி கிராமத்தின் அருகே உள்ள கழிஞ்சமலையில் இந்தக் கல்வெட்டை   தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
 இந்தக் கல்வெட்டில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த சமண துறவிகளுக்கு, படுக்கைகள் அமைத்துக் கொடுத்த விவரம் தமிழ் பிராமி எழுத்துகளால்  பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  கி.மு. 2-ம் நூற்றாண்டில் நெல்வேலி சிழிவன் அதினன் வெளியன் என்பவனும், இலஞ்சி எளம்பேராதான் மகன் எமயவன் என்பவனும் சமணத்துறவிகளுக்கு குகைத் தளங்களையும், படுக்கைகளையும் (முழாகை) அமைத்துக் கொடுத்துள்ளனர்.
  கழிஞ்சமலைக்கருகில் ஆப்டான் மலை, இராமாயி மலை ஆகிய 2 மலைகள் உள்ளன. மூன்று மலைகளில் இருந்து வரும் நீரை குடிநீர்த் தேவைக்காகவும் வேளாண்மைக்காகவும் தேக்கி வைப்பதற்கு கண்மாய் வெட்டி, கரை அமைத்து தண்ணீரை ஒழுங்குபடுத்தி முறையாக வழங்கிட மதகு (குமிழி) அமைக்கப்பட்டுள்ளது.
 இதனை கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் ஆணைமேல் கொண்டான் என்ற பாண்டிய நாட்டு அதிகாரி செய்துள்ளான். இந்நிகழ்வைப் பற்றிய குமிழி கல்வெட்டு அரிட்டாபட்டி கண்மாயில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையும், நீர் ஒழுங்குமுறை திட்டமும் பாண்டிய நாட்டில சிறப்பாக நடைமுறையில் இருந்துள்ளதை இந்தக் கல்வெட்டு உணர்த்துவதாக, இதனைக் கண்டெடுத்த தொல்லியல்துறை மண்டல உதவி இயக்குநர் நா. கணேசன் தெரிவித்துள்ளார்.

Sinhala leftist criticizing government repression overlooks Tamils’ struggle

Sinhala leftist criticizing government repression overlooks Tamils’ struggle

[TamilNet, Monday, 01 July 2013, 23:26 GMT]
The Sri Lankan government’s real concern at the moment is “the threat of widespread social unrest and an uprising by workers, youth and poor”, writes Sinhala leftist K. Ratnayake in article published on the Trotskyite World Socialist Web Site on Monday. Referring largely to Gotabaya Rajapaksa’s “Sri Lanka’s National Security Concerns” lecture at the Kotelawala Defence University in early June, the author claims that “The defence minister’s reference to a renewed “terrorist” threat is aimed at whipping up anti-Tamil communalism to divide the emerging struggles of the working class.” However, an alternative politics Eezham Tamil activist from Jaffna questions whether Mr. Ratnayake, who overlooks the Tamils’ struggle for sovereignty resisting genocidal occupation of their homeland by the GoSL, is consciously or unconsciously defending the state structure that he claims to criticize.

Further comments by the Eezham Tamil activist follow:

Tamils have seen a long history of the Sri Lankan ‘mainstream’ Left competing with the Right in their bid to promote Sinhala national interests at the cost of the Tamils. Whether it is the ‘Trotskyite’ leaders like Colin R. De Silva or ‘Stalinist’ leaders of the JVP, the mainstream Sinhala Left has been party to state oppression of the Eezham Tamils.

Those minor portions of the Sinhala Left who support the Tamils’ right to self-determination have been unable to convince the Sinhalese in the South of the grave errors of the Sinhala nationalists perpetrating genocide, of the agent-imperialist nature of the Sinhala state, and the need to wage a struggle against them.

They have also been unable to disseminate among their constituency, the workers, peasantry and the rural poor, the moral and political crime of participating in the colonization of the homeland of the Eezham Tamils.

Sadly, they have even been unable to intellectually challenge Sinhala writers from the broad ‘Left’ who wax eloquent on workers’ rights but omit any reference to the genocidal oppression that the Eezham Tamils’ face.

For instance, consider Mr. Ratnayake’s article. Contesting Gotabaya’s contention that “democracy has been completely restored” in the North-East, the author writes, “The military occupation of the north and east is continuing and high security zones remain in place. People are subject to constant surveillance and harassment by security forces and associated paramilitary groups.”

The author also notes, not without adequate substance, that “All the major global and regional powers backed the renewed communal war against the LTTE, supplied military assistance and remained silent about the Sri Lankan military’s atrocities against civilians. The US and its allies only began to raise very limited concerns about the slaughter of civilians in the final months of the war, not out of concern for Tamils, but as a means for forcing the government to distance itself from China.”

While taking to account the massive military expenditure of the Sri Lankan government, the author concludes that this is largely for use against the working class, young people and the poor.

The author’s opinions could have been a decent assessment from the Left had only he taken into account the Eezham Tamils’ continuing struggle for independence from a fundamentally genocidal state apparatus.

By its ominous absence, the article appears only as an appeal for regime-change, albeit from the Left. This can also be inferred from the failure of the author to deconstruct the essential nature of the Sri Lankan state.

Tamils can politically support a leader or intellectual of progressive Sinhala politics only on the condition that he or she recognizes the Eezham Tamil nation’s right to self-determination and sovereignty over their historical homeland not only in statements, but also proving it in political action.

The failure to recognize the irreconcilable antagonism between the interests of the Eezham Tamil nation and that of the unitary genocidal Sri Lankan state is not progressive. Even if this comes from a ‘progressive’ concerned about the rights of the workers and the poor in words, in practice it only feeds into the political logic of Sinhala nationalism.

External Links:
WSWS: Sri Lankan defence secretary expresses fears of social unrest

Eezham Tamil refugees arrested in Trichy

Eezham Tamil refugees arrested in Trichy

[TamilNet, Monday, 01 July 2013, 22:09 GMT]
Five Tamil refugees from Sri Lanka were arrested in Trichy on Sunday for allegedly planning to migrate to Australia through brokers, the PTI reported on Sunday. Citing police sources, the report said that the arrest was made by the Q Branch “who kept an eye on them” and that the police were on a hunt for the brokers. The Indian establishment which engages with the Sri Lankan government in facilitating and legitimizing genocidal conditions in the occupied homeland of the Eezham Tamils, is particularly cruel towards such refugees who are only seeking a chance for living, commented a Tamil Nadu activist working for the rights of the Eezham Tamil refugees.

Several Eezham Tamil refugees choose to flee to other countries from camps in Tamil Nadu not only owing to the sub-standard conditions of the camps, but also due frequent harassments by security forces.

Several protests have been made both by refugees in camps and by Tamil Nadu activists to improve living conditions in the camps and to stop criminalization of those forced to flee genocide.

சக்தி தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்ற உதவுக


உரூ.22,636 கோடி அலட்சியம்!


கெடுபிடியாகத் தொழிலாளர்களிடமிருந்து வைப்பு நிதி பெறுவோர் உரிய காலத்தில் உரியவர்களுகு்குப் பணம்  சேர வேண்டும் என்பதில்  உரிய கருத்து செலுத்த வேண்டும். அவ்வாறு திரும்பச் செலுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக் கவேண்டும். அப்பொழுதுதான் அப்பாவிகள் பணம் வீணாக்கப்படாமல் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்கு உதவியாக அமையும். எனவே, செலுத்திய பணத்திற்கு உரிமை கோர வேண்டும் என்று இல்லாமல், பணி முடிந்தவுடன் உரிய முதிர்வுப் பணத்தைத்  திரும்பச் செலுத்தும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

உரூ.22,636 கோடி அலட்சியம்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில், தொழிலாளர்களின் அலட்சியம் பற்றி கூறும், துரை பாண்டியன்: நான், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின், பொதுச் செயலராக பணியாற்றுகிறேன். பீடி, அப்பளம், ஊறுகாய் என, சிறிய தொழிற்கூடங்கள் முதல், ஐ.டி., கம்பெனிகள் வரை, பி.எப்., எனும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும், 8.5 கோடி பேர், பி.எப்., நிதி கட்டி வருகின்றனர். ஆண்டுக்கு, 70 ஆயிரத்து, 88 கோடி ரூபாய், பி.எப்., நிதியத்தில் பணம் சேர்க்கப்பட்டு, வட்டியும் வழங்கப்படுகிறது.

இதுவரை, 6.5 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு சில தொழிலாளர்களுக்கு, அவர்கள் சேர்த்து வைத்த தொகையை திரும்பப் பெறுவதில், போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அலட்சியத்தால், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியத்தில், உரிமை கோரப்படாத பணமாக, 22 ஆயிரத்து, 636 கோடி ரூபாய் உள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றி, வேறு நிறுவனங்களுக்கு மாறும் போது, பழைய கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவோ அல்லது புதிய கணக்கிற்கு மாற்றவோ மறந்து விடுவர். சிலர், வெளிநாடுகளில் வேலை கிடைத்து சென்று விடுவர்; சிலர் மரணமடைந்திருப்பர். இவர்களின் பி.எப்., நிதி குறித்து, குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் போவதால் தான், பல கோடி ரூபாய், உரிமை கோரப்படாமல் உள்ளது. கடந்த காலங்களில், 10 முதல், 12 சதவீத வட்டி தந்ததால், அதிக வட்டி கிடைக்கும் என, ஆசைப்பட்டு, கணக்கை முடிக்காமல் இருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல், கணக்கில் பணம் கட்டப்படவில்லை என்றால், வட்டி கிடையாது என, வாரியம் முடிவு

செய்தது. இதனால், பலர் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றாலும், இன்னும் ஒரு பெரும் தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது. எனவே, வேலையை ராஜினாமா செய்த பிறகோ அல்லது ஓய்வுக்கு பின் கணக்கை முடித்து, மீதி பணத்தை திரும்பப் பெறுவதில், அலட்சியமின்றி விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

அரசு மருத்துவ கல்லூரிக்கு உழவர்கள் உடல் தானம்

முதியவர்கள் பாலுச்சாமி, இராமன் ஆகிய இருவருக்கும்  பாராட்டுகள். இவர்களைப்போல் சிவகங்கையைச் சேர்ந்த, தன்மானச்சுடர் இராமச்சந்திரனாரின் இளைய மகனான திரு இராசமுத்துராமலிங்கம் தன் 85 ஆம் அகவையில் (கடந்த அக்டோபர்) உடல்கொடைக்கான விருப்பத்தினைத் தெரிவித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கண்ணாடி அணியாத இவர்,  வாழும் பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாக அளிக்க முன் வந்துள்ளார். ஆனால், வாழும் பொழுதே கண் தானம் பெறுவதில்லை என்பதால் சட்டச்சிக்கல்களை ஆராய்ந்து முடிவெடுப்பதாகச் சென்னை  மருத்துவக் கல்லூரியில் தெரிவித்துள்ளனர். சிவகங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் புகழ் சேர்க்கும் இவர்களுக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

அரசு மருத்துவ கல்லூரிக்கு உழவர்கள் உடல் தானம்
சிவகங்கை : அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர்களின் படிப்பிற்கு உதவ, இரண்டு விவசாயிகள், உடல்களை தானம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாகுடி கிராமத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி, 75. அதே ஊரைச் சேர்ந்தவர், ராமன், 76. இருவரும் நண்பர்கள். தங்களது உடல்களை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: மனிதனாக பிறந்தால், எதையாவது சாதிக்க வேண்டும். எனவே, எங்களால் முடிந்ததை செய்ய விரும்பினோம். மண் தின்னும் இந்த உடல்களை, சிறந்த டாக்டர்களை உருவாக்க, அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தானம் செய்வது என முடிவு செய்தோம். குடும்பத்தினருடைய ஒப்புதலை பெற்று, இதை செய்துள்ளோம். உடல் தானம் செய்வது எப்படி என யோசித்தபோது, ஓராண்டுக்கு முன், "தினமலர்' நாளிதழில், "உடல், உறுப்பு தானம் செய்வது எப்படி' என்ற செய்தியை படித்தோம். இதில் இருந்த விளக்கங்களை பின்பற்றி, உடல்களை தானம் செய்துள்ளோம். எங்களிடம், எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரியில், சிறந்த டாக்டர்கள் உருவாக வேண்டும். இதற்கு, ஏதோ ஒரு வகையில் உதவுகிறோம் என்பதில், மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

டீன் சாந்தகுமார் கூறுகையில், ""சாதாரண விவசாயிகள், உடல் தானம் செய்திருப்பது பெருமை. இவர்களை போன்ற பலரும் உடல், உறுப்பு தானம் செய்தால், இம்மருத்துவமனை மேலும் வளரும்,'' என்றார்.

தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்..

தமிழாசிரியர்களுக்கே தமிழ்  தெரியா நிலைதான் உள்ளது. எனவே,  முதலில் தமிழாசிரியரக்ளுக்கே பயிற்சி அளிக்க வேண்டும். தமிழில் மட்டுமல்லாமல்  பிற பாடங்களிலும் நேரும் எழுத்துப் பிழைகளுக்கு மதிப்பெண் குறைத்தால்தான் மாணாக்கர்கள் தவறின்றி எழுத முற்படுவர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்..

கோவை : கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, "க' என்பதை க்+ அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பப்பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச்செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி கூறுகையில்,""ஆரம்பப்பள்ளிகளில் நாம் கற்றுக்கொடுப்பதே மாணவர்களின் மனதில் நன்கு பதியும். கற்பித்தலில், தவறுகள் ஏற்பட்டால் சரி செய்வது கடினம். மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டது. தமிழ் மொழியின் அழகே சரியான உச்சரிப்பு, அதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறில் தெரியாமல் வாசிப்பது எளிது; ஆனால், எழுதுவது கடினம். சராசரி மாணவர்களுக்கும், சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கும் எழுத்துப்பிழைகள் அதிகரிக்க இதுவே காரணம்,'' என்றார்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் பொதுவாக குறில், நெடில் கற்பிக்கும் முறை சரியாக இல்லை. "எனக்கு' என்ற சாதாரண வார்த்தையை மாணவர்கள் எழுத்துக்களாக படிக்க சொல்லும் போது "ஏ,னா,க் கூ' (எனக்கு) என்று உச்சரிக்கின்றனர். இது முற்றிலும் தவறு, பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்' என்றனர்.
தாய்மொழியும் முக்கியம்:

ஆங்கில வழிக்கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, தாய் மொழியான தமிழை தவறின்றிப் படிப்பதற்கு பள்ளி மாணவர்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கான முதல் முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழைத் தெளிவாக எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் கற்றுத்தருவது அவசியம்.

தாய்மொழி மட்டுமே ஒருவரின் அடையாளம்: தினமணி வைத்தியநாதன்

தமிழ்ப்பற்றைப் பல வகைகளிலும் வெளிப்படுத்திப் பரப்பி வரும் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள், தினமணியில்  அயல்மொழிச்சொற்களும் அயல்மொழி எழுத்துகளும் இன்றி நல்ல தமிழில செய்திகளும் கட்டுரைகைளும் விளம்பரங்களும் வர நடவடிக்கை எடுக்கலாமே!  திருவள்ளுவர் ஆண்டையும் தமிழ்நாளையும் தினமணியில் குறிப்பிட நடவடிக்கை எடுக்கலாமே! பொன்மலர் நாற்றமுடைத்தாற்போன்ற சிறப்பு அமையுமே! வேண்டு்கோளை நிறைவேற்றுவாரா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தாய்மொழி மட்டுமே ஒருவரின் அடையாளமாக இருக்க முடியும்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்








தாய்மொழி மட்டுமே ஒரு மனிதனின் அடையாளமாக இருக்க முடியும் என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
"எண்ணங்களின் சங்கமம்' அமைப்பு சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு விழாவில் சமூகப் பணியாற்றும் 100
இளைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியது:
சிலர் பேச்சால் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள். சிலர் எழுத்தால் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால், இங்கு விருது பெற்ற 100 இளைஞர்களும் செயலால் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பத்திரிகையாளர்களான நாங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறோம், எண்ணங்களை விதைக்கிறோம். இவற்றால் எல்லாம் மாற்றம் ஏற்பட்டு விடுமா? என்று நான் சிந்திப்பது உண்டு. பரவலாகத் தூவப்படும் விதைகள் ஆங்காங்கே முளைத்து ஆலாகப் படர்வது போல, எண்ணங்களும் எங்கேயோ, ஏதோ ஒரு இடத்தில் தனது வீரியத்தை வெளிக் கொணராமல் இருக்காது.
ஒரு புறம் நாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்த, சமுதாயத்தை சீர்திருத்த சிந்தனைத் தாக்கத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்த, சமுதாயத்தை சீர்திருத்த் சிந்தனைத் தாக்கத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம். மறுபுறம் உங்களைப் போன்ற தன்னார்வலர்கள் இயங்கிக் கொண்டிருப்பதால்தான் எங்களின் எழுத்துக்கள் உயிர்ப் படைத்து, செயல்வடிவம் பெறுகின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சிகளும் நம் நாட்டில் இல்லையே என்கிற தார்மீகக் கோபம் ஏற்படவே செய்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் தலைவர்களும், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும் அரசுச் செலவில் உலகம் சுற்றி வருகிறார்களே, அங்குள்ள வளர்ச்சியை இங்கே ஏற்படுத்த அவர்கள் ஏன் முனைப்புக் காட்டுவதில்லையே என்கிற ஆத்திரம் வரத்தான் செய்கிறது. ஆட்சியாளர்கள் ஏமாற்றினாலும் இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும், தெருவிலும் உங்களைப் போன்றவர்கள் இயங்கிக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உலகமே இந்தியாவைப் பார்த்து பிரமித்தது. இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்பது தான் பல நாட்டவரின் குறிக்கோளாக இருந்தது. வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்றவர்கள் அதற்காகத்தான் கடல் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள விழைந்தனர்.
ஆனால், இன்றோ தங்களது குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். காரணம் அமெரிக்கா செல்வச்செழிப்பான நாடாக மாறியிருக்கிறது.
ஐரோப்பாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களால் உருவான நாடு அமெரிக்கா. அவர்களுக்கென்று எந்த பாரம்பரியமும் இல்லை. செல்வச் செழிப்போடு வாழ வேண்டும் என்பது மட்டுமே அவர்களது லட்சியமாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தனர். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். பழி, பாவத்திற்கு அஞ்சாமல், தர்மநீதி பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டனர். அதுதான் அவர்களது இமாலய வெற்றி. ஆனால், இந்தியர்களான நாம், பழி பாவத்திற்கு அஞ்சக்கூடும். தவறு மூலம் பெறும் செல்வச் செழிப்பை வெறுக்கிறோம். பாரம்பரியம் நம்மைத் தவறுகளிலிருந்து தடுக்கிறது. அதனால்தான் அமெரிக்காவைப் போன்ற முன்னேற்றம் இங்கு இல்லை. ஆனால், தர்மம் இங்கே செத்துவிடவில்லை.
உலகுக்கு வழிகாட்டும் கலாசாரமாக இந்திய கலாசாரம் இருக்கும் என்று விவேகானந்தர் சொன்னது நிஜம். அமெரிக்காவைப் போன்ற செல்வச்செழிப்பு இல்லாவிட்டாலும் போதும் என்ற திருப்தி நம் நாட்டில் இருக்கிறது.
பொது இடத்தில் எப்படி பழக வேண்டும், வாழ வேண்டும் என்ற பொது ஒழுக்கம் மேலை நாட்டவர்களிடம் இருக்கிறது. ஆனால், தனி மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற தனி மனித ஒழுக்கம் நம்மிடம் இருக்கிறது.
சாலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி, சாலையில் ஓரமாக நடப்பது எப்படி என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. ஆனால், வீட்டையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது.
நம்மிடம் இருப்பதை தக்க வைத்துக் கொண்டு இல்லாததைப் பெறுவதுதான் புத்திசாலித்தனம். நமது பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது எல்லாம் வெற்றியாக மாறும். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்தின் பகுதிகளிலும் சமுதாய முன்னேற்றத்திற்காக, மற்றவர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக உங்கள் சொந்த சுகத்தைக் கருதாமல் ஊருக்காக உழைக்கும் தொண்டர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். இது எண்ணங்களின் சங்கமம் மட்டுமல்ல, தொண்டர்களின் சங்கமமும்கூட.
பல்வேறு பகுதிகளில் அவரவருக்கு இயன்றாற்போல, ஏதாவது ஒரு சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்படும் உங்கள் தொண்டு தடாகத்தை சுத்தப்படுத்தும் மீன், சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் காகம் போன்று இயல்பாக விளம்பரமே இல்லாமல் நடக்கிறது. உங்களுடன் இது நின்றுவிடக்கூடாது. நீங்கள் பலருக்கும் முன்னுதாரணமாக, வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும். உங்கள் செயல்பாடு உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால்தான், அதைப் பார்த்து ஏனைய பலரும் சமுதாயத் தொண்டில் ஈடுபட முனைப்புக் காட்டுவார்கள்.
உங்கள் பணியில், "தினமணி' நாளிதழும், எங்கள் "தினமணி' நிருபர்களும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களுடைய உதவியை நீங்கள் உரிமையுடன் கோரிப் பெறலாம். உங்கள் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டால், "தினமணி' உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்பதை மறுத்து விடாதீர்கள்.
தாய்மொழி மட்டுமே ஒருவனின் அடையாளமாக இருக்க முடியும். தாய்மொழி அழியாமல் காப்பாற்றப்பட்டால் மட்டுமே விவேகானந்தரும், மகாத்மா காந்தியும் கட்டிக்காத்த நமது கலாசாரத்தைக் காப்பாற்ற முடியும்.
எனவே, மக்களுக்கு சேவையாற்றும் இளைஞர்களாகிய நீங்கள் தாய்மொழியைக் காப்பாற்றும் பணியிலும் ஈடுபட வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
"எண்ணங்களின் சங்கமம்' அமைப்பின் நிறுவனர் ஜெ. பிரபாகர், "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்' ஆன்மிக இதழின் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், ராமநாதபுரம் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த என். குமரன் சேதுபதி, சுவாமி விவேகானந்தரின் சீடரான அளசிங்கப்பெருமாளின் பேரன் எம்.சி. அளசிங்கப் பெருமாள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.