பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஜனவரி, 2013

மனிதர்களைக் கண்டால் நிறம் மாறும் பூ

மனிதர்களை க் கண்டால் நிறம் மாறும் பூ


மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபடும், சித்த ஆகம ஆராய்ச்சியாளர் ஈஸ்வரன்: முப்பது ஆண்டுகளாக, நானும், என் நண்பர்களும், பல முறை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்குள், சென்று வந்திருக்கிறோம். கடந்த முறை சென்றபோது, இரண்டு நாட்கள் காட்டுக்குள்ளேயே, தங்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. மலை உச்சியில், ஒரு மரம் நீல நிறப் பூக்களோடு அழகாய் காட்சியளித்தது. நீல நிற பூக்கள் இருந்த மரத்தை நோக்கி நடந்தோம். மரத்தை விட்டு தள்ளி இருந்த போது, எந்த மாற்றமும் தெரியவில்லை. மரத்தடியில், 10 நிமிடங்கள் இளைப்பாறிய போது பார்த்தால், நீலநிற பூக்கள் அடர்ந்த ஊதா நிறத்தில், "பளிச்'சென்று மாறின. அப்போது தான், முற்றிலும் மறைந்ததாக கருதப்பட்ட, காணக் கிடைக்காத, "சர்க்கரை வில்வ மரம்' அது என, தெரிந்தது. "காயாம்பூ' என அழைக்கப்படும் இந்த மரத்தின் பூக்கள், வெளிறிய நீல நிறத்தில் இருக்கும். 10 அடி தொலைவில், மனிதர்கள் யாராவது வந்தால், அதை உணர்ந்து பூக்கள், அடர் ஊதா நிறத்துக்கு மாறி விடுகின்றன. இப்படி ஒரு ஆச்சரியம், அறிவியலுக்கும் எட்டாதவையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் காணப்படும், ஒரு சில தாவரங்களும், விலங்குகளும், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. அரிய வகை, வரை ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன. இம்மலைக்கே உரித்தான, பல மூலிகைச் செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி, அகத்திய சித்த நூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த அரிய தாவரங்களில், " சர்க்கரை வில்வ மரமும்' ஒன்று. பல ஆண்டுகளாக, எவர் கண்ணிலும் படாததால், அழிந்து போய்விட்டதாக கருதப்பட்டது. ஒவ்வொரு முறை, மலைக்கு செல்லும்போதும், 50 மரக் கன்றுகளை நட்டு வருகிறேன். இந்த முறை சென்ற போது, மலையை சுத்தம் செய்து, 30 கிலோ பிளாஸ்டிக் குப்பையை நீக்கி, அங்கிருந்து எடுத்து வந்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையில், எண்ணற்ற மருத்துவ மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

எத்தனை எத்தனை மலர்கள் many kind of flowers


எத்தனை எத்தனை மலர்கள்

- இலக்குவனார் திருவள்ளுவன் 


பழந்தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்தனர். எனவே, இயற்கையைப்பற்றி நன்கு அறிந்திருந்தனர். இயற்கையைப் பாடிய உலகக் கவிஞர்களை இவர்களுடன் ஒப்பிட இயலாவண்ணம், மிக உயர்ந்த நிலையில் இயற்கையைக் கையாளும் இணையற்ற புலவர்களாகத் திகழ்ந்தனர். வாழும் முறைமைக்கு அடிப்படையான நானிலப்பாகுபாட்டைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பூக்களின் பெயரால் அமைத்துள்ளனர். இவையே பின்னர்த் திணை ஒழுக்கத்திற்கும் அடிப்படையாயிற்று. (படங்கள் தந்த விக்கி பொது நன்றி)
File:முல்லைப் பூச்சரம்.jpg
பூக்களை உவமையாகவும் உருவகமாகவும் கையாளும் வண்ணம் மக்களும் மலர் வகைகள் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர். மலர்களின் மருத்துவத் தன்மையை நன்கு உணர்ந்து நோய் நீக்கவும் தளர்ச்சி போக்கவும் ஊட்டம் பெறவும் பயன்படுத்தியுள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கபிலர் தம்முடைய குறிஞ்சிப்பாட்டு என்னும் இலக்கியத்தில் வரிசையாக 99 வகைப் பூக்களைக் குறிப்பிடுகின்றார். இந்நூல் ஆரிய அரசர் பிரகத்தனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காக இயற்றப் பெற்றது. எனவே, இந்நூலில் பூக்கள் சிறப்பாகக் குறிக்கப் பெற்றுள்ளதால் தமிழர் வாழ்வில் பூக்கள் பெற்றுள்ள முதன்மை இடத்தை எளிதில் அறியலாம்.

தொடர்ச்சிக்கு :