வெள்ளி, 3 மே, 2013

Colombo appropriates lands of 400 Tamil families in Vavuniyaa

Colombo appropriates lands of 400 Tamil families in Vavuniyaa

[TamilNet, Thursday, 02 May 2013, 20:33 GMT]
The Colombo government has begun to appropriate 400 acres of lands belonging to Tamils in Veerapuram in Vavuniyaa Cheddiku'lam division to settle down Sinhalese, according to Vanni district Tamil National Alliance parliamentarian Sivasakthi Aanandan. In a similar move, at Nochchikku'lam GS division, private lands of Eezham Tamils have been appropriated for the purpose of 56th brigade headquarters for the occupying Sri Lanka Army, news sources in Vavuniyaa said.

Sinhala settlers now residing in Ulukku'lam village on the border of the Vavuniyaa district are to be settled down in Veerapuram, the TNA MP added.

400 Tamil families were settled down under a housing project in Veerapuram in 1995. Each family was allocated one acre.

Already, the occupying Sri Lanka Army has begun to appropriate twenty acres of private lands belonging to Tamils to construct the 56th brigade headquarters in Vavuniyaa.

குடிநீருக்காக அலைவதா!

குடிநீருக்காக அலைவதா!

கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டால், நீர் வியாபாரமாக மாறுவதை விவரிக்கும், விருதை காந்தி: நான், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் சம்மேளனத்தின் செயலராக பணியாற்றுகிறேன். உலகின் மொத்த நீர் பரப்பில், 2 சதவீத நீர் மட்டுமே குடிக்க உகந்தது. கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, கடந்தாண்டு இந்தியாவில் மட்டும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிநீர் விற்பனை நடந்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 5,000 கோடி.கடந்த, 1990களில், "குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யக் கூடாது; பாட்டில்களின் மீது, "மினரல் வாட்டர்' என்று எழுதக் கூடாது' என்று, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தாலும், யாரும் பின்பற்றவில்லை. பன்னாட்டு கம்பெனிகள், இந்திய நீர்நிலைகள் மீது குறி வைத்துள்ளதால், வணிக சுரண்டல்கள் அதிகரித்து விட்டன.தென் தமிழகத்தின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணியில், பல பன்னாட்டு கம்பெனிகள், தண்ணீரை உறிஞ்சுகின்றன. காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வைகை என, அனைத்திலும், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதால், மழை நீரானது, ஆற்று மணல் மூலம், நிலத்தடி நீராக உறிஞ்சப்படாமல், கடலில் கலந்து வீணாகிறது.சிறிதளவு சேமிக்கப்பட்ட நிலத்தடி நீரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலட்சியத்தால், தொழிற்சாலையின் கழிவுநீர், நிலத்தடி நீரில் கலந்து, குரோமியம் அதிகரிப்பதால், சிறுநீரக பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. நைட்ரேட், புளோரைடு அதிகரிப்பதால், நீரை குடிப்பவர்களின் பற்களில் கரையும், எலும்பு பலவீனமும் ஏற்படும்.
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் சட்டம் இருந்தும், பொதுச் சொத்தான தண்ணீரை, கேன்களில் அடைத்து, விற்பனை செய்வது தொடர்கிறது. மரங்களை அதிகமாக வளர்த்து, அதனால் கிடைக்கும் மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முடியும். இல்லையேல், வருங்கால தலைமுறையும், குடிநீருக்கு அலையும் அவலம் தொடரும்.

தேசியக் கொடியைக் காட்டுங்கள்.. எந்த நாடு என்று சொல்கிறேன்: 3 அகவைச் சிறுமி

தேசிய க் கொடியை க் காட்டுங்கள்.. எந்த நாடு என்று சொல்கிறேன்:  3  அகவை ச்  சிறுமி

பெ.நா.பாளையம்: இந்திய தேசிய கொடியை காண் பித்தால் காங்கிரஸ் கட்சி கொடி, என்று கூறுபவர்கள் மத்தியில் ,பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மூன்று வயது சிறுமி, எந்த நாட்டின் தேசிய கொடியை காண்பித் தாலும் அசராமல் நாட்டின் பெயரை கூறுகிறார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூ.கவுண்டம்பாளையத்தில் உள்ள சால்சர் குடியிருப்பில் வசிக்கும் சிவராமகிருட்டிணன்-சங்கீதா இணையரின் மகள் சாகித்யாவர்சினி. இவர், உலகில் உள்ள எந்த நாட்டின் கொடியை காட்டினாலும், அதன் பெயர், தலைநகரம் ஆகியவற்றை மனப்பாடமாக கூறுகிறார்.
சிறுமியின் தந்தை சிவராமகிருஷ்ணன் கூறுகையில்,""சாகித்யாவர்ஷினி, தனது சகோதரன் அருண் பாடம் படிக்கும் போது, உலக வரைபடம் குறித்து விபரங்கள் சேகரித்த போது அதை கூர்ந்து கவனித்து வந்தார். "டிவி'யில் வரும் உலக செய்திகள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நாட்டுக் கொடிகளை காண்பிக்கும் போது, அந்த நாட்டு பெயர்களை சாகித்யாவர்ஷினி சரியாக கூறினார். இச்சம்பவத்துக்கு பிறகுதான், அவரிடம் இருந்த திறமை எங்களுக்கு தெரியவந்தது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் கொடிகள், தலைநகரம், நாடுகள் குறித்து கூறி, வியப்பில் ஆழ்த்துகிறார். வீட்டில் சிறு நூலகம் உள்ளது. அதில் உள்ள புத்தகங்களை பார்ப்பதில் இப்போதே கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நாங்கள் சொல்லிக் கொடுத்த பின், தற்போது 20 திருக்குறள்களை சரியாக கூறுகிறார். சாகித்யாவர்ஷினியை வரும் ஜூன் மாதம்தான் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார். சாகித்யாவர்ஷினியின் திறமை குறித்து உளவியல் நிபுணர் செந்தில்குமார் கூறுகையில்,""சில குழந்தைகள் இது போன்று அதீத திறமை மிக்கவர்களாகவும், மனப்பாடம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் நாட்டின் கொடிகளை பார்த்து தலைநகரம், நாட்டின் பெயர்களை கூறுவதோடு, இதே வயதில் சிலர் ஓவியம் வரைவதிலும் திறமை உள்ளவர்களாக இருப்பர். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக காணப்படும் இது போன்ற சிறுவர், சிறுமிகளின் திறமைகளை ஊக்கவிக்க வேண்டும்,'' என்றார்.

வியாழன், 2 மே, 2013

Eezham Tamil activist elected to represent youth wing of German left party

Eezham Tamil activist elected to represent youth wing of German left party

[TamilNet, Wednesday, 01 May 2013, 23:56 GMT]
Balakrishnan Koculan, a 29 year old Eezham Tamil youth activist, was elected to represent the official youth wing of the German Die Linke party on Sunday. In the 6th Federal Congress of the Left Youth -Die Linksjugend [`solid] held at Magdeburg in Germany, Mr. Koculan along with seven other activists were elected by 200 delegates of the youth organization from across several states in Germany, with Koculan getting 52.63% of votes. Speaking to TamilNet, Mr. Koculan urged Tamil youth in the diaspora to challenge the unjust approach of the global establishments towards the Eezham Tamils’ struggle, stressing the necessity of building alliances with progressive forces.

Koculan
“Our youth in the diaspora do not face the brutal repression that the Eezham Tamil youth in the homeland face and have greater space for freely expressing their opinions. They should keep in mind that the actors in the western establishments that contributed to Sri Lanka's genocidal war on our liberation struggle cannot be trusted,” Mr. Koculan said.

“The youth should identify those progressive forces that stand with our liberation struggle on principled grounds and build bridges with them,” he further added.

Mr. Koculan, currently a student at Heinrich-Hertz-Europakolleg, is an Eezham Tamil youth activist who is well known among grassroots community circles in Germany. He has also worked towards building solidarity with leftist groups and other oppressed nations.

The parent party of the Die Linksjugend [`solid], Die Linke, has 76 seats at the German federal parliament and eight members in the European Parliament. The Left is a member of the Party of the European Left and is the largest party in the European United Left–Nordic Green Left grouping in the European Parliament.

TNPF prepared to join TNA, if pre-2009 goals upheld: Gajendrakumar

TNPF prepared to join TNA, if pre-2009 goals upheld: Gajendrakumar

[TamilNet, Wednesday, 01 May 2013, 23:28 GMT]
Amidst news reports on split within the Tamil National Alliance (TNA) and disunity in the Tamil political camp, the leader of the Tamil National People’s Front (TNPF) Mr Gajendrakumar Ponnambalam on Wednesday came forward to tell that his party is prepared to join with the TNA, and even prepared to dissolve its identity itself, if the TNA could stick to pre-2009 political goals of Tamils. The current split within the TNA is between the ITAK, the major constituent party of electoral political origins and other parties of militant political origins. Both factions have now approached the TNPF. The deceptive prospects of Northern Provincial Council elections, which the LLRC-based Geneva resolution urged to conduct, and Indo-US competitive engineering in the hijack of Tamil polity are behind the split, news sources in Jaffna said.

TNPF meeting
Mr Gajendrakumar announced the stand of his party publicly, while addressing TNA’s May Day meeting in Jaffna, organised at Arasadi near Nelliyadi in Vadamaraadchi.

While he was addressing the meeting, masked people entered his house premises in Jaffna and after asking his whereabouts noted down the numbers of the vehicles parked in the premises, news sources said.

Eezham Tamils in the North and East originally mandated the TNA, in the times of the LTTE, to politically pursue the Tamil national cause.

Declaration on the independence and sovereignty of the nation of Eezham Tamils and people in the North and East democratically mandating a separate country called Tamil Eelam, predate all militant politics of Tamils.

The absence of the LTTE, which genocide-abetters branded as ‘terrorists,’ could never mean the abandonment of the democratic cause and no power on the Earth has right to instruct Tamils on it, is the position of Tamil national political circles.

The split in the TNA after May 2009, causing Gajendrakumar to come out and form the TNPF, was due to infirmity in the TNA in asserting to the sovereignty of the nation of Eezham Tamils in the island.

TNA’s infirmity, implied denouncement of the national cause of Eezham Tamils, confused statements on federal solutions, talk on the 13th Amendment, withdrawal of opposition to the LLRC recommendations that were seeking demographic assimilation and ultimately the TNA going behind ‘non-descript’ solutions – all were due to pressure, intimidation and hijack alternately or jointly coming from India and the USA, is well known to the gagged Tamil masses in the island.

In recent times, New Delhi is planning to bring in some faces kept by it in reserve in India, to stage the Provincial Council deception of its rotten 13th Amendment, as though the demonstration in the East jointly blessed by India and the USA is not enough, alternative political activists in Jaffna say.

TNPF meeting


Speaking at the May Day meeting on Wednesday, Gajendrakumar came hard on the TNA for giving importance to the 13th Amendment-based deception of Provincial Council. He refuted the argument coming from some sections of the TNA that they would contest to ‘disprove’ the ineffectiveness of the model. Is there any need to still disprove it by contesting, asked Mr Gajendrakumar.

He also came hard on the TNA for not mobilising or undertaking any genuine people’s struggle.

The TNA either brings itself into the scene to get the credit whenever people rise up and organise protests or they show keenness in organising protests only to compete with the TNPF, Gajendrakumar said with examples, urging the TNA to genuinely take up people’s politics and mobilise the masses.

கலைஞர் குடும்பத்தினருக்குக் கணையாழிகள் பரிசுப் போட்டி


கருணாநிதி பிறந்த நாளையொட்டி
தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்:
 மா.சுப்பிரமணியன்

கலைஞர் குடும்பத்தினர் தாங்கள் நடத்தும் சன்  தொலைக்காட்சி முதலான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நைன்கிளெவுட் முதலான திரை நிறுவனங்களுக்கும்  சன்சைன் முதலான கல்விக்கூடங்களுக்கும்  சன்ரைசர் மட்டையாட்டக்குழு முதலான பிற அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் உதயநிதி முதலான குடும்பத்தினருக்கும் உள்ள பெயர்களை மாற்றித் தமிழ்ப் பெயர் சூட்டினால் அவர்களுக்குத்  தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் கணையாழிகள் அணிவிக்கப் பெறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருணாநிதி பிறந்த நாளையொட்டி த் தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: மா.சுப்பிரமணியன்
சென்னை, மே. 2-

தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளை நாடெங்கும் எழுச்சியோடு கொண்டாடுவது என்றும் அதனையொட்டி வீதிதோறும் கழகக் கொடியேற்று விழா, ஏழை எளியோர்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், கருத்தரங்கம், கவியரங்கம், மருத்துவ முகாம், ரத்த தானம், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தின் புலவர் பெருமக்களும், கவிஞர் பெருமக்களும் பங்கேற்று தலைவர் கலைஞர் அவரின் பரிமாணங்களை அவரவர் நடையில் எழுதும் வண்ணம் மாபெரும் கவிதைப் போட்டி ஒன்றினை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டிகான கவிதைகள், ‘‘வரலாறாய் வாழ்பவர்’’ என்கிற தலைப்பில் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ அல்லது புதுக்கவிதைகளாகவோ இருக்கலாம்.

தேர்வாகும் கவிதைக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும் - இரண்டாம் பரிசாக ரூபாய் 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் 25 ஆயிரமும் ஆறுதல் பரிசாக 10 கவிஞர்களுக்கு தலா ரூபாய் ஐந்தாயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதிக்குள் விரிவாக்கப்பட்ட சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட 200 மாநகராட்சி வார்டுகளில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை சூட்டி அதற்கான சான்றுகளை 15-ந்தேதிக்குள்ளும், கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்பு கவிஞர் பெருமக்கள், தங்களுடைய கவிதைகளை, வருகின்ற மே மாதம் 10-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதிக்குள்ளும், ‘அன்பகம்‘, எண்.4 தொழிலாளர் குடியிருப்பு, கிண்டி, சென்னை-600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழ் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Thursday, May 02,2013 03:12 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
கலைஞர் குடும்பத்தினர் தாங்கள் நடத்தும் சன் தொலைக்காட்சி முதலான தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நைன்கிளெவுட் முதலான திரை நிறுவனங்களுக்கும் சன்சைன் முதலான கல்விக்கூடங்களுக்கும் சன்ரைசர் மட்டையாட்டக்குழு முதலான பிற அமைப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் உதயநிதி முதலான குடும்பத்தினருக்கும் உள்ள பெயர்களை மாற்றித் தமிழ்ப் பெயர் சூட்டினால் அவர்களுக்குத் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் கணையாழி அணிவிக்கப் பெறும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Thursday, May 02,2013 02:41 PM, ஈன said: 0 0
எங்கிருந்து வந்தது இந்த தங்கம். விரைவில் அமலாப்பிரிவினர் இவரது மற்றும் நண்பர் உறவினர்கள் வீடுகளை முற்றுகை இடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
Thursday, May 02,2013 02:03 PM, சன் ரைசெர்ஸ் said: 2 5
இவங்க குடும்ப கம்பெனி பெயர் எல்லாம் இப்படி இருக்கு -
Thursday, May 02,2013 01:58 PM, டீக்கடை பெஞ்சு said: 1 8
மை சைல்டு நேம் இஸ் "தமிழ் மகன்"..! தங்க மோதிரம் தருவீங்களா..?
On Thursday, May 02,2013 02:01 PM, சோமு said : 3 6
திமுக வுக்கு ஒட்டு போடணும் போடுவீங்களா

வெட்கக்கேடான செய்தி வேறு இல்லை

இதைவிட வெட்கக்கேடான செய்தி வேறு இல்லை. அரசு வணிக நிறுவனம் அன்று. தாய்மொழிவழிக்கல்வியையே அனைத்து நாட்டுக் கல்வியாளர்களும் வற்புறுத்துகையில் அயல்வழிக்கல்வியை ஊக்கப்படுத்துவது அரசிற்கு இழிவு தேடித்தரும் செயல் ஆகும். தமிழ் நலம் சார்ந்த கொள்கைகளை முதல்வர் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகையில் மாநகராட்சியும் பள்ளிக்கல்வித்துறையும் இவ்வாறு அதற்கு எதிராக நடந்து கொள்வது  முறைகேடானது. தமிழ்வழிக்கல்விக்கு வரவேற்பு இல்லையெனில், காரணம் அறிந்து குறையை நீக்க வேண்டும். அதற்கான ஒரே காரணம், பணி வாய்ப்பு இன்மைதான். எனவே, கடந்த ஆட்சியில் ஒப்புக்குப் போடப்பட்ட தவறான ஆணையை நீக்கித் தமிழ்வழியில் கல்வி கற்றவர்களின் வேலைவாய்ப்பிற்கு முழு முன்னுரிமை அளித்து அதன்பின்பே, தேவையெனில் தமிழ் அறிந்த அயல்மொழிவழிக்கல்வியினருக்கு  வாய்ப்பு அளிக்கப்படும் எனப்புதிய ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பகுதி 1 இல் கட்டாயம் தமிழைத்தான் படிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரவேண்டும். . ஆர்வமுள்ளவர்கள் அவரவர்  தேவைக்கேற்ப பிற மொழிகளைக்  க்ற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். ஆனால், கல்வி நிலையங்களை யார் நடத்தினாலும், தமிழ்வழிக்கல்வி மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்ற நிலையைக் கொண்டுவரவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


போட்டியை ச் சமாளிக்க தமிழக அரசு அதிரடி : ஆங்கில வழி க் கல்வியை அதிகரிக்க முடிவு



தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள குறைவான அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு சேர்க்கைக்கு, பலத்த போட்டி நிலவுகிறது.அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போலீசார் பாதுகாப்புடன், விண்ணப்பங்களை வழங்குகின்றனர்.
தனியார் பள்ளிக்கு நிகராக, இந்த பள்ளி இயங்குவது தான், போட்டிக்கு காரணம். ஆசிரியர்களும், முழு ஈடுபாட்டுடன் உழைப்பதால், மாநில அளவிலான இடங்களில், இந்த பள்ளி இடம் பிடிக்கிறது. அத்துடன், தேர்ச்சியும், 100 சதவீதமாக இருந்து வருகிறது.இதேபோன்று, படிப்படியாக, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆங்கிலவழி கல்வி முறையை அறிமுகப்படுத்தி, தரமான கல்வியை வழங்கினால், தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரை இழுக்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கும், 250 பள்ளிகளில், 95 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் நடந்து வருகின்றன. தற்போது, மேலும், 20 பள்ளிகளில், ஆங்கிலவழி வகுப்புகளை துவக்க உள்ளதாக, மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சியைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையும், அதிகளவில், ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவங்க, திட்டமிட்டுள்ளன.கடந்த ஆண்டு, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்த பள்ளிகளில், 640 வகுப்புகள், ஆங்கில வழியில் நடந்து வருவதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், 500 பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, சட்டசபையில், இம்மாதம், 10ம் தேதி, பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியாகலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில்,"படிப்படியாக, அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கில வழி கல்வி திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கை, ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும். அந்த வகையில், வரும் கல்வி ஆண்டிலும், கணிசமான அரசு பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்குள் இருந்தாலும், இவற்றில், 43 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, 36 ஆயிரமாக இருந்தபோதும், இவற்றில் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, 58.05 லட்சமாகத் தான் உள்ளது.ஆண்டுக்கு ஆண்டு, தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் எடுத்து வரும் நிலையில், போட்டியை சமாளிக்கவும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.- நமது நிருபர் -

ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்

ஆமைகளின் வழித்தடம் கண்டு கடலோடியவன் ஆதித் தமிழன்

பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப் பயணம் மேற்கொண்டனர் என்று தொல்லியல் துறை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாதாந்திர கருத்தரங்கு எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சீ.வசந்தி தலைமை வகித்தார்.
இதில் ஒருங்கிணைந்த பெருங்கடல் கலாசார ஆய்வு அறக்கட்டளை தலைவர் சிவ. பாலசுப்பிரமணி "ஆமைகளின் கடல் வழியில் -கடலோடி தமிழர்களின் தொன்மை" என்ற தலைப்பில் பேசியது: ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாள்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.
கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.
தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது.
கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.
பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.
ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன.
கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது.
பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான். கரையோரப் பகுதி வாழ்வியல்கள் இன்னும் ஆழ்ந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் பாலசுப்பிரமணி.
நிகழ்ச்சியில் தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குநர் வெ.ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

மாணவர்களும் சம்பாதிக்கலாம்!




மாணவர்களும் சம்பாதிக்கலாம்!

"பார்ட் டைம்' எனும் பகுதி நேர வேலையில், 150 கோடி சம்பாதித்த, 17 வயது சிறுவன் நிக்: நான், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவன். என் பெற்றோர், ஒன்பது வயதிலேயே கணினி வாங்கி தந்தனர். அதில் படம் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது என, ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளை போலவே இருந்தேன். ஆர்வ மிகுதியால் கணினி தொடர்பான, "சாப்ட்வேர் புரோகிராம்'களை எழுத ஆரம்பித்த போது, எனக்கு, 15 வயது. விளையாட்டாக, "ட்ரிம்மிட்' என்ற சாப்ட்வேரை எழுதி, இணையத்தில் வெளியிட்டேன். அதை பயன்படுத்திய பலர், சிறப்பாக உள்ளதாக பாராட்டினர். சிலர், அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டினர். பாராட்டுக்கு முக்கியத்துவம் தராமல், சுட்டிக் காட்டப்பட்ட தவறுகளை திருத்தி, "சம்லி' என்ற புதிய புரோகிராமை வெளியிட்டேன். என் புதிய வெளியீட்டை பார்த்த பலரும், சிறப்பாக உள்ளதாக பாராட்டினர். யாஹூ நிறுவனம், என் சம்லி சாப்ட்வேரின் பயன்பாடுகளை அறிந்து, அதை விலைக்கு வாங்க முற்பட்டது. அதை, 150 கோடிக்கு விற்ற போது, எனக்கு, 17 வயது. பள்ளியில் படித்தபடி, சும்மா ஓய்வு நேரத்தில் பகுதி நேர வேலையாக எழுதியதே, இந்த சாப்ட்வேர். இங்கிலாந்தில், மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே, பகுதி நேரமாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந் தோ, சுயமாக தொழில் துவங்குவது வழக்கம். பெற்றோரும் இதற்கு தடை விதிக்காமல், இதுவும் ஒருவகையான படிப்பு என்ற மனநிலையில் இருப்பர். சிலர், பகுதிநேர பணியின் ஆர்வமிகுதியால் படிப்பை நிறுத்தி, முழுநேரத் தொழிலாக செய்கின்றனர். இதனால், பலர் ஜெயித்து தங்கள் வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர். முயற்சிகள் தோற்றாலும் பிரச்னையில்லை; மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர, இங்கிலாந்தின் கல்வி முறை உதவுகிறது. மைக்ரோசாப்ட், ஆப்பிள், யாஹூ, கூகுள், பேஸ்புக் போன்ற கணினி துறையில் சிறந்த நிறுவனங்கள், என்னைப் போன்ற மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை என்பதால், பகுதி நேர வேலையிலும் மாணவர்கள் சாதிக்கலாம்.

தமிழை வாழ்விக்கும் கொடை திருக்குறள்!

தமிழை வாழ்விக்கும் கொடை திருக்குறள்!











தமிழை வாழ்விக்கும் கொடைதான் திருக்குறள் என புகழாரம் சூட்டினார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் உள்ள திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் 16-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஆகியவை திருச்சி இ.ஆர். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு, ஓய்வுபெற்ற பேராசிரியர் ப. தர்மலிங்கம் தலைமை வகித்தார்.
விழாவில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய நிறைவுரை:
அடுத்த தலைமுறைக்கு திருக்குறளை எடுத்துச் செல்லும் பணியை தொடர்ந்து 16-வது ஆண்டாகச் செய்து வரும் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையை நிறுவி செயல்பட்டு வரும் தயாபரனை பாராட்டுகிறேன்.
உலகில் எத்தனையோ மொழிகள், இனங்கள் உண்டு. அந்தந்த மொழிகளில் இலக்கியங்களும் உண்டு. ஆனால், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும் பொதுவான மறையைத் தந்திருப்பது தமிழினம் மட்டும்தான். அதுதான் திருக்குறள்.
மேலை நாடுகளில் வயதானவர்களுக்கு மறதி நோய் அதிக அளவில் ஏற்படுகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஆய்வு நடத்தியபோது கிடைத்த விடை என்ன தெரியுமா? விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்ற பெயரில் எதையுமே ஞாபகம் வைத்துக் கொள்ளாத நிலையை ஏற்படுத்தி இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆறெட்டு நாற்பத்தி எட்டு என்று மனதால் கணக்குப் போடக்கூட கால்குலேட்டர் தேவைப்படுகிறது என்கிற நிலைமைதான் மறதி நோய் ஏற்படக் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இள வயதில் மனனம் செய்வதால் முதுமையில் மறதி நோய் வராது.
திருக்குறளை மனனம் செய்வதன் மூலம் இந்த குழந்தைகளுக்கு இரண்டு முக்கியமான பலன்கள் கிடைக்கும். ஒன்று வாழ்க்கை நெறிகளை அறிந்து கொள்வது, மற்றொன்று முதுமைக்கு அவர்கள் சேர்த்து வைக்கும் ஓய்வூதியமாக மறதி நோய் ஏற்படாது என்பதும்தான் அவை.
திருக்குறளை குழந்தைகள் அர்த்தம் தெரியாமல் படிப்பதால் பலன் உண்டா என்று கேட்கலாம். அனைத்து குறள்களுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு தான் படிக்க வேண்டும் என்பதில்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையில் சோதனைகள், இடர்பாடுகள் வரும் போது அவர்கள் அதை எதிர்கொள்ள குறள் வழிகாட்டும். வாழ்க்கை அனுபவங்கள் அவர்களுக்குக் குறளின் பொருளை எடுத்துரைக்கும்.
குழந்தைகள் தற்போது திருக்குறளை மனப்பாடம் செய்வது அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்லும் முயற்சியாகும்.
வீட்டில் குழந்தைகளுக்கு தினந்தோறும் ஒரு திருக்குறளையும், ஆத்திச்சூடியையும் கற்றுக் கொடுங்கள். வீட்டில் தமிழிலேயே பேசுங்கள்.
திருக்குறளைக் கற்றுத் தேர்ந்த பிறகு பாரதியையும், கம்பனையும், இளங்கோவடிகளையும் குழந்தைகள் படித்தார்களானால், அது தமிழைத் தலைமுறை தலைமுறைக்கும் கொண்டு செல்லும் என்றார் அவர்.
போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பித்த 32 குழந்தைகளுக்கும், 500 குறள்களை ஒப்பித்த 35 குழந்தைகளுக்கும், 850 குறள்களை ஒப்பித்த 2 குழந்தைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், அறக்கட்டளை தலைவர் பூவை. பி. தயாபரன் அறிமுக உரையாற்றினார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்) ஆ. புகழேந்தி, பேராசிரியர் ரெ. நடராசன், திருக்குறள் சு. முருகானந்தம், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கி. சிவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு
தமிழகத்தில் மாவட்டந்தோறும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளை தினமணியுடன் இணைந்து நடத்த தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திருக்குறள் தினவிழாவில் அவர் மேலும் பேசியது:
தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களிலும் திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை போன்று ஏதேனும் ஒரு அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களை தேர்வு செய்து அனுப்பினால், மாநில அளவிலான போட்டியை தினமணி நடத்த தயாராக உள்ளது. அதற்கு எந்த அமைப்புகள் வேண்டுமானாலும் முன்வரலாம். இதை ஒரு வேண்டுகோளாக, அறைகூவலாக இங்கு வைக்கிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவிலான போட்டியை நடத்த முன்வரும் அமைப்புடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கவும், சான்றிதழ்களை வழங்கவும் தினமணி தயாராக உள்ளது என்றார் அவர்.