செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி: ராமதாஸ்


தேனி,ஆக. 9:   தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் என்று அக் கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் கூறினார்.   தேனியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:   இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி மற்றும் பரப்பளவு குறைந்து வருகிறது. 1990-ம் ஆண்டு நாட்டின் விவசாய உற்பத்தி 30 சதவீதமாக இருந்தது. தற்போது 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் உணவுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்கும் நிலையில் இந்தியா உள்ளது.  கிராமப்புறங்களில் விவசாய நிலங்களை வெளி மாநிலத்தவர் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். இதை முறைப்படுத்த உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.    ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும்.  முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மாநில  முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.   பா.ம.க. தலைமையில் 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது. பா.ம.க. தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.    தி.மு.க. அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கிறது என்றார் ராமதாஸ்.
கருத்துக்கள்

பா.ம.க. இணைந்திருந்த ஒவ்வொரு கூட்டணியிலும் தலைமைக் கட்சிக்கு அடுத்த மிகுதியான ஒதுக்கீடு தன் கட்சிக்கே வேண்டும் என்ற ஆவலில் மேற்கொண்ட முயற்சிகளே பிற கட்சியினரிடம் வெறுப்பையும் ஒத்துழையாமையையும் தந்தன. இப்பொழுது தலைமை என்றதும் எல்லாம் தனக்கே என்னும் உணர்வு வரக்கூடாது. தேர்தல் வெற்றிக்காகக் கொலைகாரக் காங்.உடன் அல்லது தி. மு.க. அல்லது அ.தி.மு.க உடன் கூட்டுச் சேருவதில்லை என்னும் திட்டவட்ட முடிவை எடுத்து அனைத்துத் தமிழினப் பற்றாளரையும் இணைத்துச் சென்றால் வெற்றி வாகை சூடலாம். வேறொரு கூட்டணியில் ஐக்கியமாவதற்கான நாடகம் என்றால் இக்கனவு கருவிலேயே கருகலாம்.
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/10/2010 4:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ONCE AGAIN PUBLIC WANTS TO GIVE LESSON FOR YOU
By ARASU
8/10/2010 12:21:00 PM
Makkal TV, Vasanth TV, and other TV channels are promoting sale of housing plots. The housing plots are prime agricultural lands. This statement is contrary.
By d ranganathan
8/10/2010 12:07:00 PM
Mr. Ramdass your son not interested to connect river with in tamil nadu region then how will you expect other state can do it.
By ravi
8/10/2010 11:02:00 AM
This is better than the yesterdays statement that congroess should lead the aliance. DR has a goal and ambition. He has a power and a mass but he has to use in efficient way. Congress helped killing tamils, but dravidian parties supported congress. Let us Save Tamils Than Tamil.
By Tamilar Senai
8/10/2010 10:32:00 AM
Good Points by Ilakkuvanar Thiruvalluvan, Matured way of writing. (Thuran) kind of people at least should learn from him. Also, Tamil Nadu people should vote by keeping in mind about their long term growth, not for just free stuffs. They should not get impressed by the parties who takes language for vote. Without tamil people, this is no use of language. The parties who kept quite during mass killing of people in Sri Lanka should be punished in this election, also the parties who used Sri Lankan issues over the decades for votes should be punished . We shall first save Tamils, then Tamil.
By Tamilar Senai
8/10/2010 10:07:00 AM
இங்கே கருத்தெரிவித்திருக்கும் அதிமேதாவிகளெல்லாம் ஒன்றை புரிந்துகொள்ள முயலுங்கள்! மருத்துவர் அவர்கள் கடந்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் பிரச்சனையினை முன்னிறுத்தி செயல்பட்டார் ஆனால் மக்கள் அதனை ஏற்க்கவில்லை மாறாக காங்கிரஸ் உள்ள கூட்டனிக்கு பெரும்வெற்றிதேடித்தந்தனர். அப்பொழுது எங்கேடா போனீர்கள் மொக்கைகளா? இன்று திமுக தரும் இலவசங்களையும் பெற்றுகொண்டபோதும், மதுக்கடைகளைக் கொண்டு அவர்கள இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையினை சூனியமாக்கியபோது, விலைவாசி உச்சானிகொம்பிலிருக்க அவர்களை கேட்காமால் மருத்துவரை மட்டும் கேள்விகேட்பதேன்? ஆளும் ஆட்சியிடம் நீங்கள் உமது அறிவுக்கண்களை திறந்து இதே கேள்வியினை அவரிடமும் கேளுங்கள் பிறகு பார்போம்!

