திங்கள், 21 மார்ச், 2011

china concerns about attack on Libya : லிபியா மீதான தாக்குதல்: சீனா கவலை

மக்கள்நலனைக் காப்பதுதான் படையெடுப்பு (வல்லரசுகளின்) நோக்கம் என்றால் சிங்ளத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற இதே  அளவு கோலைப் பயன்படுத்தி இருக்கலாம். எனவே, உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், படையெடுப்பின் மூலம் லிபிய மக்கள் அழிவிற்கு உள்ளாகிறார்கள்.  எனவே, பிற நாடுகளும்  இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /


லிபியா மீதான தாக்குதல்: சீனா கவலை


பீஜிங், மார்ச் 20- லிபியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது.சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது."லிபியாவில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம். அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியது வருத்தமளிப்பதாக உள்ளது. லிபியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம்." என்று சீனா கூறியுள்ளது. எனினும், லிபியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.இதனிடையே, ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபியா மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்

அங்க மக்கள் மேல கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துது அது குற்றம் இல்ல !! எங்க ஜனநாயகம் மலர்ந்தாலும் இவனுகளுக்கு புடிக்காது போல
By arun
3/20/2011 7:58:00 PM
அடுத்த ஆப்பு உனக்குதாண்டி...
By Varadh
3/20/2011 7:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

  1. கிறிஸ்தவ ஏகாதிபத்திய நாடுகள் மற்றைய நாடுகளை வலிய யுத்தத்துக்கு அழைத்து அழிக்க முயலும் சரித்திரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    1930களில் யப்பான் பெற்றோலியம், இறப்பர், தாதுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இங்கிலாந்தும் அமெரிக்காவும் தடை விதித்து, அதன் மூலம் யப்பானை வலிந்து யுத்தத்துக்கு அழைத்து, இறுதியில் யப்பான் மீது அணுகுண்டுகளை வீசி யப்பானை அழித்தனர். ஆனால் அதிலிருந்து யப்பான் மீண்டுள் தளைத்து உலகின் பெரிய பொருளாதார தொழில்நுட்ப நாடாக மலர்ந்தது.

    தற்போது சீனாவின் பெற்றோலிய தேவைகட்கு தடைகளை ஏற்படுத்து சீனாவை யுத்தத்துக்கு அமெரிக்கா வலிய அழைக்கிறது. லிபியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் சீனாவின் உதவியோடு தற்போது நடக்கும் பெற்றோலிய அகழ்வுகளை நிறுத்தி சீனாவுக்கும் லிபியாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே தற்போது லிபியா மீது தாக்குதல்களை அமெரிக்கா நடாத்துகின்றது.

    ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே ஈரான் மீதும் தாகுதல்களை மேற்கொள்ள அமெரிக்கா முஸ்தீபுகளை செய்து வருகின்றது.

    ஆனால் 1930களில் யப்பானை போருக்கு வலிய இங்கிலாந்தும் அமெரிக்காவும் அழைத்த போது யப்பானிடம் அணுகுண்டு இருக்க வில்லை. ஆனால் தற்போது சீனாவிடம் அணுகுண்டுகளும் உண்டும். அண்மையில் பாரிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது

    பதிலளிநீக்கு