திங்கள், 3 மே, 2010

தமிழ் செம்மொழி மாநாடு; குடியரசுத் தலைவர் பங்கேற்க ஒப்புதல்: கருணாநிதி தகவல்



புதுதில்லி, மே 2: கோவையில் நடைபெறவுள்ள தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தாம் நிச்சயம் வருவதாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்ததாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இரண்டு நாள் பயணமாக, தில்லி வந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. ஞாயிற்றுக்கிழமை காலை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் முதல்வர் கருணாநிதிக்கு அன்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:தங்களுடைய தில்லி வருகையின் நோக்கம் என்ன?இந்த ஆண்டுக்கான திட்டக் குழுவின் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தான் வந்திருக்கிறேன். அதோடு, கோவையில் நடைபெற இருக்கின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவரை அழைத்திருக்கிறோம். அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காகவும் வந்திருக்கிறேன்.ஞாயிற்றுக்கிழமை காலையில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தீர்களே, அவர் செம்மொழி மாநாட்டுக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்தாரா? நிச்சயமாக வருவதாகத் தெரிவித்தார்.சேலம் இரும்புத் தொழிற்சாலையில் அதற்காக நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது பற்றி மத்திய அரசுக்கு எழுதி இருக்கிறீர்கள். பிரதமரை திங்கள்கிழமை சந்திக்கும் போது, அதைப் பற்றி பேசுவீர்களா?பிரதமரைச் சந்திக்கும் போது இதைப் பற்றி பேசுவேன்.இந்த ஆண்டு திட்டக் குழுக் கூட்டத்தில் கடந்த ஆண்டை விட அதிகமாக நிதி ஒதுக்கீடு கேட்டு வலியுறுத்துவீர்களா? புதிய திட்டங்கள் எதையெதை வலியுறுத்துவீர்கள்?திட்டக் குழுவில் எவ்வளவு தொகை கேட்டோம்; எவ்வளவு அனுமதித்தார்கள்; என்னென்ன திட்டங்களுக்காக கேட்டோம் என்பதற்கான விளக்கங்களையும், அதற்கான பதில் என்ன என்பதையும் திட்டக் குழு கூட்டம் முடிந்த பிறகு சொல்கிறேன்.தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக எதிர்க் கட்சிகள் பிரசாரம் செய்கின்றனவே?இந்தியா முழுவதிலுமே மின் பற்றாக்குறை உள்ளது. அதைப் பற்றி நான் விளக்கமாக அறிக்கை கொடுத்து இருக்கிறேன். அதைப் படித்தால் உண்மை புரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழகத்தில் மின் வெட்டு அவ்வளவாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.மின் பற்றாக்குறை பற்றி வெள்ளை அறிக்கை அளிக்கப்படுமா?நான் அளித்துள்ள விளக்கமே வெள்ளை அறிக்கை போன்றது தான் என்றார்.ராசாவும், அழகிரியும்...மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, மு.க.அழகிரி ஆகியோரின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டார். அது குறித்து, கேள்வி-பதில் விவரம்:நாடாளுமன்றத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா மீது குற்றச்சாட்டு சுமத்தி, அவரை பதவி விலக வேண்டுமென்று குரல் எழுப்பப்பட்டு இருக்கிறது. அவர் பதவியில் நீடிப்பாரா?உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எதையும் நான் கொண்டு வரவில்லை. (ராசா பதவி விலகத் தேவையில்லை என்பதையே சூசகமாக தெரிவித்தார்.)மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் துறை சம்பந்தப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் இதுவரையில் பதில் அளிப்பதில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாகச் சொல்லப்படுகிறது. மக்களவைத் தலைவர் அழைப்பையும் அவர் புறக்கணித்து விட்டார் என்று சொல்லப்படுகிறதே?இந்த விவரங்களை எல்லாம் நீங்கள் அழகிரியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கட்சித் தலைவர் என்ற முறையில் நீங்கள் விசாரிப்பீர்களா?விசாரித்தால் உங்களுக்குத் தெரிய வருமே!
கருத்துக்கள்

மாநாட்டிற்குக் குடியரசுத் தலைவர் வருவது மகிழ்ச்சி. ஆனால், இந்நாள் வரை செம்மொழி அறிஞர்களுக்கு விருது வழங்காமல் இழுத்தடிக்கும் அவர் இம் மாநாட்டிலாவது அவற்றை வழங்குவதாக அறிவிக்க வேண்டும். தமிழ் நாட்டிற்கு அப்பால் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் கற்பிக்கப்படவும் தமிழர்கள் மிகுதியாக வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழர்களை நியமிக்கவும் அனைத்துத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ் கற்பிக்கவும் வகை செய்ய வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்குச் சம உரிமை வழங்கி இந்திய ஆட்சி மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஒரு பாடநூல் போதுமே!



தமிழக அரசு கொண்டுவந்துள்ள சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று தமிழக மக்கள் மனம் மகிழும் தீர்ப்பை அளித்துள்ள உயர் நீதிமன்றம், சமச்சீர் கல்வியை 2010-11 கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டுமானால், சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அந்த நிபந்தனை வருமாறு:""தமிழக பள்ளிக் கல்வித்துறை, வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை முதல் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பில் அறிமுகம் செய்யுமென்றால், அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை பள்ளிகளுக்கு மே 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பாடத்துக்கும் அரசு அங்கீகரித்துள்ள பாடநூல்களின் பட்டியலை வெளியிட வேண்டும்''சமச்சீர் கல்வியை அனைத்து பள்ளிகளும் நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை மே 15-ம் தேதிக்குள் அறிவிப்பது தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கடினமான செயல் அல்ல. அதேபோன்று, ஒவ்வொரு பாடத்துக்கும் அரசு அங்கீகரித்துள்ள பாடநூல்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் நிபந்தனையை நிறைவேற்றுவதும் கடினம் அல்லதான். இருப்பினும், அவ்வாறு புத்தகங்களைப் பட்டியலிட்டால், பாதிக்கப்புக்குள்ளாகப்போவது பெற்றோர் மட்டுமே என்பதை நீதிமன்றம் புரிந்துகொள்ளும்வகையில் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.ஒரு பாடத்திட்டத்துக்கு பல்வேறு பாடப்புத்தகங்களைத் தேர்வு செய்யும் உரிமை (இட்ர்ண்ஸ்ரீங் ர்ச் ம்ன்ப்ற்ண்ல்ப்ங் பங்ஷ்ற்க்ஷர்ர்ந்) பள்ளிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது கல்லூரிப் பாடத்திட்ட அளவில் வேண்டுமானால் சரியானதாகவும் நியாயமானதாகவும் இருக்கலாம். கல்லூரிப் படிப்பில், பாடத்திட்டத்தை மட்டும் (நஹ்ப்ப்ஹக்ஷன்ள்) வெளியிட்டால் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பேராசிரியர்கள் எழுதிய நூல்களைத் தெரிவுசெய்து, அல்லது ஆசிரியர் ஆலோசனையைப்படி தேடிப் படித்து தேர்வு எழுதும் முறை கல்லூரிகளுக்குப் பொருத்தமானது. ஆனால் பள்ளிகளில் அதற்கான தேவை இல்லை.பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய பல்வகை பாடநூல்களில் ஒன்றைத் தேர்வு செய்ய உரிமை கேட்பது பள்ளி நிர்வாகத்தின் விருப்பம் மட்டுமாகவே இருக்குமே தவிர, பெற்றோரின் விருப்பமாக இருக்காது. ஏனெனில், குழந்தைகள் அதுபற்றி ஏதும் அறியாதவர்கள். ஆசிரியர்களோ பள்ளி நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டு வாய்மூடி இருப்பவர்கள். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும், பிளஸ் டூ வரை அனைத்து பாடநூல்களும் தமிழக அரசினால் இலவசமாக அளிக்கப்படும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு பாடநூல்களை அரசு பட்டியலிடுமானால், இந்தத் தனியார் பள்ளிகள் அரசின் பாடநூல்களை வாங்காமல், கொள்ளை லாபத்துக்கு விலை வைத்து விற்கும் வடஇந்திய பதிப்பகங்களின் பாடநூல்களை குழந்தைகளின் மீது திணிப்பார்கள். இதனால் ஒவ்வொரு பெற்றோரும் ஒரு குழந்தைக்கு ரூ.1000 வரை செலவழிக்க நேரிடும். இந்த உண்மையை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் உள்ளது. தமிழக அரசு இந்த நிபந்தனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் பெற்றோர் அனைவரும் இதற்கு ஆதரவாக மனு கொடுத்து தங்களையும் வழக்கில் சேர்த்துக்கொள்ளும்போதுதான், தமிழகத்தில் தனியார் பள்ளிகள் எத்தகைய வியாபாரத்தைச் செய்துகொண்டிருக்கின்றன என்பது நீதிமன்றத்துக்கு தெள்ளத் தெளிவாகப் புரியும். தனியார் பள்ளிகள் மெய்யாகவே தங்களிடம் படிக்கும் குழந்தைகளின் கல்வித் திறன் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய பல்வகை பாடநூல்களின் பட்டியலைக் கேட்பதாகச் சொல்வார்களேயானால், தமிழக அரசு அச்சிட்டுத் தரும் பாடநூல்களைப் பெற்றுக்கொண்டு, தங்கள் சொந்தச் செலவில் எத்தனை பாடப்புத்தகங்களையும் பள்ளி நூலகத்திலேயே வாங்கி வைத்து, குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதை யார் தடுத்தார்கள்? அந்தச் செலவை பெற்றோர் மீது சுமத்தி, லாபம் பார்ப்பதைத் தவிர, வேறு நோக்கம் இந்தத் தனியார் பள்ளிகளுக்கு உண்டா?முதல் வகுப்பிலும், 6-ம் வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் அறிவிக்கப்படும் பாடத்திட்டத்தில், எத்தனைவிதமான பாடநூல்கள் இருந்துவிட முடியும். அவை வடிவம், வண்ணம், படங்களின் எண்ணிக்கை, அச்சு மற்றும் காகிதத்தின் தரம் இவற்றால் மட்டுமே வேறுபட்டிருக்க முடியுமே தவிர, அடிப்படையான கல்வியைப் பயிற்றுவிப்பதில் என்ன பெரிய வேறுபாட்டை இந்தத் தனியார் புத்தகங்கள் செய்துவிடப் போகின்றன! அப்படியே அரசும் அங்கீகரிக்கப்பட்ட பாடநூல் பட்டியலை வெளியிட்டு, அவை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில்தான் விற்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டால், இந்த பல்வகை பாடநூல்களை விற்க வரும் வடஇந்திய புத்தக நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளுமா, அவை தமிழகத்தில் கடை விரிக்குமா? தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்போல பாடநூல்களை வாங்கும் உரிமை அளிக்கப்படுமேயானால், சமச்சீர் கல்வியின் அடிப்படை நோக்கமான சமூக நீதிக்கு குந்தகமாக அமையும். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் வெறும் பாடநூல்களில் மட்டுமல்ல, நோட்டுப் புத்தகங்கள், சீருடை விற்பனை, ஷூ, விளையாட்டு பாடப்பிரிவுக்கு கான்வாஸ் ஷூ, காலணி விற்பனை ஆகியவற்றையும் நடத்தி லாபம் பார்க்கின்றன என்பதால் தமிழக அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் நிபந்தனைகளை தெளிவாகவும் விரிவாகவும் நிர்ணயிக்க வேண்டும். அதாவது,தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும், அது எந்த மொழிவழிக் கல்வி என்ற போதிலும், ஒரே விதமான பாடத் திட்டம்,ஒன்றே போன்ற பாடநூல்கள், ஒரே நிறத்திலான சீருடை,ஒரே விதமான கல்விக் கட்டணம்,ஷூ, டை ஆகியவற்றுக்குத் தடை,பள்ளியில் நோட்டுப்புத்தக விற்பனைக்குத் தடை,அதே பள்ளி ஆசிரியரிடம் தனிவகுப்பு பயிலத் தடை,ஒரு விதமான விண்ணப்பப் படிவக் கட்டணம்,எல்லாப் பள்ளியிலும் பெற்றோர்-ஆசிரியர் கழகம் ஆகியவற்றைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திடப் பள்ளிக் கல்வித் துறை முன்வருமேயானால், தமிழகத்தில் இன்றைய பெற்றோர் மட்டுமல்ல, நாளைய தலைமுறையும் நன்றியுடன் இந்த அரசை நினைவுகூரும். தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு ஏதோ, அரசுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் மட்டுமே தொடர்புடையதாக எண்ணி விலகி நிற்காமல், பெற்றோரும் தங்களை வழக்கில் இணைத்துக் கொண்டு , வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டும்.
கருத்துக்கள்

மிகச் சரியாக ஆய்ந்து எழுதியுள்ளீர்கள்.பள்ளிக் கல்வித் துறை ஏன் இவற்றைக் கவனத்தில் கொள்ள வில்லை எனத் தெரியவில்லை. வழக்கில் அரசு கோட்டை விட்டாலும் விடலாம். எனவே தினமணி பொதுநலன் கருதித்தன்னையும் வழக்கில் சேர்த்து வாகை சூடவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/3/2010 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 2 மே, 2010

நன்றி மறக்கக் கூடாது: வீரமணிக்கு வைகோ கண்டனம்



சென்னை, மே 1: தில்லியில் பெரியார் மையத்துக்கு இடம் கொடுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மறக்கக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.சென்னையில் ம.தி.மு.க. சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தில்லியில் திராவிடர் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். 1998-ல் பா.ஜ.க. ஆட்சியில் இடிக்கப்பட்ட பெரியார் மையத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.1998-ல் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது வீரமணி என்னை அணுகினார். நான் அப்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமாரை தொடர்பு கொண்டேன். அவர் அரசு அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.அதன்பிறகு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை நான் சந்தித்தேன். பெரியார் மையம் இடிக்கப்பட்ட செய்தியை அவரிடம் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதன் பிறகு நானும், வீரமணியும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயை சந்தித்து இது குறித்து முறையிட்டோம். அதன் பிறகு தில்லி அப்பல்லோ மருத்துவமனை அருகில் அன்றைய மதிப்பில் ரூ.50 கோடி மதிப்புள்ள இடத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெறும் ரூ.2 கோடிக்கு வாஜ்பாய் அரசு வழங்கியது. அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தைதான் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.பெரியார் மையம் அமைவதற்கு காரணமான முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும்,அதற்காக முயற்சி எடுத்த என்னையும் வீரமணி மறந்து விட்டார். நன்றி மறப்பது நல்லதல்ல என்றார் வைகோ.
கருத்துக்கள்

வைகோ கூறுவது உண்மைதான். நன்றி மறப்பது நன்றன்று என்பது தமிழ் நெறி. ஆனால்,இன்றைய அரசியல் நெறி என்பது யார்பக்கம் சாய்ந்திருக்கிறார்களோ அவரைத் தாங்குவதும் அவருக்கு எதரானவர் உயிரைக் காப்பாற்றும் உதவியே செய்திருந்தாலும் நன்றி மறந்து தாக்குவதுமே! ஆளும் கட்சியின் பக்கமே சாய்பவர் எவ்வாறு நன்றியை நினைக்க முடியும்? செய்ந்நன்றி அறிதலைப் போற்ற விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 10:41:00 AM

Continued : I surfed the net and got proof Tamilan is not telling truth and shows only his prejudice against Kalaignar. Vaiko was arrested under POTA in July 2002 and Kalaignar met him in jail in November 2002 not after one year as falsely claimed by Tamilan and there was no election at that time as imagined and uttered by Tamilan. So Kalaignar's concern for Vaiko is certainly sincere.