By முரளிதீர தொண்டைமான்
8/10/2010 10:05:00 AM
யாரிந்த மனிதர்? இவருக்கு ஏன் தினமணி இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். பிளீஸ்!
By Ravi
8/10/2010 6:45:00 AM
d,m,kevai mirattippaarkiraan entha ramadoss.gongress kalatti vdumo yena payanthu nadunkum d.m.k.yeppadium nammidam vanthe theerum yena nambukiraan entha maram vetti .
By thuran
8/10/2010 6:27:00 AM

பினாங்கு: இலங்கை நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி திரட்டி வருகிறார்.இதற்காக தனியாக ஒரு குழுவையே அவர் அமைத்துள்ளார். பினாங்கு துணை முதல்வராக இருக்கும் ராமசாமி, மலேசியாவின் ஜனநாயக செயல்பாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். தீவிர ஈழ ஆதரவாளர். ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோது தமிழ் மக்களைக் காக்குமாறு உலக ...   [ Read Article ]
User Comments
[ Post Comments ]
Page 1 of 4
பதிவு செய்தவர்: Ilakkuvanar Thiruvalluvan
பதிவு செய்தது: 10 Aug 2010 4:19 am
தந்தை பெரியாரின் பெயர்கொண்ட தமிழப்பெரியார் இராமசாமி அவர்களின் முயற்சி வெல்லட்டும்! தமிழின அழிப்பாளர்கள் தண்டனை பெறட்டும்! தமிழ் ஈழம் வெல்லட்டும்! தரணியெங்கும் அதன் கொடி பறக்கட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பதிவு செய்தவர்: அப்பாவி
பதிவு செய்தது: 10 Aug 2010 12:55 am
இந்த இந்தியக் கூலியை நம்பியாடா ஆதாரங்களைக் கொடுக்கப் போகிறீர்கள்?? இன்னமுமாடா நீங்க திருந்தலை??

பதிவு செய்தவர்: நல்லது
பதிவு செய்தது: 09 Aug 2010 11:35 pm
நண்பர்களே, ஒரு common website அமைத்து இதற்கு உதவ நினைக்கும் மக்களை ஒன்று திரடலமே?

பதிவு செய்தவர்: very good
பதிவு செய்தது: 09 Aug 2010 11:31 pm
ippadi oru thalaivar vidaa muyarchiyoda poraadaradhu kekkave sandhosamaa irukku...

பதிவு செய்தவர்: kp மாதவன்
பதிவு செய்தது: 09 Aug 2010 10:21 pm
நம்ப பங்குக்கு நம்ப எப்படி உதவலாம்னு யோசிக்கணும் மக்களே.தமிழரிடையே இப்போதைக்கி ஒற்றுமைதான் முக்கியம்.

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 09 Aug 2010 10:19 pm
Good to hear, a tamil politican from out side india is trying to collect evidence again srilanka geoncide.In tamilnadu you can see only selfish politicans.India is always come last in any foreingn issue and used to spoil its image (becasue of china) - Like Burma india earlier supports decomcrasy but now supports military government, afraid china , no strong foreign policy , it was proloning LTTE -Srilanka issue and did wrong decission because of pakistan and china intervention in this issue

பதிவு செய்தவர்: இதுவல்லவோ தேவை
பதிவு செய்தது: 09 Aug 2010 10:15 pm
பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மாதிரி எல்லா சாமியும் இருந்துட்டால் எதுக்கு இத்தனை பிரச்சினை?

பதிவு செய்தவர்: மதுரைதமிழன்
பதிவு செய்தது: 09 Aug 2010 10:11 pm
நமக்கு முன்னுதாரணம் இந்த மலேசியா துணை முதல்வர்.... ஈழ கனவு நனவாகும் நாள் வெகு அருகில்.....

பதிவு செய்தவர்: murugan
பதிவு செய்தது: 09 Aug 2010 9:47 pm
தனி ஈழம் அமைக்க நாம் உறுதுணை மற்றும் ஓற்றுமை காப்போம் நன்றி

பதிவு செய்தவர்: வெற்றிவேல்
பதிவு செய்தது: 09 Aug 2010 9:45 pm
அட்லீஸ்ட் பினாங்கு முதல்வர் இப்படி விடா முயற்சியா ஈழ தமிழருக்கு ஹெல்ப் பண்றத நினச்சி தமிழினம் பெருமைபட்டுக்கலாம்.... நம்ப தமிழ் நாட்டுல இப்படி ஒரு தலைவர் இல்லியேடா...நாமெல்லாம் விடா முயற்சி உடையவன்களா இருந்தா பினாங்கு முதல்வர் வழியில் நாமும் செல்வோம்...

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 9, 2010, 14:19[IST]

Vote this article
Up (33)
Down (0)


ரியாத்: கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை ரியாத் நகரில் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் (வசெந்தம்) சார்பாக மறைமலையடிகளாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாலை 5 மணிக்கு மோர் வழங்குதலுடன் தொடங்கப்பட்ட விழாவில் தனியர்களுக்காக (Bachelors) கில்லி, கோலிகுண்டு, நொண்டி, கோக்கோ போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இளம் வயதினர் மட்டுமல்லாது பெரியவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பின்பு திருமதி. தில்லைக்கரசி சிவகுமார் மறைமலையடிகள் பற்றிய சில குறிப்புகளை தொகுத்து வழங்கினார். அதனை அடுத்து புலவர் அரங்கராசன் அவர்களின் சிறப்புரையும், திரு நாக.இளங்கோவன் அவர்களின் செம்மொழி மாநாட்டுத் தூய்ப்பும் (அனுபவம்) நடைபெற்றது. தொடர்ந்து நகைச்சுவை நாடகம், தமிழிசைப் பாடல் ஆகியவை நடைபெற்றது. பின்னர், திருமதி. ரம்யா காமராஜ் அவர்கள் வசெந்தம் கடந்து வந்த பாதை குறித்த ஒரு மீள்பார்வையை வெளியிட்டார்.

வசெந்தத்தின் ஒவ்வொரு விழாவிலும் சமுதாயத்திற்கு உதவும் செயல்களைச் செய்வது வழக்கம். இம்முறை கண் தானம் செய்வது குறித்து விளக்கப்பட்டது. பல உறுப்பினர்களும் கண் தானம் செய்ய முன்வந்தது சிறப்பம்சமாகும். விழாவின் இறுதியில் சவுதி வாழ் மூத்தத் தமிழரும் சமூக சேவகருமான திரு. ஜெயசீலன் அவர்களுக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.


User Comments
[ Post Comments ]

பதிவு செய்தவர்: Ilakkuvanar Thiruvalluvan
பதிவு செய்தது: 10 Aug 2010 3:59 am
தனித்தமிழ்க்கடல் மறைமலையடிகளுக்குக்கடல் கடந்து விழா என்பது மகிழ்ச்சி தருகிறது. வசெந்தம் அமைப்பினருக்குப் பாராட்டுகள். தனியர் என்பது individualஎனப்பொருள்படும். bachelor -மணமாகார் என்பதே சரி. experience -துய்ப்பு, பணியறிவு, பட்டறிவு எனப் பொருள்படும்.தூய்ப்பு எழுத்துப் பிழையா? திருத்தம் செய்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பதிவு செய்தவர்: azad
பதிவு செய்தது: 09 Aug 2010 3:15 pm
பாராட்டுக்கள்....நல்ல செய்தி


திங்கள், 9 ஆகஸ்ட், 2010

இலங்கை: தமிழர்களின் விவசாய நிலங்களில் சிங்களர்கள் குடியேற்றம்


இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளிட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சிங்கள இனத்தவர் குடியமர்த்தப்பட்டு வருவதாக அந்நாட்டு தமிழ் இணைய தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக அந்த இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்தியின் விவரம்:விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பின்னரும், தமிழர்கள் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதாக இலங்கை அரசு கூறி வந்தாலும் அவ்வாறு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது.மாறாக தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் தொடர்ந்து குடியேற்றப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தற்போது திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு சிங்களவர்களை குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஏராளமான விவசாய நிலமும் அடங்கும். இவ்வாறு அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

சிங்களர்களுக்கு உதவியாக நாட்கூலி அடிப்படையில் ஈழப்படுகொலைக்குக் காரணமான தலைவர்களையும் 
அதிகாரிகளையும் ஊடகத்தினரையும் அனுப்பி வைக்கலாம். அவர்கள் கனவு நனவாவதை நேரடியாகப் பாரக்கும் வாய்ப்பு கிட்டும் அல்லவா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திமுக பேச்சாளரை நீக்கியது போல் கலைஞரைக் குறை சொல்லும் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்ல வாய்ப்பாக இந்நிகழ்வைக் கருதலாம். ஆனால், உண்மையில் குதியாட்டம் போடும் குரங்கிற்குக் கள்ளையும் ஊற்றிக் கொடுப்பதுபோல்தான் இந்நிகழ்வு அமையும். கோவன் ஒவ்வொருவராக நீக்கச் சொன்னால் இவர்கள் நீக்கிக் கொண்டே இருப்பாரகளா? கோவனின் கும்மாளம் பெருகுவதுடன் மேலும் பலர் குதியாட்டம் போட்டு ஆட்சியையும் தலைவர்களையும் தாக்கத் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்துவதாகத்தான் அமையும். ஊடகங்கள் முதன்மை கொடுப்பது தவிர பொது மக்களால் ஒதுக்கப்பட்ட கோவனைக் கண்டு தி.மு.க. அஞ்சுவது ஏன்? இதற்கு மாற்றாகத் தி.மு.க.வின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் பதவியைக் கோவனுக்கு அளிக்கலாம். பாயில் இருந்து மூட்டைப்பூச்சி தொந்தரவு கொடுத்தால் பாயை எரிப்பார்களா? மக்களால் புறக்கணிக்கப்பட்ட யாரையும் பெரிய ஆளாக ஆக்க வேண்டா. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:01:00 PM
நோண்டி நு(நொ)ங்கு எடுக்கப் போவது கோவனா? கலைஞரா? 2) காமராசர் தானே விரும்பி (மூத்த தலைவர்கள் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணியை முடுக்கிவிடும் திட்டம் ஒன்றை அறிவித்து அதன்படி) முதலமைச்சர் பதவியை விட்டு விலகியவர். அப்படியிருக்க காங்.ஆட்சியைத் தங்க வைக்க அவர் எப்படி இலவய வானொலியைத் தந்திருக்க முடியும்? 3.)காமராசரே காமராசர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட பிறகு, காங். விட்டு விலகிய பிறகு காமராசரை மதிக்காத காங்கிரசு எப்படி காமராசர் ஆட்சி என்று பேச முடியும்? 4.) காங்.தலைவர் த.பாலு, தன் பேச்சைக் கேட்காத கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். 5.) ஒருவேளை கட்சியை உடைக்க கோவனும் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 2:51:00 PM 
வாயைத் திறந்து பாடுவோம்!
First Published : 09 Aug 2010 12:00:00 AM IST


