திங்கள், 21 மார்ச், 2011

Article about the election boycott of M.D.M.K. :உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...

பெயரில் சத்ரு இருப்பதால் உண்மைக்குச் சத்ருவாகப் - பகையாக - எழுதியிருக்கிறார்.ம.தி்.மு.க.வினர், மனத்திற்குள் வைகோவைச்  சபித்தபடி  - ஆனால், இவர் செவிகளில் விழும்படிச் சென்றார்களா? ம.தி.மு.க.விற்கு  உரிய திருமங்கலம் தொகுதியை த் தனதாக்கிக் கொண்ட பொழுதே செ.இவரைக் கிள்ளுக்கீரையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார் எனலாம். அடுத்துக் கட்சிமாறிகளின் தொகுதிகளில் இடைத் தேர்தல் வந்தபொழுது கூட்டணிக் கட்சியை வெற்றி பெற உழைக்காமல் புறக்கணித்தார். இப்பொழுது அடியோடு புறக்கணித்துள்ளார். இதனால் ம.தி.மு.க.வினர் மக்கள் மன்றத்தில் இடம் பெறாமல் போகலாம். ஆனால், மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளனர். யாரையோ குளிரவைக்க சில பத்திகளில் கைக்கு வந்தததை எழுதியிருந்தாலும் பின்னர்  வேறு வழியின்றி உண்மையை எழுதி உள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /



உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...


தென் மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு வழக்கம் உண்டு. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலோ, கூட்டாக ஏதாவது தவறு செய்தாலோ, அவர்களை ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள் ஆசிரியர்கள். ""உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்'' என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும்.  ÷நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், தி.மு.க.வும் காங்கிரஸýம், அல்லது அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். தி.மு.க., காங்கிரஸýக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ அ.தி.மு.க. - ம.தி.மு.க.வுக்கு இது நிச்சயமாகப் பொருந்தும்.  ÷தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ""கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை.  ÷""பொதுச் செயலாளரின் முடிவை அவருக்கு நெருக்கமான மூன்று நான்கு மூத்த மாவட்டச் செயலாளர்களின் மூலம் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்பது போலத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொண்டர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகவோ நாம் ஏன் ஒரு அரசியல் கட்சியை நடத்த வேண்டும்? பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது?'' - பெருவாரியான ம.தி.மு.க. தொண்டர்களின் மனக்குமுறல் இதுவாகத்தான் இருக்கிறது.  ÷சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு அரசியல் கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து மெல்ல மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிடும் என்பதுதான் சரித்திரம். 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூடப் போட்டியிடாமல் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்ததன் விளைவுதான் இன்றுவரை காங்கிரஸ் தமிழகத்தில் தலைதூக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.  ÷1996-ல் வைகோவின் ம.தி.மு.க. தனது முதல் தேர்தலை சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. போட்டியிட்ட தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையைப் பெற முடிந்தது. நல்ல வேளையாக, 1998-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தக் கட்சிக்கு சின்னமும் அங்கீகாரமும் கிடைக்க நேர்ந்தது.  ÷2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமை 21 இடங்களை ஒதுக்கித்தர முன்வந்தும், ஓரிரு தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார் வைகோ. அந்த மாபெரும் தவறால்தான் கட்சித் தொண்டர்கள் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்ப நேர்ந்தது. வைகோவுடன் தி.மு.க.விலிருந்து 1993-ல் வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் தாய்க் கழகத்துக்கே திரும்பிவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.  ÷""தனித்துப் போட்டியிட கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. பணத்தைச் செலவழித்துத் தோல்வியைத் தழுவ யார்தான் தயாராக இருப்பார்கள்? 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்? தேர்தலிலிருந்து ஒதுங்குவது என்று கட்சி முடிவெடுத்தால், நாங்கள் தி.மு.க.வுக்கே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை'' என்கிறார்கள் ம.தி.மு.க.வில் இருக்கும் பலர்.  ÷வைகோவின் இந்த முடிவு உணர்ச்சிபூர்வமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டு ம.தி.மு.க. வெளியேற்றப்படுகிறது என்று வைகோ கருதுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நாள் தோழனாக இருக்கும் தன்னிடம் முதலில் பேசித் தொகுதிகளை ஒதுக்காமல், மற்றவர்களிடம் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதே வைகோவை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் தான் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகளின் பெயர்களையும், அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தான் நிறுத்த இருப்பவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்திருந்தார் வைகோ.  ÷35 இல்லாவிட்டாலும், 15 தொகுதிதான் என்றாவது முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கலாம் அ.தி.மு.க. தலைமை. சிறிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும், தே.மு.தி.க.வின் தொகுதி உடன்பாடும் முடிந்த பிறகுதான் ம.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையே தொடங்கியது அ.தி.மு.க. அதிலும் வெறும் 6 இடங்கள், 7 இடங்கள் என்று பேசத் தொடங்கியது என்ன நியாயம் என்கிற வைகோவின் ஆதங்கத்தில் யார்தான் குற்றம் காண முடியும்?  ÷ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி நிறுத்துவதில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருவேளை ஜெயலலிதாவின் ஆசியுடனும் அனுமதியுடனும்கூட நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.  ÷வைகோவால் பாதிக்கப்பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தின் பங்கு இதில் இருக்கிறது என்கிறார்கள். வைகோவையும் ம.தி.மு.க.வையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் தி.மு.க.வின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தர முன்வந்ததாகவும், திட்டமிட்டுத்தான் வைகோ வெளியேற்றப்பட்டார் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ""ஆறு இடங்கள், ஏழு இடங்கள் என்றெல்லாம் கூறினால், உணர்ச்சிவசப்பட்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்று தெரிந்துதான் அ.தி.மு.க. தலைமை அவரை அவமானப்படுத்த முற்பட்டது. அந்த வலையில் வைகோவும் விழுந்து விட்டார்'' என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர்.  ÷வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ""அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே வைகோ மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. தங்கள் கட்சிக்காக கடந்த 5 ஆண்டுகள் உழைத்த தோழமைக் கட்சியை இப்படி உதாசீனப்படுத்துவது தவறு'' என்று மூத்த தலைவர்களேகூட அங்கலாய்க்கிறார்கள்.  ÷""தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்து வைத்திருப்பவர் அண்ணன் வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இருக்கும் கால அவகாசம் மிகமிகக் குறைவு. அம்மாவைத் தவிர எங்கள் கட்சியில் பிரசாரம் செய்ய யார் இருக்கிறார்கள்? விஜயகாந்த் அவரது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில்தான் கவனம் செலுத்திப் பிரசாரம் செய்வார். எங்கள் வேட்பாளர்களில் பலர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்களும்கூட. தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்க நமக்கு இருந்த ஒரே ஆயுதத்தையும் இப்போது இழந்துவிட்டோம்'' என்று கூறி வருத்தப்பட்டார் மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.  ÷அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களைப் பொறுத்தவரை தேர்தல் களப் பணிகளைச் செய்வார்களே தவிர, முறையாக வாக்குச்சாவடி நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர்கள் ம.தி.மு.க.வினரும், இடதுசாரிகளும்தான். இவர்கள் இல்லாமல் போனால், தி.மு.க. அணியினரிடம் அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜன்டுகள் சுலபமாக விலை போய்விடுவார்கள். இல்லையென்றால் மிரட்டப்பட்டு, விரட்டப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.  ÷""அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தி.மு.க.வின் வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் அத்துப்படி. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், ஆளும் கட்சி அராஜகத்தை அதிகாரபூர்வமாக எதிர்கொள்ளவும் ம.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவசியம்'' - இப்படிக் கூறுபவர் மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர்.  ÷1999-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட போதே, ம.தி.மு.க.விலிருந்து பல தொண்டர்கள் தி.மு.க.வுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வால் அவமானப்படுத்தப்பட்ட வேதனையும், தேர்தலில் போட்டியில்லை என்கிற வைகோவின் அறிவிப்பும் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களையும் தி.மு.க.வுக்குத் திரும்ப வைத்துவிடும். ம.தி.மு.க. கூடாரம் காலியாவதுதான் மிச்சம் என்று பலர் அடித்துச் சொல்கிறார்கள்.  ÷மக்கள் மத்தியிலும் ம.தி.மு.க. மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையின் சந்தர்ப்பவாத அரசியல் பல நடுநிலையான வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் முதல்வர் கருணாநிதியே இதற்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் கருதி தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.  ÷அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு ம.தி.மு.க.வை வெளியேற்றியது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஜெயலலிதாவோ, அவரைச் சூழ்ந்திருப்பவர்களோ, தேர்தலை சந்திப்பதற்காக விலை போயிருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஆனால், அதுவே அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பலவீனமாக மாறி, முறையாக வேட்பாளர் தேர்வும் இல்லாது போனால், தனித்து ஆட்சி அமைக்கும் சக்தியை இழந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால்? தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அமையப் போவது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருக்காது என்பது உறுதி.  ÷ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால்? மீண்டும் முதல் பாராவைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் நடக்கும்! 
கருத்துகள்

மிக அருமையான கருத்து .இதை புரிந்து கொண்டு இருவரும் சேருவது தமிழ் நாட்டிற்கு நல்லது. சகோதரிக்கு மட்டும் ஆணவம் இல்லை -சகோதரனுக்கும் ஆணவம் இருக்கத்தான் செய்கிறது. ஒன்று சேர்ந்தால் உண்டு நன்மை.
By sakthivel
3/21/2011 9:21:00 AM
மிக அருமையான கருத்து .இதை புரிந்து கொண்டு இருவரும் சேருவது தமிழ் நாட்டிற்கு நல்லது. சகோதரிக்கு மட்டும் ஆணவம் இல்லை -சகோதரனுக்கும் ஆணவம் இருக்கத்தான் செய்கிறது. ஒன்று சேர்ந்தால் உண்டு நன்மை.
By sakthivel
3/21/2011 9:20:00 AM
ஜெயலிதா வைகோ இருவரும் பேசி வைத்து எடுக்கும் முடிவு இது நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயகாந்த் கட்சி பலவின படுத்த ஜெயலிதா அவர்கள் செர்தவர்களும் எடுக்கும் முடிவு . இன்று நாம் நாம் தமிழர் கட்சி நன்கு வளர்த்து வரும் கட்சி . இதன் வளர்ச்சியை எப்படி கட்டு படுத்தலாம் . நாம் தமிழர்க்கு எதுராக கருத்து வலிமை செயல் வலிமை இல்லை அவர்கள் இடம் இல்லை . சூழ்ச்சி நாம் தமிழர் வாக்கை செல்ல்வகை பிளவு ஏற்பட்துவது எனற நோக்கில் வைகோ இன்று வெளி ஏற்றி ஜெயலிதா கருணாநதி எதுராக அரசியல் பண்ண வைப்பது .முடித்த அளவு நாம் தமிழர் வளர விடாமல் செய்வது . விஜயகாந்த் வைகோ குட்டனி சேர்க்க வேண்டும் என்று குறுவது பாசத்தால் அல்ல விகயகாந்த் எடுத்து இருக்கும் மாற்று மட்டும் முன்றாவது அணி அவதாரத்தை வைகோ பிடுங்கு விடுவார் என்ற பயம் . இன்னொரு அது முக்கிய காரணம் கருணாநதி முழு ஓய்வுக்கு பின் அனைவரும் ஸ்டாலின் அழகரி ஏற்று கொள்ள மாட்டார்கள் .அதில் இருந்து பிரியும் வாக்கு நாம் தமிழர் கட்சி பெற்று விடாமல் இருக்க.ஜெயலிதா குட இருத்து அந்த வாக்கை பெறுவது கடினம் .அந்த வாக்கு ஜெயலிதா எதிரியாக பார்க்கும் வாக்கு. வைகோ மிது அனுதாப பார்
By tamil
3/21/2011 8:59:00 AM
இது மிகவும் முட்டாள்தனமான முடிவு. இதைத்தான் எதிரிகள் எதிர்பாத்துக்கொண்டிருந்தனர். JJ தன்னை அவமதித்துவிட்டார் என்று காரணம் கூறி தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்தையும் மக்களையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். ஊழலுற்ற நேர்மையற்ற வஞ்சக அரசியலுக்கு தானே வழிவக்குது தந்ததுபோல ஆகிவிடும். இப்படி தேர்தலை புறக்கத்ததால் தான் ஈழத்தில் அவலனிலை. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தை என்ற காந்தியின் கூற்று இன்று மக்களின் விமொச்சனதிற்கு ஒரே ஆயுதம் ஒட்டுகள். அதையும் வீணாக்கினால் மக்களுக்கும் அண்ணாவுக்கும் செய்த துரோகமாக கருதப்படும். காங்கிரஸ், திமுக, அதிமுக ஊழல் அராஜக அரசுகளை வெறுத்தவர்கள், சுயநலமில்லதவர்கள், நேர்மையானவர்கள், தமிழ் உணர்வாளர்களின் ஓட்டுகளும் உங்களுக்கே. இந்த வாய்ப்பு என்றுமே கிட்டுவது அரிது. உடனே மதிமுக பொதுக்குழுவினர் வைகோவிற்க்கு அறிவுறுத்தி தனியாகவோ/கருத்தொப்ப பாஜகவுடனோ கூட்டணியிட்டு நின்று அங்கிகராம் பெற்று முதல்வர் கனவை மெய்பிக்கவும். இல்லையென்றால் மதிமுகவினர் தமக்குத் தாமே மண்ணைவாரிவிட்ட கதையாய் ஆகிவிடும்.
By தமிழன்
3/21/2011 8:57:00 AM
மிக சரியான தலையங்கம்.
By Venkat
3/21/2011 8:52:00 AM
உணர்ச்சி தேவைதான். ஆனால், அரசியலில் தாடாலடி முடிவுகள் ஏதோ ஒரு குழந்தை கோபித்துக்கொண்டு, "வேண்டாம் போ" என்று பொருளை வீசி அடிப்பது போல இருக்கிறதே. கட்டுரையை படிக்கும் போதே வைகோவின் பல நேரங்களில் பலவித மாறுபாடான நிலைபாடுகள் வெட்ட வெளிச்சமாகிறதே. 'நிதி இல்லை'- காரணமா? அ. தி. மு. க. தேவைப்பட்ட நிதியை அளிக்காதா? 12 லிருந்து 3 கூட்டி 15 தொகுதிகள் கொடுக்கப்போவதாக செய்தி வெளியானதே. "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று வைகோ உணர்ச்சி பட்டிருக்கக்கூடாது. ஏதோ நெருடுகிறது.
By MURTHY
3/21/2011 8:47:00 AM
வைகோ மிகசிறந்த அரசியல் தலைவர் அவர் காலம் விரைவில் வெல்லும்
By supu
3/21/2011 8:36:00 AM
thiru vaiko prove that he is a man kuthirai(sand horse)he is not a capable political leader.once again he prove that he is only a stage speaker not a true leader.
By bparani
3/21/2011 8:04:00 AM
அஜாத சத்ரு சரியாக எழுதி இருக்கிறார். ஜெயலலிதா தன்னுடைய கூட்டணி தலைவர்களை நேரில் சந்திக்காமல் இடைப்பட்டவர்கள் முலம் பேச்சு வார்த்தைகள் நடக்கும்போது இம்மாதிரியான குழப்பங்கள் வருவது சகஜம்தான். எப்போது ஜெயலலிதா இதை உணருகிராரோ அப்போதுதான் கூட்டணித் தலைவர்களுக்கும் அவர்மேல் மரியாதையும் நம்பிக்கையும் வரும். அது இல்லாவிட்டால் குழப்பங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அவ்வாறு வரும் குழப்பங்கள் யாருக்குமே நல்லதல்ல.
By முட்டாள்
3/21/2011 7:56:00 AM
"வைகோவால் பாதிக்கப்பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தின் பங்கு......." இருக்கும்போது வைகோ ஒரு வேளை குறைந்த சீட்டுகளுக்கு சம்மதித்திருந்தாலும், தோல்வியைத் தழுவும் தொகுதிகளைத் தருவார்கள், அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அடுத்து மதிமுகாவைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆட்சியைப் பிடிப்பது பணம் சம்பாதிக்க, அது இப்பவே கிடைக்கும் போது, செய்ய வேண்டியதைச் செய்யத்தான் செய்வார்கள். விட்டால் திமுகாவிடம் கூட அந்த பேரத்திற்கு உடன்படலாம். தனது வெற்றி சாதகமாக இருக்காது என்கிற போது தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இதற்கு முன்பு மற்ற கட்சிகள் எடுத்துள்ள முடிவுதான் என்றாலும், ஒட்டுமொத்த சட்டசபைத் தேர்தல் நடக்கும்போது இத்தகைய முடிவை வைகோ எடுப்பது துரதிஷ்ட வசமானதுதான். ஆனால் அவருக்கு வேறு வழி இல்லை. வைகோ இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு மாறத வரை அவரது நேர்மை, தூய்மை அவரைப் பின்னுக்குத்தான் தள்ளும். நல்லவர்கள் தோற்பது, மக்கள் தோற்பதற்குச் சமம்.
By கமலக்கண்ணன். ம தூத்துக்குடி
3/21/2011 7:36:00 AM
ஜெயா ஒரு சர்வாதிகாரி என்பது வைகோ அவர்களுக்கு இப்பொழுது நன்றாகவே புரிந்திருக்கும் .என்ன பயன் ....கட்சியில் மீதமிருக்கும் ஒரு சிலரையாவது தக்கவைத்துக்கொள்ள அவர் ஏதாவதொன்றை செய்தே தீரவேண்டும் .
By AtheethanSubramaniam
3/21/2011 7:34:00 AM
ஜெயலலிதாவின் இப்படிப்பட்ட அரக்கத்தனமான குணம் இன்னும் போகவில்லை, இவர் வணங்கும் சாமியே மன்னிக்காது, கண்டிப்பாக படுதோல்வியை சந்திப்பார், இது சத்தியம், இது நான் சொல்லவில்லை மக்கள் மத்தியில் தெளிவாக பேசப்படும் இன்றைய செய்தி. வைக்கொபோல் இந்த தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் வாதியும் கிடையாது, இவர் பேசும் பேச்சில் தெளிவும் அறிவும் உள்ளது.
By சாம்
3/21/2011 7:32:00 AM
wondering why Dinamani is supporting too much to ADMK, this is too much from a paper like this. If they do not like DMK, they should point out all. what way Jaya is better than DMK, Dinamani should explain to people here, People please aware of dinamani, it is not neutral paper as we think, too much supporting ADAMK
By ram
3/21/2011 7:27:00 AM
ம்ம்ம்..... யாருப்பா அது... தேர்தல் முடிவுக்கு மறுநாள் கொடநாட்டுக்கு ரெண்டு டிக்கட் போடுங்கப்பா...!!!
By பத்மநாபன்
3/21/2011 6:51:00 AM
மிக துல்லியமான analysis. I already changed my mind is that not to vote ADMK / DMK aliances, to out O. MDMK may not be there in next election. ஒரு பக்கா அரசியல் வாதி எப்படி தனக்கு சாதகமாக சூழ்நிலைகளை மாற்ற வேண்டும் என தெரியனும். போட்டியிடும் எண்ணிக்கையை விட வெற்றி எண்ணிக்கைத்தான் முக்கியம் என்பதை ADMK and MDMK உணர வேண்டும். கலைஞர் அதில் கில்லாடி, அவரது சாணக்கிய தனமும் அதில் தான் உள்ளது.
By mahesh
3/21/2011 6:50:00 AM
இப்போ நீங்க என்ன சொல்ல விரும்பரிங்க? சரியா புரியும்படியா சொல்லுங்க அய்யா. அதிமுக -விற்கு புரியும்படி போட்டிருந்தா நல்லாயிருக்கும். அடுத்த முதல்வர் மீண்டும் கருணாதான்னு ஜெ முடிவு பண்ணிட்ட மாதிரி இருக்கு. வேற என்னத்தை சொல்ல?
By பத்மநாபன்
3/21/2011 6:46:00 AM
தூத்துக்குடி பன்னாட்டு நிறுவனத்தின் செயல் இதற்கு காரணம் என்றாலும் மற்றொரு காரணமும் பரவலாக பேசப்படுகிறது. ஒரு ஜோதிடக்காரர் வைக்கோவுடன் கூட்டு வைத்தால் ஆட்சிக்கு வரமுடியாது என்று அம்மையாரை எச்சரித்தாராம். அதன் விளைவுதான் இந்த வைக்கோ ஓரம் கட்டல் நாடகம். ஜெயாவுக்கு கடவுளும் ஜாதகங்களும் மக்களைவிட பெரிய கூட்டணி தோழர்கள். மு க அதை வெளிப்படையாக செய்வதில்லை. தமிழ்நாட்டின் எதிர்காலம் ஜோதிடர்களிடம் அடைபட்டு கிடக்கிறது.
By திண்டல் சங்கர நாராயணன்
3/21/2011 6:42:00 AM
ப ஜ க வுடன் சேர்ந்து தேர்தலில் போட்டி இடுவதுதான் ம தி மு க எடுக்கும் சரியான முடிவாக இருக்கும். பல இடங்களில் வெற்றியையும் தருவது உறுதி.
By sreenathan
3/21/2011 6:07:00 AM
ஊர்க்குருவி பருந்தாகாது.பூனை புலி ஆகாது.பாவம் வைகோ . தொண்டர்கள் தான் உரலில் அகப்பட்ட தலை போல் மீளாத்துயர் கொள்கின்றனர்.
By கே.சுகவனம்
3/21/2011 6:05:00 AM
வைகோ இலவு காத்த கிளி என்பதா அல்லது சீ சீ இந்த பழம் புளிக்கும் என்கிற நரியின் கதையாக சொல்வதா? இருந்தாலும் அன்பு சகோதரியின் கடிதம் அவருக்கு கொடுக்கப்பட்ட அல்வாதான், பாவம் மக்கு ம.தி.மு.க.!
By ஜெயராஜ் வி.சி.
3/21/2011 4:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

