புதன், 3 ஜூலை, 2013

சமோலியில் பாராட்டு பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஆட்சியர்

சமோலியில்  பாராட்டு  பெறும் தமிழகத்தை ச் சேர்ந்த  ஆட்சியர்

சமோலி: கடும் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, உத்தரகண்ட் மாநிலத்தில், மீட்புப் பணியில் சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த, இளம் வயதுடைய கலெக்டர் முருகேசன். இவரின் நடவடிக்கையால், ஏராளமானோர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள, கலெக்டர், முருகேசனை, பாதிக்கப்பட்டவர்கள் பாராட்டியுள்ளனர்.

கடந்த, 17ம் தேதி, பேரழிவை சந்தித்த உத்தரகண்ட் மாநிலத்தில், அதிகம் பாதிக்கப்பட்டது, சமோலி மாவட்டம். இந்த மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர், தமிழகத்தை சேர்ந்த முருகேசன், 35. சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் உள்ள, செலவடை கிராமத்தை சேர்ந்த, ஆறுமுகம் என்ற ஆசிரியரின் மகன் இவர். 2005ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான முருகேசன், உத்தரகண்ட் மாநிலத்தின், தெஹ்ரி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில், கலெக்டராக பணியாற்றியுள்ளார். 2012ம் ஆண்டு மே மாதம், சமோலி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். பேய் மழை, பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய, ஆயிரக்கணக்கானோரை மீட்க, இவர் உதவி செய்துள்ளார். இவர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம், இரவும், பகலும், வெளுத்து வாங்கும் மழையில், மீட்புப் பணியில் ஈடுபடுவதை, அப்பகுதி மக்களும், மீட்கப்பட்டவர்களும் பாராட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக