cycle லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cycle லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 மார்ச், 2012

drawing while cycling by madurai youth




மதுரை: சைக்கிள் "ஹேண்ட் பாரை' பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், "ஹேண்ட் பாரை' பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர்

மதுரையைச் சேர்ந்த கூடல்கண்ணன், 30. கூடல்புதூரைச் சேர்ந்த இவர், ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதுவது, தலைகீழாக எழுதுவது என ஏற்கனவே சாதித்தவர். கல்லூரிகளில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக உள்ள இவருக்கு, இந்த சைக்கிள் சாதனை ஆசை எப்படி வந்தது? ""எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். தென்மாநிலங்களில் சைக்கிளில் ஊர் சுற்றி வந்து உள்ளேன். சைக்கிள் ஓட்டியவாறு ஓவியம் வரைந்தால் என்ன? என சிந்தித்தன் விளைவுதான், இன்று 50 கி.மீ., தூரம் நிற்காமல் சைக்கிள் ஓட்டியபடி இரு கைகளாலும் மாறி மாறி ஓவியம் வரைகிறேன். தவிர, சைக்கிளின் முன் படுக்கை வசம் உள்ள "பாரில்' அட்டையை இணைத்து, அதில் இரு கைகளாலும் ஓவியம் வரைகிறேன். ஒரு வேலையை கவனமாக செய்ய வேண்டும் என்பதை, இச்சாதனை எனக்கு உணர்த்தியது,'' என்றார் கூடல்கண்ணன்.

- தினமலர்

வியாழன், 9 பிப்ரவரி, 2012

Invention of Solar cycle : சூரிய ஆற்றலில் ஓடும் மிதி வண்டி': முன்னாள படைஞர் கண்டுபிடிப்பு


காரைக்குடி:சூரிய சக்தி மூலம் (சோலார் எனர்ஜி) இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் பூபதிராஜ், 49, கண்டுபிடித்துள்ளார்.
இன்ஜினியரிங் படித்துள்ள இவர், 20 ஆண்டுகளாக 125 க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். இவரது கண்டுபிடிப்புகளில் அலாரம் சூட்கேஸ், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது, திரவம் காலியானால் எச்சரிக்கும் ஐ.வி., மானிட்டர் கருவி போன்றவை முக்கியமானவை. தற்போது, சூரிய சக்தி,பேட்டரி மற்றும் "பெடல்' மூலம் இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், "" சூரிய ஒளி தகடை பயன்படுத்தி ( சோலார் பிளேட்) டி.சி., மின்சாரமாக மாற்றி, பேட்டரியில் சேமித்து சைக்கிள் ஓட்டலாம். பேட்டரி தேவை இல்லையென்றால், சூரிய ஒளியை நேரடியாக பயன்படுத்தியும் வாகனம் ஓட்டலாம். இரவு நேரங்களில் பேட்டரி மூலம் குறைந்தது 60 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இவை இரண்டுமே சாத்தியமில்லை என்றால், "பெடல்' மூலம் நேரடியாக சைக்கிளை இயக்கலாம். பகல் 11 முதல் மாலை 4 மணி வரை பேட்டரி இன்றி சூரிய ஒளி மூலம் வாகனத்தை நேரடியாகவே இயக்க முடியும். ஆனால், வேகம் குறைவாக இருக்கும். சாதாரண சைக்கிளில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம். இதற்கு குறைந்தளவே செலவு செய்தால் போதுமானது, என்றார்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சைக்கிள் என்றதும் ஏதோ சுழற்சியைப் பற்றி எழுதியுள்ளதாகக் கருதினேன். படித்துப் பார்த்தால் மிதிவண்டியை உட் பொருளாக உணர்த்தியுள்ளது புரிகின்றது. தமிழ் மணி மூலம் தமிழோசை எழுப்பும் தினமணி மிதிவண்டி என்று சொல்லலாமே! ஆசிரியர் குழுவினருக்கு நற்றமிழ் உணர்‌வை ஊட்டுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/14/2010 3:25:00 AM