.Jaya regrets about M.D.M.K. decesion: மதிமுக தேர்தல் புறக்கணிப்பு:செயலலிதா வருத்தம்

உண்மையிலேயே வருததப்பட்டார் எனில் ௧௬௦ தொகுதிகளில் ௨௧  இடங்களை ஒதுக்கலாமே!  நேரில் சென்று சந்திக்க இயலா விட்டாலும் தொலைபேசியில் அவரிடம் பேசலாமே! என்றாலும் தன்  கட்டளைக்கு அடிபணியாத எதிர்க்குரல் வந்தது என்று வருத்தம் இருக்கலாம். ( நவாசு  கருத்தில் உள்ள செய்தி நாவலரைப்பற்றி அல்லவா? ௨.) எதற்கெடுத்தாலும் சசிகலா அல்லது அவர் குடும்பம் மீது பழி சுமத்துபவர்கள்  இவருக்கென்று தற் சிந்தனை இல்லை என்று எண்ணுகிறார்களா?)
வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழியை உடைக்க வேண்டா எனக் கருதினால், செயாதான் தன் முடிவை மாற்றிக் கொண்டு ம.தி.மு.க. கேட்கும் தொகுதிகளை விட்டுத்தர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /



மதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஜெயலலிதா வருத்தம்

சென்னை, மார்ச் 20- சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என்ற மதிமுகவின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோவுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது."உங்கள் கட்சியின் செயல்பாட்டை முடிவு செய்யும் அனைத்து உரிமையும் உங்களுக்குத்தான் உள்ளது. எனினும், உங்கள் சகோதரி என்ற முறையில் உங்கள் மீதான மதிப்பு அப்படியே உள்ளது. கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் நீங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க இயலவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் இச்சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்." என்று ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மதிமுக சார்பில் 21 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் 12 தொகுதிகள் வழங்க அதிமுக முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்

அன்பு சகோதரி அன்பு மடல் அற்புதம் நல்லவர்களை எல்லாம் தரக் குறைவாக நடத்துவது அம்மணிக்கு கைவந்த கலை. பெரியவர் மூப்பனார் அவமான படுத்தப்பட்டு எனது ரோமத்திற்கு சமம் என்று சொன்ன பெண்மணி. எங்கள் பாசத்திற்குரிய மாமா வைகோவை மிகவும் வேதனைபடுத்திவிட்டார். இனியும் ரோசமுல்லவர் அம்மணியிடம் செல்லமாட்டார். நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார். தனியாக. நவாஸ்.
By Nawaz
3/20/2011 10:27:00 PM
தினமணி! EVENTHOUGH YOU SUPPORT JAYA SHE IS NOT GOING TO CHANGE HER FACE. WAIT AND SEE.
By Abdul rehman
3/20/2011 9:22:00 PM
ஜெயலலிதா வின் மனித பண்பு வியக்க வைக்கிறது. ஆதி மு க வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது.
By Varadh
3/20/2011 9:15:00 PM
அம்மா நீ ஒரு நடிகை என்பதை நிருபித்துவிட்டாய்.மீதமுள்ளவர்கள் விரைவில் அறிவார்கள் உங்களைப்பற்றி.
By மதன் ராஜா
3/20/2011 9:15:00 PM
இந்த தேர்தலில் கருணாநிதியையும் அவரது தோழமை கட்சிகளையும் தோற்கடிக்க எதிர் கட்சி ஒன்று திரள வேண்டும் ஆதலால் வைகோ இந்த தேர்தலில் கலந்து கொள்ளவேண்டும்
By lakshminarayanan
3/20/2011 8:45:00 PM
எங்களுக்கு திமுக வர கூடாது என்ற எண்ணம் உள்ளது. அதனால் அதிமுகவுக்கு ஓட்டு போடுவோம். ஆனால், அம்மா வெற்றி மிதப்பில் அம்மா சசி கலா குடும்பத்தை கட்சி, மற்றும் ஆட்சியில் அனுமதிக்கும் உள் எண்ணத்தில் செயல் பட்டால், கடவுள் அதிமுகவை வெற்றி செய்ய விட மாட்டான். அம்மாவுக்கு, கடவுள் கிருபையால் முதல் அமைச்சர் பதவி வந்த்தது. இவர் உழைத்து முன்னேறினார் என்று சொல்ல முடியாது. இவரின் பூர்வ ஜென்ம புண்ணியம் இவரை எம்.ஜி.ஆர் வாரிசாக்கியது. இவர் அதை காப்பாற்றி கொள்ளவில்லை. மாறாக, இவர் சசி கலா குடும்பத்தை உள்ளே விட்டது, இவரை அடி பாதாளத்தில் தள்ளியது. இவர் இன்னும் வழக்கில் சிக்கி தவித்து கொண்டு இருப்பது, இவர் தவறான பாதையில் சென்றதன் பலன். இவர் சுற்றிலும் நல்ல ஆலொசகர்களை, திறமையானவர்களை சுற்றி வைக்காத காரணத்தால் இவர் இந்த நாட்டுக்கே பிரதமர் ஆகும் வாய்ப்பை இழந்தார். இவர் சசி குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நல்ல ஆட்சி செய்ய முயற்சி செய்ய வேண்டும். எம்.ஜி,ஆர் சாகும் வரை அசையா சக்தியாக இருந்ததற்கு காரணம், அவர் கீழீருந்து மேலே வந்தார். அவர் மூன்று முறையும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். காரணம் அவருடைய நல்ல எண்ணம்
By ராஜா ரத்தினம்
3/20/2011 8:14:00 PM
Jayalaitha lost winning formula..
By Karisal
3/20/2011 8:11:00 PM
தியாகமும் நேர்மையும் இல்லாதவர்கள் தனது பேராசையை நிறைவேற்ற முயலும்போது இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
By வ.க. சேகரன்
3/20/2011 7:47:00 PM
பாவம் வை கோ எவ்வளுதான் பொறுப்பார் கடைசிவரை ஏமாற்றி விட்டார்கள் தற்போது முதைக்கன்நீர் வடிப்பது வேறு இந்த அரசியல் வாதிகள் எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் இவர்கள் சினிமாவிலிருந்து வந்தவர்கள் அல்லவா அதனால்தான் சிறப்பாக நடிக்கிறார்கள்
By mohan
3/20/2011 7:45:00 PM
பாவம் வைகோ.அன்பு சகோதரியை வருத்தப்படவைத்து விட்டார்.கொண்டுவந்தால் தங்கை ‘தூக்குதூக்கி’யில் சிவாஜி போல் பாடம் கற்றுக்கொண்டார்,.
By சுகுமாரன்
3/20/2011 7:36:00 PM
இப்ப வைகோ ! தேர்தலுக்கு பிறகு யார் ? ? ?.,
By nrm
3/20/2011 7:00:00 PM
வைகோவை இழப்பது நல்லது அல்ல. இதற்காக வருந்தவேண்டிவரும. காலம்தான் ஜயாவை திருத்தவேண்டும். நல்லவர்களுக்கு அரசியலில் இடம் இல்லை. மக்கள் லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகையால் ஆண்டவன்தான் மக்களை காப்பற்ற வேண்டும். வியாபாரம் செய்ய வந்தர்வர்கள் நாட்டை ஆண்டார்கள். நடால வந்தர்வகள் வியாபாரம் செய்கிறார்கள். கயவன் கருணாநிதி உள்ளவரை தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை. குடும்பதிற்காக இலங்கை தமிழ் இனம் அழிவதை வேடிக்கை பார்த்தவன்.
By thamizhan
3/20/2011 6:59:00 PM
இது வருத்த மடல் அல்ல. தேர்தல் நேரத்தில் தேவைப்படும் முதலைக் கண்ணீர்.
By கோபால்
3/20/2011 6:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

china concerns about attack on Libya : லிபியா மீதான தாக்குதல்: சீனா கவலை

மக்கள்நலனைக் காப்பதுதான் படையெடுப்பு (வல்லரசுகளின்) நோக்கம் என்றால் சிங்ளத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற இதே  அளவு கோலைப் பயன்படுத்தி இருக்கலாம். எனவே, உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், படையெடுப்பின் மூலம் லிபிய மக்கள் அழிவிற்கு உள்ளாகிறார்கள்.  எனவே, பிற நாடுகளும்  இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /


லிபியா மீதான தாக்குதல்: சீனா கவலை


பீஜிங், மார்ச் 20- லிபியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது.சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது."லிபியாவில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம். அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியது வருத்தமளிப்பதாக உள்ளது. லிபியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம்." என்று சீனா கூறியுள்ளது. எனினும், லிபியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.இதனிடையே, ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபியா மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்

அங்க மக்கள் மேல கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துது அது குற்றம் இல்ல !! எங்க ஜனநாயகம் மலர்ந்தாலும் இவனுகளுக்கு புடிக்காது போல
By arun
3/20/2011 7:58:00 PM
அடுத்த ஆப்பு உனக்குதாண்டி...
By Varadh
3/20/2011 7:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 20 மார்ச், 2011

Con.plan for siranjeevi election propoganda in thamizhnaadu: சிரஞ்சீவியைத் தமிழகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்த காங்கிரசு திட்டம்

சிரஞ்சீவி என்பதைக் கிரந்த எழுத்தில் எழுதுவதைத் தவறு எனச்சுட்டிக் காட்டிக் கருத்து எழுதியிருந்தேன்.
அதனை ஏற்றுக் கொண்டு தமிழிலேயே எழுதிஉள்ள தினமணிக்குப் பாராட்டுகள். பிற இடங்களிலும் அயற் சொற்களையும் அயல் எழுத்துகளையும் தவிர்த்துத் தினமணி தமிழ் மணியாகத் திகழ வேண்டும் என வேண்டுகின்றேன். 
அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /


சிரஞ்சீவியை தமிழக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டம்


ஹைதராபாத், மார்ச்.20: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் அடுத்த 2 நாட்களில் சந்திக்க உள்ளார்.சோனியாவை சந்திக்குமாறு சோனியாவின் அரசியல் செயலர் அகமது படேல் சிரஞ்சீவியை தில்லிக்கு அழைத்துள்ளார்.தமிழக பேரவைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக சிரஞ்சீவியை பயன்படுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தெலுங்கு திரை உலகில் செல்வாக்கு உள்ள சிரஞ்சீவிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே தெலுங்கு மக்கள் அதிகமாக வசிக்கும் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் சிரஞ்சீவி பிரசாரம் செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி காங்கிரஸுடன் அடுத்தமாதம் முறைப்படி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
F

Japanese dog refuses to leave his friend

சுனாமி பேரலையில் சிக்கி காயமடைந்த நண்பனின் அருகே 6 நாட்களாக காவலிருந்த நாய் (வீடியோ இணைப்பு)


சுனாமி பேரலையின்போது காயமடைந்த நாயொன்றின் அருகில் பிறிதொரு நாய் 6 நாட்களாக குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு உறக்கமின்றி காவல் இருந்த சம்பவம் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இபாரகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரதேசத்தை சுனாமி பேரலை தாக்கிய போது வீடொன்று இடிந்து விழுந்ததில் நாயொன்று இடிபாடுகளின் கீழ் சிக்கி படுகாயமடைந்தது.

இதன்போது அந்நாயுடன் நட்புறவுடன் பழகிய பிறிதொரு நாய் சுனாமியால் அடித்துவரப்பட்ட மண் சகதியால் நனைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தது.

மேற்படி நாய் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த தனது நண்பனான நாயை கைவிட்டு செல்வதற்கு மனம் ஒப்பாமல் 6 நாட்களாக அதனருகே அதற்கு காவலாக இருந்துள்ளது.

இந்நிலையில் மேற்படி பிராந்தியத்துக்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் சென்ற போது உடல் முழுவதும் மண் சகதியால் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த நாயொன்று, அவர்களை இடிந்து விழுந்த 4 மாடி கட்டிட வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்றது.

அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இடிபாடுகளின் கீழ் நாயொன்று சிக்கியிருப்பதை கண்டு வியப்படைந்தனர். ஆரம்பத்தில் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாய் இறந்துவிட்டதாகவே அவர்கள் நினைத்தனர். ஆனால் அருகில் சென்று அவதானித்த போது நாய் உயிருடன் இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.

உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் பறந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாயை மீட்டனர்.

மேலும் காயமடைந்த நாயை அருகிலிருந்த மிருக வைத்தியசாலையொன்றுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை ஒரு மணி நேரமாக குறிப்பிட்ட நாய் அங்கிருந்து நகர மறுத்து காயமடைந்த நாயின் அருகிலேயே இருந்துள்ளது.

மனதை உருக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி "யு ரியூப்' இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
19 Mar 2011
33692 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

Sparrow day : இன்று சிட்டுக்குருவி நாள்


இன்று சிட்டுக்குருவி தினம்: அழிந்து வரும் குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை

First Published : 20 Mar 2011 12:00:00 AM IST


திருவனந்தபுரம், மார்ச் 19: தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துவிட்டால் திரும்பிய திசையெல்லாம் நம் காதுகளில் இனிதாய் ஒலிக்கும் சிட்டுக் குருவிகளின் இனிமையான குரல்.  உருவத்தில் சிறியதாய் இருந்தாலும், அதன் இனிய குரல் மட்டும் என்னவோ ஊர் முழுக்க கேட்கும். கேட்பவர்களை ரசிக்க வைக்கும். அப்படி மனிதரோடு ஒன்றி வாழ்ந்த இந்தக் குருவிகள் இனம் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளது.  ஓட்டு வீடுகளிலும், கூரை வீடுகளிலும் இவை கணக்கிலடங்காமல் வசித்த காலம்போய், இப்போது இளைய தலைமுறையினருக்கு இந்தக் குருவிகளை அடையாளம் காட்டுவது என்பதே அரிதான காரியம் ஆகிவிட்டது.  இவை அழிவை சந்திப்பதற்கு பழைய வீடுகள் எல்லாம் இப்போதும் மாட மாளிகைகளாகவும், கான்கிரீட் அபார்ட்மென்ட்களாகவும் வளர்ந்துவிட்டதும், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுமே காரணம்.  நம் வீட்டு சின்னக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தனது கீச்சு குரலால் மகிழ்வை ஏற்படுத்திய இந்தக் குருவிகள் நகர்ப்புறங்களில் வசிக்கும் மனிதர்களால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாக கேரளத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர் சைனுதீன் பட்டாஸி தெரிவிக்கிறார்.  இதுகுறித்து அவர் கூறியது:  ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவி இனம் அழிவதற்கான காரணம் மற்றும் அவற்றை காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுபுழு பூச்சிகளை உணவாகக் உட்கொண்டு வாழ்ந்து வரும் இந்தக் குருவிகள் பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு மாசுக் காரணிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றன. பெட்ரோல் எரியும்பொழுது அதிகஅளவில் மெத்தில் நைட்ரேட் வெளிப்படுகிறது.  அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த வாயுவால் பாதிக்கப்படும் சிறுபூச்சிகளை இந்தக் குருவிகள் உண்ணுவதில்லை. இதனால் அதற்கு சரியான உணவு கிடைப்பதில்லை. வயல்வெளிகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், வீடுகளில் அடிக்கப்படும் வார்னிஷ்கள் போன்றவற்றால் காற்றில் வெப்பம் அதிகரித்து வருவது, பறவைகள் வசிப்பதற்கு ஏற்றவகையில் இல்லாத கட்டடங்கள் போன்றவையும் இவையின் அழிவுக்குக் காரணமாகும்.  செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் தாக்கமும் சமீப காலங்களில் இந்தக் குருவிகள் மரணத்தைத் தழுவ முக்கியக் காரணம் என நான் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதேபோல் இந்தக் குருவிகளுடைய கூடுகளின் அருகில் செல்போன் கோபுரங்கள் அமைத்துவிட்டால் அடுத்த பத்துநாள்களில் அவை அங்கிருந்து இடம்பெயர்ந்து விடுகின்றன.  வழக்கமாக 10 முதல் 14 நாள்களில் இவை அடைகாத்து குஞ்சு பொறித்துவிடும். ஆனால் செல்போன் கோபுரங்களின் அருகில் இருக்கும் குருவிகள் 30 நாள்கள் வரை அடைகாத்தபோதும் குஞ்சு பொறிப்பதில்லை. இந்தக் குருவிகளை பாதுகாக்க காற்று, நீர், தாவரங்கள் ஆகியவை நன்றாகப் பராமரிக்கப்பட வேண்டும்.  இந்தக் குருவி இனங்களின் அழிவு இப்போதுள்ள நகர்ப்புற சூழல்கள் மனிதர்களுக்கு வசிப்பதற்கு உகந்ததல்ல என்பதையே காட்டுகிறது. பிரிட்டனில் உள்ள பறவைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று அழிந்து வரும் பறவையினங்கள் குறித்த பட்டியலை தயாரித்துள்ளது. அதில் சிட்டுக்குருவி இனம் இடம்பெற்றுள்ளது.  சர்வதேச இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பும் சிட்டுக் குருவி இனங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. எனவே இவற்றைப் பாதுகாக்க புதிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.  சமீபத்தில் இந்திய அஞ்சல் துறை பறவையினங்களைப் பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Only Hindu for reservation - arjun sampath: தனித் தொகுதிகளில் இந்து தலித்துகள் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும்: அர்சுன் சம்பத்

விதிகளுக்கு இணங்கச் சரியான கோரிக்கை. இவ்வாறு கூறுவது சமய நல்லிணக்கத்திற்கு எதிரானது ஆகாது. எனினும் எல்லாரும் எல்லாமும் பெறும் நிலையை விரைவில் கொணர்ந்து இத்தகைய பாகுபாட்டிற்கு இடம் இல்லாச்  சூழலை ஏற்படுத்த வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /

தனி தொகுதிகளில் இந்து தலித்துகள் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்

First Published : 20 Mar 2011 03:32:12 AM IST


சென்னை, மார்ச் 19: தனி தொகுதிகளில் இந்து மதத்தைச் சேர்ந்த தலித் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தனி தொகுதிகளில் இந்து அல்லாதவர்கள் போட்டியிடுவது சட்டப்படி மோசடியானது என்று இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். அதற்கான தண்டனையையும் சட்டத்தில் அவர் உறுதி செய்துள்ளார்.  ஆனால், கடந்த காலங்களில் இந்து அல்லாத பலர் இந்து தலித் என போலி சான்றிதழ்களைக் கொடுத்து தனி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு அவர்களின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வரும்வரை பதவி சுகத்தை அனுபவிக்கின்றனர்.  எனவே, வரும் தேர்தலில் தனி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் ஜாதிச் சான்றிதழை தீவிரமாக ஆய்வு செய்து இந்து தலித்கள் மட்டும் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு சிறப்பு தேர்தல் அதிகாரிகளை ஆணையம் நியமிக்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.