விதிகளுக்கு இணங்கச் சரியான கோரிக்கை. இவ்வாறு கூறுவது சமய நல்லிணக்கத்திற்கு எதிரானது ஆகாது. எனினும் எல்லாரும் எல்லாமும் பெறும் நிலையை விரைவில் கொணர்ந்து இத்தகைய பாகுபாட்டிற்கு இடம் இல்லாச் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
First Published : 20 Mar 2011 03:32:12 AM IST
சென்னை, மார்ச் 19: தனி தொகுதிகளில் இந்து மதத்தைச் சேர்ந்த தலித் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தனி தொகுதிகளில் இந்து அல்லாதவர்கள் போட்டியிடுவது சட்டப்படி மோசடியானது என்று இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் பதிவு செய்துள்ளார். அதற்கான தண்டனையையும் சட்டத்தில் அவர் உறுதி செய்துள்ளார். ஆனால், கடந்த காலங்களில் இந்து அல்லாத பலர் இந்து தலித் என போலி சான்றிதழ்களைக் கொடுத்து தனி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு அவர்களின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வரும்வரை பதவி சுகத்தை அனுபவிக்கின்றனர். எனவே, வரும் தேர்தலில் தனி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் ஜாதிச் சான்றிதழை தீவிரமாக ஆய்வு செய்து இந்து தலித்கள் மட்டும் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு சிறப்பு தேர்தல் அதிகாரிகளை ஆணையம் நியமிக்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக