சனி, 27 ஜூன், 2009

பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக வெளிநடப்பு
தினமணி


சென்னை, ஜூன் 26: இலங்கைப் பிரச்னை குறித்த தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப் பேரவையிலிருந்து அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய அதிமுக உறுப்பினர் டி.ஜெயக்குமார், "சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்து ஓர் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்றார். "இந்தத் தீர்மானம் எனது ஆய்வில் உள்ளது. நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்று பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார். இதனை ஏற்காமல், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கோஷமிட்டனர். தொடர்ந்து பேரவைத் தலைவர் அனுமதி மறுக்கவே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதிமுகவில் எஸ்.வி.சேகர் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் அவையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் அவைக்குத் திரும்பினர்.
கருத்துக்கள்

கண்டிப்பாக இந்தத் தீ்ர்மானத்தைக் கொணர்ந்து நிறைவேற்ற வேண்டும். இனப் படுகொலைக்குக் காங்.கும் உடந்தையாக இருந்தமையால் பன்னாட்டு நீதி மன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடுக்க உடன்படாது. எனினும், தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்த இத் தீ்ர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/27/2009 1:02:00 AM

நீ இருந்தாய்! ஜாக்சனுக்கு அஞ்சலி

நீ இருந்தாய்! ஜாக்சனுக்கு அஞ்சலி
தினமணி


ஐம்பதுகளி்ல் புகழ்பெற்று வாழ்ந்த அமெரிக்க இசைக்கலைஞர், நடிகர் சம்மி டேவிஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 1990-ல் மைக்கேல் ஜாக்சன் பாடிய கவிதை வரிகள், தமிழில்...
நீ இருந்தாய்!


நாங்கள் வருவதற்கு முன்பே நீ இருந்தாய்.
வலியையும் அவமானத்தையும் தாங்கிக் கொண்டாய்.
உனது வழியில் பலர் தடைகளை எழுப்பினர்.
அவர்களை வீழ்த்தினாய்.
நீயே வென்றாய்.
இது சரியல்ல என அவர்களுக்குப் போதித்தாய்.
அவர்களையே உன்னைக் கொண்டாடச் செய்தாய்.
ஆம். அப்போது நீ இருந்தாய்.
இப்போது நாங்கள் நடந்து செல்ல வழி இருக்கிறது.
எல்லோரும் பாரக்கும்படியாகமுடிந்தவரை நன்றாகவே நாங்கள் இருக்கிறோம்.
இதோ நானும்கூட இருக்கிறேன்.
ஏனெனில், நீ இருந்தாய்.
கருத்துக்கள்

it very bad news , he is onely onley one men in the pop king no the person filled gap no chance im also very upset this news. your no death you living any time inthe world. salute t-he legend in the pop.

By Ragavanandane
6/27/2009 12:17:00 AM

It is very sad news. All should give sympathy and consolations his family.Bleedy BBC not giving much importance because of black. Michael you are always in the heart of Tamil people. Only person dead happy is forthcoming naragasuran Karunanidhi. by gokul.

By goghul
6/26/2009 10:17:00 PM

The only one legend in the POP History!No one cant fill hid gap!!Salute MJ !!!you are still living and there is no death for you! Salute MR.POP KING!

By Anbu
6/26/2009 7:02:00 PM

aadada enna super kavithai idhu :-)

By Karthik
6/26/2009 5:27:00 PM

HE HAS LIVING WITH US FOR A LONG TERM. IT'S TRUE.

