baby born லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
baby born லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஏப்ரல், 2012

Mexico woman pregnant with 9 babies





மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், ஒன்பது சிசுக்களை சுமந்து கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் 20ம் தேதி இவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண், கடந்த 2009ல் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றது தான் உலக சாதனையாக கருதப்பட்டது. இதே போல, தற்போது மெக்சிகோ நாட்டின் கோயஹுய்லா பகுதியை சேர்ந்த கர்லா வனிசா என்ற பெண், ஒன்பது குழந்தைகளை சுமந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல்லை பகுதிக்கு அருகே இவரது ஊர் உள்ளது.இந்த பெண்ணின் வயது குறிப்பிடப்படவில்லை. தற்போது இந்த பெண் சால்டிலோ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், 20ம்தேதி இவரது பிரசவ தேதி குறிக்கப்பட்டுள்ளது. இவரது கர்ப்பப்பையில் ஒன்பது சிசுக்கள் உள்ளன. இவற்றில் ஆறு பெண்கள், மூன்று ஆண்கள். அனைத்து குழந்தைகளும் நலமாக பிரசவமாக வேண்டும், என்பதில் டாக்டர்கள் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

புதன், 18 ஏப்ரல், 2012

buried child recovered alive


 அதிர்ஷ்டமில்லாதது என புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீண்டது: பெற்றோருக்கு கம்பி
 - தினமலர்


லக்னோ: மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பிறந்த ஆண் குழந்தையை அதிர்ஷ்டமில்லாதது என நம்பி உயிரோடு புதைத்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், புதைக்கப்பட்ட அந்தக் குழந்தை இரண்டு நாட்களுக்குப் பின், உயிரோடு மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவிலிருந்து, 450 கி.மீ., தொலைவில் உள்ள நகரம் ஹபூர். இந்த நகரின் ஒரு பகுதியில் வசிப்பவர்கள், கடந்த சனியன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. எங்கிருந்த சத்தம் வருகிறது என, அவர்கள் தேடியபோது, பூமியின் மேல் பகுதியில் எந்தக் குழந்தையும் தென்படவில்லை. பின்னர், ஒரு வழியாக குழந்தையின் அழுகுரல் பூமிக்கு அடியில் இருந்துதான் கேட்கிறது என்பதைக் கண்டு பிடித்தனர்.

ஆண் குழந்தை: சத்தம் வந்த பகுதியை தோண்டிய போது, அங்கு மண்ணால் செய்யப்பட்ட ஜாடி ஒன்றில், ஆண் குழந்தை ஒன்று உயிரோடு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த குழந்தைதான் அழுதுள்ளது. குழந்தை உடல் முழுவதும் குங்குமம் பூசப்பட்டிருந்தது. ஜாடியின் அருகே பத்திக் குச்சிகளும் கிடந்தன. பிறந்து ஆறு நாட்களே ஆன நிலையில் இருந்த, அந்தக் குழந்தையை மீட்ட அவர்கள், மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு இருந்ததை கண்டு வியப்படைந்த டாக்டர்களும் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தைக்கு மஞ்சள் காமாலையும், கிருமி தொற்றும் பாதித்திருப்பதால், தற்போதைக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

மந்திரவாதி யோசனை: குழந்தையை மீட்டவர்கள் இதுபற்றி போலீசிற்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, குழந்தையின் பெற்றோரான கிரண்பால் சிங் மற்றும் அனிதாவைக் கண்டு பிடித்தனர். அப்போதுதான் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டதும், மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு இதைச் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கிரண்பால் மேலும் கூறியதாவது: அனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இரண்டு முறை கருச்சிதைவும் நிகழ்ந்துள்ளது. அதனால், இந்த முறை கர்ப்பம் தரித்ததும், மந்திரவாதி ஒருவரை நாடிச் சென்று யோசனை கேட்டோம். அவரோ, "பிறக்கப்போவது, துரதிருஷ்டமான குழந்தை. எனவே, அந்தக் குழந்தையை உயிருடன் புதைத்து விட வேண்டும். அதற்கு முன்னதாக பூஜைகள் செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் புதைத்து விடுங்கள். அப்படி புதைத்து விட்டால், உங்களின் துயரம் எல்லார் தீர்ந்து விடும். இனி பிறக்கப் போகும் குழந்தைகள் நல்லவையாக இருக்கும்' என்று கூறினார். அதை நம்பிய நாங்கள் குழந்தை பிறந்தவுடன் அவரிடம் தெரிவித்தோம். அவர் வந்து பூஜைகள் செய்த பின், குழந்தையை உயிரோடு புதைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். ஆனாலும், புதைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், அந்தக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டமானது என, பெற்றோரால் கருதப்பட்ட குழந்தை மரணத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், பெற்றோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். யோசனை சொன்ன மந்திரவாதியையும் தேடி வருகின்றனர்.

சனி, 1 அக்டோபர், 2011

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது

மாட்ரிட், அக். 1-
 
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் 34 வயது மதிக்கதக்க ஒரு மர்ம மனிதன் புகுந்தான். திடீரென அவன்தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணியின் தலையில் சுட்டான். பின்னர் மற்றொரு பெண்ணின் மார்பில் சுட்டான்.
 
உடனே இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அந்த நபர் அந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். குண்டு காயத்துடன் கிடந்த 2 பெண்களையும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பிணி உள்ளிட்ட 2 பெண்களும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
ஆனால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை உயிருடன் இருப்பது தெரிந்தது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை ஆபரேசன் மூலம் உயிருடன் வெளியே எடுத்தனர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Saturday, October 01,2011 05:06 PM, க.தங்கதுரை. ராந்தம் said:
கடவுள் கடவுளாக இருக்கின்றார். மனிதன் மனிதனாக இருப்பதில்லை. மிருகமாக மாறிக்கொண்டு இருக்கின்றான்.
Saturday, October 01,2011 04:13 PM, பெ வீரமுத்து said:
இறந்த பெண்ணே மீண்டும் உயிர் பிழைத்ததற்கு சமம் / அந்த குழந்தை அந்த நாட்டை ஆளும் அளவிற்கு வாழவேண்டும் என்பது எனது ஆசை .
On Saturday, October 01,2011 04:26 PM, சித்திக் said :
ஐயோ பாவோம் இந்த கருத்து நிறைவேறாது என்று தெரிந்தும் ஆசை பட்டுவிட்டிர் போன்கோல்
On Saturday, October 01,2011 05:00 PM, siva said :
எதுவும் நடக்கும்.இப்போதே எதையும் தீர்மானம் செய்ய முடியாது.நாடகமே உலகம். நாளை நடப்பதை யாரறிவார் ?மொத்தத்தில் ஒரு வித்யாசமான கோணத்தில் வீரமுத்து அவர்கள் ஆசை பட்டிருக்கிறார்.
Saturday, October 01,2011 04:00 PM, muthu said:
ஐயோ கடவுளே