firing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
firing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

மீனவர் கொலை : மனிதநேய மக்கள் கட்சியின் நடிப்புக்குரல்

தலைசிறந்த நடிகர் என  இவரைப் பாராட்டலாம். தன் தொகுதியில் ஆயிரக்கணக்கில் மீனவர்கள் சிங்களர்களால் துன்புறும் பொழுதும் உயிர் பறிக்கப்படும் பொழுதும் தன் வணிகக் கூட்டாளி கொலையாளி  பக்சேயிடம் விருந்துண்டு மகிழ்பவர் இப் பொழுது  கூக்குரலிடுவது விந்தையாக உள்ளது. இதனால்  கோரிக்கையின் நயன்மையும்(நியாயமும்) அடிபட்டுப்போகின்றது. இனிமேலாவது தமிழக மீனவர்களுக்காகப் போராடி கோடிக்கணக்கிலான இழப்பீ்ட்டைப் பெற்றுத் தருகிறாரா? அல்லது  இனி ஓர் உயிர் இழப்புகூட நேரா வண்ணம் பாடுபடுகிறாரா எனப் பார்ப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
மீனவர் கொலை: ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு த் தமிழக அரசு வெஞ்சாமரம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

First Published : 05 Aug 2012 04:20:38 PM IST தினமணி


சென்னை, ஆக 5: அமெரிக்க கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை பெற்று வழங்கிய தமிழக அரசுக்குமனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடுட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியதாவது:துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர் கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் காயமடைந்த முத்துக்கண்ணன், பாந்துவநாதன் மற்றும் முத்து முனிராஜ் ஆகியோரின் குடும்பத்திற்கு ரூ50 ஆயிரம் என அமெரிக்க அரசின் சார்பாக வழங்கப்பட்ட அற்பமான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது வேதனைகுரியதும் வன்மையான கண்டனத்திற்குரியதுமாகும். எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் துபாயில் ஜபல் அலி துறைமுகம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அமெரிக்க கடற்படையினரால் மனிதாபிமானமில்லாமல் சுடப்பட்டுள்ளார்கள். அமெரிக்க கடற்படையினர் இந்த சம்பவத்திற்கு நியாயம் கற்பிப்பதுப் போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுகள் தங்களை நோக்கி வேகமாக வந்ததாகவும் தாங்கள் எச்சரித்தாகவும் இதன் காரணமாக தான் தாங்கள் சுட்டதாகவும் கூறியது முற்றிலும் தவறானது என்று துபாய் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் தலைமை அதிகாரி தாஹி கல்பான் தமீம் தமிழக மீனவர்கள் இருந்த படகு அமெரிக்க கடற்படை கப்பலை நோக்கி வேகமாக செல்லவில்லை என்றும் எவ்வித எச்சரிக்கையையும் இந்த படகிற்கு அமெரிக்க கடற்படை செய்யவில்லை என்றும் தங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மிக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.எனவே தமிழக மீனவர் சேகர் திட்டமிட்டே அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள்.  கடந்த பிப்ரவரி 15 அன்று கேரளா கடல் பகுதியில் இத்தாலியின் வர்த்தக கப்பலான என்ரிக லக்சியில் இருந்து பாய்ந்த குண்டுகள் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களின் உயிரை மாய்த்தது.தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் கேரளா அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இத்தாலி அரசிடமிருந்து தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக பெற்று தந்ததுடன் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கையும் மேற்கொண்டது. இதற்கு நேர்மாற்றமாக அமெரிக்க அரசின் எடுபிடியாக மாறி அற்ப தொகையாக இறந்த சேகர் குடும்பத்திற்கு ரூ5 இலட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ50 ஆயிரமும் அமெரிக்காவின் சார்பாக தமிழக அரசு நேற்று ரகசியமாக வழங்கியுள்ளது வேதனைக்குரியது, வெட்க கேடானது. கேரளா அரசு இத்தாலி கொலையாளிகள் விவகாரத்தில் நடந்துக் கொண்டதுப் போல் நடக்காமல் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு தமிழக அரசு வெஞ்சாமரம் வீசியுள்ளது ஏற்புடையது அல்ல. துபாய் அரசே இந்த விவகாரத்தில் அமெரிக்க கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் சொந்த மாநில அரசு அமெரிக்காவிற்கு அடிபணிந்து இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தோப்பு வலசை சேகர் குடும்பத்திற்கு ரூ 5 கோடியும் காயமடைந்த மூன்று மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ1 கோடியும் பெற்று தர தமிழக முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சனி, 1 அக்டோபர், 2011

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது

மாட்ரிட், அக். 1-
 
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் 34 வயது மதிக்கதக்க ஒரு மர்ம மனிதன் புகுந்தான். திடீரென அவன்தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணியின் தலையில் சுட்டான். பின்னர் மற்றொரு பெண்ணின் மார்பில் சுட்டான்.
 
உடனே இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அந்த நபர் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குண்டு காயத்துடன் கிடந்த 2 பெண்களையும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பிணி உள்ளிட்ட 2 பெண்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
ஆனால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்தது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை ஆபரேசன் மூலம் உயிருடன் வெளியே எடுத்தனர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Saturday, October 01,2011 05:06 PM, க.தங்கதுரை. ராந்தம் said:
கடவுள் கடவுளாக இருக்கின்றார். மனிதன் மனிதனாக இருப்பதில்லை. மிருகமாக மாறிக்கொண்டு இருக்கின்றான்.
Saturday, October 01,2011 04:13 PM, பெ வீரமுத்து said:
இறந்த பெண்ணே மீண்டும் உயிர் பிழைத்ததற்கு சமம் / அந்த குழந்தை அந்த நாட்டை ஆளும் அளவிற்கு வாழவேண்டும் என்பது எனது ஆசை .
On Saturday, October 01,2011 04:26 PM, சித்திக் said :
ஐயோ பாவோம் இந்த கருத்து நிறைவேறாது என்று தெரிந்தும் ஆசை பட்டுவிட்டிர் போன்கோல்
On Saturday, October 01,2011 05:00 PM, siva said :
எதுவும் நடக்கும்.இப்போதே எதையும் தீர்மானம் செய்ய முடியாது.நாடகமே உலகம். நாளை நடப்பதை யாரறிவார் ?மொத்தத்தில் ஒரு வித்யாசமான கோணத்தில் வீரமுத்து அவர்கள் ஆசை பட்டிருக்கிறார்.
Saturday, October 01,2011 04:00 PM, muthu said:
ஐயோ கடவுளே