புதன், 14 ஏப்ரல், 2010

அன்று ஒரு விக்ருதி (1950-51)



ஆறுபது ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டுப்போன விக்ருதி இன்று புத்தாண்டுக் கோலமணிந்து மீண்டும் வருகை தருகிறது. இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட நிலையில் அன்றைய விக்ருதியில் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தால் சுவையாகவும் சிறிது வியப்பாகவும் கூட இருக்கலாம்.1950 ஏப்ரலில் விக்ருதி ஆண்டு வந்தபோது இந்தியக் குடியரசு பிறந்து பதினோரு வாரங்களே ஆகி இருந்தன. குடியரசுடன் நமது தேசப்படமே மாறிவிட்டிருந்தது. மத்தியபாரதம், விந்தியப்பிரதேசம், செüராஷ்டிரம், ராஜஸ்தானம் என்று பல புதிய ராஜ்யங்கள் (அப்போது மாநிலம் என்ற வார்த்தை இல்லை) உதயமாகி இருந்தன.ஆனால் சென்னை மாகாணத்தில், பெயரைத் தவிர, மாற்றம் ஏதுமில்லை. அதாவது மாகாணம் (பிராவின்ஸ்) இப்போது ராஜ்யம் என்றும் அதன் பிரதமர் (பிரிமியர்) குமாரசாமிராஜா இப்போது முதல்மந்திரி என்றும் அழைக்கப்பட்டதும்தான் மாற்றம்.சென்னையின் பிரதம காரியதரிசி (முதன்மைச் செயலாளர்) மட்டுமல்லாது ஜில்லா கலெக்டர்கள் (மாவட்டம் வர இன்னும் இருபதாண்டுகள் இருந்தன) கூட ஐ.சி.எஸ். அதிகாரிகள்தான். ஐ.ஏ.எஸ். என்ற குழந்தைக்கு இரண்டு வயதுகூட நிறையாத பருவம். போலீஸ் இலாகாவின் தலைவர் ஐ.பி. (ஐ.பி.எஸ். அல்ல) என்ற ஆங்கிலேயர் கால சர்வீûஸச் சேர்ந்தவர். டி.ஜி.பி. என்று ஓர் உத்தியோகமே அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. ஐ.ஜி. அந்தஸ்தில் கூட ஒரே ஒருவர்தான் இருக்க முடியும்.மத்திய அரசாங்கத்தில் கூட அன்று போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்தான் தபால்-தந்தி இலாகாவுக்கு மாகாணத் தலைவர். (சி.பி.எம்.ஜி. என்று எவரும் இருக்கவில்லை). ஜெனரல் என்றாலே அப்படித்தான் அர்த்தமாம். முப்பதாண்டுகளுக்குப் பின்னால் எப்படியோ இதெல்லாம் மாறிப்போயிற்று. ஹைவேஸ் இலாகா கப்பிக்கல்லுக்குப் பதில் தார்ரோடுகள் போட ஆரம்பித்தது இந்த ஆண்டில்தான். அன்று பள்ளிப்படிப்பு பதினோரு ஆண்டுகள். அதன்பின் கல்லூரி (இந்த வார்த்தை அப்போதுதான் வந்திருந்தது. கலாசாலை என்ற பெயர்தான் அதிகம் வழங்கியது). அதாவது இரண்டு ஆண்டு இண்டர்மீடியட், அதற்குப்பிறகு பி.ஏ. அல்லது பி.எஸ்ஸி. என்ற இரண்டாண்டுப் பட்டப்படிப்பு. ஆனர்ஸ் என்ற மூன்றாண்டுப் பட்டப்படிப்பு, எம்.ஏ.க்குச் சமமானது. நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் அதில் இடம் கிடைக்கும். பண்டித ஜவாஹர்லால் நேருதான் பிரதம மந்திரி. அயல்நாட்டு விவகாரம் அவரிடமும், உப பிரதம மந்திரி சர்தார் பட்டேலின் பொறுப்பில் உள்நாட்டு விவகாரமும் இருந்தன.இந்தியா என்ற வண்டியை ஓட்ட இவ்விருவரையும் ஜோடிக்குதிரைகள் போல மகாத்மா காந்தி ஏற்படுத்தியிருந்தார். விக்ருதி ஆண்டில் நிகழ்ந்த பேரிழப்பு பட்டேலின் மரணம். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கொண்டாடப்பட்டவர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைத்து தேசத்தின் ஐக்கியத்தைச் சாதித்தவர், இந்தியாவின் பிஸ்மார்க் என்று அவருடைய அரிய சாதனையை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். சர்வதேச அரசியல் திடீரெனச் சூடு பிடிக்கலாயிற்று. சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கும் (ஜனாதிபதி ட்ரூமன்) சோவியத் ரஷியாவுக்கும் (சர்வாதிகாரி ஸ்டாலின்) நடைபெற்றுவந்த பனிப்போர் திடீரென்று கிழக்காசியாவில் கொரியா என்ற குட்டி தீபகற்பத்தில் நிஜமான யுத்தமாக வெடித்தது விக்ருதி ஆண்டில்தான்.சொல்லப்போனால் இரு உலக வல்லரசுகளுக்குமிடையே நடந்த பலப்பரீட்சை, சில மாதங்களுக்கு முன்னர்தான் சீனாவில் தேசியவாதிகளுக்கும் (சியாங்-கை-ஷேக் என்ற பெயர் ஞாபகமிருக்கிறதா) கம்யூனிஸ்டுகளுக்கும் ஆண்டுக்கணக்காக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிந்திருந்தது. மாபெரும் வெற்றிபெற்ற மாவோ, சீனாவின் முடிசூடா மன்னராகி இருந்தார். அவரும் ஸ்டாலினும் கைகோர்த்து நிற்க இப்போது வட ஆசியா முழுதும் கம்யூனிஸ்டு கோட்டையாய் இருந்தது. கொரிய தீபகற்பத்திலும் வடபகுதியில் கம்யூனிஸ்டு ஆட்சி.