By Puthiyavan Raj
5/2/2010 10:06:00 AM

Tamilan, your logic is not correct. In POTA, there is no bail for one year. Obviously you are not attacking Jaya who arrested Vaiko and put him in jail for 19 months abusing POTA. That shows your prejudice. Can you tell one incident where Kalaignar abused POTA or TADA or false ganja case to settle personal or political scores as Jaya abuse power? Kalaignar took sincere efforts to help Vaiko and Vaiko even said the blunder he did was betraying Kalaignar and vowed he would never part with Kalaignar. You are attacking Kalaignar on hypothetical situation not on facts

By Puthiyavan Raj
5/2/2010 9:51:00 AM

கருணா கிழவனால் வஞ்சிகபட்ட ஒரு நல்ல மனிதர் வைகோ ! கிழவனுக்கு காடு வா வா என்கிறது ஆனால் சேர்த்த சொத்து போதாது என்று டில்லிக்கு பறக்கிறது ! நிச்சயம் கிழவனின் மரணத்திற்கு பிறகு பல நல்லவர்கள் மக்கள் தலைவர்களாக வரவேண்டும் ! வீரமணி சொல்லாவிட்டால் என்ன வைகோ அண்ணா நாங்கள் சொல்கிறோம் நன்றி நன்றி நன்றி

By CHENNAI PODIYAN
5/2/2010 8:59:00 AM

I do not know how many politicians are this much sincere like Vaiko, who never says anything just to please the powerful few in power. Power comes and goes, but friendship and relationships formed during one's life journey also needs to be valued is it not? Leaders like Vaiko should be congratulated for calling, 'a spade, a spade'. He reveals his regard for Vajpayee, with whom he has been close, whenever the occasion arises. Even now, he talks with total conviction, without dilution, on many issues dearer to his heart.

By ASHWIN
5/2/2010 8:10:00 AM

வீரமணிக்கு பெரியாரியத்தையும் , திராவிடர் கழகத்தையும் நடத்துகிற தகுதி போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.ஆட்சியில் இருப்பவர்களை காக்கா பிடித்து வாழ்க்கை நடத்தும் வீரமணிக்கு நன்றியெல்லாம் எங்கே இருக்கப் போகிறது?

By shyla
5/2/2010 7:50:00 AM

வாஜ்பாய்'க்கு ... வாழ்த்துகள்... வைகோ... வாழ்த்துகள் ...

By tamilan
5/2/2010 7:45:00 AM

Dear P.Jose, Mr. Karunanidi wanted vaiko's release only becuase of approaching election and vaiko's hardwork during campaign. Why did Mr. Karunanidi did not speak about Vaiko's release for one year. When election declared, Karunanidi went to Vellore prison and met Vaiko and asked him to come out on bail. Please do not hide the truth.

By Tamilan
5/2/2010 7:44:00 AM

YOU ARE CORRECT Mr. Jose.

By A.DULKARUNAI
5/2/2010 7:05:00 AM

dear jose antha nanrikku karunanari ketta vilai enna theriyumaa? vaikovai vaithu arasiyal naadakam nadathiyathu karuna and jaya - both. stalino azhagiriyo jayilil irunthaal karunanari ippadithan petition pottiruppaaraa?

By lena
5/2/2010 5:09:00 AM

nandri patri pesa Vaiko is not qualified. When jayalalitha put him in jail (for no valid reason), no one but the old man Karunanithi tried so many times and worked hard for his release. What did he do for that old man after that? He is thinking our podu janaga ellam mutalluga.

By P Jose
5/2/2010 4:38:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
முதல்வர் இன்று தில்லி பயணம்



சென்னை, மே. 1: தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி இரண்டு நாள் பயணமாக புதுதில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்குமாறு திட்டக்குழு துணைத் தலைவரைச் சந்தித்துக் கோருவார். தமிழ்நாட்டுக்கான திட்ட ஒதுக்கீட்டு அளவை அப்போது விவாதித்து இறுதி செய்வார். திட்ட ஒதுக்கீடாக ரூ.20,000 கோடியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், மருத்துவ சிகிச்சை காப்புறுதி திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், வீடமைப்பு திட்டம் ஆகியவற்றை விவரித்து அவற்றுக்குக் கூடுதல் நிதியைப் பெறுவார். நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் பெரும் திட்டம் குறித்தும் அப்போது எடுத்துரைப்பார். கோவையில் ஜூன் 23 தொடங்கி நடைபெறவுள்ள உலக செம்மொழி மாநாட்டுக்கு வருமாறு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, கூட்டணியின் இதர தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு நேரில் அழைப்பு விடுப்பார். தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் மேலவையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக சட்ட மேலவை அமைப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு வேண்டுகோள் விடுப்பார். முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் கோரியபடி தமிழகத்தின் பிரதிநிதியை நியமித்துவிட்டதை எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரின் அளவு தொடர்ந்து கிடைக்கவும், இந்தப் பிரச்னையில் விரைவில் சுமுகத் தீர்வு ஏற்படவும் மத்திய நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.ஒகேனக்கல்லில் தமிழக அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகம் எழுப்பி வரும் ஆட்சேபணைகள் சரியல்ல, தவறான வழிகாட்டலின் பேரில் கூறப்படும் அத்தகவல்கள் உண்மையல்ல என்பதை விளக்கி, அத்திட்டம் நிறைவேற மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடுவார்.தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் மலேசியாவிலிருந்து வந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரை மீண்டும் சென்னைக்கு வர அனுமதித்து தமிழ்நாட்டில் சிகிச்சை பெறுவதற்கான உதவிகளைச் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துவார்.இலங்கையில் இன்னமும் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் விரைவில் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பவும், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் சுய மரியாதையுடனும் சுயச்சார்புடனும் வாழ்வதற்கு ஏற்ப, அதிகாரப் பகிர்வு பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவார். தமிழர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இந்திய அரசு விரைந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வார். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உதவும் என்று தெரிவிப்பார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூத்த தலைவர் என்ற வகையில் மத்திய அரசின் ஓராண்டுச் சாதனையை ஆய்வு செய்ய உதவுவார். அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகளையும் உணர்த்துவார். விலைவாசியைக் குறைக்கவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும் மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் மாநில அரசுகளுக்கு இந்த நோக்கில் செய்ய வேண்டிய உதவிகளையும் விவரிப்பார். மாநிலங்களவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து கூட்டணி சார்பில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதில் அவர் பங்கேற்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. திராவிடர் கழகத்தின் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் சார்பில் ரூ.10 கோடி செலவில் தில்லியில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கிறார் முதல்வர் கருணாநிதி. திங்கள்கிழமை இரவு 8.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புமாறு பயண நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நாள் பயணத்தின்போது தீவிர அரசியல் ஆலோசனைகளும் இடம் பெறும் என்று தெரிகிறது.
கருத்துக்கள்

வாரம் 2 அல்லது 3 முறை குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றாலும் இதுவரை செம்மொழி அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்காமல் காலந்தாழ்த்துவதைக் கண்டித்தல், தமிழர் வாழ்விடங்களில் தமிழர்களையே தூதர்களாக நியமித்தல்,உலக நாடுகளில் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்தல், இந்திய வரலாற்றில் தமிழகம் பற்றிய இருட்டடிப்பு வேலையை நிறுத்தி உலக அறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குமரியிலிருந்து தொடங்கும் இந்திய வரலாற்றை எழுதச் செய்தல் என எத்தனையோ பொரு்ணமைகளை வலியுறுத்தலாமே! அடிமையால் கோரிக்கை வைக்கமுடியாதோ! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 3:23:00 AM

வழக்கத்திற்கு மாறான செய்தி விளக்கத்தைப் படிக்கும் பொழுது மதுரைக்காரன் கூற்றிலும் உண்மை இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது. எனினும் அழகிரி அல்லது இராசாவிற்கு மாற்றாகக் கனி மொழி என்றில்லாமல் அழகிரி இராசவுடன் கனிமொழி,என மன்றாடக் குடும்பத்தலைவர் என்ற முறையில் கோரிக்கை வைப்பது போன்று தமிழக முதல்வர் என்ற முறையிலும் ஒப்புக்காவது சில கோரிக்கைகள் வைக்காமலா போவார். இதுவரை புதுதில்லிக்கு அனுப்பிய மடல்களில் வேண்டியவற்றை வலியுறுத்தலாமே! சேலம் உருக்காலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீட்டு உதவிகள், தமிழக மீனவர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்படுவதை நிறுத்துவதற்கான எச்சரிக்கை, உலக அரங்கில் சிங்களத்தின் எடுபிடியாக இந்திய அரசு வேலை செய்யாமல் உண்மை வெளிவரத் துணை நிற்றல் (தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளுமாறு இந்திய அரசு இதற்கு உடன்படாது என்பது உண்மைதான்)செம்மொழித் தகுதி அடிப்படையில் தமிழுக்கான முழு உதவிகளையும் உடன் வழங்க வலியுறுத்தல், வாரம் 2 அல்லது 3 முறை குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றாலும் இதுவரை செம்மொழி அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்க

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 3:22:00 AM

Mr Karunanidhi, please don't come back to Tamilnadu if your are not able to get Union minister for all of your family memmbers. Don't talk about any Tamil issue, in your context it is resolved. Please arrange your meeting with Rajapakse for sharing your appreciation to him

By Mamatti
5/2/2010 3:18:00 AM

கருணாநிதி லிஸ்ட்ல உள்ள பாதிய டில்லில பேசுனாலே, தமிழ்நாடு சொர்க்க பூமியா ஆயிருக்குமே. அவர் எதுக்குப் போறார்னு மக்களுக்குத் தெரியாதா? ராசா பதவிக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு மிரட்டுரதுக்குத்தான் போறாரு.

By மதுரைக்காரன்
5/2/2010 1:39:00 AM

கருணாநிதி லிஸ்ட்ல உள்ள பாதிய டில்லில பேசுனாலே, தமிழ்நாடு சொர்க்க பூமியா ஆயிருக்குமே. அவர் எதுக்குப் போறார்னு மக்களுக்குத் தெரியாதா? ராசா பதவிக்கு ஒன்னும் ஆகக்கூடாதுன்னு மிரட்டுரதுக்குத்தான் போறாரு.

By Madhuraikkaaran
5/2/2010 1:38:00 AM

கருணாநிதி தமிழ்நாட்டுக்காக என்னைக்கு டில்லிக்குப் போனாரு? ராசாவ தூக்கக்கூடாதுன்னு மிரட்டுரதுக்குத் தான் போவாரு.

By மதுரைக்காரன்
5/2/2010 1:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நளினி - பிரியங்கா சந்திப்பு குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்: பொன்.ராதாகிருட்டிணன்



கடலூரில் சனிக்கிழமை சுவாமி சகஜானந்தா நினைவு மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி.
கடலூர், மே 1: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி நளினியை, ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துப் பேசிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கடலூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:நளினியுடன் பிரியங்கா சந்தித்துப் பேசிய பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தது இந்திய மக்களுக்கே பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இது மனிதாபிமானமற்ற செயல். இந்திய அரசு அவரது மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவரது வருகையால் இந்தியாவில் தீவிரவாதம் தோன்றி, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றால் அதை கண்காணிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். தமிழ்ச் சமுதாயத்துக்கே எதிராகச் செயல்படுகிறது திமுக.சுவாமி சகஜானந்தா மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். எனவே அவரது குருபூஜையில் பாஜக கலந்து கொள்கிறது என்றார் ராதாகிருஷ்ணன்.பாஜக சார்பில் பேரணி: சுவாமி சகஜானந்தா குருபூஜையை முன்னிட்டு கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு, பாஜக சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது. பேரணியை முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் நாகராஜன், மாநிலச் செயலர் ஆதவன், தாழ்த்தப்பட்டோர் அணி செயலர் பழநிவேல், மண்டலத் தலைவர் ஸ்ரீதரன், மாவட்டத் தலைவர் எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

தமிழ் மன்பதைக்கு எதிரான செயலைக் கண்டிப்பதற்குப் பாராட்டுகள். எனினும் நளினி பிரியங்கா சந்திப்பு குறித்து அறிக்கை அளித்தாலும் அதில் உண்மை இருக்கும் என்று எவ்வாறு நம்புவது? நளினியை விடுதலை செய்தாலே உண்மை வெளிவருமே! அதனால்தான் விடுதலை செய்யாமல் இருக்கிறார்கள். எனவே, நளினியின் விடுதலையை வலியுறுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
எங்கும் - எதிலும் காங்கிரஸ்: தங்கபாலு வேண்டுகோள்



கோவை, மே 1: எங்கும் காங்கிரஸ், எதிலும் காங்கிரஸ் என்ற நிலை வர தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.கோவை போத்தனூரில் சனிக்கிழமை நிறைவுபெற்ற சேவாதள தொண்டர்கள் பயிற்சி முகாமில் அவர் பேசியது:காங்கிரஸ் கட்சி எல்லா காலகட்டங்களிலும், எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்கிறது. மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு தான் இதற்கு முக்கிய காரணம். பல்வேறு நிலைகளில் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் சேவாதள பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதே போல மாவட்டம், ஒன்றியம், நகராட்சி, ஊராட்சிகள் தோறும் முகாம்கள் நடத்த வேண்டும். ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் கட்சி புகழ் அடைய சேவாதள தொண்டர்கள் முயற்சி செய்ய வேண்டும்.எங்கும் காங்கிரஸ், எதிலும் காங்கிரஸ் என்ற நிலை ஏற்பட கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் மக்களை தேடிச்செல்ல வேண்டும். தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சி பக்கபலமாக இருக்கும் என்றார்.
கருத்துக்கள்

எங்கும் சீரழிவு!எதிலும் சீரழிவு! என்னும் நிலை தொடர தமிழின அழிப்பு தொடர வன்முறை தொடர தாய்நில இழப்பு தொடர ஊழல் தொடர கூட்டாட்சி முறை அழிப்பு தொடர வேண்டும் என்றால் தங்கபாலுவின் ஆசை தொடர வேண்டும். நாம் நாமாகத் தன்மானத்துடனும் தன்னுரிமையுடனும் வாழ இவர் கனவு காணாமல் போகவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சேலம் உருக்காலை: நிலம் அளித்தவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்



சென்னை,மே.1: சேலம் உருக்காலை அமைக்க நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து மத்திய உருக்குத்துறை அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:உருக்காலை அமைப்பதற்காக நிலம் அளித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மாதம் சேலத்தில் இரண்டுமுறை போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தனி வேலைவாய்ப்பு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.சமீபத்தில் பேரவையில் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின் இவ்விவகாரம் மத்திய அரசுக்கு கொண்டுசெல்லப்படும் என உறுதியளித்திருந்தார்.எனவே நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட, அதனால் இடம்பெயர்ந்த நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

அமைதிப்பேச்சும் துணைமுதல்வர் உறுதியும் மத்தியஅரசிற்கு அனுப்பும் மடலில் தேவையில்லாத செய்திகள். ஒப்புக்குச் சப்பாணி மடலாக இல்லாமல் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கிடக்கும் இப் பொருண்மையில் கடமை தவறியுள்ள செயலைச் சுட்டிக்காட்டி இது போன்ற தவறுகளால் வேறு நல்ல செயல்களால் நிலம் கையகப்படுத்த இயலாமல் போவதையும் கவனத்திற்குக் கொண்டு வந்து கடுமையைச சுட்டிக் காட்டும் கனிவு மடலாக இருக்க வேண்டும். முதல்வர் தில்லி செல்லுகையில் மத்திய அரசுடன் பேசும் பொருண்மையில் இதனைச் சேர்க்காததால் மடலைப் படிக்காமலேயே துடைத்துத் தூரப போடப் பயன்படுத்தும் நிலைதான் ஏற்படும். தமிழக அரசு கடமை தவறும் செயல்களில் இதுவும் ஒன்றாகத்தான் அமையும்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/2/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *