வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 96: எம்.ஜி.ஆருடனான கடைசி சந்திப்பு



உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார். பொறுமை இழந்த நிலையில் பிரபாகரன், "அப்படியென்றால் நீங்கள் இந்தப் பாதுகாவலை நீண்டநாள்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்; ஆண்டுகள் கூட ஆகலாம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க இயலாது - அதுவும் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது' என்று ஆத்திரத்துடன் கூறினார். "நீங்கள் ஆயுதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்வோம். எங்கள் ராணுவத்தினை ஈடுபடுத்தி அதைச் செய்வோம். எங்கள் ராணுவத்தின் முன் நீங்கள் ஒரு தூசு. எனது பைப்பில் உள்ள புகையிலைத் தூளைப் புகைத்து முடிப்பதற்குள் - ராணுவம் அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்' என்று அவர் குரலை உயர்த்தினார். பிரபாகரன், "உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். எங்களுக்கு எது நடைபெற்றாலும் சரி' என்றார். தீட்சித் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, "பிரபாகரன் - இதுவரை நான்கு தடவை இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்' என்றார். "அப்படியா, நல்லது. எங்கள் மக்களுக்கு நான்கு தடவை நல்லது செய்திருக்கிறேன் என்று அதற்குப் பொருள்.' உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த உயர் அதிகாரியான தீட்சித், அந்த அறையில் இருந்து வெளியேறினார். கடுமையான முறை பயன்தராததைக் கண்ட அதிகார அமைப்பு, இலகுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைக் கையாளும் எண்ணத்துடன் மீண்டும் பிரபாகரனிடம் வந்தனர். இம்முறை அதிகாரிகள் குழுவில் இந்திய உளவு அமைப்பு இயக்குநர் எம்.கே.நாராயணன் (தற்போது பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசகர்), வெளிநாட்டு உறவு இணைச் செயலாளர் சகாதேவ், வெளிவிவகார அமைச்சகத்தைச் சேர்ந்த நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாகத் தனித்தனி சந்திப்புகளை மேற்கொண்டு, சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனாலும் பிரபாகரனும் மற்றவர்களும் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதே நேரம், பழ.நெடுமாறன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் "பிரபாகரனுக்கு ராஜீவ் திடீர் அழைப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, அதன் விவரத்தையும் பிரசுரித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தைப் படித்ததும், நெடுமாறன், சென்னையிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணியைத் தொடர்பு கொண்டார். ""ஆமாம், பிரபாகரனை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒப்பந்தத்தை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகிறார் என்று தெரிய வருகிறது'' என்றார் வீரமணி. "பிரபாகரன் எங்கிருக்கிறார்' என்று பழ.நெடுமாறன் கேட்கவும், அசோகா ஓட்டலில் இருப்பதாக கி.வீரமணி தெரிவித்தார். நெடுமாறன் அசோகா ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து, பிரபாகரனுக்கு போன் என்றதும், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அறியாத டெலிபோன் ஆபரேட்டர், பிரபாகரன் அறைக்கு இணைப்பை அளித்தார். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது: ""நான் போன் போட்டதும், மறுமுனையில் தம்பி பிரபாகரனே எடுத்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தம்பி - நான் கேள்விப்படுகிற செய்தி உண்மையா?'' என்றேன். அவர், "ஆமாம் அண்ணா! எங்களைச் சிறைவைப்பது போன்று அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வை.கோபால்சாமி உள்ளே வந்தபோது அவரையும் சந்திக்கவிடவில்லை. உடன்பாட்டை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். தீட்சித் மிரட்டுகிறார். இந்திய ராணுவத்தின் மூலம் ஆயுதங்களை எங்களிடமிருந்து பறிப்போம் என்கிறார். நான் எல்லாவற்றுக்கும் மறுத்து வருகிறேன்' என்றார். தம்பி கூறியதைக் கேட்டதும் எனக்குப் பதைபதைப்பு அதிகமானது. ""அப்படியானால் எனது சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு உடனடியாகத் திரும்புகிறேன்'' என்றேன். அவர் ""ஆமாம் அண்ணா! உடனடியாகத் திரும்பினால் நல்லது'' என்றார். எனது பயண ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் செய்த சோமசுந்தரமும் தம்பியுடன் அப்போது பேசினார். உடனடியாகத் தாயகம் திரும்பினேன். (நேர்காணல் - பழ.நெடுமாறன் - 29-8-2009) இதனிடையே பிற இயக்கங்கள் அனைத்தின் பிரதிநிதிகளும் தில்லிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்து தங்கிச் சென்றனர். "விடுதலைப்புலிகள் விஷயம் என்னவாயிற்று' என்று ராஜீவ் கேட்டதும் "பிரபாகரன் ஏற்க மறுக்கிறார்' என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக முதலமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு விமானம் மூலம், அவர் தில்லி வரவழைக்கப்பட்டார். தமிழக முதலமைச்சர் தில்லி வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அன்றைய இரவே, அசோகா ஹோட்டலில் இருந்த பிரபாகரன் குழுவினரைத் தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான விவரங்களை அன்டன் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதி வருமாறு: ""தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.'' ""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்றார் இந்தியத் தூதுவர். ""இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?'' என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது. ""சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?'' என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை'' என்றார் யோகி. ""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?'' என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை'' என்றார் யோகி. வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்'' என்றார் தீட்சித். இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்'' என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம். தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம். எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர - புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை. முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?'' என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்'' என்றார். ""அப்படியே செய்வோம்'' என்று கூறிவிட்டுச் சென்றோம். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான விடுதலைப் புலிகளின் கடைசிச் சந்திப்பு அதுதான்.நாளை: ராஜீவ் - பிரபாகரன் சந்திப்பு!
இலங்கைப் படுகொலை: அமெரிக்கா கடும் கவலை



ஐ.நா. (நியூயார்க்) செப். 3: விசாரணை என்ற பெயரில் தமிழ் இளைஞர்களை தனியாக அழைத்துச் சென்று இலங்கை ராணுவம் வேட்டையாடி வரும் தகவல்கள் குறித்து அமெரிக்கா கடும் கவலையைத் தெரிவித்துள்ளது.
தமிழ் இளைஞர்களை கொத்துக் கொத்தாக அழைத்துச் சென்று இலங்கை ராணுவம் கொடூரமான முறையில் கொலை செய்யும் காட்சிகள் அண்மையில் பிரிட்டனைச் சேர்ந்த சேனல் - 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இது உலக முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா.வும் ஏற்கெனவே இதை கடுமையாக கண்டித்துள்ளன.
தற்போது அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இந்தப் போக்கு மிகவும் கவலையடையச் செய்வதாக உள்ளது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி சுசன் ரைஸ் கூறினார்.
இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு அமெரிக்கா இந்த விஷயத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை தீர்மானிப்போம் என்றார் அவர்.
கருத்துக்கள்

கண்கெட்ட பின்பு சூரிய வணக்கம் செய்ய விரும்பும் அமெரிக்காவே! நீ நினைத்திருந்தால் ஈழத்தமிழர்களின் பேரழிவைத் தடுத்து நிறுத்தி யிருக்க முடியுமே! இப்பொழுது கூட வதைமுகாம்களில் உயிர்வாதை துய்க்கும் தமிழர்களைக் காப்பாற்ற முடியுமே! உன் கவலையால் என்ன பயன்? விரைந்து செயல்பட்டு எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையாவது காப்பாற்று! தமிழ் ஈழ ஏற்பை -அங்கீகாரத்தை- உடனே அறிவி! மன்றாடி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2009 2:42:00 AM

TAMIL people PLEASE think………… Mass killings pogroms against Tamils in 1956, 1958, 1977, 1981 and 1983. Over 3,000 Tamils were killed in 1983 alone and still continue. More than 150,000 Tamils killed from 1983. TAMIL people PLEASE think….. Indian weapons to kill our TAMIL BROTHERS, SISTERS and CHILDREN….……. For example…… 1983: Welikade Prison Massacre, 1985: Valvettithurai Massacre, 1985: Vavuniya Massacre, 1985: Tiriyai Massacre, 1986: Iruthayapuram Massacre, 1986: Akkarapattu Massacre, 1987: Kokkaddichcholai Massacre , 1990: Saththurukkondan Massacre, 1992: Mylanthanai Massare, 1995: Chemmani Massacre, 1997: Kalutara prison Massacre, 2000: Bindunuwewa rehabilitation camp Massacre, 2000: Kumarapuram massacre, 2001: Mirisuvil Massacre, 2006: Allaipiddy Massacre, 2006: Muthur Humanitarian Aid workers Massacre ……………………..

By Vani Kumar, London, UK
9/4/2009 1:57:00 AM

chera, why you need usc support now? you don't have any rights to seek

By sri
9/3/2009 10:18:00 PM

கவலைபடுங்க... நல்லா கவலைபடுங்க. குவைத்தை இராக் ஆக்ரமித்தபோது படை எடுத்தீர்களே அதில் ஒரு 5% கடுமையாக நடந்துகொன்டால் கூட போதும், தமிழ்மக்கள் உயிர் பிழைப்பார்கள். ஆனால் அதை மட்டும் செய்யமாடீர்களே!!!

By Cheran
9/3/2009 9:41:00 PM

கவலைபடுங்க... நல்லா கவலைபடுங்க. குவைத்தை இராக் ஆக்ரமித்தபோது படை எடுத்தீர்களே அதில் ஒரு 5% கடுமையாக நடந்துகொன்டால் கூட போதும், தமிழ்மக்கள் உயிர் பிழைப்பார்கள். ஆனால் அதை மட்டும் செய்யமாடீர்களே!!!

By Cheran
9/3/2009 9:41:00 PM

This another American B.S. Aerica has jailed many sympatheisers of self defence against the naked Genocide under the pretext of terrorism and they refused to give the enhanced saterlite photos that were taken during the genocide of 25,000 Tamils. Tamil Eelam has no oil and America will be least interested. Gross Human Rights are violated by Sri Lanka aided by India, Pakistan and China and US will be the last Country antogonise any of these countries.

By Ram Chetty
9/3/2009 9:35:00 PM

ulagathula irukura thammathundu naadu kooda kandanam sollum.but naanga solla mudiyathu. ippadiku SONIYA sorry 'india'

By MADUSUDANAN,Nagapattinam
9/3/2009 9:24:00 PM

USA, Europe, & all Muslim countries should now concern about these Ilam Tamil generation. ILAM Tamil peoples are origins of that land esp the North & Eastern Lanka. They should be protected. Indian Tamils should get united to save these ILAM Tamil peoples since part of the Tamils there are migrated from India during British regime. So India have great responsibility. DO NOT DELAY FURTHER.

By Indian
9/3/2009 8:10:00 PM

HEY KARUNA,, YOU READ THIS NEWS...AND ANSWER TO PEOPLE OF TAMILNADU.

By kumar
9/3/2009 7:31:00 PM

kind attention US, please do simething to save eelam tamils just like iraq.if you thing that first india then you ,before that rajapakshe will finish entire eelam tamils.so don't believe india they will not do nothing.so first you send your troops to srilanka to save tamil eelam people,we the entire world tamil peoples will behind you.

By bparani
9/3/2009 6:24:00 PM

please dont take more do now

By maru
9/3/2009 6:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *



கொழும்பு, செப்.3- வவுனியா முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை அங்கிருந்து விடுவித்து அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.""முகாம்களில் தங்கியுள்ளவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். 20 ஆயிரம் பேர் தங்களது சொந்த வீடுகளில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளனர். ஆனால், அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து முகாம்களில் தங்க வைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு சென்றால் வரும் பொதுத்தேர்தலில் அவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதால் அதை தடுக்கும் வகையில் அரசு அவர்களை விடுவிக்க மறுத்து வருகிறது. மேலும், 6 மாதத்திற்குள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஐநா சபைக்கு அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு இதன் மூலம் மீறியுள்ளது.''இவ்வாறு ரணில் தெரிவித்ததாக அந்த இணையதளங்கள் குறிப்பிட்டுள்ளன.
கருத்துக்கள்

இரணில் விக்கிரமசிங்கே போல் ஒவ்வொரு சிங்களவனும் இலங்கையில் குரல் கொடுக்கவேண்டும். இல்லையேல் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும். ஆனால், இரணிலுக்கு அவர் கட்சியிலேயே எதிர்ப்பு வலுப்பதுதான் கொடுமை. இலங்கை உயர் நீதி மன்றமும் வதைமுகாம்களில் இருந்து தமிழர்களை விடுவிக்குமாறு தெரிவித்த பின்பும் சிங்கள அரசு விடுவிக்காமல் உள்ளது. வதைமுகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை உயிர் பறிப்பின் மூலம் குறைத்த பின்பு எஞ்சியவர்களைச் சிங்களர்களின் மத்தியில் சிறுபான்மை அடிமையர்களாக வாழும் வகையில் குடியேற்றவே சிங்கள அரசு திட்டமிடுகிறது. ஆகவே, தமிழ் நிலத்தைச் சிங்களக் குடியேற்றமாக மாற்றிய பின்பு இவர்களை விடுவிக்க எண்ணுகிறது. ஆனால், 1983 கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களையே இன்னும் வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ள சிங்கள அரசு இவர்களுக்கும் அதேகதியைத்தானே தரும். 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புத் தடுப்பு முகாம்களில் ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள தமிழக-இந்திய அரசுகளும் விடுவிக்காதிருக்கும் வழிமுறைகளைத்தானே கூறும்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2009 2:30:00 AM

madhusudha, JJ pathi onum sollamatiya? karuna - praba division sollamatiya? praba alive or not ask nedumaran - whole confusion. mk is not sl president? he tried his best... during election busy time, sl completed everything... ltte no wise karuna expulsion lead to release of all secrets 2 sl govt....think ..

By mad
9/3/2009 10:52:00 PM

annan Ranilu.nee vaazhga. un kudumbam vaazhga.unaku irukra akkarai kooda engalta vote vangi wheelchair la ukkandhu irukravangaluku illayenu ninaikrapa than enaku alugachi alugachiya varudhu

By MADUSUDANAN,Nagapattinam
9/3/2009 9:27:00 PM

Take more steps and try to do something good . Otherwise the genocide done by Sinhalese will not be ...... God only knows. Sinhalese Army behave worst that terrorists.

By Indian
9/3/2009 8:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 3 செப்டம்பர், 2009

வில்லிசை பெண்மணி!



ஏட்டில் எழுதி வைத்த கதையைப் பாட்டாகப் படித்து வில்லிசை நடத்தும் பல கலைஞர்கள் மத்தியில் ராஜாத்தி கணேசன் தனித்துவமாக ஜொலிக்கிறார். இன்னும் அச்சேறாத ஓலைச்சுவடி கதைகளை வில்லிசையாக்கி மக்கள் உள்ளங்களை கொள்ளை கொள்வதே இவரது தனித்துவம். குமரி மாவட்டம் ஈத்தாமொழி புதூர் இவரது பூர்வீகம். ஆனால் திருமணம் முடிந்ததும் கணபதியாபுரம் அருகே கல்லுக்கட்டி என்ற இடத்தில் குடியிருந்து வருகிறார் ராஜாத்தி. கிராமிய கலைமணி என்று அழைக்கப்படும் இவர் படித்தது 6-ம் வகுப்பு வரைதான். ஆனாலும் கற்றலும் கேட்டலும் அவருள் தொடர் கதையாகவே இருந்தது. அதுதான் அவரை சிறந்த வில்லிசை கலைஞராக உருவாக்கியது. எழுதி வைத்த கதைகளையும், புராண கதைகளையும் வில்லிசை நிகழ்ச்சியில் பாடி பரவசமூட்டும் கலைஞர்கள் மத்தியில் ஓலைச்சுவடி கதைகளை மக்கள் காதுகளிலும் மனங்களிலும் ரீங்காரமிட செய்யும் வகையில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ராஜாத்தி. தனது 12-ம் வயதிலிருந்தே வில்லிசையை தனது வாழ்வாக்கி கொண்டுள்ளார். சிறுவயதில் வில்லிசை குழுக்களுடன் நிகழ்ச்சிகளுக்குச் சென்று அதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார். ஈத்தாமொழி அருகே பெரியவிளையைச் சேர்ந்த மாடக்கண்ணு புலவர்தான் இவரது குரு. அவரிடம் வில்லிசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்துள்ளார். இப்போது முக்கிய கோயில் கொடை விழாக்களில் இவரது வில்லிசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. புராண கதைகள் என்றாலும், புத்தக கதைகள் என்றாலும் மேடையில் வெளுத்து வாங்குகிறார். அந்தந்த ஊருக்கு சென்றதும், அங்குள்ள கோயிலின் சிறப்புகள், அப் பகுதியில் நிலவும் கதைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த நிமிடத்தில் திறம்பட இசையுடன் பாடி மக்களை அசத்துகிறார். நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் ஒரு குறிப்பைக் கொடுத்து பாடச்சொன்னாலும்கூட அதற்கும் சளைத்தவரல்ல. நாகர்கோவிலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இவருக்கு சிறந்த வில்லிசை கலைஞர் விருதை குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வழங்கி கெüரவித்தார். கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்பட்ட இந்த விருதால் மகிழ்ச்சியில் இருந்த அவரை சந்தித்துப் பேசியபோது தனது தனித்திறன் குறித்து விவரித்தார். இனி அவரே கூறுகிறார்: ""ஆண்டாண்டு காலமாக புராண கதைகளையும் வழக்கத்திலுள்ள கதைகளையும் வில்லிசையாய் கேட்டுக் கேட்டு மக்களுக்கு சலிப்பு தட்டியிருக்கும். இதனால் இன்னும் அச்சு வடிவம் பெறாத ஓலைச்சுவடி கதைகளை மக்களுக்கு வில்லிசை மூலம் சொல்லிவருவதால் அதற்கு வரவேற்பு இருக்கிறது. குரல் வளம், ஞாபக சக்தி, சுயமாக கதைகட்டி பாடுவது உள்ளிட்டவை எனது தனிச்சிறப்புகள். கடந்த 35 ஆண்டுகளாக வில்லிசை கலைத்துறையில் இருப்பதால் அதன் நெளிவு சுளிவுகள் தெரியும். மக்களைக் கவரும் நுணுக்கத்தையும் அறிவேன். இசக்கியம்மன், பெரிய தம்பிரான், சிவனணைந்த பெருமாள், திருக்கழுத்து உடையார், பலவேசம் சேர்வைக்காரன் கதைகள் ஏடுகளில் இருந்து படித்து மனதில் இருத்தியுள்ளேன். மேடைகளில் அவை சரளமாக வந்துவிழும். ஓலைச்சுவடிகளைப் படிக்க எனது தந்தை ராமசுவாமி நாடார் காரண கர்த்தா. சிறு வயதில் ஓலைசுவடியில் எழுதியுள்ளவற்றைப் படிக்க அவர் சொல்லித் தந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விழாக்களில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளும் அளித்துள்ளேன். இதுவரை 10-க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன. போட்டி வில்லிசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளேன். மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதை மறுக்கவில்லை. ஆனால் கிராமங்களில் வில்லிசை நிகழ்ச்சி இல்லாமல் கோயில் விழாக்கள் நடத்தப்படுவதில்லை. வில்லிசை கலை அழியாதது. இளைஞர்கள் பலரும் இதை தற்போது கற்று வருவது நம்பிக்கை தருகிறது. நான்கூட 3 பிள்ளைகளுக்கு இக்கலையை கற்று தந்து கொண்டிருக்கிறேன். இதில் வருமானம் குறைவு என்றாலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய திருப்தி கிடைக்கிறது. எனது குரலுக்கும், என்னிடமுள்ள கலைக்கும் தெய்வம்தான் காரணம்'' என்றார் ராஜாத்தி. இவரது கணவர் கணேசனும் வில்லிசை கலைஞர்தான். இவர் வில்லிசை குழுவில் குடம் அடிப்பார். ஆர். ராஜாத்தி கே. கணேசன் வில்லிசை குழு என்ற ஒரு குழுவை இத் தம்பதியர் நடத்தி வருகிறார்கள். கிராமியக் கலையை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தம்பதியருக்கு வாழ்த்துகள்.அ. அருள்தாசன்படங்கள்: யு. நாகராஜன்

திங்கட்கிழமை, 31 ஆகஸ்ட் 2009 21:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது Administrator ஆல் எழுதப்பட்டது வெள்ளிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2009 05:20






படுகொலை காட்சி வீடியோ-நோயாளிகள் பார்க்க தடை-படத்தில்அழுத்தி காட்சிகளை பாருங்கள்

பான் கீ மூன் வருகை நோர்வே தமிழர்கள் எதிர்ப்பு
பிரசுரித்த திகதி : 02 Sep 2009

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நோர்வே வருகையின்போது, நோர்வே வாழ் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணி வரை ஒன்றுகூடிய நோர்வே தமிழ் மக்கள், தாயக மக்களின் அவலநிலை தொடர்பாக பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா.வின் பாராமுகம் மற்றும் செயல் முனைப்பின்மை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

Burning hearts team perform during the Red Bull Flugtag Russia 2009 on the outskirts of Moscow, 9 August 2009. Enthusiasts competed to fly the longest distance in self-made aircrafts in an attempt to win the Flugtag contest.



இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித், வே.பிரபாகரன், யோகி
திடீர் திருப்பமாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்துக்கு ஜூலை 19, 1987 அன்று வருகை தந்தார். அவருடன் வேறு சிலரும் வந்து விடுதலைப் புலிகள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மிகவும் அவசரமான சந்திப்பு எனவும் தெரிவித்தனர். உடனே பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு நடைபெற்றது. சந்திப்பின்போது பிரபாகரனுடன் யோகி (எ) யோகரத்தினமும் இருந்தார். பூரி, அவர்களிருவரிடமும், இந்தியா-இலங்கைக்கு இடையே ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கையெழுத்திடும் முன்பாக பிரபாகரனைச் சந்திக்க பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புகிறார் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக பிரபாகரன் மேலும் கேட்டதற்கு, அதுபற்றிய விவரங்களை பிரதமர் தெரிவிப்பார் என்றும், விவரம் குறித்து அவரிடம் விவாதிக்கலாமென்பதையும் பூரி தெரிவித்தார். பிரபாகரனும் யோகியும் இதுகுறித்து தங்களுக்குள்ளே யோசிக்கவும், "இதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். மிக முக்கியமான விஷயம். இதைத் தவறவிட வேண்டாம்' என்று பூரி அவர்களைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார். பிரபாகரன் தில்லிக்குச் செல்ல ஒத்துக்கொண்டார். அதே வேளையில் அன்டன் பாலசிங்கமும் எங்களுடன் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். பூரி தில்லிக்குத் தொடர்புகொண்டு பாலசிங்கம் உடன் இருப்பதற்கான உறுதியைப் பெற்றார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக பாலசிங்கத்தை, காவலர்கள் குழு ஒன்று அழைத்துச் சென்றது. அங்கே அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பிரபாகரனும் மற்றவர்களும் சென்னை வருகிறார்கள் என்றும் அவர்களுடன் விமானநிலையத்தில் சேர்ந்துகொண்டு டெல்லி செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. (சுதந்திர வேட்கை நூலில் அடேல் பாலசிங்கம்-பக்.170) அடுத்த நான்கு நாட்கள் கழிந்த பின்னர் ஜூலை 23-ம் தேதி, யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் திடலில் இரு ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்கின. ஹெலிகாப்டரில் ஏறும் முன்பாக விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எழுந்துள்ள ஒப்பந்தத்தை முன்னிட்டு இந்தியா செல்கிறேன். அது ஒப்பந்தமோ அல்லது வேறு எதுவுமோ, எதுவாக இருந்தாலும் தமிழீழ மக்களின் நலன் காக்கப்படும் விதத்தில் அமைந்தால் மட்டுமே ஏற்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அங்கு வந்திருந்த பூரியிடம், "எந்த நிலையில் எங்களது தலைவரையும் தளபதிகளையும் உங்களிடம் ஒப்படைக்கிறோமோ அதே நிலையில், அவர்களை இங்கே கொண்டுவந்து சேர்க்கவேண்டும்' என்று வலியுறுத்திக் கூறினார்கள். அவரும் அவ்வாறே இந்தியா நடந்துகொள்ளும் என்று உறுதியளித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், யோகி (எ) யோகரத்தினம், யாழ்ப்பாணம் அரசியல் செயலாளர் திலீபன் ஆகியோரையும் மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் நோக்கிப் பறந்தது. விமானநிலையத்தில் இவர்கள் வருவதற்கு முன்பாகவே அன்டன் பாலசிங்கம் வந்திருந்தார். அங்கு பாலசிங்கத்தைச் சந்தித்ததும், "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்தவிருக்கும் ஒப்பந்தம் குறித்துத் தெரிவிக்கவும், ஆலோசிக்கவும் என்று வரச்சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் எதுவும் தெரியவில்லை. பூரியிடம் கேட்டால் அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார். அவர் திரும்பத் திரும்பச் சொல்வது தில்லியில் இந்தியத் தூதர் உங்களுக்கு விளக்குவார் என்பதுதான்' என்று பிரபாகரன் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் விமானத்தில் தில்லி கிளம்பினர். சில மணி நேரங்களில் தில்லி வந்ததும், அவர்கள் தங்குவதற்காக ஒரு தளமே நட்சத்திர ஓட்டலான "ஓட்டல் அசோகா'வில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 513 எண் கொண்ட அறைக்கு பிரபாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.ஓட்டலின் வெளியே கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பிரபாகரன் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே, "உங்களது பாதுகாப்புக்காகத்தான்' என்றார்கள். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை இருந்த தளத்திலும் கருப்புப்பூனை அதிரடிப்படையினர் காவல் காத்தனர். அவர்கள் கைகளில் உயர்ரக ஆயுதங்கள். ஓட்டலின் அறையில் காலடி எடுத்துவைக்கும்போது, "உச்சகட்ட பாதுகாப்பில் இந்த அறையில் தங்குகிறீர்கள். அனுமதியின்றி இங்கிருந்து நீங்கள் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது. அறையிலுள்ள டெலிபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன' என்று உடன் வந்த அதிகாரி தெரிவித்தார். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அடுத்தடுத்த சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலைக்குப் பிரபாகரனும் மற்றவர்களும் ஆளானார்கள். "பாலா அண்ணே, இந்த தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்பது நமக்கு வைக்கப்பட்ட பொறி' என்று பிரபாகரன் சொன்னார். சற்று நேரத்தில் இலங்கையின் இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீட்சித் அவர்களின் அறைக்குள் நுழைந்தார். அவரது முகம் இறுகின நிலையில் இருந்தது. சோபாவில் அமர்ந்தார். தனது பாக்கெட்டிலிருந்து "பைப்'பை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு புகையிலைத் துகள்போட்டு பற்றவைத்துக்கொண்டார். இரண்டு மூன்று தடவை புகையை இழுத்து வெளியேவிட்டார். பிரபாகரன் உள்ளிட்டோர் இவரது செயலையே பார்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் பேசவில்லை. அவர் சொல்லப்போகும் செய்தியை அறிந்துகொள்வதில் அவர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் அவர் வாய்திறந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படப்போவதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு செல்லவிருப்பதாகவும், அவ்வொப்பந்தம் தமிழர்களுக்கு நியாயமான தீர்வாக இருக்கும் என்றும், தெரிவித்துக்கொண்டே வந்தவர், ""நீங்கள் இந்த ஒப்பந்தத்தை கட்டாயம் ஆதரிக்கவேண்டும்'' என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, ""இதோ அவ்வொப்பந்தத்தின் ஆங்கிலப் பிரதி'' என்று பாலசிங்கத்திடம் நீட்டி, ""இதனைப் பிரபாகரனுக்குத் தமிழ்ப்படுத்திச் சொல்லுங்கள். நான் இன்னும் இரண்டுமணி நேரத்தில் திரும்பி வருவேன். வரும்போது நீங்கள் இதன்மீது சாதகமான முடிவொன்றைத் தெரிவிக்கவேண்டும்'' என்று கூறிவிட்டு, அவர் அந்த அறையைவிட்டு வெளியேறினார். 1. ஒப்பந்தத்தில் இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாடு வலியுறுத்தலும், 2. தமிழ் பேசும் மக்களுக்கான மாகாண சுயாட்சி 3. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகள் 4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் 5. வடக்கு-கிழக்குப் பகுதிகள் இணைப்புக்கு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு. போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டிருந்தது அந்த ஒப்பந்தம். சாதகமான அம்சம் என்னவென்றால் வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு ஏற்றுக்கொண்டமைதான். மற்றொன்று போராளி இயக்கங்களை அங்கீகரித்ததும் அதன் உறுப்பினர்களைப் "போராளிகள்' என்றழைத்தது ஆகும். மத்திய அரசின் அதிகாரங்களை வலியுறுத்தும்போது வெளிப்படையாகவும், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு -விஷயத்தில் பூடகமாகவும் செய்திகள் உள்புகுந்திருந்தன. மொழி விஷயத்தில் சிங்களம் மட்டும்- ஆனால் தமிழும் ஆங்கிலமும் கூட இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்று உறுதியாகக் கூறப்படவில்லை. "எஞ்சிய விஷயங்கள்' பேசித் தீர்க்கப்படும் என்பதிலும் பல உட்பொருள்கள் இருந்தன. இவையெல்லாவற்றையும்விட ஒப்பந்தம் கையொப்பமான 72 மணிநேரத்தில் போராளி அமைப்புகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்ததைக் கண்ட பிரபாகரனின் கண்கள் சிவந்தன. அவர், "இல்லை-முடியாது-இந்த ஒப்பந்தத்தை ஏற்கவே முடியாது' என்று கொதித்தெழுந்து சொன்னார். தீட்சித் இரண்டுமணி நேரம் அவகாசம் கொடுத்தார். அந்த அளவுக்கு நேரம் தேவைப்படவில்லை. மேற்கொண்டு படிக்கத் தேவையில்லாத ஒப்பந்த வரைவாக அது அமைந்துவிட்டது.இரண்டு மணிநேரம் கழித்து, அந்த அறைக்கு தீட்சித் வந்தார். வந்ததுமே, "தீர்மானத்துக்கு வந்தாகிவிட்டதா?' என்ற கேள்வியை எழுப்பினார். பாலசிங்கம், "நாங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதற்கில்லை' என்றார். "ஏன், என்ன காரணம்?' கேட்டார் தீட்சித். "சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களின் விருப்பத்தை ஒப்பந்தம் பூர்த்தி செய்வதாக அமையவில்லை. மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஆயுதம் ஒப்படைப்பு என்பதை ஏற்பதாக இல்லை. உறுதியான தீர்வும், தமிழ்மக்களுக்கு உரிய பாதுகாப்பும் ஏற்படும்வரை நாங்கள் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா எவ்வாறு கேட்கக்கூடும். இந்த ஆயுதங்களை நாங்கள் எந்த அரச பயங்கரவாதிகளிடம் இருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பறித்தோமோ, அதே அமைப்பிடம் இவை திரும்பப் போய்ச்சேரும். நாங்கள் ஆயுதங்களைக் கையளிப்பது என்பது நடக்கவே நடக்காது' என்று சொன்னார். தீட்சித் இந்த வாதத்தை ஏற்கவில்லை. "இது ஒரு அருமையான திட்டம். இதை நிறைவேற்றியே தீருவோம். இந்திய அமைதிப்படை இங்கே இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஆயுதம் எதற்கு? எங்களை நம்புங்கள். யோசியுங்கள்' என்றார். பிரபாகரன் தரப்பினர் பதிலளிக்காமல் இருக்கவும், "நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி. இது இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம்' என்றார். பிறகு மறுபடியும் தீட்சித்தே பேசினார், "நீங்கள் இதை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்.' "அப்படியா, என்னமாதிரியான விளைவு?' என்று யோகி கேட்டார். "நீங்கள் இந்த அறையிலேயே சிறை வைக்கப்படுவீர்கள்-ஒப்பந்தத்தை ஏற்கும்வரை' என்றார் தீட்சித்.நாளை: எம்.ஜி.ஆருடனான கடைசி சந்திப்பு
கருத்துக்கள்

தொடர் எண் 100 வந்ததும் முடித்து விடாமல் தொடர்ந்து இன்றைய நிலை வரை வெளியிட வேண்டுகிறேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By vanakkam@hathway.com
9/3/2009 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நான் மீண்டும் வருவேன்: இளங்கோவன்



திருச்சி, செப். 2: நான் மீண்டும் வருவேன்; எப்போதென்றால், இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிந்த பிறகு திரும்பவும் வருவேன். அப்போது சூழல் மாறியிருக்கும் என்றார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திருச்சியில் புதன்கிழமை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைத் தொடக்க நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்குப் பிறகு சூழல் மாறும். கடந்த 1967 முதல் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவருகிறோம். இனிமேல் அது முடியுமா? என்ற சந்தேகம். அதற்குத்தான் இளைஞர்கள் தேவை; அதற்காகத்தான் தேர்தல். இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்களைச் சேர்க்க ராகுல் காந்தி எடுத்த முயற்சி இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டைப் பஞ்சாயத்து என்ற பெயரில் குடும்பத்தைப் பிரித்து அதில் சுகமாக வாழ்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறும் அளவுக்கு அரசியல் மோசமாகிவிட்டது. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நம்மைப் பார்த்து யாரும் அப்படிச் சொல்லிவிட முடியாது. தத்தமது வாரிசுகளை அரசியலில் முன்னுக்குக் கொண்டு வருவதை, துணை முதல்வராக்குவதை, எம்பியாக்குவதைப் பார்க்கிறோம். வட மாநிலங்களின் நிலவரங்களைத்தான் சொல்கிறேன். வேறு யாரையும் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்; அதற்கு நான் பொறுப்பல்ல. தியாகத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். மற்றவர்கள் அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள். இப்போது பல விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்றார் இளங்கோவன். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்: தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பதைவிடத் தொண்டனாக இருப்பதையே விரும்புகிறேன். சுதந்திரமாக, மனம் திறந்து பேச முடிகிறது. கொட்டு விழுவதும் குறைவாக இருக்கிறது. என்றாலும், சோனியா காந்தி விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுச் செயல்படுவோம். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு ஓகோவென நல்லபடியாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தில் நிறைவேற்றப்படுகின்றன. இன்னும் மாநில அரசு சிரத்தை எடுத்து மத்திய அரசின் திட்டங்களை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். விஜயகாந்துடன் எந்தப் பகையும் இல்லை; விரோதமும் இல்லை. அவரது வாக்கு வங்கி கூடிக் கொண்டே வருகிறது என்பதைக் கவனித்து வருகிறோம் என்றார்.
கருத்துக்கள்

'' வட மாநிலங்களின் நிலவரங்களைத்தான் சொல்கிறேன். வேறு யாரையும் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது'' என்று பேசும் இளங்கோவன் முதன் முதலில் நேருதான் தன் அத்தைக்குப் பதவி கொடுத்தார்; தன் மகளை அமைச்சராக்கினார்; தான் தலைமை அமைச்சராக இருக்கும் பொழுது நாட்டிற்குப்பாடுபட்ட மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும் இந்திரா காந்தியைக் காங்.கட்சித் தலைவராக்கினார்;என்பன போன்ற உண்மைகளை இக்காலத்தலைமுறையினர் உணரும் வகையில் வெளிப்படையாகப் பேசுவாரா? தேர்தல் என்று வரும் பொழுது திமுக வின் காலடியைக் கழுவுபவருக்கு அதனைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? அயல்நாட்டவர் என்னும் சிக்கல் பெரிதாக மாறியிருக்காவிட்டால் சோனியாதானே தலைமையமைச்சர் ஆகியிருப்பார். காங்.ஆட்சி அமைப்போம் என்று சொல்லாமல் காமராசர் ஆட்சி அமைப்போம் என்று சொல்வதன் மூலம் இராசாசி, பக்தவத்சலம் முதலானவர்களின் காங்.ஆட்சி மோசமானது என ஒத்துக் கொள்ளும் இவர் மீது காங்.தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/3/2009 3:07:00 AM

He should be expelled from the party immediately. He has no right to talk about DMK. This stupid person can never win any election on his own.

By Kumar
9/3/2009 12:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்