சின்னஞ்சிறு தென் கொரியா மட்டும் இன்னும் வெளியே, அதுவும் அமெரிக்க செல்வாக்கில், இருந்தது மாஸ்கோ-பீக்கிங் (இன்றைய உச்சரிப்பு பெய்ஜிங்) கூட்டின் கண்ணை உறுத்தியது. விளைவு, அவர்களின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டிருந்த வட கொரியா, தென் கொரியா மீது திடுமெனப் படையெடுத்து வெகுவேகமாக முன்னேறியது. உடனே அமெரிக்கா ஐ.நா.சபைக்குச் செல்ல, அதன் தீர்மானத்தின்படி ஒரு சர்வதேசப் படை (90 அமெரிக்கப்படை) கொரியாவில் வந்திறங்கி வட கொரியாவுக்குள்ளேயே முன்னேற சீனா நேரடியாகவே சண்டையில் குதித்தது. யுத்தப்பிரகடனம் ஏதுமில்லாமல் நடந்த இந்த யுத்தம் அடுத்த மூன்று ஆண்டுகள் நீடித்து யாருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்ததென்பது பின்னாள் கதை.அந்த யுத்தத்தால் அளவுகடந்த சேதத்தை அனுபவித்த தென் கொரியா அந்தக் காரணத்தாலேயே பின்னால் வரலாறு காணாத செல்வமும் செழிப்பும் அடைந்தது என்பது ஒரு சரித்திர முரண்.எப்படி நடந்ததென்றால், அதன் புனர்நிர்மாணத்துக்காக அப்போது குபேர நாடாக இருந்த அமெரிக்கா, பணத்தைக் கொண்டுபோய்க் கொட்டியது. யானை விழுந்தால் எழுந்து நிற்பது கஷ்டம், பூனைக்கு சுலபம் என்பார்கள். தென் கொரியாவோ சின்னஞ்சிறு நாடு. கொரியர்கள் கடின உழைப்பாளிகள், நல்ல வேலைத்திறமை உடையவர்கள். (இதற்கு, அவர்களை அரை நூற்றாண்டு ஆண்ட ஜப்பானியரின் பாதிப்பும் காரணம்).இந்த நிலையில் அவர்கள் கிடுகிடுவென்று முன்னேறி இன்று உலகச் சந்தையில் ஆகட்டும், உலக சினிமாவில் ஆகட்டும், தங்களுக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமில்லைதான். நேர்மாறாக, அதே மக்களைக் கொண்ட வட கொரியாவைச் சரித்திரம் சதி செய்துவிட்டது.இன்றைய ஒரே இரும்புத்திரை நாடாக அது அகில உலகத்திலிருந்தும் தனிப்பட்டுப் போய் ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தில் நசுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பின்னால் வெகுவாகப் பாதித்த ஒரு விக்ருதி ஆண்டு நிகழ்வு சீனா கிழக்கு திபெத் மீது படையெடுத்தது.திபெத்தின் பழையகால ராணுவம் சுலபமாக முறியடிக்கப்பட்டு சுமார் 5000 வீரர்களையும் இழந்தது. சீனர்கள் தலைநகர் லாஸôவை நோக்கி முன்னேறவுமில்லை, தங்கள் ஊருக்குத் திரும்பவுமில்லை. சமாதானமாக சரணடையுமாறு அப்போது இளைஞரான தலாய்லாமாவுக்கு நெருக்கடி கொடுக்கலாயினர்.நாற்பதாண்டு முந்திய சீன-பிரிட்டிஷ் இந்திய-திபெத் முத்தரப்பு ஒப்பந்தப்படி திபெத்தின் நடுநிலைமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நிலையில் திபெத் தன்னைக் காப்பாற்றுமாறு இந்தியாவை இறைஞ்சியது. இமயமலை நாடான திபெத் முற்றிலும் இந்தியாவாலும் சீனாவாலும் (நேபாளத்தாலும்) சூழப்பட்டிருப்பதால் பாரதத்தையன்றி அவர்களுக்கு வேறு யாரும் உதவ வழியில்லை.அதேசமயம் பலம் வாய்ந்த சீனாவின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரு தயங்கினார். சுதந்திர திபெத் இந்தியாவுக்கு அவசியமான பாதுகாப்பு அரண், அங்கே சீன ஆதிக்கம் வந்தால் அடுத்தது நமது இமாலய எல்லைக்கே சீனாவிடமிருந்து ஆபத்து வரும் என்று விளக்கி, நேருவுக்கு ஒரு நீண்டகடிதம் அனுப்பினார் சர்தார் பட்டேல். திபெத்துக்கு உதவியே ஆகவேண்டும் என்றார்.சீனா தன் பங்குக்கு, திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் உத்தேசமில்லை, திபெத்தின் உள் சுதந்திரமும் கலாசாரமும் பத்திரமாயிருக்கும் என்று நமக்கு உறுதியளித்துக் கொண்டிருந்தது. அதற்குள் சர்தார் காலமானார். உதவி ஒன்றும் வராத நிலையில் கர ஆண்டின் (1951-52) தொடக்கத்தில் திபெத் சீனாவிடம் சரணடைந்ததும் சில ஆண்டுகளில் சீனர்கள் நமது லடாக்கில் ஊடுருவி அக்சாய்-சின் சாலை போட்டுக் கொண்டதும் அதை நேரு அரசு தட்டிக்கேட்டதைத் தொடர்ந்து சீன-இந்திய யுத்தம் (1962) மூண்டதும் பிற்காலக் கதைகள்.
கருத்துக்கள்

தினமணி ஆசிரியர் குழுவில் உள்ளவரால் எழுதப்பட்டகட்டுரையா? குழப்புவது என்ற முடிவிற்கு வந்து விட்டீர்கள்; போகட்டும்! நல்ல நடையிலாவது எழுதக் கூடாதா?அதுதான் போகட்டும்! தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் என்பதைத்தினமணி ஏற்கவில்லையா? தினமணி தெளிவாக எழுதினால்தான் வாசகர்களும் தெளிவாக இருக்க முடியும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/14/2010 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிரபாகரன் புகைப்பட ஆல்பம் மீட்பு



கொழும்பு, ஏப்.13: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்பட ஆல்பம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவில் நடந்து வரும் தேடுதல் பணியின் போது இவை கைப்பற்றப்பட்டன. இந்த புகைப்பட ஆல்பமும், ஆவணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இலங்கை ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கே தெரிவித்தார். தவிர, முல்லைத்தீவு பகுதியில் இருந்து புலிகள் பதுக்கி வைத்திருந்த 4 விடியோ கேசட்டுகளையும் பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த விடியோ கேசட்டுகளில் பிரபாகரனின் நடவடிக்கை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார். விடுதலைப் புலிகளின் கைவசம் இருந்த பகுதிகளை கைப்பற்றிய பின்னர் அந்தப் பகுதியில் புலிகள் மறைத்துவைத்திருந்த கண்ணிவெடிகள் உள்பட ஆயுதங்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக புலிகளின் ஆயுதங்களை மீட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் கடந்த சனிக்கிழமை நடந்த தேடுதல் பணியின் போது புலிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை கண்டுபிடித்து மீட்டதாகவும் பிரசாத் சமரசிங்கே தெரிவித்தார்.புத்தாண்டு வாழ்த்து: சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி ராணுவ வீரர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் இலங்கை தலைமை லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா. புலிகளை வென்றதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவிதமான புத்தாண்டை கொண்டாடவுள்ளோம். முந்தைய ஆண்டுகளைவிட இந்த புத்தாண்டு மகிழ்ச்சியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

பாவம்! அவர்களால் சில ஒளிப்படங்களைத்தான் கண்டுபிடிக்க முடிந்தத. அதுவும் தமிழ்நிலத்தை வன்கொடுமையால் கைப்பற்றிய ஓராண்டிற்குப் பின்பு! தமிழ்த்தேச ஞாலத்தலைவர் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க முடியவி்ல்லை. இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/14/2010 3:19:00 AM

ஐயோ கடவுளே! இந்த சிங்களம் கட்டுக் கதைகளைப பரப்புவதற்கும் பொய்மூட்டைகளை அவிழ்த்து மக்களைக் குழப்ப முயல்வதற்கும் ஓர் அளவே இல்லையா?

By usanthan
4/14/2010 1:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 12 ஏப்ரல், 2010

அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு



உழன்றும் உழவே தலை என உழவின் உயர்வைக் குறள் சொல்கிறது. உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என ஒளவையின் நல்வழி உயர்ந்த வாழ்க்கைக்குத் திசைகாட்டுகிறது. உணவு எனப்படுவது நிலமும் நீரும் என உணவின் பிறப்பிடத்தைக் கூறி உழவனைப் பசிப்பிணி மருத்துவன் என புறநானூறு இலக்கணப்படுத்துகிறது.குறிஞ்சி என்னும் மலை சார்ந்த வனங்களின் மழை வளத்தால் வழியும் நீர், முல்லை வழி ஆறுகளாகி, மருத நிலத்தில் நகர்ந்து செந்நெல் வயல்களைச் செழிக்கச் செய்தபின் மீன் வளம் பெருகிக் காணும் நெய்தலை ஒட்டிய கடலில் சங்கமிக்கும். மழை வளம் குன்றி குறிஞ்சியும், முல்லையும் வறண்டால் பாலை என சங்கத் தமிழ் நிலங்களை வரிசைப்படுத்துகிறது.இந்நிலங்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களின் உணவு முறைகள், உறைவிட வழிகளை எல்லாம் வகை வகையாய்த் தொகுத்து தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.÷நாடு பூராவிலும் பூகோள, மண்வள, இயற்கை தட்பவெட்ப பருவகால மழையின் அளவுகள், தன்மைகளின் அடிப்படையில் பண்டைய அனுபவம் மற்றும் அறிவியல் பூர்வமான பயிர்வாரி முறை, மழை நீர், நிலத்தடி நீர் பயன்பாடுகள், பிரதேச உணவுப் பழக்கங்கள் அமைந்தாலன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பு கானல் நீராகிவிடும். பருப்பு, பயறு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் விளையத்தக்க நிலங்களுக்கெல்லாம் பாசன வசதிகளைச் செய்து கொடுத்த கண்மூடித்தனமான செயல்களால் சாகுபடியில் கரும்பு, நெல் ஒருபுறமும், பருப்பு பயறு எண்ணெய் வித்துகள் மறுபுறமும் நிலைகுலைந்து விளைச்சல் சரிவடைந்தது. எள்ளும், கொள்ளும் விளைந்த நிலங்களில் நெல், கரும்பு என்றானால் மரபுவழி நஞ்சைப் பாசனம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியில் தடுமாற்றங்கள் வராதா?தினை, சாமை, சீரகம், கடுகு, கேழ்வரகு, பழவகைகள், மூலிகைகள் என்று விளையும் மலைப்பிரதேசங்களில்கூட நிலத்தடி நீரை வைத்து நெல்லும் கரும்பும் பயிரிட அனுமதித்தால் மலைப்பகுதிகளும் விரைந்து வறண்டு, அங்கு வாழும் உயிரினங்கள் தாகத்தால் மடிவது பதற்றமான நிலையல்லவா? நீர், நிலப் பயன்பாடுகளில் சென்ற 35 ஆண்டுகளில் முரண்பாடுகள் முற்றிவிட்டன. புவிவெப்பமும் சேர்ந்து குடிநீருக்காக மலைஉச்சி வன உயிரினங்களும், நிலப்பரப்பு மக்களும் ஒருசேர அலைவதற்கு முற்றிலும் சுயநலத்தை உள்ளடக்கிய பாசனத் திட்டங்களும், நீர்பராமரிப்பும் திறமையற்ற அரசு நிர்வாகங்களுமே மூலகாரணங்கள்.÷மக்கள் தொகை குறைவாகவும், தட்ப வெப்பநிலை மிதமாகவும், கொண்டுள்ள மேலை நாடுகள் தங்களுக்கு ஏற்புடையது என வகுத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், நவீன கருவிகளின் பயன்பாடு போன்றவற்றையெல்லாம் வரம்பின்றி இந்தியாவுக்குள் புகுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம் கொண்டு பலதரப்பட்ட தட்பவெப்ப மண்டலங்களையும் அவற்றுக்கு ஏற்புடையதான இயற்கையோடு இயைந்த உணவு மற்றும் உற்பத்தி சாதனங்களையும் புறந்தள்ளினால் வேலை இல்லாத் திண்டாட்டமும், எரிசக்தி பற்றாக்குறையும், சுற்றுப்புறச்சூழல் கேடும் தோன்றிவிடும் என்பதைச் சிந்திக்கத் தவறுவது விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு நிகரான நிலைப்பாடாகும்.இந்தியாவில் மிகைப்பட்ட வேளாண் எந்திர உபயோகங்களினால் நன்மைக்கு மாறாகத் தீமைகளே அதிகமாகும். விவசாய வேலைகளில் இயன்ற அளவு மனித உழைப்புக்கு முன்னுரிமை தருவதன் மூலம் வலுவான சமூக அமைதியையும் நலமிகுந்த பொது ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த முடியும். நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தும் போதும், அளவின்றி ரசாயன உரங்களைப் பயிர்களுக்குத் தொடர்ந்து இடும் போதும், வளம் குறைந்து விளை நிலங்கள் மலட்டுத் தன்மைக்கு வந்துவிடும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகள் நன்மை செய்யும் புழு பூச்சிகளையும் அழித்துவிடுவதால் காலப்போக்கில் உயிரினங்களின் இயல்பான உணவு சுழற்சி முறைகளில் தடைகள் முற்றி சுற்றுப்புறச் சூழல்களுக்குக் கேடுகள் சூழ்ந்துவிடும்.ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே என்பார்க்கும், கொலையின் கொடிய முரடர்க்கும், கல்விஇல்லாத குருடர்க்கும், நீதியைத் தேடி அலுத்துப் போனதாய்க் கூறும் தீவிரவாத வன்முறையாளர்க்கும்கூட பசி வந்தால் ஆற்றுவது உணவு ஒன்றுதான். வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு என்பதையே முதல்நிலையில் வைக்க வேண்டியதாகிறது.வேலை இல்லை என்னும் ஓலமும், வேலைக்கு ஆள் இல்லை என்கிற அவலமும் அகல்வதற்கு இதைவிடவும் வேறு எது சரியானது, எளிதானது. எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று மூன்று ஆண்டுகளாகத் திரிந்த பத்து வாலிபர்கள் வாய்ப்பு ஏதும் இருந்தால் தங்களுக்கு வழிகாட்டும்படி கேட்டார்கள்.விவசாய வேலைக்குத் தயாரா என்று வினவியதற்கு தாங்கள் பட்டதாரிகள் என்றும், தங்களிடம் உள்ள நிலங்களில்கூட வேலை பார்க்க விருப்பம் இல்லாமல்தான் வேறு வேலை தேடி அலைவதாகவும் சொன்னார்கள்.அவர்களில் சிலர் குழந்தைகளோடு இருப்பதும், மனைவியின் கூலியை வைத்தே தங்களது குடும்பம் நடப்பதாகவும் அறிய முடிந்தது. பத்துபேருமே பத்தாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை எதிலுமே சொல்லிக் கொள்ளும்படியாய் மதிப்பெண் பெறவில்லை என்பதை அறிய வேதனை மிகுந்தது. தகுதி, திறமை என்று எதையும் பெற்றிராத அவர்களிடம் இருந்தது வயதும் உடலும் மட்டும்தான். 10-ம் வகுப்போடு இவர்களை வடிகட்டியிருந்தால் தாங்கள் வாழும் இடங்களிலேயே குலத்தொழில், அல்லது வேளாண்மையில் ஈடுபட்டு இந்நேரம் தக்க அனுபவமும், பயிற்சியும் பெற்று சொந்தக் காலில் நிற்கும் சுயமரியாதையான வாழ்வை உறுதி செய்திருக்க முடியும்.ஆனால் நம் ஊர் விவசாயத்தில்தான் என்ன இருக்கிறது உழவடை, அறுவடை என்று எல்லாவற்றுக்குமே எந்திரங்கள் புழங்கிவிட்டன. அதனால் உடலுழைப்புக்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன.மலை முதல் கடற்கரை வரையிலும் இப்போது குடிக்கத் தண்ணீர் இல்லாத நிலையும் எப்படி வந்தது என்கிற கேள்வி வலுவடைகிறது. இயற்கை வழி மண்டல வழியான பயிர்வாரி முறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்று உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜோக்கிம் வான் பிரெüன் 2008-ம் ஆண்டு கூறியதை தீர ஆராய்வது இப்போது அவசியம் ஆகிறது. ஆகவே, தேவையை உள்ளடக்கிய தன்னிறைவான உற்பத்திக்கு நதிப்படுகை வழி பயிர்வாரி முறையும், விளைநிலங்களில் இயற்கை சார்ந்த பயிர் சுழற்சி முறையும் அவசியம். "பானை சோற்றுக்கு பருக்கை பதம்' என்பதுபோல இதை அந்த பத்து பட்டதாரிகளின் நிலையை வைத்தே இன்றைய நடைமுறைகளை விருப்பு, வெறுப்பின்றி விவாதிக்க வேண்டும்.மலிவான கல்விச் சாளரங்களின் வழியாய் உயர்கல்வி மாயைக்குள் நுழைந்து பட்டமும் பெற்ற பின்னர் போட்டிகளில் தாக்குப்பிடிக்க முடியாத அநேகர் அந்த 10 பேரைப் போலவே திகைத்துப் போயுள்ளனர். சுயநலத்தில் ஆளுமையைத் தொலைத்து நிற்கும் ஆட்சியில், போலி மருந்து தயாரித்து விற்பது போன்ற சமூக விரோதச்செயல்களுக்கு படித்த பலரும் வலிந்து தள்ளப்படுகிற துயரம் பெருகி வருகிறது. உணவுத் தேடலின் அருமையை இவர்களுக்குப் புரிய வைக்க அரசாங்கம் தவறிவிட்டது. உற்றுநோக்கினால் 50 சதத்திற்கும் கீழ் பிளஸ் டூ படிப்பிலும் 60 சதத்திற்கு கீழ் பட்டப்படிப்பிலும், 75 சதத்திற்கு கீழ் மருத்துவம், சட்டம், பொறியியல் முதலான உயர் கல்வியிலும் மாணவர்களைச் சேர்ப்பது வேண்டாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்தே தீரவேண்டும்.பட்டதாரிகளில் பலர் திறமை என்று எதுவுமின்றி எதிலும் நிலைக்க முடியாமல் சும்மா இருப்போர் பெருகுவதால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும்.ஆக, அனைவருக்கும் கல்வி என்பதை 10-ம் வகுப்போடு அல்லது 14 வயதுக்குள் முடித்துவிடவேண்டும்.அடுத்தகட்ட படிப்புக்கு விதை நேர்த்தி செய்வதுபோல தேவைக்கு ஏற்றாற்போல் தரம் பார்த்து அனுமதிக்கிற நடைமுறையைத் துணிந்து தோற்றுவிக்க வேண்டும்.உயர் கல்வி என்பது ஓர் அலங்காரப்பொருள் அல்ல, ஆடம்பரத்துக்கு ஆனதும் கிடையாது, ஒளிரும் அறிவையும், மிளிரும் திறமையையும் மெருகேற்றிக் கொள்கிற அரியதோர் வாய்ப்பு என கருதும் மனப்பாங்கு கொள்கைத் திட்டங்களை வடித்து வழங்கும் அரசாங்கத்திடம் முதலில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் 10 முதலாளிகளை வலுவடையச் செய்வதைக் காட்டிலும் 10 லட்சம் விவசாயிகளை தலைநிமிரச் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.வேளாண்மையை மறந்து வெள்ளாமையை இழந்து, விவசாயம் விளங்காத ஒன்று என்று க ருதி உயர்கல்வித் தொழில் முதல் கார் தொழில் வரை வரிச்சலுகைகளைத் தரும் ஆட்சியில் முரண்பாடுகள் முற்றி மக்களின் கும்பி எரிந்து குடலும் கருகிப் போவது உறுதி.
கருத்துக்கள்

தலைப்பிற்குப் பொருத்தமில்லா வண்ணம் அனைவருக்கும் அனைத்து நிலைக் கல்வியும் தேவையற்ற ஒன்று என்று நச்ச விதை புகுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தேவைக்கேற்ற தகுதியை அனைவரிடமும் உருவாக்குவதை விட்டுவிட்டு ஏன் தகுதியை அளவு கோலாகக் கொண்டு பெரும்பான்மையினரைப் புறக்கணிக்கச் சொல்லுகின்றார் மேட்டுப்புரியார் என்று தெரியவில்லை. ஆராயமல் இக் கட்டுரையை வெளியிட்டுள்ள தினமணிக்கும் இது தலைகுனிவே. அனைவருக்குமான கல்வி என்பது ஒப்புக்குச் சப்பாணி கல்வி அன்று. சாதி, சமய, வருவாய் வேறுபாடின்றி அனைவரும் தரமான முழுமையான கல்வியைப் பெற வேண்டும் என்பதே. கல்வி இல்லாமை இல்லாதநிலை வர வையாபுரிகளை ஓரங்கட்டுவோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/12/2010 3:08:00 AM

Our education creates two nations. One nation has to do manual labour to produce food and render other essential services. The other nation consisits of 10% cream. It need not work. It lives for itself. This minority nation's father was Macaulay. Clerks, cyber coolies and white collared coolies. They don't give. They always take. Without these parasites, the nation will live comfortably. Can all the teachers and students in an Agri-varsity produce one kg of food rains? Can all the professors and students in an engineering college erect a thatched house?

By Sankara Narayanan
4/12/2010 12:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கை முகாம்களில் தவிக்கும் 80,500 தமிழர்கள்



கொழும்பு, ஏப். 11: இலங்கையில் பல்வேறு முகாம்களில் இருக்கும் 80,500 தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.இலங்கையில் நடைபெற்ற போரின் போது இடம்பெயர்ந்த தமிழர்கள், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு முகாம்களில் இருந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்தும் பணியில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதன்படி 1 லட்சத்து 93 ஆயிரத்து 607 தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் வவுனியாவின் செட்டிக்குளத்திலுள்ள பல்வேறு முகாம்களில் இன்னமும் 80,500 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கள் சொந்த தேவைகளுக்கும், உறவினர்களை சந்திப்பதற்கும் கூட ராணுவத்தினரின் ஒப்புதலை அவர்கள் பெறவேண்டியுள்ளது.
கருத்துக்கள்

சொந்தஊர்களுக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையும் இந்தியாவும் பரப்புரை மேற்கொணடாலும் அவர்களின் சொந்த வீடுகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாலும் முகாம்களில்தான் அடைக்கப்பட்டுள்ள்னர். அஃதாவது முகாம்களை மாற்றியுள்ளனர். அவ்வளவுதான். இதனையே தமிழர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டதாகக் கதை அளந்து வருகின்றனர். உலக அமைப்புகள் எனப் பலவற்றை வைத்துக் கொண்டு மனித நேயத்தை மடியச் செய்வது உலகிற்கே அழிவு என்பதை அனைத்து நாடுகளும் உணர வேண்டும். கடும் போராட்டங்களின் மூலம் விடுதலை பெற்ற வியத்துநாம் போன்ற நாடுகள் கூட அரசியல் காரணங்களுக்காக மண்ணின் மைந்தர்களின் விடுதலை வேட்கைக்கு எதிராகச் செயல்படும் போக்கு மேலோங்கியுள்ள போது ஈழத் தமிழினத்தைக் காப்பாற்றுவதற்கு நடுநிலை என்றும் அணிசேராமை என்றும் பேசி வரும் நாமாவது முன்வரவேண்டாமா? இதற்கு இந்தியா ஒத்துழைப்பு தருவதால்தானே காட்டுமிராண்டி ஆட்சியில் அமைதி திருமபிவிடடதாகக் கூறித் தாயகத்திலிருந்து ஏதிலிகளாகத் திருமபி வருவோரை வரவேற்காமல் விரட்டியடிக்கின்றன ஆசுதிரேலியா முதலிய நாடுகள்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்



ராமேசுவரம்,ஏப்.11: நடுக்கடலில் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில், இருவர் காயமடைந்து ராமேசுவரம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்றனர்.ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 10-ம் தேதி சுமார் 120 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு போர் கப்பலில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனராம்.பின்னர் உச்சிப்புளியைச் சேர்ந்த கே.டி.முனியசாமி என்பவரின் விசைப்படகை மடக்கிப் பிடித்தனர். இதில் இருந்த மீனவர்கள் சுப்பிரமணியன் (45), தங்கச்சாமி (50), மணி(47), முனியசாமி (40) ஆகிய 4 பேரையும் கம்பு, கயிறால் சரமாரியாகத் தாக்கினராம்.இதில் மீனவர்கள் சுப்பிரமணியன், தங்கச்சாமி இருவருக்கு கை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இனிமேல் இப் பகுதியில் மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டியனுப்பினராம். பின்னர் மீன் பிடிக்க முடியாமல் வெறும் படகுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பியுள்ளனர். இதில் தாக்கப்பட்ட இரு மீனவர்களும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

இராமேசுவரம் இந்தியாவில்தான் இருக்கிறதா என்னும் கேள்வி இன்று அனைவரிடமும் எழுந்துள்ளது. நாளை இந்த வினா தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கின்றதா என மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியக் கண்டத்தின் ஒற்றுமை கருதி உலகின் மூத்த இனமான, இக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் பரவியிருந்த இனமான, இலங்கையின் தாயக இனமான, தமிழ் இனத்தை மதிக்கக் கூடிய , போற்றக்கூடிய , காக்கக் கூடிய, நிறுவி ஆரியச் சார்பு ஆட்சியை அகற்ற வேண்டும். இராமேசுவரத்தை இலங்கையுடன் இணைத்துச் சிங்கள நாடாக மாற்ற வழி வகுக்கும் காங்கிரசு ஆட்சியையும் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் வரலாறு தெரியா வஞ்சக அதிகாரிகளையும் அகற்றினால் அன்றி நமக்கு விடிவு இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/12/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியல்ல



கொழும்பு, ஏப்.10: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (யு.பி.எஃப்.ஏ.) பெரும்பான்மை கிடைத்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.தேர்தலில் வெற்றி பெற உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி கூறினார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றது. 225 தொகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தேர்தலில் அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி 46 இடங்களை கைப்பற்றியது. இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆட்சியைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கண்டி, திரிகோணமலை மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் இதுவரை அறிவிக்கப்பட்டவில்லை. தேர்தல் வெற்றி குறித்து ராஜபட்ச கூறியது: ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் வெற்றியை அளித்துள்ள இலங்கை மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தலைமையிலான ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள முழுமையான நம்பிக்கை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் அமைதி நிலவவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் அரசுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் முதலீடுகள் அதிகரிப்பதோடு பல்வேறு பகுதிகளிலும் விரைவான வளர்ச்சி ஏற்படும். பொருளாதார மற்றும் சமூகநலத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தவும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் அவர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணிக் கட்சியினர் பல இடங்களில் கட்சிக் கொடிகளை ஏற்றி வெற்றியைக் கொண்டாடினர்.
கருத்துக்கள்

மொத்த வாக்காளர்களில் பாதியளவுகூட வாக்களிக்காத தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற்ற இனப்படுகொலை கொடுங்கோலன் மக்கள்நாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனக் கூசாமல் சொல்லுகின்றான். ஒருவன் அவனை வானளாவப் புகழ்ந்து பதிகின்றான். இத்தகையோர் மக்கள் மன்றத்தில் இருந்து தொலையும் நாள்தான் உண்மையில்மக்களாட்சிக்கு வெற்றி கிட்டும் நாள். மனித நேயம் மலரும் நாள். உயிர்களைக் குடிக்கும் ஒருவனை உண்மையான பௌத்தன் என எழுதவும் ஆள்இருக்கின்றான் எனில் ஐயோ புத்தரே! இதுதான் உம் அன்பு வழியா? அற வழியா? அமைதி வழியா? யுத்தம் சரணம் கச்சாமி என்பவர்கள் வாழ மக்கள் வீழ உம் கொள்கையும் அல்லவா மறைகின்றது! உமக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றவனையும் கருத்து பதிகின்றவனையும் என்ன செய்யப் போகிறாய்? எப்பொழுது தண்டிக்கப் போகிறாய்?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/11/2010 2:40:00 AM

Srilankavin varalatriley ithu varaikkum vantha arsiyal vathikaliley unmaiyana nattu patru ulla oru thalavan than ipothaiya ilankai janathipathi. Avar kastapatta sinhala makali porutha varaikkum oru anpana thalaivan.Ella makalaiyum mathikkum oru unmaiayana pouthan. Evar enna sonnalum ilanakai varalatriley ivarin moolam than ilanakai thamilarkalukku oru mudivai kodukka mudiyum.Innimelavathu thamil thalaivarkal ina verupattai kaivittu vittu janathipathiyudan pesithan innapiratchanaikku oru theervu kana mudiyum.Viduthalaipulikalai azithavar entru kopappaduvathil entha vithamana pirayosanamum illai.Nadanthu mudintha sandaiyil enthani ayiram appvi thamil makkal kollappattarkal.Avarkalin ilappukku irandu pakuthiyinarumey karanam.Unmayil matchatchi ullavan nala thoru mudivu varum entru kanavu kondu irukiran. ilankaiyan

By N.ilankaiyan
4/11/2010 1:37:00 AM

சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளில், இரு பெரும் சக்திகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்த அழுத்தத்தை வழங்குவதில் முன்நிற்கின்றன. நடைபெற்று முடிந்த போரில், ஆயிரக்கணக்கான [ஐ.நாவின் முன்னால் பேச்சாளரின் கருத்துப்படி இறுதிக் கட்டப் போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம்] மக்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாக ஆரம்பித்தன. இதன் ஒரு கட்டமாக, இலங்கைத் தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் [UN Human Rights Council] விசேட அமர்வொன்று இடம்பெற்றது. இதனை மேற்கத்தேய நாடுகளே முன்மொழிந்ததுடன் அதில் அக்கறையும் செலுத்தியிருந்தன. ஆனால், அன்றைய காலப் பகுதியில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக ஜெனிவாவில் பணியாற்றிய திரு.டயான் ஜயதிலக்க தனது இராஜதந்திர சாணக்கியத்தின் மூலம் அதனை முறியடித்திருந்தார். திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவினுடைய இராஜதந்திரிகளில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர். அதேவேளை முன்னால் ஜெனரல் சரத்பொன்சேக கள முனையில் வழங்கிய பங்களிப்புக்கு நிகரான பங்களிப்பை சர்வதேச

By Tamil RAVI
4/11/2010 1:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *