வியாழன், 18 ஜூன், 2009

இலங்கையில் 224 தமிழர்கள் கட்டாய இடமாற்றம்
தினமணி


கொழும்பு, ஜூன் 17- இலங்கையில் மூத்தூர் பகுதியைச் சேர்ந்த 224 தமிழர்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாக வேறு இடத்திற்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துகள்

காலம் காலமாகச் செய்து வரும் வாழ்வுரிமைப் பறிப்புச் செயலையும் சிங்களக் குடியேற்றத்தையும்தான் சிங்களக் காட்டுமிராண்டி அரசு இப்பொழுதும் செய்கிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வந்துள்ள இலங்கைத் தமிழர் தொடர்பான கட்டுரைகளும் நூல்களும் இதைத் தெளிவாக விளக்குகின்றன. தமிழர்கள் தனித்து வாழும் பகுதி என ஒன்றும் இல்லாமல் அவர்களை முகாம் என்ற பெயரில் திறந்தவெளி வதைக் கூடத்தில் அடைப்பதுவும் சிங்களர்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றுவதும் இப் பொழுது விரைவு படுத்தப்படுகின்றது. அறிவு இருந்தும் சிந்திக்க மறுப்பவர்கள் இது குறித்து ஒன்றும் சொல்ல மாட்டார்கள். இனியேனும் விழிக்குமா உலகத் தமிழினம்?

ஏக்கத்ததுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/18/2009 4:52:00 AM
இதை தமிழர்களின்? கையில் மாற்றீடு செய்ய(தார்மீகக் கடமைகள் நிறைவேற்றப் படாத பட்சத்தில்)வழிவகை செய்யப் பட்டிருக்க வேண்டுமே தவிர,பிரிட்டிஷ் போலவே(அணுகுமுறை)வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்பதாகும்.இத்தகைய வழிவகைகளை செய்ய இந்த “தமிழீழ இடைகா(டர்)ல அரசாங்கம் உதவியாக இருக்கும் என்றால்,அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தமிழர்கள் தாங்கள் ஆயுதம் தாங்கும் உரிமையை கைவிடுவது என்பது சட்ட ரீதியாக எந்த “இனக்குழுவும்” ஏற்றுக் கொள்ளமுடியாது,இதை சொல்லுவத்ற்கு இலங்கைத் தமிழருக்கு உரிமையும் கிடையாது(இலங்கையில் மட்டும் தமிழர் இல்லை),ஆனால் அதற்காக ஆயுதம் ஏந்துவதும் “சட்டப்படி” குற்றமாகும்(எந்த ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் அங்கீகாரமும் இல்லாமல்).
By CHAMELEON BROTHER
6/17/2009 10:52:00 PM

ஹவேர்ட் பல்கலைக் கழகத்தில்(அமெரிக்கா)சட்டம் பயின்ற திரு.உருத்திரகுமாரின் அக்கறையை குறைத்து மதிப்பிட முடியாதுதான்!.இவர் இலண்டனில் உள்ள தயா இடைக்காடரின் சொந்தக்காரர்.இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான திரு.லாரன்ஸ் திலகரின் நெருங்கிய நண்பர்.இச் செயற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுவீடன், பேராசிரியர் பீட்டர் சார்ல்ஸ் வீட்டிலுள்ள நிலவறை அலுவலகத்தில்,உள்ள பிரத்தியேகமான சிலை சீன முகாமைப்பு வடிவிலான புத்தர் சிலையாகும்.இவர் அப்சாலா பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சி “மதங்களின் வரலாறு” ஆகும்.கிடைத்த சில செய்திகளின்படி,மதிப்பிற்குறிய பேபி(இளங்குமரன்),கா.வே.பாலக்குமார்,இளம்பரிதி,எழிலன்,யோ.யோகி,புதுவை இரத்தினத்துரை,ஆகியோர் இலங்கை இராணுவத்திடம் சிறைக் கைதிகளாக உள்ளனர் என்று கூறுகிறது.சர்வதேசம் இதைதான் கூறுகிறது தமிழர்களின் தற்காப்பு உரிமை(ரைட் ஆஃப் வயலன்ஸ்)வலுக்கட்டாயமாக பிரிட்டிஷ் காலனியால் பறிக்கப்பட்டிருந்தது,அது இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களிடம் சுதந்திரம் என்றப் பெயரில் கையளிக்கப்பட்டிருந்தது,இதை தமிழர்களின்? கையில் மாற்றீடு செய்ய(தார்மீகக் கடமைகள் நிறைவேற்றப் படாத பட்சத

By CHAMELEON BROTHER
6/17/2009 10:50:00 PM

It is clearly reveals that all 29 countries in south east asia who opposed the inquary of human mass muder in Srilanka are ready to mass murder the minories in their respective countires who make protest for their freedom. Is democretic system works or failed in these south east asian countires? In the democretc system only majority people enjoy their freedom; and , minority are slaves in the demoretic process according to UNITED NATIONS and SOUTH ASIAN COUNTIRES. WHERE ARE ALL HUMAN RIGHTS RESOLUTIONS IN UNITED NATIONS OR THE SUPER POWERS WHO SUPPORT FOR THE BIAS DEMOCRETICS SYSTEM OF GOVERNMENTS. IS A UNITED NATIONS AND THE SECRETARY NECESSOR IN AMERICA OR GENIVA?

By S.Raman
6/17/2009 10:18:00 PM

நேற்று நீ செய்த நாச வேலைகளுக்கு உடனேயே தண்டனை கிடைத்து விட்டது என்று உன் தேச மக்கள் கண்ணீர் வடிப்பார்கள். ஈழத்தமிழர்கள் விட்ட கண்ணீரும் சிந்திய செங்குருதியும் உன் கண்களின் முன்பாக தோன்றி மறையும் நமது மக்களின் சடலங்களின் தடயங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன உன் நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்தியா என்ற நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.

By ravi
6/17/2009 9:24:00 PM

Every now atleast understand or trying to understand that what is happening in Srilanka, Due to Prabhakaran they were some what quit and respected Tamils, not that is also gone... I dont think Tamilian can live there any cost. Here karunanithi, soniya cant do any thing because they need to earn money and see their activities only..

By chnandru
6/17/2009 8:03:00 PM

Rajapaka is a No one bastered, sure he will die with suiside bomb blasr very soon sankara

By sankar
6/17/2009 7:31:00 PM

நம்மை குழப்பவும் சோர் வடையச் செய்யவும் பிரபாகரன் குறித்த பொய்யானச் செய்திகளை இந்திய ரா உளவுத் துறையும் ஊடகங்களும் பரப்புகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் தமிழ்ப் பொதிகை மலை போல அந்தத் தலைவன் களத்தில் காலூன்றி நிற்கிறான். முழுமதியை சில நேரங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்து விட முடியாது. முகிலை கிழித்து முழு மதி முன்னிலும் ஒளிவிட்டு மின்னும். தலைவர் பிரபாகரனும் முன்னிலும் அதிகமான துடிப்புடன் நம்மை வழிநடத்துவார். தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற ஒரு வீரன் பிறந்ததில்லை என மறைந்த முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் ஒரு முறை மன நெகிழ்ச்சியுடன் கூறினார். கல்லின் மேல் எழுத்துப் போன்ற அந்த சொற்களை மனதில் பதிய வையுங்கள். வாராது போல் வந்த மாமணியாக அந்த தலைவன் வாழும் காலத்திலேயே தமிழீழம் மலரும். அதன் மூலம் உலகத் தமிழர்களுக்கும் விடிவுப் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்குவோம். கடமையாற்றுவோம்.

By ravi
6/17/2009 7:00:00 PM

Congress and its overseas bon leader Sonia should take responsible.

By Kugan
6/17/2009 5:28:00 PM

Now Sigalese becoming coomon enemy for Tamils. We should wage a eraticating sigalese from the earth war.

By Ramu
6/17/2009 4:39:00 PM

We know all these happen in Srilanka when Tamils were defeated by India becuse we have experience this since 1957 during Mr. S.W.R.D. Bandaranayke to Mr. Mahinda Rajapaksha regime.

By Amirali -Sammanthurai
6/17/2009 4:38:00 PM

worst rajapaksa

By malai
6/17/2009 4:35:00 PM

it is rediculous. The entire world should condomn these kind of activities

By palayam
6/17/2009 4:25:00 PM



"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 18: புதிய அரசியல் சட்டம்



இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை' என்னும் அமைப்பைச் சொல்லலாம். இந்த சபை அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டபோதிலும், நிர்பந்தங்கள் காரணமாக தமிழர் உரிமைகளைப் பற்றியும் நாவலர் பேசினார். இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம் கண்டது.வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில் இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும் ஆறுமுகநாவலர் எடுத்தார். சட்ட நிரூபண சபைக்கு பொ. இராமநாதன் நியமனத்திற்காக ஆளுநருக்கு எழுதினார். இதன்மூலம் 50 ஆண்டுகள் தமிழர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு பொ.இராமநாதனுக்கு கிடைத்தது. ஆனாலும் பொ.இராமநாதன் ஆறுமுகநாவலரின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக இருந்தது. மாறாக, இராமநாதன் இலங்கை தேசிய சங்கத்தை நிறுவி ((Ceylon National Association)) அதன் தலைவராக அரசமைப்பு சீர்திருத்தத்திற்கும் அதன்மூலம் அதிக உள்ளூர் பிரதிநிதிகளை அரசியல் நிர்ணய சபையில் அங்கத்தினர்களாக்க பெரிதும் பாடுபட்டார். 13 ஆண்டுகள் பதவி வகித்த பொ.இராமநாதனுக்குப் பிறகு அவரது சகோதரர் பொ.குமாரசாமி வந்தார். இவரின் பதவிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு புகைவண்டி இருப்புப் பாதையை அதிகரிக்கப் பெரிதும் முயன்றார்.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "ஹிந்து ஆர்கன்' மற்றும் அதன் தமிழ் பதிப்பான "இந்து சாதனம்' மட்டுமே தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கும் விதமாகக் கட்டுரைகள், தலையங்கங்களை எழுதின. உதாரணமாக, இந்து சாதனம் நாளேட்டில் எழுதப்பட்ட தலையங்கத்தின் ஒருபகுதி வருமாறு:""நாம் ஒன்றிணையவில்லை. நாம் பிரிந்து நிற்கிறோம். மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும் கடினம். ஒற்றுமையின்மை காரணமாக ஏற்பட்ட அழிவின் பாதிப்புகளினால் நாம் வருந்துகின்றோம். ஒரு காலம் பெருமையுடன் நாம் ஆண்ட நாட்டை அந்நியருக்கு விட்டுக்கொடுத்து விட்டோம். எமது நாட்டின் பிரச்னைகளை எமது மக்கள் ஒன்று கூடிக் கலந்துரையாடுவது கிடையாது. எமது சுதந்திரங்கள் யாவற்றையும் நாம் சரணளித்துவிட்டு, சித்த சுவாதீனம் இழந்தவராய் நிற்கிறோம்'' இவ்வகை எழுத்துக்கள் மக்களை எழுச்சியுறச் செய்தன.1905-ஆம் ஆண்டு இறுதியில் "யாழ்ப்பாணச் சங்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து 1906-இல் வெளியான "ஹிந்து ஆர்கனி'ல், ""தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை அரசின் முன்வைத்து தீர்க்கும் விதமாக யாழ்ப்பாணச் சங்கம் உருவாகியுள்ளது. இது பூரண ஒற்றுமையுடனும், முழுமனதோடும், சாதி சமய பாகுபாடுகளின்றிச் செயற்படுமானால், அரசியல் அரங்கத்தில் அது பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மாத்திரமின்றி, சமூக நிலைகளிலும் பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் - ஒற்றுமையே பலம்.'' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.இதேவேளையில் முத்துக்குமாரசாமியின் மகனாகிய கலாநிதி ஆனந்த குமாரசாமி 1906-இல் யாழ்ப்பாணம் வந்தார். அவர் தனது ஆங்கிலேய தாயாருடன் லண்டனில் வளர்ந்தவர். சைவ பரிபால சபை சார்பில் 1906 மே 14-இல் இந்துக் கல்லூரியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது நன்றியுரையில், ""தமிழ்க் கலாசாரம், பாரம்பரியங்கள் என்பனவற்றைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேற்கத்திய கலாசாரத்தை யாரும் பின்பற்றக்கூடாது. தமிழரின் கலாசார அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இதை தமிழர்களுக்கு எனது வலியுறுத்தலாகக் கூறிக்கொள்கிறேன்'' என்றார்.* யாழ்ப்பாணத் தமிழர் சங்கத்தில் அங்கம் வகித்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கும்பகோணம் கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஜேம்ஸ் ஹென்ஸ்மன். இவர் தலைவராகவும், வழக்கறிஞர்கள் ஹோமர் வன்னியசிங்கம், எஸ்.காசிப்பிள்ளை உப தலைவர்களாகவும் இருந்தனர். ஜேம்ஸ் ஹென்ஸ்மன் தலைசிறந்த ஆங்கிலப் பேராசிரியர் ஆவர். பின்னாளில் "வெள்ளி நாக்குத் தமிழர் ஸ்ரீநிவாசசாஸ்திரி' என்று போற்றப்பட்ட-‘Silver Tongue Srinivasa Sastry’ வரின் குரு. ஹென்ஸ்மனுக்கு இரு புதல்வர்கள். அவர்கள் இருவரும் சென்னையிலேயே பணிபுரிந்தனர். அவர்களும் ஹென்ஸ்மன் என்றே அழைக்கப்பட்டனர். அந்த ஹென்ஸ்மனில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்து அரும்பணியாற்றிய காரணத்தால், அவரது பெயரில் தியாகராயநகரில் ஹென்ஸ்மன் சாலை என்று ஒரு சாலைக்குப் பெயரிடப்பட்டது. இன்று அந்த சாலை கண்ணதாசன் சாலை என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.பின்னர் சமூக சீர்திருத்த சங்கம் (1906), ஐக்கிய நாணயச்சங்கம் (1913), யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம் (1918), திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் (1920), மட்டக்களப்பு சங்கம் (1920). முல்லைத்தீவு மகாஜன சங்கம் (1921) ஆகியவை உருப்பெற்று யாழ்ப்பாணச் சங்கத்துக்கு உதவியாகவும், ஆலோசனை கூறுகிற அமைப்புகளாகவும் அமைந்தன.1921 ஆகஸ்டு 15-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட தமிழர் மகாஜன சபை, தமிழர்களின் பிற்கால அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.இந்தப் பின்னணியில் தமிழர் அரசியல் அமைப்புகளைப் பார்ப்போம்:இலங்கைத் தமிழரசுக் கட்சி:தமிழர்களின் ஒட்டுமொத்தமான தேசிய இன உணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் 1949-இல் இது உருவாகிறது.தன்னுடைய தனித் தன்மையையும் பல பிரிவுத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் இது பிரதிபலித்துப் பலமுனைச் செயல்பாடுகளால் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான ஒரு கட்சியாக இது உருவானது.சிங்கள வெறிக்கும் இனவாதத்திற்கும், பதில் கூறக் கூடிய வகையில் இது செயல்பட்டது. அதை நேருக்கு நேர் நின்று எதிர்த்தது. பரவலான மக்கள் இயக்கங்கள் அனைத்தையும் கட்டி எழுப்பியது.தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக 1956-இல் உடனுக்குடன் ஒரு மிகப்பெரிய சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தியது.இந்த எதிர்ப்பின் விளைவாகப் பணிந்த அரசாங்கம் கடைசியில் இந்தத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதுவே சரித்திரப் புகழ்பெற்ற பண்டாரநாயக்கா~செல்வா ஒப்பந்தமாகும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.காரணம், சிங்களர்களும், புத்த பிக்குகளும் அணி திரண்டு தீவிரமாக அதை எதிர்த்தனர்.இதுபற்றி அன்றைய டெய்லி நியூஸ் கருத்துக் கூறுகையில், 200 அரசியல் பிக்குகள், 15,000 மக்கள் திரண்ட ஓர் ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கலந்துகொண்டு இதைக் கண்டித்துப் பேசுகின்றனர். ஜெயவர்த்தன புத்த பிக்குகளின் இந்தக் கண்டனக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கண்டியை நோக்கிப் பாத யாத்திரை செல்கிறார். இந்த ஒப்பந்தத்தைத் தூக்கி எறிய அரசை வலியுறுத்துவதற்காக இப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சில மந்திரிகளும் கூட இந்த ஒப்பந்தத்தைக் கண்டிக்கின்றனர்.மந்திரிகள் கலந்துகொண்ட ஓர் ஊர்வலம் பிரதம மந்திரியின் வீட்டுக்குச் சென்று ஒரு மனுவை அளிக்கின்றது.இந்த வகுப்புவாத நாடகத்தின் விளைவாகக் கடைசியில் இந்த ஒப்பந்தம் தூக்கி எறியப்படுகிறது.அதிலிருந்து தொடர்ந்து 1958, 1961 வகுப்புக் கலவரங்களும், மோதல்களும் உருவாகின்றன. இது 1965 வரை தொடர்கிறது.இதற்கிடையில் தமிழரசுக் கட்சி தலைமையிலான சிவில் ஒத்துழையாமை இயக்கம் (1961) மிக முக்கிய அரசியல் நிகழ்ச்சியாகும்.பின்னர் 1965-இல் ஆட்சி மாற்றம். ஐக்கிய தேசிய முன்னணி U.N.P. அரசு ஏற்படுகிறது. சிங்களவர்கள் சில சலுகைகளைத் தமிழர்களுக்கு அளித்து ஒரு கூட்டுறவுத் தந்திரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக மாவட்ட சபைகளை உருவாக்கும் செல்வா-டட்லி ஒப்பந்தம் உருவாகியது. ஆனால் இந்த அமைதிச் சூழ்நிலை அதிக நாள் நீடிக்கவில்லை. சிங்கள இனவாதிகள் இதையும் அனுமதிக்கத் தயாராக இல்லை.இதைத் தொடர்ந்து 1968-இல் தமிழரசுக் கட்சி அரசோடு ஒத்துழைக்காது வெளியேறியது. பின் 1970-இல் திரும்பவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்ரீமாவோ (சுதந்திரக் கட்சி) ஆட்சிக்கு வந்தன.ஸ்ரீமாவோவின் ஆட்சிக் காலமான 1970-77-இல் நாடும் முழுவதும் கொந்தளிப்புகளும், குமுறல்களும், அரசு அடக்குமுறைகளும் மிகுந்த ஒரு காலமாகும்.அப்போது இடதுசாரிக் கட்சிகளும் அரசில் பங்கேற்கின்றனர். சிங்கள இனவாதத்தின் முன்னே இடதுசாரிகளின் வேடம் அம்பலப்பட்டு அவர்களும் இனவாத நீரோட்டத்தில் கலந்து கரைந்து விடுகின்றனர். (லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி முதலியன)1972-இல் ஸ்ரீமாவோ அரசு, இலங்கையைக் குடியரசாக அறிவித்தது. சிறுபான்மையருக்குப் பாதுகாப்பு அளித்த பழைய அரசியல் சட்டத்தின் 29-ஆவது ஷரத்தை நீக்கியது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி மற்றும் சில கட்சிகள் இந்த அரசியல் சட்ட மோசடியை எதிர்த்தும், தங்களின உரிமைகளைப் பேணவும், அரசோடு பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குகின்றன. (1971)அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகின்றது. கடைசியில் சிங்கள மொழியை ஆட்சி மொழி ஆக்கியும், புத்த மதத்திற்கு விசேஷ அந்தஸ்து அளித்தும் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. (1972).* Sir, in the volume of ‘‘Connected Constitutional Papers‘‘ referred to by the Hon.Member for Kandy he would see that right at the very beginning, as early as 1909 or 1908 when several of us would not have been able to lisp in the English language, the Jaffna Association, under the Presidency of Mr.James Hensman, was asking for the introduction of the elective principle and for a degree of responsible governement in this country. Here you have the case of a Tamil Association that admittedly gave a lead to the political movement in this country. Happily Sir, that revered old man, who has given to India the Right Hon. Srinivasa Sastri, is yet spared to the Tamils of Ceylon in their day of travail; he is yet alive, and this is the message Mr.Hensman in the evening of his life, having seen all the various political facets, all the various political evolutions both in India and in Ceylon sent from his retirement in Jaffna. -Speech delivered in the State Council on the Reforms Dispatch by G.G.Ponnambalam M.Sc.* (கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர்')

புதன், 17 ஜூன், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 15: இடதுசாரிகளை வீழ்த்திய இனவாதம்
தினமணி


லங்கா சமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை உக்கிரப்படுத்தியதன் விளைவாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, விக்ரமசிங்க போன்றவர்கள் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றைய நிலையில் சிறையை உடைத்து வல்வெட்டித்துறை வழியாகத் தோணிகளில் இவர்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். இவர்கள் இந்தியப் பெயர்களை ஏற்று கல்கத்தா, பம்பாய், சென்னை நகரங்களில் தலைமறைவாகத் தொழிற்சங்க, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இலங்கை இடதுசாரி, இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் வளர்ந்தன. பிலிப் குணவர்த்தனா இந்தியப் பற்றின் விளைவாக, தனது இரண்டாவது மகனுக்கு இண்டிகா குணவர்த்தனா என்று பெயரிட்டு அழைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிலிப் குணவர்த்தனா லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி, புரட்சிகர சமசமாஜக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சிக்குத் தலைவரானார் (பின்னர் பொதுவுடைமைக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியை 1951-இல் அமைத்தார்). இலங்கைத் தமிழர்கள் பற்றி, அவர்கள் தனி இனமென்றும் அவர்களுக்கென தாயகம் இலங்கையில் உண்டென்றும், அதில் அவர்கள் தமக்கென அரசை உருவாக்க உரிமையுடையவர்கள் என்ற நிலைப்பாட்டையும் 1935-இல் முதன் முறையாக கட்டுரை வடிவில் எழுதியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆவார். சமஷ்டி அமைப்பின் கீழ் இலங்கையின் இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது சாத்தியம் என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். அப்போது அவர் எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்கவில்லை (1945-இல் தான் பண்டா சிங்கள மகாசபை இயக்கத்தை, சிங்களவர் விழிப்புணர்ச்சி நோக்கிற்காக ஆரம்பிப்பதாகக் கூறி, செயல்பட்டார்). 1944-இல் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் அரச மொழி என்ற தீர்மானத்தை ஜே.ஆர். முதன் முறையாகப் பிரேரித்தார். ஆங்கிலத்தை அகற்றி, சிங்களம் மட்டுமல்லாது, சிங்களமும் தமிழும் அரச மொழிகளாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதனால் சிங்களமும்~தமிழும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிங்களவர் மத்தியில் படித்தவர் அதிகரிக்கவும் வேலையற்றவர் பிரச்னை சிக்கல் தீர்வு, சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துப் பெற்ற உத்தியோக மொழிகள் என்ற கொள்கையை முன்வைத்தும் இயங்கி வந்த இடதுசாரி இயக்கங்கள், இந்த நிலைப்பாட்டிலிருந்து தடுமாறி வாக்குகளை மையமாகக் கொண்ட சிங்கள இனவாத எழுச்சிக்குப் படிப்படியாக அடிபணிந்தன. யாழ்ப்பாணம்~கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் (1954) கலந்துகொண்ட பிரதமர் கொத்தலாவலை ஆற்றிய உரையில், சிங்களத்தையும், தமிழையும் சமத்துவம் பெற்ற மொழிகளாக ஆக்குவதாக உறுதி தந்தார்.
கொழும்பு திரும்புவதற்குள் ஆளும் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) க்குள் முரண்பாடுகள் தலையெடுத்தன. மொழியை மையமாகக் கொண்டு முதலமைச்சராக யார் வரலாம் என்ற நிலையெழுந்தபடியால் கொத்தலாவலையின் வாக்குறுதி கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் களனியா மாநாட்டில் (1955) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிங்களமே அரச மொழி என்றானது. இந்த வேளையில் அந்நியத் தளங்களை அகற்றுதல், அந்நியக் கொடி இறக்கல், இலங்கையின் முழுமையான சுதந்திரத்திற்கு வழிகோலுதல், சமதர்மச் சமுதாயம் காணல், இந்தியாவுடனான நட்பு போன்ற கொள்கைகளை முன்வைத்த பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத்தை விஞ்சும் வகையில் இருபத்து நான்கு மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன்~என்ற மொழிக் கொள்கையை முன்வைத்தார். இதைப் பிரசாரப்படுத்தப் புத்த குருமார்களும், ஆயுர்வேத மருத்துவர்களும், சிங்கள ஆசிரியர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் முன்வந்து செயல்படவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். அப்பொழுது நகரவாசிகளையும், ஆங்கிலம் படித்த நடுத்தர வர்க்கத்தினரையும் மையமாகக் கொண்டு இடதுசாரி இயக்கங்கள் இயங்கி வந்தன. இடதுசாரி இயக்கத்தினர் அக்கறை காட்டி வந்த தொழிலாளர் இயக்கங்கள் கூட, நடுத்தர வர்க்கங்களாலேயே செயல்பட்டன. இதை நன்கு உணர்ந்த பண்டாரநாயக்காவின் இயக்கம் கிராமப்புற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது அரசியல் இயக்கத்தில் ஒன்றிணைத்துக் கொண்டது. இதை முற்றுப் பெறச் செய்ய, தனிச் சிங்களமென்ற இனவாத எழுச்சியும் அவரால் உபயோகப்படுத்தப்பட்டது. 1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை இடதுசாரிகள் எதிர்த்துப் பேசி வாக்களித்தனர். சிலர் வாய்விட்டுக் கதறினர். ஒரு மொழியென்றால் இரு நாடுகள் மலரும்~என்று கொல்வின் ஆர்.டி. சில்வா நாடாளுமன்றத்தில் அழுதபடியே உரக்கக் கூறினார். சட்டம் நிறைவேறிய அந்த வாரத்திலேயே இடதுசாரித் தலைவர்களின் இல்லங்கள், அலுவலகங்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன. இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான என்.எம். பெரேரா என்பவரை, "என்.எம். பெரேரா வன முல்லே வோட் இல்லே' என்று சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டன. தேர்தலின் மூலம் சிங்களவரின் வாக்குப் பெறுவதானால் மொழிச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாது என்று இடதுசாரிக் கட்சிகள் உணர்ந்து, தங்கள் கொள்கையிலிருந்து மெல்ல மெல்ல பின்வாங்கின. மொழி சமன் மட்டுமின்றி சிங்களப் பேரினவாதமும் இடதுசாரிக் கட்சிகளின் உள்ளேயும் தலையெடுத்தது. இடதுசாரிக் கட்சிகளால் அமைக்கப்பட்ட கூட்டணி பதவிக்கு வந்ததும் தமிழ்மொழியை ஒரு தேசியமொழியாக ஏற்கும் நிலையைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. மார்க்சிய, லெனினிச கோட்பாடுகள் கைவிடப்பட்டன. இதன் விளைவாக இடதுசாரிகளும் இனவழிச் சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய இடதுசாரிக் கிளைகள் நிலைகுலைந்து பொதுமக்கள் தொடர்பற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டன. மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி ஆளுகைக்கு வந்தபோது இடதுசாரிக் கட்சிகள் சம்பள உயர்வு கோரி மேற்கொண்ட பெரிய போராட்டம் 40,000 அரசு ஊழியரின் தொழிலைப் பறித்தது. சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும், அரசுக்கெதிராக இடதுசாரிகளால் தம் மத்தியில் ஐக்கியமற்ற நிலையில் தமிழின விடுதலைப் போராட்டத்திற்குக் குறிக்கோள் கொண்ட ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் ஆதரவு தந்து, வென்றெடுக்கப்படாத நிலையில் பலவீனப்பட்டு இடதுசாரிகள் இயக்கம் தற்போது விளங்குகிறது. இதன் வரலாற்றில்-ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்புச் சக்திகளிடையே ஐக்கிய முன்னணி உருவாகியபோது, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டுள்ளது. இதற்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்ப்பாளர் மத்தியில் ஒற்றுமையின்மை நிலவியதால் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

கருத்துகள்

Immatured and cunning Singalise politician made tamils life miserable. They are trying to eradicate tamil population in the past 60 years, India is always acting against tamils whether it Indian tamils or Eelam tamils, they are affected by Indian stupid foreign policy.
By yogaraja
6/16/2009 3:05:00 AM

Dear Thinamani and writer pavai.chandran , Thanks for real story of eela tamils, World wide tamils always greatful for THINAMANI, thanks lot by murugesan

By murugesan
6/15/2009 3:33:00 PM

we would request to the dinamani editor to republish the article no. 12 & 13 Thanks, Regards,

By Gunabalapandian A.
6/15/2009 11:57:00 AM

please republish editorial aricles 12 Thanks Sekar Kuwait

By Rajasekar
6/15/2009 11:57:00 AM

please post part 12

By D Mohandoss
6/15/2009 10:57:00 AM

Election victory was much more important than democratic principles. How bad were the then political parties? So stupid to force 1 language for Srilanka. It is almost equal to Hindi Imposition in India but that was handled well by Tamils in India than Tamils of Srilanka. Still all Central goverment departments and agencies are trying to impose Hindi but Tamil Nadu stands alone without any terrorism type of activities to stop Hindi's invasion. What was wring in Srilankan Tamils approach? Coudl the writer explain that?

By Tamil Nanban
6/15/2009 7:52:00 AM

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 14: அரசியல் கட்சிகளின் தோற்றம்!
தினமணி


கண்டிய சிங்களவர்
இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 1935-இல் லங்கா சமசமாஜக்கட்சி உருவெடுக்கிறது. இந்தக் கட்சியின் தோற்றமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து தொடங்குகிறது.இலங்கையில் 1860-இல் முதல் தொழிலாளர் போராட்டம் நடந்தபோதிலும் 1899-இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு வெளிப்பட்டபோதிலும் 1920-இன் காலத்தில்தான் இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகளைப் பார்க்க முடிகிறது.பிரபல பத்திரிகையாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனமும் ((Ceylon Indian Workers Federation) ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கமும்தான் அந்தக் குறிப்பிடத்தக்க அமைப்புகள்.தோட்ட அதிபர்களிடம் ஓரளவு அங்கீகாரம் பெற்ற இயக்கமாக அய்யர் இயக்கம் அமைந்திருந்தது. இவர் 1925-இன் ஆரம்பத்தில் குணசிங்காவின் தொழிற்சங்கத்துடன் தன்னுடைய தொழிற்சங்கத்தை இணைக்கிறார். ஆனால் 1928-ஆம் ஆண்டுகளில் குணசிங்காவின் இனவாதமும், இந்தியர் எதிர்ப்பும் மேலோங்கியதால் அந்த அமைப்பை விட்டு வெளியேறுகிறார் (இந்தியர் என்பது -மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களைக் குறிக்கும்).கலாநிதி நியூட்டன் குணசிங்கே ஆய்வுப்படி 1930-க்கு முன்னர் சிங்களவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருந்தனர். அவர்கள் கண்டிய சிங்களவர் என்றும் (உயர்வானவர்கள்), கரையோரச் சிங்களவர் (மீனவர் மற்றும் இதரத் தொழிலில் ஈடுபடுபவர்) என்றும் பிரிக்கப்பட்டு இருந்தனர். ஆங்கிலேயர்கள் இவர்களிருவரையும் தனித்தனிப் பிரிவாகக் கருதும் அளவுக்கு இவர்களிடையே கலாசாரப் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன.1930-இல் இவர்களிடையே ஓர் இணக்கம் ஏற்பட்டு கலப்பு மணங்கள் உருவாகின்றன. இதன் பின்னரே சிங்களவர்கள் ஒரே சமூகசக்தியாகவும், ஓர் இனமாகவும் ஒன்றுபட்டனர். உதாரணமாக கரையோரச் சிங்களப் பிரிவினரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா கண்டியச் சிங்களப் பிரிவினரான ஸ்ரீமாவோவை மணந்தார்.இதுபோன்ற பல்வேறு திருமணங்கள் இவர்களிடையே நடைபெற்றன.1933-இல் வெள்ளவத்தைத் தொழிலாளர் போராட்டத்திற்கு குணசிங்கா தலைமையேற்கிறார். அதன்பின் அவர் பிரபலமாகிறார். இவரது தொழிற்சங்கத்தில் பரவலாக இடதுசாரிகள் நிறைந்து இருந்தனர். திடீரெனக் குணசிங்கா முதலாளிகள் சங்கமான எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனுடன் சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தத்துக்கு எதிராக மாறினார்.வேலைநிறுத்தம் முதலாளிகளுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றார். தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்ததால் அங்கத்துவம் காலாவதியாகி விடுகிறது. தொடர்ந்து குணசிங்கா சிங்கள இனவாதத்தைக் கடைப்பிடித்ததால் தொழிலாளர்களிடையே அதிருப்தி ஏற்படுகிறது.அதே ஆண்டு (1933) பிப்ரவரி 23-இல் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து வாலிப முன்னணியின் கூட்டம் நடக்கிறது. அதில் வெள்ளவத்தைத் தொழிலாளர் சங்கம் உருவாகிறது.

1935-இல் ‘All Ceylon Estate Workers Union’ உருவாகிறது. அவ்வாண்டில் ஏற்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தின் மூலம் இந்த யூனியன் அங்கீகாரம் பெறுகிறது. குணசிங்கா தொழிற்சங்கத்திலிருந்த அதிருப்தியாளர் அனைவரும் இதில் இணைகின்றனர். முதன்முதல் இடதுசாரிகள் தலைமையிலான சங்கமாக இது அமைகிறது.இதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து சென்று திரும்பிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அன்றைய தீவிரவாத இளைஞர்களான டாக்டர் என்.எம். பெரேரா, டாக்டர் விக்ரமசிங்கா, பிலிப்குணவர்த்தனா, எம்.ஜி. மென்டிஸ், பீட்டர் கெனமன் போன்றோர் இணைந்து லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவினர்.நாட்டின் முழுமையான சுதந்திரத்திற்கும், குடியரசு அமைப்பதற்கும், சமதர்ம சமூக அமைப்பொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர், விவசாயி, அறிவு ஜீவிகளை ஒன்றிணைத்து ஆங்கில ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து இலங்கையை விடுவித்து, ஒரு சமதர்ம சமுதாய அமைப்புக்கு உதவுவதே இக்கட்சியின் நோக்கம்.உலக அரங்கில் ட்ராட்ஸ்கிய, ஸ்டாலினிச இயக்கங்கள் என்ற பிளவு தோன்றவே இக்கட்சியில் சித்தாந்த ரீதியான பாகுபாடு தலையெடுத்தது. ட்ராட்ஸ்கியத்தை ஆரம்பித்தவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆளும் இயக்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். சோவியத் தலைமையை ஏற்றவர்கள் ஸ்டாலினிஸ்டு என்ற முத்திரை குத்தப்பட்டு லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் 1940-இல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி (மநட) என்ற பெயருடன் இயங்கத் தொடங்கினர். 1942-இல் இலங்கை பொதுவுடைமைக் கட்சி என்ற பெயருடன் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.1942-இல் தனது வேலைத் திட்டத்தை வெளியிட்ட இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி ஏகாதிபத்ய எதிர்ப்பு, சமத்துவ சமதர்மக் குடியரசை நிறுவுதல் போன்ற கொள்கைகளை வற்புறுத்தியதுடன், இலங்கைத் தேசிய இனங்கள் பற்றிய ஜனநாயக நிலைப்பாடும் 1942 "மே'யில் இடம்பெற்ற "மே'தினக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இலங்கை இனப் பிரச்னை சம்பந்தமான ஒரு மார்க்ஸிய, லெனினிச தீர்வாக இது முதன்முறையாக முன் வைக்கப்பட்டது. இதன் சாராம்சம் வருமாறு:தமிழர் தனித்துவம் பெற்ற தேசிய இனம். அவர்களின் பாரம்பரிய தாயகம் வடக்கு, கிழக்குப் பகுதிகள். இதைத் தமிழர் ஆள, ஏற்ற அரசை அமைத்துக் கொள்ள லெனினிச கோட்பாட்டின்படி, சுய நிர்ணய உரிமையை அனுபவிக்கத் தமிழினம் உரிமையுடையது. அவசியமானால் அவர்கள் பிரிந்து தமது தனித்துவமான அரசை உருவாக்க உரிமை பெற்றவர்கள். இலங்கைவாழ் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜா உரிமை பெறத் தகுதியுடையவர்கள்~என்றெல்லாம் தீர்மானத்தில் கூறப்பட்டது.இந்தத் தீர்மானம், அன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மையமாகிய இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்திற்கு அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அமைப்பின் அன்றைய செயலாளர் யார் தெரியுமா? பின்னர் இலங்கை அதிபராக வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனேதான்! அப்போது இவர் இடதுசாரி நூல்கள், வெளியீடுகளைத் தருவித்து நூல் நிலையம் அமைத்து~கங்ச்ற் ஆர்ர்ந் இங்ய்ற்ழ்ங்~ இடதுசாரி நூல் மையம் என்ற நூல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தார்.
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-13: இலங்கையின் பொருளாதாரப் பின்னணி
தினமணி


ஆங்கிலேயர் கையிலிருந்து 2 பிப்ரவரி 1948-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 1977-இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் வரையில் ஓரளவு பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டு, நல்வாழ்வு நடவடிக்கைகளிலும், சமூக நலக்கொள்கைகளிலும் குறிப்பிடத்தகுந்ததொரு நிலைக்கு முன்னேறியது. மக்கள் நல (ரங்ப்ச்ஹழ்ங் நற்ஹற்ங்) அரசுக்குரிய வடிவத்தில் அது இயங்கியது ஆங்கிலேயர் வெளியேறியபோது, பெரும்பாலான தோட்டங்கள் அனைத்தும் கம்பெனிகளிடம் தொடர்ந்து இருந்தன. உள்நாட்டு மூலதனம்கூட மேலைநாட்டு மூலதனக் கூட்டோடும், தொழில்நுட்ப உதவியோடும் இயங்கி வந்தது. தனிமனித சராசரி ஆயுள்காலம், இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய நாடுகளிலேயே 50 ஆண்டுகள் என்றிருந்தபோது, இலங்கையில் மட்டும் 66 ஆண்டுகளாக இருந்தது. இந்தியாவைவிட இது அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் விகிதம் இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய நாடுகளில் 45 சதவிகிதமாக இருந்த வேளையில், இலங்கையில் 85 சதவிகிதம் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சில இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய கூட்டாட்சி இதில் தீவிர அக்கறை காட்டியதின் விளைவு இது. இருந்தபோதிலும், வேலை இல்லாத் திண்டாட்டம், குறிப்பாக படித்த இளைஞர் மத்தியில், வேகமாகப் பெருகி வந்தது முந்தைய பொருளாதாரத் திட்டத்தின் குறைபாடாகும். ஜனதா விமுக்தி பெரமுனை (ஒ.ய.ட.) தலைமையில் 1977-ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிளர்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. இன்று தமிழ் இளைஞர்களுக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்னைகளில் இதுவும் ஒன்று. பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டதற்கு சுதந்திரக் கட்சி அரசு விதித்த பல கட்டுப்பாடுகளும் அவற்றை ஒட்டிய ஊழலுமே காரணமென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியும் 1970-ஆம் ஆண்டுகளில் இலங்கைப் பொருளாதார நிலைமையில் சிக்கல்கள் உருவாகக் காரணமாயின. அதுமட்டுமல்லாமல், சுதந்திர கட்சி கடைப்பிடித்த சில பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும்கூட இது அதிகமாவதற்குக் காரணமாயின. விஞ்ஞானப்பூர்வமான விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது. பணப்பயிர்ப் பொருளாதாரம் சமூகத்தில் சில புனரமைப்புகள் உருவாகக் காரணமாயின. வெங்காயம் போன்ற பணப்பயிர் முறைகளில் புதிய வேகம் உருவானது. அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இந்தக் காலத்தில் பொருளாதார நிலையில் ஒருகட்ட மேம்பாடு அடைந்த சிங்களவர்களின் வளர்ச்சி துரிதமாக்கப்பட்டது. இதை சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மாறுதலாகக் கொள்ளலாம். சமூகத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் புதிய கோஷங்களோடு ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் முன்னுக்கு வரவழைத்தது. ""அனைவருக்கும் வேலை, குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம் தரக்கூடிய சுதந்திரமானதும், நீதியுமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்'' என்று ஐக்கிய தேசியக் கட்சி அப்போது கூறியது. சிங்கப்பூர், தைவான், தென்கொரியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்ற முனைந்தது. இதைத்தான் சர்வதேச மூலதன நிறுவனங்களான உலக நிதி நிறுவனமும் (ஐ.எம்.எப்.) உலக வங்கியும் ஆதரித்தன. சுதந்திரமானதொரு சந்தை அமைப்பின் கீழே (ஊழ்ங்ங் ற்ழ்ஹக்ங் க்ஷ்ர்ய்ங்) இறக்குமதிக்குப் பதிலான உற்பத்தியிலிருந்து ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்கு மாறுவதை இது உள்ளடக்குகிறது. அந்நிய முதலீட்டையும், அந்நிய உதவியையும் கடனாகப் பெற்றுச் சர்வதேசச் சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடுவதை இது ஆதரிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் இந்தக் கொள்கையைத்தான் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டன. பல தொழிற்சாலைகள் பொதுத் துறையில் இருந்து தனியார் துறைக்கு மாற்றப்பட்டன. அந்நிய மூலதனத்திற்குச் சாதகமான நிலைமைகளை வழங்கும் சுதந்திரத் தொழில் மண்டலம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. நீர்ப்பாசனத்திலும் மின்சாரத்திலும் 39 சதவிகிதத்தைத் தொடுமாறு திட்டமிடப்பட்ட மிகப் பெரிய மகாவெளி அபிவிருத்தித் திட்டமானது 30 ஆண்டுகளுக்குப் பதில் 6 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுவிடும் என்று அறிவிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) மூலதனத்தில் 60 சதவிகிதம் அந்நியக் கடன்களாகும். இவை எல்லாம் புதியதொரு பொருளாதார உத்வேகத்தை அளித்தன. வளர்ச்சி விகிதம் 5.6 சதவிகிதமாக உயர்ந்தது. இவை இறக்குமதிப் பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகளை மிகவும் உயர்த்தியது. இந்தக் கொள்கையின் எதிர்மறை விளைவுகள் மெல்ல மெல்ல உணரப்பட்டன. அந்நியக் கடன்கள் மிகவும் அதிகமானதொரு விகிதத்திலேயே உயர்ந்ததும், இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டதும் இதன் எதிர்மறை அம்சங்கள் ஆகும். சுற்றுலா மூலமும், ஏற்றுமதி மூலமும் கிடைக்கும் அந்நியச் செலாவணி, கடன்களையும், அதற்குரிய வட்டியையும் அடைப்பதற்கே பெரிதும் போய்விடுகிறது. அந்நியச் செலாவணியில் துண்டு விழுதல் ஒவ்வொரு ஆண்டிலும் மேலும் மேலும் கீழிறக்கமாக மாறிக்கொண்டு வந்தது. குறைந்த ஏற்றுமதி 4 சதவிகிதமாக உயர்ந்த 1977-81 காலக் கட்டத்தில், இறக்குமதி 11 சதவிகிதம் கூடியது என உலக வங்கியின் அறிக்கை கூறியது. அந்நியப் போட்டிக்கு வழிவிட்டதன் காரணமாக இலங்கையின் சிறுதொழில் அதிபர்களும், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். கைத்தறித் தொழில் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தேசியப் பஞ்சாலைகள் எல்லாம் அந்நிய கூட்டாளிகளின் கையில் விடப்பட்டன. 1977-ஆம் ஆண்டில், தேயிலை, ரப்பர் ஆகியவைகளின் உற்பத்தியில் ஏற்றுமதி என்பது வீழ்ச்சிப் போக்கில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன. இந்த வீழ்ச்சிப் போக்கானது இத்துறையின்மீது செலுத்தப்படாத அத்தியாவசிய முதலீட்டின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. ""கடந்த இருபது ஆண்டுகளாகக் காப்பி, கொக்கோ, தேயிலை ஆகிய பயிர்களில் அதன் மதிப்பு எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. தேயிலையின் உண்மையான விலை மதிப்புக் குறைந்துகொண்டே வருகிறது'' என்று அப்போது கூறினார் அத்துறை அமைச்சர். தேயிலையின் உண்மையான விலை 1960-இல் இருந்ததை விட 1982-இல் 40 சதவிகிதம் குறைந்தது என்பதுதான் உண்மை. நாட்டின் மூலதனச் சொத்திற்குப் பெரிய பங்களிப்பினை அளிக்கக்கூடிய சாலைப் போக்குவரத்து, பாசன அமைப்பு, பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், மின்சாரம் நீர்வழிப் போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய அனைத்துத் துறைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை அமைச்சரே ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை அளிக்க முடியாது. வேலை இல்லாத் திண்டாட்டம் 15.6 சதவிகிதத்தில் இருந்து 1981-இல் 17.9 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் இத்தொகை கூடுதலாகவே இருக்கும். மேற்கண்ட கொள்கைத் திட்டங்களால் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது. மாதச் சம்பளம் வாங்குவோரும் நகர்ப்புற, கிராமிய ஏழைமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். கூடுதலாகி வரும் சமத்துவமின்மையே நல்வாழ்வுத் திட்டங்களில் செய்யப்பட்டு வரும் வெட்டுகளால் உறுதி செய்யப்பட்டன. அதற்கு மாறாக நாட்டில் பாதுகாப்புச் செலவும், ராணுவத்திற்கான ஒதுக்கீடும் அதிகமாக்கப்பட்டது. * 1983-இல் பாதுகாப்புத் துறைக்கான மூலதனம் 1982-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82.7 சதவிகிதம் உயர்ந்தது. பாதுகாப்பு நடைமுறைச் செலவானது 82-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83-ஆம் ஆண்டில் 47.6 அதிகரிக்கப்பட்டது. ஆனால் மொத்த நடைமுறைச் செலவு 19.1 சதவிகிதம் மாத்திரம் அதிகரித்தது. இதனைச் சீர்செய்ய பொதுமக்களுக்கான சலுகைகளில் கைவைக்க வேண்டிய நிலை அரசுக்கு உருவானது. இப்படி மக்கள் நல அரசு என்ற நிலையில் இருந்து மாறி, யுத்தப் பொருளாதார (War Economy)சூழலை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் இக்கொள்கைகளின் மறுபக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகளால் வியாபார வர்க்கம் மிகவும் பயன் அடைந்தது. குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதித் தொழில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஆதாயம் அடைந்தனர். சர்வதேச ஏகபோக கம்பெனிகளுடன் கூட்டுறவு கொண்ட சக்திகள் தோன்றின. அதேசமயம், மானியத்தில் செய்யப்பட்ட வெட்டுகளால் கீழ்நிலைச் சமூகப் பிரிவுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின.-------------------------* ஸ்ரீலங்கா: "பாசிசத்தை நோக்கிய போக்கை யார் தடுத்து நிறுத்துவது?' பாஸ்டியன் ஷலேங்கா-பட்ங் ஏண்ய்க்ன் 10.10.84.
தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்!

பழ. நெடுமாறன்
தினமணி
First Published : 17 Jun 2009 02:28:00 AM இசட்


கருத்துகள்

(தொடர்ச்சி 2/2 ) மலையாள ஆரிய அதிகாரிகளின் தவறான அறிவுரைகளைப் புறந் தள்ளி, திரு பழ.நெடுமாறன், திரு வைக்கோ, திரு தொல்.திருமாவளவன், திரு.இராமதாசு, திரு தா.பாண்டியன், திரு டி.கே.சீ.இளங்கோவன், தமிழ் நல அமைப்புகள், உலக அளவிலான மனித நேய ஆர்வலர்களைக் கொண்ட குழுவை அமைத்துத் தமிழ் ஈழததிற்கு ஏற்பளிக்க வேண்டும். உலக அளவில் தன் தாழ்ந்த மதிப்பைச் சரிசெய்து உயர்த்திக் கொள்ள இது ஒன்றே வழி. உலகத் தமிழர்களின் கோரிக்கையும் உலக மனித நேய ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவேயாகும். மலர்க தமிழ் ஈழம்! வெல்க இந்திய - ஈழ நட்புறவு

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/17/2009 10:42:00 AM

1/2 இந்தியாவின் அரசியல் வினைத்திறன் தோற்றது என்பது உண்மைதான். அதன் காரணம் இந்திய அரசை ஆட்டிப்படைக்கும் அதிகாரிகளின் நோக்கம் நல்லதாக அமையாததும் அதற்கு இந்திய அரசு அடிபணிவதும்தான்.ஈழத்தமிழர்களைக் கைப்பாவையாக்கிச் சிங்கள அரசை மிரட்டலாம் என்ற எண்ணத்தில்தான் முதலில் இந்தியா இலங்கையில் மூக்கை நுழைத்தது. தமிழ் மக்கள் ஆங்கிலேய அடிமையில் இருந்து இந்திக்காரர்களின் அடிமையாக மாறிக் கொண்டது போல் அல்லாமல் - சிங்கள அடிமையில் இருந்து மீண்டு இந்திய அடிமையாக மாற விரும்பாத - முழு உரிமையுடன் வாழ விரும்பிய ஈழத் தமிழர்களை ஒழிக்கவே சிங்கள அரசுடன் சேர்ந்து ஈழத் தமிழர்களை ஒழித்து வருகிறது இந்திய அரசு. மாறாக ஈழத் தமிழர்களுக்குத் துணை நின்றது என்றால் தமிழ் ஈழமும் மலர்நதிருக்கும். உலக நாடுகளிடம் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்கும். இதனை இனியேனும் உணர்நது இந்தியா தன் வல்லரசு ஆசைகளை விட்டு விட்டு தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்லரசாகத் திகழ்ந்து தமிழ் ஈழம் மலரத் துணை நிற்க வேண்டும். (தொடர்ச்சி 2/2 காண்க!)


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/17/2009 10:41:00 AM

அதே நேரத்தில் வடகொரிய தென்கொரிய நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவைகள் இரண்டும் சீனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து இந்தியாவுக்கு ஆதரவாக செயலாற்றவும் இந்தியா தனது வெளியாட்டுக்கொள்கையில் சரியான உலக ராஜதந்திரத்தை கையாள வேண்டும். சமீப காலமாக இந்திய அரசு கேலிக்கூத்தாக மாறி வருகிறது. இதை கவனிக்கும் ஆஸ்திரேலியா கனடா போன்ற உலக நாடுகளில் தங்கியுள்ள இந்தியர்களை அடித்து துரத்துகிறார்கள். இலங்கயிலும் தமிழர்களை கொல்கிறார்கள். வடநாட்டவர் போல் தமிழன் ஒரு இந்தியன். இதை மைய காங்கிரஸ் அரசு இன்றளவும் உணரவில்லை. இலங்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இலங்கை இந்துக்கள் தமிழர்கள் மடிந்து மண்ணாகிறார்கள். இதை இன்றளவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பான்கி மூன் வாய் மூடி மவுனியாகி விட்டார்.

By NADODI
6/17/2009 9:28:00 AM

உலகத்துரோகியான ராஜபக்சவின் இலங்கை அரசு மூன்றாவது உலகப்போருக்கு வழி வகுத்து வருகிறது. இலங்கையில் தனி ஈழம் அமைவதள்குள்ளாகவே 1914ல் ஆரம்பிக்கப்பட்ட முதல் உலக யுத்தம் போல் 2014ல் மூன்றாம் உலக யுத்தம் வரக்கூடும். தேவையற்ற விஷயங்களில் எல்லாம் முரட்டுத்தனமாக துப்பாக்கியையும் கத்தியையும் தூக்கிய பிரபாகரன் ஒரு விவேகமற்ற வீரன். பிரபாகரன் ஆரம்பித்திலிருந்தே இந்தியாவையும் தமிழகத்தையும் அரவணைத்து சென்றிரு்தால் இலங்கையின் கொழுப்பை மிகச் சாதுர்யமாக அடக்கி அசைக்க முடியாத நிரந்தர தனி ஈழ நாட்டை இலங்கையில் அமைத்திருக்கலாம். தேவையில்லாமல் 1991ல் இந்திய உள் விவகாரத்தி்ல் தலையிட்டது மிகப் பெரிய தவறு. என்பதை காலம் இப்போது பதில் சொல்லி விட்டது. சீனா இலங்கை இரண்டின் மதக்கோட்பாடுகள் ஒன்றானவை. இப்போதைய இந்திய அரசு கவனிக்க வேண்டிய உள்ளூர் விவகாரங்களை விட அமெரிக்க ரஷ்ய வெளி நாட்டுக்கொள்கைகளை இன்னும் தீவிரமாக பலப்படுத்த வேண்டிய தருணமிது. இதில் நமது கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தேவை. இலங்கைக்கு ஆதரவு கொடுக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி ராணுவ தளவாடங்கள் சப்ளை செய்வதை தடை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அத

By NADODI
6/17/2009 9:26:00 AM

when Georgia killed Russian origin peoples Russia invaded Georgia and saved their people.Chinese all over the world whereever they live they have Chinese govt. support.But India!!!!The truth is North Indians do not consider Tamils in YN as Indians.

By veera
6/17/2009 9:08:00 AM

It is the reflection of LTTE's views. Should appear in Tamilnet.com. Nedumaran ean puthi thadumaranum? You were a nationalist and a congressman but today you are the friends of terrorists.

By Venki
6/17/2009 8:21:00 AM

India never had a proper foreign policy. Alwyas Chinese dominate every country where Indians have flourished economiclly. Burma, Singapore and now Srilanka. Chinese government help its nationals living outside of China to participate in the local elections etc in all countires where its people live, whereas Indian government never helps not even extends support to its nationals. It is high time India woke up to the extreme dangers of weak foreign policies. It is a shame that our politicians are note interested in nation building but buildign there own wealth!! God save India!!!

By Tamil Nanban
6/17/2009 6:37:00 AM