By JKN PALANI
6/26/2009 5:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-27: தீவிரவாதத்தின் ஆரம்பம்



நாடு தழுவிய ஓர் அதிருப்தியின் விளைவாக எழுந்த தீவிரவாதத்தால் மாபெரும் ஆயுதக் கலகத்தை 1971-இல் இலங்கை சந்தித்தது. 1971 கலகத்தைத் தலைமை தாங்கி நடத்தியது ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணி ஆகும். அதுவரையில் நாட்டில் நிலவி வந்த இனவாத அரசியலையும், இன உணர்வுகளையும் மதிப்பீடு செய்ய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். உற்சாகத்தின் உந்துதலினால் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிக் கலகம் செய்தனர் ஜே.வி.பி. (ஒயட) என்று பரவலாக அறியப்படும் ஜனதா விமுக்திப் பெரமுன அமைப்பினர். சாதாரண மக்களும் மலையகத் தமிழ் இளைஞர்களும் கூடப் பங்கேற்ற இந்தக் கலகத்தில் பெரும் அளவிற்குச் சிங்கள இளைஞர்களும் பங்கு பெற்றனர். இலங்கை இடதுசாரி மார்க்சியவாதிகள் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாகப் புதுவகையில் உருவான ஒரு தீவிரவாத இயக்கமே ஜனதா விமுக்தி பெரமுன. இதன் தலைவர்கள் தலைமறைவாக இருந்தே இவ்வியக்கத்தை நிறுவினர். மாஸ்கோவில் உள்ள லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வந்த உரோகண விஜயவீரா இதற்குத் தலைமை தாங்கினார். 1970-க்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சனத்துடன் ஆதரித்தது இது. ஆனால் அதே சுதந்திரக் கட்சிதான் பின்னாளில் உரோகண விஜயவீராவைக் கடுமையான முறையில் ஒடுக்கியது. இந்தக் கலகத்தில் அரசு இயந்திரமே ஸ்தம்பித்துவிட்டது. இதனை ஒடுக்குவதற்குப் போதிய ஆயுதங்கள் அரசிடம் இருக்கவில்லை. பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து ராணுவ உதவிகளைப் பெற்றது ஸ்ரீலங்கா அரசு. நாடு முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களும் கலகம் செய்த இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. பயந்த இலங்கை அரசு இந்தியாவிற்கு உதவி கோரி, கோரிக்கை விடுத்தது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மத்தியில் இருந்த இந்திரா அரசு ஸ்ரீமாவோவின் வேண்டுகோளுக்கு இணங்கி கப்பற்படையை இலங்கைக்கு அனுப்பியதோடு, பெருமளவிலான ஆயுதங்களையும் துருப்புகளையும் கூட அனுப்பியது. அவர்கள் அங்கு சென்று கலவரத்தை ஒடுக்கினர். இந்தக் கலகத்தில் 15,000 இளைஞர்கள் கொல்லப்பட்டதன்றி லட்சக்கணக்கான இளைஞர்களும் அதன் தலைவர்களும் மற்றும் அதோடு இணைந்த நவசமசமாஜக் கட்சியினரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். வரலாற்றில் பதியத்தக்க இந்த எழுச்சி, பரந்த அளவில் பரவி நாட்டையே குலுக்கிய அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைக்கு மறுக்க முடியாத சான்றாகவும் குறிக்கப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமின்றிச் சர்வதேச இடதுசாரி அணியினருக்கும் ஓர் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்த இயக்கம் தோல்வி அடைய முக்கிய காரணம் மார்க்சியக் கொள்கைகளைப் பேசிய இவர்கள், அதற்கு நேர்மாறாகச் சிங்கள இனவெறிக் கொள்கைக்கு பலியானதுதான். அதுமட்டுமின்றி, கட்டுப்பாடு நிறைந்த அமைப்பாக இவர்கள் இல்லாததும், சரியான அரசியல் சிந்தனையுடன் வளராததும் தமிழினச் சிறுபான்மையினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காததும் ஆகும். இலங்கை மக்களின் அரசியல் வரலாற்றில் அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடிய இந்தக் கலகத்தின் வீச்சு பின்வரும் நாளில் தமிழ் தேசிய உணர்வுப் போராட்டங்களில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது. ஆக, இவ்விதத்தில் சோசலிச மனிதாபிமானத்தைப் பேசிய ஸ்ரீமாவோ அரசு மிகப் பெரிய படுகொலைக்குக் காரணமானது. பிற்காலத்தில் இலங்கைத் தீவு சந்திக்க இருக்கும் தீவிரவாதப் போர்களுக்கும், போராட்டங்களுக்கும், குருதியின் கோர தாண்டவத்துக்கும் ஆரம்பமாக அமைந்தது இந்தக் கலகம்தான். இந்த நிலையில்தான் ஸ்ரீமாவோ அரசு, அவசர நிலைச் சட்டத்தையும், அடக்குமுறைச் சட்டத்தையும் மக்கள் மீது திணித்தது. போர்க்குணமிக்க சிங்கள இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைக்குப் பின், தமிழர்கள் மீது தனது சட்டரீதியான, அமைப்பு ரீதியான இனவாத ஒடுக்குமுறையைத் திருப்பியது இலங்கை அரசு. அதன் விளைவே இலங்கை "குடியரசு' ஆகும் சட்டமும், புதிய அரசியல் அமைப்பு உருவாதலும் ஆகும். இதில் அனைத்து அடிப்படை உரிமைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் ஒதுக்கிவிட்டுச் சிறுபான்மை மத, இன பாதுகாப்புகளைத் தூக்கி எறியும் வகையில் சிங்களம் தேசிய மொழி என்றும், புத்த மதத்தை அரசு மதமாகவும் அறிவிக்கப்பட்டது. கல்வி தரப்படுத்துதல் சட்டத்தின் மூலம் பெருமளவிற்கு பாதிப்படைந்த தமிழர்கள் இந்தப் புதிய அரசியல் சட்டத்தால் கொதிப்படைந்தார்கள். அரசியல் நிர்ணய சபையில் தமிழர்களால் அளிக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டு 1972 மே 22-ஆம் நாள், இலங்கை அரசியலில் தமிழர்கள் பங்கேற்கவும், ஆட்சியில் பங்கேற்கவும் சுமுகமான முறையில் சிங்களர்களோடு இணைந்து வாழும் நிலைமையும் அடியோடு ஒழிக்கப்பட்டது இச் சட்டங்கள் மூலம்தான். இதனால் தமிழ் இனம் தனிமைப்படுத்தப்பட்டுச் சிங்கள இனத்திற்கு எதிர்முகாமாகத் தள்ளப்பட்டது. இந்தப் பிற்போக்கு ஒருசார்புச் சட்டத்திற்கு ஆதரவாக அனைத்துச் சிங்களக் கட்சிகளும், இயக்கங்களும் (இடதுசாரிக் கட்சிகள் உட்பட) செயல்பட்டன. சிங்கள அரசியல் கட்சிகளோடு கூட்டோ, அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதோ இனிமேல் இயலாத காரியம் என்று தமிழர்கள் நினைக்க ஆரம்பித்ததும் அதுமுதல்தான். இதனையொட்டி தமிழர் மத்தியில் ஐக்கியம் ஏற்பட ஆரம்பித்தது. அரசுக்கும், சிங்கள இனவெறியருக்கும் எதிராகத் தமிழர்கள் ஆத்திரம் கொண்டார்கள். இந்த நிலையில்தான தமிழ் மாணவர்களைக் கொண்ட தமிழ் மாணவர் பேரவையும், தமிழ் அரசியல் அமைப்புகள் ஒன்றாக இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாகின. இதன் விளைவாக விசாரணையற்ற கைதுகளும், அரசின் அடக்குமுறை ஆர்ப்பாட்டங்களும் தொடர்கதையாக ஆனது. தமிழ் இளைஞர்கள் ஆவேசம் அடைந்தனர். சத்தியாக்கிரகம் மூலம் அமைதி வழியில் எதிர்ப்புகளைக் காட்டுவது என்பது அர்த்தமற்றது என்ற எண்ணம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக ஆரம்பித்தது. தமிழ்ச் சமூகம் வாழ முடியாதபடி வேலையில்லாத் திண்டாட்டமும், அடக்குமுறையும் அதிகரித்ததால், இதை எதிர்த்துக் கடுமையான முறையில் போராட்டங்கள் வெடித்து வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. குடியரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு (1972) மீண்டும் நடந்த இடைத்தேர்தலில் (1975) வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அது தமிழ் மக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்தத் தமிழ் உணர்வு வேகத்தால் உந்தப்பட்டு தமிழ் கூட்டணிக்கு தமிழர் சுயாட்சிக்கான திட்டங்களையும், இயக்கங்களையும் கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் பயணம் செய்த சிங்கள மந்திரியின் கார் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். தியாகராஜன் குடியரசுச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தார் என்ற காரணத்திற்காக அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. நல்லூர்க் கிராம கவுன்சிலின் பழைய தலைவரான குமார குலசிங்கம் துப்பாக்கியால் சுடப்பட்டார். இவ்விதத்தில் தமிழ் உணர்வின் வேகத்தால் தமிழ் தேசியப் போர்க்குணம் மிக்க இளைஞர்கள் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். அரசு இயந்திரம் தமிழர் வாழும் வடபகுதி முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அதிகாரத்தின் துணையுடன் அரசு வன்முறை வெறியாட்டத்தை தமிழர் மீது தொடுத்தது. தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. பொதுமக்களை அச்சுறுத்துவதும், விசாரணையின்றிக் கைது செய்வதும் தொடர்ந்து நடந்தது. ஒரு சோக வரலாற்றுக்கு தொடக்கம் எழுதியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியரசுப் பிரகடனமும் அதற்குப் பின்னால் எற்பட்ட மாற்றங்களும். நேரடியாகக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வந்தபிறகு சிங்கள இன ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு, சிறுபான்மையினரின் நலன் புறக்கணிக்கப்படத் தொடங்கியது. அழிவின் ஆரம்பம் அப்போதுதான் ஆரம்பமாகியது.

வெள்ளி, 26 ஜூன், 2009

௧00,00 தமிழ் அணிவகுப்பு ( இலண்டன் )

100,000 Tamils march in London over Sri Lanka’s concentration camps

Photos were posted on 21 Jun 2009 at 6:00am

Viewing photos


Horrors on women in Sri Lanka's internment camps - Egeland

Jan Egeland, the former UN Undersecretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, Tuesday told the press that "Sri Lanka is one of the latest examples of the World community letting a government get away with denying access for the international community of witnesses, of humanitarian relief and protection for civilians," adding that world governments failed what they swore in 2005 of the "responsibility to protect," and that "for Tamil women" there were a "number of horrors." Egeland's comment contrasts with the stand of his successor John Holmes who earlier commended the Sri Lanka's treatment of the 300,000 civilians currently being held in internment camps in Vavuniyaa.

PDF IconUN video: Egeland on Sri Lanka
In preparation for the September 2005 United Nations Summit of world leaders, Kofi Annan presented a report, "In Larger Freedom," which urged the Heads of State and Government to ”embrace the 'responsibility to protect' as a basis for collective action against genocide, ethnic cleansing and crimes against humanity.“ This was later formulated as the "R2P doctrine" of the UN.

Ex-UN HR Co-ordinator
Ex-UN HR Co-ordinator
"What happened to the Tamil women in Sri Lanka? We don't even know. Because there was no access. What we can safely assume is that there were a number of horrors," Egeland said.

"I can also safely assume that new conflicts will brew because injustice still prevails," Egeland added.

Last week Inner City Press asked for the UN's and Holmes' response to the Sri Lanka government barring even UN workers from bringing cameras into the internment camps. "There was no response, nor to the disbanding of the investigation into killings such as that of 17 Action Contre la Faim aid workers near Kilinochchi," Inner City Press reported.

ICJ Vice Chairman urges governments of free people to protect Eezham Tamils

[TamilNet, Thursday, 25 June 2009, 00:16 GMT]
“I call upon the Australian government to stand up and complain bitterly until something is done”, said Justice John Dowd, Vice President of the International Commission of Jurists (ICJ), stressing his point that it is “to not speak up but yell” in order to save the Tamils in the concentration camps. He was addressing a forum in Federal Parliament, Canberra, discussing Australia's role on human rights in Sri Lanka Wednesday last week. Sceptical of United Nations and questioning why Commonwealth is aloof, the jurist mooted an idea for governments such as Australia to hold hearings against those who violated the Genocide Convention, warning what is happening in the island is ethnic cleansing of an ancient people in their homeland.

“We need to go to our parliamentarians to find out why things are not happening, why we are not pressuring the Sri Lankan government”, the jurist asked, urging everyone concerned: “pressure the UN agencies, the NGOs to get people in there as witnesses, the lawyers here will tell you, the most important witness in a civil case is the ambulance officer, the first person on the spot to find out what is happening. We want agencies in, we want governments in, we want the Red Cross in, so they can report what is happening and prevent the terrible things that are happening to these people”.

“If you expose something, if you show something visual, then you get the chance of getting justice.”

“Remember, of the 300,000, something like 80,000 of them are children. They are not combatants. They are not criminals. Lot of them are under-nourished and a lot of them will fail, will die through illness if there is no proper protection. It is up to us, and the media, to let the government know that we want something done, we want some protection for the Tamil people and we want exposure of what is going on now”, he said lamenting that the world spent World War II in learning about such crimes, implemented treaties, but now breaches them.

“Australian public through the media need to understand who the Tamil people are: a minority, but an ancient and a cultured minority in their homeland. The British with their flat-map approach and administrative convenience created the disaster in the same way as we created a disaster in Yugoslavia after the World War I by adopting a ‘convenience of administration’ approach”, the jurist pointed out saying that the Tamils, having a history of some 5000 years, lived in South India and Sri Lanka all the time.

“We have to have a reasonable suspicion that there is going to be more ethnic cleansing”, warned the jurist of the possibilities of Colombo using ‘resettlement’ for infiltration of Sinhalese and re-population of Tamil areas as a form of ethnic cleansing. “Movement of peoples against their will, destruction of culture is a breach of the Genocide Convention, which Australia signed”, he said.

“We need to find out why it is now suggested it will take at least 6 months for the civilians to be released. Why can't they be released back to Jaffna? You get the lie told, oh we are looking for the minefields! Absolute rubbish! There are no reasons why these people from Jaffna, an area under military occupation can't be returned there, and to most of the other areas formerly controlled by the LTTE”, the Justice said.

Asking the question “Why is the Sri Lankan government not allowing people in, to look after them [in the concentration camps]”, Justice John Dowd explained: “Because they want to ensure that every possible person they can identify as a combatant is treated as such – they are examining people for wounds, for evidence of fitness or military activity, and they will use torture to do it”.

“We need to find out about those”, he said in the context of asserting that prisoners of war have to be protected by the four Geneva conventions.

Condemning the attitude of governments favouring another government, the jurist said that governments are the greatest invaders of human rights and the United Nations is not an organisation of nations but governments.

Citing China’s friendship to Sri Lanka and the attitude of Russia, Justice John Dowd said the Security Council is no longer a forum of assistance (to Tamils) and the Human Rights Council “is now effectively, totally, useless as a forum for defending persecuted minorities, but worse, it is now a rubberstamp for approving totalitarian regimes”.

Totalitarian regimes in the Human Rights Council use the misused word ‘sovereignty’ for their protection and thus the HRC is a disaster, he said.

“The Commonwealth is not used as a vehicle it should be”, John Dowd said.

Talking on media, he said they tend to carry only the story of the government. “It's called the 'big lie technique' and if you keep telling the big lie and show photographs of Sri Lankans handing out food, that's the impression that is left."

As free people, and as one in ten in Australia is a refugee or descended from refugees, Australia has to do something for the cause of minorities who don’t have a forum or voice and offer them a platform until the world evolves a body for that purpose, was the position of the international jurist.

Dr. John Whitehall, human rights advocate and Mr. Bruce Haigh, a former diplomat served as Deputy High Commissioner of Australia in Sri Lanka, were the fellow speakers at the forum organised by Dr. Sam Pari. The reports of their speeches will follow.
யாழ்ப்பாண தமிழ் நாளிதழ்களுக்கு தீவைப்பு
தினமணி


கொழும்பு, ஜூன் 25: இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் வியாழக்கிழமை அதிகாலை ஆயுதம் தாங்கிய நபர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டன."நாட்டைப் பாதுகாக்கும் தமிழ் முன்னணி' என்ற அமைப்பு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியை கட்டாயம் பிரசுரிக்குமாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளுக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தது.ஆனால் அதற்கு பணிய மறுத்த வலம்புரி, உதயன் மற்றும் தினக்குரல் (யாழ்ப்பாண பதிப்பு) ஆகிய தமிழ் பத்திரிகைகளை வியாழக்கிழமை அதிகாலையில் விநியோகம் செய்வதற்காக கொண்டு சென்றபோது, ஆனைப்பந்தி மற்றும் கன்னத்திடி பகுதிகளில் ஆயுதம் தாங்கிய சிலர் அதைப் பறித்து தீவைத்துக் கொளுத்தினர். அந்தப் பத்திரிகைகளின் விநியோகஸ்தர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.இந்த சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கை கல்வி அமைச்சரும் அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஆளும் கூட்டணியின் பொதுச் செயலருமான சுசில் பிரேமஜயந்த மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தனர். தீவைப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் அமைச்சர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கை ராணுவ உளவுத்துறைக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.தமிழ் தேசிய கூட்டணி கண்டனம்: தமிழ் நாளிதழ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதற்கு தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி.க்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாண நகராட்சி கவுன்சில் தேர்தலுக்கான மனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்பதையே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் காட்டுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

ழிவுகள் தொடர்கின்றன! உலகமோ அமைதியைத் தொடருகின்றது! பேரவலங்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை! ஆனால், அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது உலகம்! மக்கள் பிறவியை மதிக்க வேண்டிய உலகம் மக்கள் உருவில் பிழையாய்ப் பிறந்தவர்கள் சொற்களுக்கு ஆடுகின்றது! சிங்களத்தையும் இந்தியத்தையும் தூக்கி எறிந்து விட்டு மனிதத்தைக் கையிலேந்தட்டும் உலகம்! அப்பொழுதுதான் மக்கள் உரிமையுடன் வாழ முடியும். வெல்க தமிழ் ஈழம்! மலர்க உலக-ஈழ நட்புறவு!

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:50:00 AM

வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்
தினமணி


வேலூர், ஜூன் 25: வன்னியர் சமுதாயத்தினருக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில் உள்ளோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.வேலூர் அருகே வியாழக்கிழமை, திருமண விழா ஒன்றில் அவர் பேசியது:1987-ம் ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, வன்னியர் சமுதாயம் உள்பட 107 சமுதாயங்களைச் சேர்த்து, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இதில் 10 சதவீதம் கூட வன்னியர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

திரு இராமதாசு அவர்களே! உங்களின் பல நல்ல எண்ணங்கள் நீங்கள் சாதிச்சாக்கடையில் உழல்வதால் மதிப்பிழந்து போகின்றன. நல்ல மனிதனாக எண்ணிச் செயல்பட்டு அனைவரையும் மக்களாகவே எண்ண வழிகாட்டுங்கள். அல்லது பா.ம.கட்சியைக் கலைத்து விட்டு, வன்னியருக்கான சாதி அமைப்பை மட்டும் நடத்துங்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் வன்னியர் செல்வாக்கு பெறுவதால் ஏற்படும் கசப்புணர்வே இந்தத் தேர்தலில் தோல்வியைத் தந்தது மட்டுமல்லாமல் தோல்வி கண்டு அனைவரையும் மகிழ்ச்சி யடையச் செய்தது. உங்கள் பின்னால் உலகத் தமிழர்கள் அணி வகுத்துவர ஆயத்தமாக இருக்கும் பொழுது வன்னியருக்கு மட்டும் குரல் கொடுப்பானேன்? உங்கள் 'தமிழ் ஓசை' இதழை வன்னியர்கள் வாங்கியிருந்தால் அதன் பக்கங்கள் குறையவும் விற்பனை சுருங்கவும் ஆன நிலைமை ஏற்பட்டிருக்குமா? தமிழ் அன்பர்கள்தாமே வாங்கி 'ஆதரவு' தருகின்றனர். அவர்களை இழக்காதீர்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:40:00 AM
அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச சிகிச்சை
தினமணி



கருத்துகள்

பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்! மருந்து இருப்பு இல்லை அல்லது பயன்கழிந்த பழையனவாக உள்ளன என்று கூறி வெளியே வாங்கச் செய்தல், எதற்கெடுத்தாலும் கைந்நீட்டம் முதலான முறைகேடுகளை நீக்கியும் நோயாளிகள் அனைவரையுமே மதிப்பு மிக்கவர்களாக நடத்துதல், எங்கும் எதிலும் தூய்மையைப் பேணுதல், தரமான உணவு அளித்தல் முதலான அரும்பண்புகளைப் பேணியும் தரமான மருத்துவமனைகளாக அரசு மருத்துவமனைகள் விளங்க(வும்) ஆவன செய்க!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:28:00 AM
ராணுவம் பாசறைக்குத் திரும்ப வேண்டும்:
இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு
தினமணி


என்றைக்கு நாங்கள் வீடு செல்வோம், என்றைக்கு எங்கள் துயரங்கள் முடிவுக்கு வரும் என்ற கேள்விகளுடன், இலங்கையில் அரசு அமைத்துள்ள முகாமில் வாடும் தமிழர்கள்.

கருத்துகள்

அடுத்த நாட்டு இறையாண்மையில் இந்தியா எப்படி தலையிடும்? அதற்குத் தமிழக அரசு எப்படி ஒத்துக் கொள்ளும்? சிங்கள அரசு அதனை எப்படி ஏற்றுக் கொள்ளும்? விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறிப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒழித்தாகி விட்டது. எஞ்சியோர் இருப்பது முகாம்களில் அல்ல. ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போன்ற பட்டிகளில்தான் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உரிமை கேட்க மாட்டார்கள். போதிய உணவும் மருத்துவமும் கிடைக்காமல் இவர்களிலும் பெரும்பான்மையர் இறந்து விடுவர். அப்படி இருக்க இந்தியா இப்பொழுது குரலை உயர்த்துவதேன்? கண்துடைப்பு நாடகம் என்றால் பொருட்படுத்த மாட்டோம். இல்லையேல் சிங்களவர்கள் பொங்கி எழுவோம்! என்னும் குரல் செவிகளில் விழுகின்றது. உங்களுக்கும் கேட்கின்றது அல்லவா?

-- நாடகப் பார்வையாளன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:17:00 AM

JUST ANOTHER COMIC LEAVE IT....SL TAMILS HAVE 60 YRS EXPERIENCE WITH SINHALEASE,,,,,,WHO IS TRYING TO FOOL SL TAMILS?????

By DANDY
6/26/2009 5:06:00 AM

NOW INDIA MUST INTERFERE IN SRI LANKA AND MUST WATCH TAMILANS LIFE IMPROVEMENT, AND MUST WATCH KATCHA THEEVU AND MUST WARCH ALL COASTAL BORDERS OF SRILANKA. INDIA MUST WATCH PAKISTAN AND CHINAS HELP IN SRILANKA. WHY AND WHAT PAKISTAN, CHINA, U.S., JAPAN AND OTHER NATIONS ARE DOING INSIDE AND OUT SIDE OF SRILANKA AGAINST INDIA.? MEETINGS, LETTERS AND SMILING SPEECHES ARE NOT ENOUGH. MUST TAKE IMMEDIATE ACTIONS TO SAVE TAMILANS IN SRILANKA, TAMILNADU, SOUTH INDIA. WE MUST PROVE OUR ABILITY, COURAGE TO THE OTHERS THROUGH WATCHING SRILANKA GOVT. EACH AND EVERY MINUTES OF MOVEMENTS. OTHERWISE WE SHOULD EXPECT VERY VERY BIG HEAD ACHS IN FUTURE.

By INDIA NESAN - DUBAI
6/26/2009 4:22:00 AM