ஓரு வழியாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியாகி விட்டது. கடைகளின் பெயர்களைத் தமிழில் (சில கடைகளிலாவது) எழுதியாகிவிட்டது. தமிழில் படித்தவருக்குப் படி எடுக்கும் அரசு வேலையும் வழங்கியாகிவிட்டது. தமிழில் பொறியியல் பட்டப் படிப்பும் வந்தாகிவிட்டது. இத்தோடு எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை. இன்னும் தமிழுக்கு, தமிழில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உண்டுதான். ஆனால் அவற்றில் எல்லாம் முதன்மையாக, முக்கியமாகச் செய்ய வேண்டிய பணி ஒன்று உண்டு என்றால் அது "தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடலை எல்லோரையும், குறைந்தபட்சம் கல்வி அறிவு பெற்றவர்களையாவது வாயைத் திறந்து பாட வைப்பதுதான். பொது நிகழ்ச்சிகளில், அரசு நிகழ்ச்சிகளில், பள்ளி விழாக்களில் என தமிழ்த் தாயை வாழ்த்திப் பாட வேண்டிய தருணங்கள் நமக்கு ஏராளம் உண்டு. அந்தத் தருணங்களில் எல்லாம் நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஒலி நாடாவை அல்லது குறுந்தகட்டை ஓடவிட்டுவிட்டு எல்லோரும் பிடித்து வைத்த சிலையாக நின்று கொண்டிருக்கிறோம். இது கல்லாதவர் சபையில் மட்டும் நடப்பது அல்ல. கற்றவர் சபையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. விதிவிலக்காக ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் நான்கைந்து பேர் மேடைக்கு வந்து பாடிவிட்டுச் செல்வர். தமிழ்த் தாயை எல்லோரும் வாயைத் திறந்து வாழ்த்திப் பாடலாமே. தமிழ்த் தாய்  வாழ்த்தின் முதல் அடியைக் கடந்து இரண்டாவது அடிக்குக்கூட நம்மில் பலரால் செல்ல முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ் குறித்தும், அதன் பழமை குறித்தும், பெருமை குறித்தும், செம்மொழித் தகுதி குறித்தும் வாயாறப் புகழ்ந்து பேசி களைத்திருக்கும் இந்த வேளையில், தமிழ்த் தாயை வாழ்த்தி நம்மால் தொடர்ந்து நாலு வரி பாட இயலவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே. அதற்குக் காரணம் உண்டு. கடந்த 1972-க்கு முன்பு பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாயை வாழ்த்த விரும்பியோர் அவரவருக்குப் பிடித்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடி வந்தனர். அதுவும் அவரவருக்குப் பிடித்த இசை வடிவத்தில். அந்தக் குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையில் 1973-ல் அப்போது முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் கருணாநிதி, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' பாடலை அதிகாரப்பூர்வ பாடலாக அறிவித்து அதற்கான அங்கீகரிக்கப்பட்ட இசை வடிவத்தையும் வெளியிட்டார். அந்தப்  பாடலைத்தான் அரசு மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகப் பாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அந்த இசைத் தட்டு காலம் தொடங்கி, பின்னர் வந்த ஒலி நாடா காலம் போய் இப்போது குறுந்தகடு காலம் வரையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் "வேறு ஒருவரால்' பாடப்படுகிறது, நாம் காது குளிரக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு நிகழ்ச்சிகளில், "தமிழ்த்தாய் வாழ்த்து' என்று அறிவித்த உடன் முக்கிய விருந்தினர்களும், பங்கேற்பாளர்களும் எழுந்து நின்ற பிறகுதான் ஒலிபெருக்கி ஊழியர் அந்தக் குறுந்தகட்டை அல்லது ஒலி நாடாவைத் தேடுவார். தேடிக் கண்டுபிடித்து அதை அதற்கான கருவிக்குள் நுழைத்த உடன் அதிர்ஷ்டம் இருந்தால் "தமிழ்த்தாய் வாழ்த்து' வரலாம். அல்லது வேறு ஏதேனும் ஒரு குத்தாட்டப் பாடலாகவும்கூட இருக்கலாம். சில சமயங்களில் தேசிய கீதத்தின் கடைசி வரி (பெரும்பாலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், தேசிய கீதத்தையும் ஒரே குறுந்தகட்டில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்) ஒலித்து முடிந்து தமிழ்த்தாய் வாழ்த்து வரும். சில வேளைகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் இருந்து வரும். இடையில் விபரீதமான ஒலிகளும் வரும். இதெல்லாம்கூட பரவாயில்லை. சில வேளைகளில் தமிழ்த்தாயை வாழ்த்த அந்த ஒலிபெருக்கிக்கு மனது வராது போலும். சேஷ்டை செய்யும். இறுதியில் அங்கு இருப்பவர்களில் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பங்கேற்பாளர்களே பாட வேண்டிய நிலை ஏற்படும். அப்போதுதான் இத்தனை நாளும் ஒலிபெருக்கியைப் பாட வைத்துவிட்டு நாம் கேட்டுக் கொண்டிருந்ததன் பலன் தெரியும். ஒரு சிலர் பாடுவர், சிலர் சிலையாக நின்று கொண்டிருப்பார்கள். இப்படியே 37 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒலி கேட்காத குழந்தைதான் ஊமையாகும். நாம் காது குளிர தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்டும் திரும்பப் பாடத் தெரியாத ஊமைகளாக இருக்கிறோம். சரி, இதுவரையில் அப்படி இருந்தாகி விட்டது. இனிமேலும் அப்படி இருந்தால் எப்படி? செம்மொழி கொண்டாட்டத்துக்குப் பொருள் வேண்டாமா? அன்று முறையற்ற ஒன்றை முறைப்படுத்த இசைத்தட்டு வடிவம் வந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாம் அந்த முறையைப் பின்பற்றாமல் இன்னும் ஒலி நாடாவையும், குறுந்தகட்டையும் நம்பிக் கொண்டிருந்தால் எப்படி? பள்ளி, கல்லூரிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாணவ, மாணவிகள்தான் பாட வேண்டும். அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளைக் கொண்டோ அல்லது பாடத் தெரிந்தவர்களைக் கொண்டோ பாடச் செய்ய வேண்டும். அதற்கு வழி இல்லை என்றால் குறுந்தகட்டின் உதவியுடன் ஒலி பெருக்கியின் ஒலியைக் குறைத்து வைத்து அதனோடு இணைந்து அனைவரும் சத்தமாக தமிழ்த் தாயை வாழ்த்திப் பாட வேண்டும். மழலைச் சொல் கேட்டு மகிழும் தாயைப் போல நாம் வாயைத் திறந்து பாடும் வாழ்த்தைக்  கேட்டால்தான் தமிழ்த்தாய் ஆனந்தம் அடைவாள்.
கருத்துக்கள்

தமிழ்த்தாயை வாழ்த்த மனம் இருக்கின்றதோ இல்லையோ வாழ்த்து நேரத்தில் அனைவரும வாய்விட்டுப்பாட வேண்டும் என்பதே சரியாகும். பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தம்முடைய தமிழ்க்காப்புக கழக நிகழ்ச்சிகளில் சுந்தரனாரின் நீராருங்கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலைத்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடச் செய்தார். அனைவரும் கூட்டத்தொடக்கத்தில் தமிழ்த்தாய்ப் பாடலாக இப்பாடலைப்பாட வேண்டும் என்று தமிழகப் புலவர் குழுவில் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவரது கனவு கலைஞரின் அறிவிப்பால் நனவானது. இப்பொழுது இசக்கியின் வேண்டுகோளும் தினமணி மூலமாக நிறைவேறும் என எதிர்பார்ககலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 4:18:00 AM
தமிழக சட்ட சபையில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கிடையாது வேறு என்ன சொல்ல இருக்குகிறது?
By NAGARAJAN
8/9/2010 1:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தலையங்கம்: தாமதிக்கலாகாது!


காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருப்பதாக வரும் செய்தி சற்று ஆறுதல் தருவதாக இருந்தாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பழையபடி சகஜ நிலைக்குத் திரும்புமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. கலவரம் ஓய்ந்திருப்பது என்பது அடுத்த சில நாள்களுக்கான உணவுப் பொருள்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்காகக்கூட இருக்கலாம். நாம் அதற்காக காஷ்மீரத்து மக்களைக் குறை கூறிவிட முடியாது. இந்த நிலைமைக்குக் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்ல என்பதை முன்பே ஒருமுறை தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.தீவிரவாதத்தின்மீது சலிப்பு ஏற்பட்டிருந்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன், தேர்தலில் பங்கு பெற்றனர். சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் வன்முறையோ, அசம்பாவிதங்களோ இல்லாமல் நடந்தன. தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்களையும் நடத்தி, அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலியிருந்தால், அதன் மூலம் வளர்ச்சிப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது. உள்ளாட்சித் தேர்தல் நடந்து எதிர்க்கட்சியான  மக்கள் ஜனநாயகக் கட்சி வலுப்பெற்று விடுமோ என்கிற பயத்தில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாதன் விளைவுதான் மக்களின் அதிருப்திக்கு முக்கியமான காரணம்.மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியது ஸ்ரீநகரில் மட்டுமல்ல, பட்காம், கந்தர்பால், குப்வாரா, அனந்த்நாக், பாரமுல்லா, குல்காம், பந்திபோரா, சோபியான், புல்வாமா என்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விட்டனர். சாதாரணமாகக் காஷ்மீரத்தில் பெண்கள் வெளியே வருவதில்லை. இப்போது பெருமளவில் குடும்பப் பெண்கள் கையில் கல்லுடன் தெருவில் இறங்கி ராணுவத்துக்கும், காவல்துறையினருக்கும் எதிராகப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் அதிருப்தி எந்த அளவுக்குக் கட்டுக்கடங்காமல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தல்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும், தடைகளையும் மீறி வாக்குச்சாவடிக்கு வைராக்கியத்துடன் விரைந்த அதே காஷ்மீர் மக்கள் இப்போது அரசுக்கு எதிராகக் கோபம் கொந்தளிக்கத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருப்பது ஏன் என்பதை நமது ஆட்சியாளர்கள் யோசிக்க மறுக்கிறார்கள். 1991-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடக்கு காஷ்மீரில் உள்ள குனான் போஷ்புரா என்கிற கிராமத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் நூற்றுக்கும் அதிகமான பெண்களைக் கற்பழித்தனர். அரசு நீதி வழங்கவில்லை. காஷ்மீர் பற்றி எரிந்தது. அந்த ஜுவாலையை அடக்கப் பத்தாண்டுகள் பிடித்தன.கடந்த ஆண்டு ஜூன் மாதம் சோபியன் என்ற ஊரில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை சில ராணுவ வீரர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர். அந்த இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் ஓர் ஓடையில் கிடந்தன. அவர்கள் தண்ணீரில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாக மரண அறிக்கை தயாரிக்கப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், அந்த ஓடையில் ஓர் அடி ஆழத்துக்குக்கூடத் தண்ணீர் கிடையாது.விசாரணை என்கிற பெயரில் உண்மை மூடி மறைக்கப்பட்டது. தவறு செய்தவர்களைத் தண்டித்தால் ராணுவத்தினர் மனத்தளர்வு அடைந்து விடுவார்கள் என்று சாக்குப்போக்கு சொல்லப்படுகிறது. என்ன அபத்தமான வாதம்? கலவரத்தை அடக்கத் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், வீட்டில் தனியாக இருக்கும் இளம் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழிப்பது ராணுவமாக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும், ஏன் யாராக இருந்தாலும் தவறுதானே? தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தானே?அரசு தவறு செய்த ராணுவ அதிகாரிகளைக் காப்பாற்ற முற்பட்டதில் தொடங்கி, ஒன்றன்பின் ஒன்றாகச் செய்துவரும் தவறுகள் ஏராளம், ஏராளம். முதல்வர் ஒமர் அப்துல்லா நல்லவராக, ஊழலற்றவராக இருக்கலாம். ஆனால், நிர்வாகத் திறமையும், அரசியல் அனுபவமும் இல்லாதவர் என்பதைக் கடந்த ஓராண்டு காலமாக அவர் நிர்வாகம் செய்த விதமும், கடந்த ஒருமாத காலமாக அவர் கலவரத்தைக் கையாண்ட விதமும் வெட்டவெளிச்சமாக்குகிறது.பாகிஸ்தானின் இன்றைய மேல்மட்ட ராணுவத் தளபதிகளான ஜெனரல் கயானி, தாரிக் மஜீத், காலித் ஷமீம் வைன், சையத் அப்சர் ஹுசைன், அகமத் பாஷா, ஜவீத் ஜியா என்று அனைவருமே 1971-ல் பாகிஸ்தானிய ராணுவம் இந்தியாவிடம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தபோது அந்த ராணுவத்தில் சமீபத்தில் சேர்ந்திருந்த இளம் தளபதிகள். சுமார் 90,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்ததையும், வங்கதேசம் பிளவுபடுத்தப்பட்டு தனி நாடாக்கப்பட்டதையும், தேசிய அவமானமாகக் கருதி  மனத்திற்குள் வெம்பித் தவிப்பவர்கள். அன்றைய தோல்விக்குப் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் இவர்களது வெறிக்கு இன்று காஷ்மீர் கைக்கெட்டும் தூரத்து வாய்ப்பாகத் தெரிகிறது.நாம் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவமும், மக்களின் அதிருப்தியைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, பின்னணியில் இருந்து எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கும் பிரிவினைவாதத் தீவிரவாதக் கும்பலும் அமைதி ஏற்படுவதை அனுமதிக்காது. நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வரும்போது காஷ்மீர் கலவரம் உச்சகட்டத்தை எட்ட வேண்டும் என்பதுதான் இவர்கள் திட்டமாக இருக்கும்.இனியும் நாம் தாமதிக்க முடியாது. காஷ்மீரில் ஒமர் அப்துல்லா ஆட்சி கலைக்கப்பட வேண்டும். உடனடியாகக் காஷ்மீர் கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். இன்னும் பத்தாண்டுகள் பழையபடி போராட வேண்டும். வேறு வழியேதும் புலப்படவில்லை.தொலைநோக்குப் பார்வையும், நிர்வாகத் திறமையும், தவறை மூடிமறைக்கப் பார்க்கும் நேர்மையின்மையும்தான் காஷ்மீரின் இன்றைய நிலைமைக்குக் காரணம். வங்கதேசம் பிரிந்ததுபோல, இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிக்கப்பட்டு பழி வாங்கப்பட வேண்டும் என்கிற பாகிஸ்தானிய ராணுவ ஜெனரல்களின் எதிர்பார்ப்பை முதலில் முறியடித்தாக வேண்டும். அதுதான் உடனடி குறிக்கோளாக இருக்க முடியும்!
கருத்துக்கள்

நிறையப் படிப்பவர்களால்தான் சிறப்பாக எழுத முடியும். தினமணி ஆசிரியர் குழுவினர் மிகுதியாக உடனுக்குடன் பிற செய்திகளைப் படிக்கிறார்கள் எனப் புரிகின்றது. அதனால்தான் எந்தப் பொருண்மையாக இருந்தாலும் அது குறித்த விரிவான செய்தியையும் வாசகர்களுக்கு அளிக்கின்றார்கள். ஆசிரியர் குழுவினருக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 4:05:00 AM
, இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிக்கப்பட்டு பாகிஸ்தானிய Naikalen எதிர்பார்ப்பை முதலில் முறியடித்தாக வேண்டும்.
By Rafeei,Madina Munawara
8/9/2010 2:46:00 AM
A BIG COUNTRY LIKE INDIA NEEDS STRONG POLICY MAKING POLITICIANS AND A STRONG ADMINISTRATION IN DEALING THIS TYPE OF AGITATIONS...PAKISTAN WILL ALWAYS INTERVENE TO CONFUSE THE KASHMIR PEOPLE ON THE BASIS OF RELIGION..STRONG ACTIONS ARE NEEDED TO SOLVE THIS PROBLEM.
By rangaraj
8/9/2010 1:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மருத்துவரின் கவனக்குறைவுக்கு மருத்துவமனையைத் தண்டிக்க முடியாது


புது தில்லி, ஆக. 8: மருத்துவரின் கவனக்குறைவால் ஒரு நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலோ அல்லது மரணம் ஏற்பட்டாலோ அதற்கு அவர் வேலை பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தை தண்டிக்க முடியாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2007-ம் ஆண்டு தில்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இதய நோயாளி ஒருவர் அறுவை சிகிச்சைக்கு பின் சில மாதங்களில் இறந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவால் அவருக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றும் அதனால்தான் அவர் இறந்து விட்டார் என்றும் நோயாளியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.இதற்கு மருத்துவமனை நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி இறந்தவரின் உறவினர்கள் தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம்,இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மருத்துவமனை நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. "அறுவைச் சிகிச்சைக்கு பின் நோயாளி சில மாதங்கள் உயிருடன் இருந்துள்ளார். அதன் பின்னர் அவரது வீட்டில் இயற்கையாக மரணம் அடைந்துள்ளார். இதற்கு எந்த விதத்திலும் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது' என்று நிர்வாகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.ஆனால் சிகிச்சை அளித்த 3 மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சையால்தான் நோயாளி இறந்தார் என்றும் இதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு என்றும் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம்:  "மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் கவனக்குறைவாக நடந்து கொண்டு அதன் காரணமாக ஒரு நோயாளி இறந்தால் அதற்கு அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையை தண்டிக்க முடியாது. ஆனால் மருத்துவமனை சரியான முறையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் அதன் காரணமாக நோயாளி இறந்தால் அதற்கு மருத்துவமனைதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.  அதே சமயம் மருத்துவர்கள் அல்லாத மருத்துவப் பணியாளர்களின் கவனக்குறைவால் ஒரு நோயாளி மரணம் அடைந்தால் அதற்கு மருத்துவமனை, மருத்துவர் ஆகிய இருவருமே பொறுப்பாக மாட்டார்கள்.மருத்துவர்தான் ஒரு நோயாளியை பரிசோதித்து மருந்துகளை பரிந்துரை செய்கிறார். அறுவைச் சிகிச்சை செய்வதும் மருத்துவரின் பணிதான். எனவே மருத்துவரின் கவனக்குறைவால் மரணம் ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனைதான் பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதத்தையும் அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

என்ன தீர்ப்போ! மண்ணாங்கட்டி! மருத்துவரின் திறமையால் பெயர் பெறுவதும் விளம்பரம் பெறுவதும் பண அறுவடைசெய்வதும் மருத்துவமனைதானே! மருத்துவரின் திறமையின்மையால் ஏற்படும் இழப்புகளுக்கும் அதுதானே பொறுப்பேற்க வேண்டும். அதுதானே முறை. பொறுப்பேற்க வேண்டிய மருத்துவமனை உரிய தொகையை உரிய மருத்துவரிடம இருந்து பெறத் தடையில்லையே! எனவே, மருத்துவமனையை நம்பி வந்த நோயாளியின் இறப்பிற்கு மருத்துவமனையே பொறுப்பு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தினமணி செய்தி எதிரொலி: பெருமழைப் புலவர் இல்லத்தில் அதிகாரி ஆய்வு


திருத்துறைப்பூண்டி, ஆக. 8: வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள் என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை தினமணியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அன்றைய தினமே புலவரின் இல்லத்துக்கு தஞ்சை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.கபிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரை ஆசிரியராகத் திகழ்ந்தவர் மேலப் பெருமழை கிராமத்தைச் சேர்ந்த பெருமழைப் புலவர் என்று அழைக்கப்பட்ட பொ.வே. சோமசுந்தரனார்.இவர் தனது தமிழ்ப் புலமைத் திறத்தால் சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பட்டினத்தார் பாடல்கள், நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை உள்ளிட்ட பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியதுடன், மானனீகை, செங்கோல் முதலிய உரைநடை நூல்களையும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறு உள்ளிட்ட பல இலக்கிய நூல்களையும் படைத்தவர்.பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையான அறிவு பெற்ற இவர், பள்ளி ஆசிரியராக இருந்திருந்தால்கூட அவரது மறைவுக்குப் பின்னர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைத்திருக்கும். தற்போது இவரது மகன்கள் 100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.இதுகுறித்த செய்தி தினமணியில் விரிவாக வெளியானது.விரைந்து செயல்பட்ட தமிழ் வளர்ச்சித் துறை: இதைத் தொடர்ந்து, செய்தி வெளியான அன்றைய தினமே விடுமுறை நாளாக இருந்த போதிலும், சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கூ.வ.பூவரசு ஆணையின்படி, திருவாரூர் மாவட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தஞ்சை தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் க.கபிலர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப் பெருமழை கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று புலவரின் வாரிசுகளைச் சந்தித்தார்.அவரிடம் புலவரின் மகன்கள் எஸ்.பசுபதி, எஸ்.மாரிமுத்து ஆகியோர் தங்களது தந்தை பெயரில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்றும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்றும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புலவர் பெயரில் பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் இருக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.மேலும், புலவர் எழுதிய நூல்களுக்கு பரிவுத்தொகை மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு அரசின் நிதி உதவி, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.இந்தக் கோரிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என கபிலர் உறுதி அளித்தார்.செப்டம்பர் 5-ம் தேதி புலவரின் நூறாவது ஆண்டு பிறந்த தினமாகும். அதற்குள் அரசின் சார்பில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என அவரது மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
கருத்துக்கள்

முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று நேற்றே நான் குறிப்பிட்டது உண்மையாவதில் மகிழ்ச்சியே! நூல்களை நாட்டுடைமையாக்கிப் பரிவுத் தொகையை வழங்குவார் என்பதில் ஐயமில்லை. மணிமண்டபம் முதலான பயனற்ற ஆசை களைக் குடும்பத்தினர் விடுதலே நன்று. செய்தியில் குறிப்பிட்டாற்போன்று த.வ.இய்க்குநர் பூவரசு அன்று; முனைவர் கூ.வ.எழிலரசு. விரைவான நடவடிக்கைக்ககுக்காரணமான செயலர் /முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் /முதல்வர் ஆகியோருக்கும் செய்தியை வெளியிடச் செய்த செய்தியாளருக்கும வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணியா?

First Published : 08 Aug 2010 01:03:23 PM IST


சென்னை, ஆக. 8:  காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள கருத்து பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த இளங்கோவன், ``ராமதாஸ் எப்போதாவது இதுபோன்ற நல்ல கருத்துகளைக் கூறுவதுண்டு. தமிழகத்தில் நல்லவர்கள் பலரின் கருத்துகளும் இதுதான்'' என்று கூறினார்.
கருத்துக்கள்

அண்ணாத் தம்பியின் கருத்தே உலகத் தமிழர்கள் பலரின் கருத்தாகும். வஞ்சகர்களும் பகைவர்களும் ஒழிய இத்தகைய கூட்டணி அமையட்டும்! தமிழ்நாடு தமிழர்களால் தமிழர்களுக்காக ஆளும் நாடாக மாறட்டும்! தமிழ்நாட்டில் தமிழர்களே தலைமையும் முதன்மையும் பெறட்டும்! தமிழே எங்கும் தலைமை தாங்கட்டும்! உளறித் திரிபவர்கள் மனநலமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலம பெறட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/9/2010 3:27:00 AM
வரவேற்கத்தக்க கருத்து தான். "தமிழின எதிரிகள் கூட்டணி", "தமிழின துரோகிகள் கூட்டணி","தமிழின கருங்காலிகள் கூட்டணி", "தமிழின பாதுகாவலர்கள் கூட்டணி" என தேர்தலின் போது கூட்டணிகள் அமைந்து இருந்தால் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கூட்டணியை தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.
By Annaththambi
8/8/2010 5:33:00 PM
my time is waste
By venki
8/8/2010 1:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *