மாற்றுத் திறனாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றுத் திறனாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

மாற்றுத் திறனாளிகளுக்காக நாட்டிலேயே தமிழகத்தின் முன்மாதிரி திட்டங்கள்: முதல்வர்

மாற்றுத் திறனாளிகளுக்காக நாட்டிலேயே தமிழகத்தின் முன்மாதிரித் திட்டங்கள்: முதல்வர்

நம் நாட்டிலேயே, தமிழகத்தில்தான் மாற்றுத் திறனாளிகளுக்கான முன்மாதிரித் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்து தெரிவித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
“அனைவரையும் இணைத்து எல்லோரும் எளிதில் அணுகக்கூடிய சமுதாயத்தை அனைவருக்கும் உருவாக்குவதற்கு உள்ள தடைகளை அகற்றுதல்” என்னும் பொருளுடன், 2012-ஆம் ஆண்டு “மாற்றுத் திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் டிசம்பர் திங்கள் 3-ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.  இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் தன்னம்பிக்கையும், சம வாய்ப்புகளும் பெற்று சமூகத்தில் உயர்ந்து நின்றிட, கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள்;  சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்க ஊக்கத் தொகை; பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குக் குச்சிகள்; பார்வை குறைவுள்ள மாணவ, மாணவியருக்கு எழுத்துகளைப் பெரிதாகக் காட்டி சுயமாக படிக்க உதவும் கருவி; இயங்கும் வகையிலான செயற்கை அவயங்கள்; ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிக்கு வந்து செல்லும் அனைத்து வகை மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் அவர்களுடைய துணையாளர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணச் சலுகை; செவித் திறன் குறையுள்ள மாணவ, மாணவியருக்கு காதொலிக் கருவி;  தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை இந்தியாவிற்கே முன் மாதிரியாக தமிழகத்தில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று நிலைகளைப் பெறும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு,  மாற்றுத் திறனாளிகளின் பராமரிப்பு உதவித் தொகை மற்றும் உணவூட்டுச் செலவினம் ஆகியவை  உயர்த்தப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகள் மன நிறைவோடு வாழும் வகையில், அவர்களின் முன்னேற்றத்திற்கான அனைத்து உதவிகளையும், ஏற்றமிகு திட்டங்களையும்,  உறுதியுடன் செயல்படுத்தி, மாற்றுத் திறனாளிகள்  சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக நலமோடும், வளமோடும் வாழ இந்த அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதே- யோக இந்திரன்

மகிழ்ச்சியில்  பெரிய மகிழ்ச்சி  பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதே
-  யோக இந்திரன்

அது சென்னையில் உள்ள புகழ்பெற்ற மிகப் பெரிய "தீம்' பார்க். பெரியவர்கள் சிறுவர்களாகவும், சிறுவர்கள் குழந்தைகளாகவும் மாறி மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி அலை வீசுகிறது, யாரிடம் பார்த்தாலும் ஆனந்தம் கொப்புளிக்கிறது.
இந்த சூழ்நிலையில் சில வாகனங்கள் வரிசையாக வந்து நிற்கின்றன. அதில் இருந்து இறங்கிய குழந்தைகள் பெரும்பாலோனார் உடல் ஊனமுற்றவர்கள், வாகனங்களில் இருந்து இறங்கவும், இறங்கியபின் தரையில் ஊர்ந்தபடி "தீம்' பார்க் உள்ளே வரவும் அவர்கள் சிரமப்பட்டாலும், வாழ்க்கையில் ஒரு புதிய உலகத்தை பார்க்கப்போகும் ஆனந்தம் அனைவரது கண்களிலும் தாண்டவமாடியது.

ஒவ்வொரு உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாவலர் என்ற முறையில் உள்ளே வந்தவர்கள் அதன் பிறகு அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தண்ணீர் தொடர்பான விளையாட்டில் தங்களை மறந்தனர், "ரோலர் கோஸ்டர்' போன்ற விளையாட்டின்போது பதிவான அதிக பட்ச ஆராவார சத்தம் இவர்களுடையதே, இப்படி "தீம்'பார்க்கின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆனந்தத்தால் அளந்தார்கள், சுருக்கமாக சொல்வதானால் வாழ்க்கையில் இதுவரை இல்லாத குதூகலத்தில் காணப்பட்டனர்.

இவர்களை இந்த அளவு சந்தோஷப்படுத்திப் பார்ப்பது யார் என்ற கேள்விக்கு விடையாக கிடைத்தவர்தான் யோக இந்திரன். மலேசியாவாழ் தமிழரான யோக இந்திரன் தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் சென்னையில் உள்ள ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவதை கடந்த 15 வருடங்களாக வழக்கமாக கொண்டுள்ளார். இவரது இந்த நற்பணிக்கு இங்குள்ள இவரது நண்பர்கள் அண்ணாமலை மற்றும் தீபக் உதவி செய்கின்றனர்.

தீம் பார்க் நுழைவு கட்டணம், உள்ளே விளையாடுவதற்கான கட்டணம், மற்றும் உணவு செலவு என்று ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் செலவாகும். இதன் காரணமாக நடுத்தர மக்களே உள்ளே வர தயங்குவார்கள். அப்படி இருக்கும்போது ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளைப் பொறுத்தவரை இது ஒரு கனவு உலகம்தான். இதை நனவு உலகமாக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். பொதுவாக சந்தோஷம் என்பது பிறரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான், எனது பிறந்த நாள் சந்தோஷம் என்பது இந்த குழந்தைகளை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில்தான் அடங்கியிருக்கிறது என்று சொன்ன யோக இந்திரன் தானும் ஒரு குழந்தையாகி இவர்களுடன் விளையாடியதும், இவர்களை இவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே அழைத்துவந்து திரும்ப கொண்டுபோய் வாகனங்களில் விட்டதும், இருப்பதிலேயே சிறந்த உணவை வழங்கியதும், வீட்டிற்கு செல்லும்போது பரிசுப்பொருள் கொடுத்தனுப்பியதையும் பார்க்கும்போது யோக இந்திரன் கொஞ்சம் விசேஷ மனிதராகவே தெரிந்தார்.

பிறந்த நாள் என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயமான ஒன்று. பிறந்த நாளில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கவே யாவரும் விரும்புபவர், இனி வரும் பிறந்த நாளின்போது நாம் மட்டும் சந்தோஷம் அடையாமல் நமது பொருளாதாரத்தை பொறுத்து மற்றவர்களை அதிலும் இல்லாதவர்களை, இயலாதவர்களை, எளியவர்களை, ஏழைகளை, ஆதரவில்லாத குழந்தைகளை, அனைத்திற்கும் மேலாக உடல் ஊனமுற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை யோக இந்திரன் விதைத்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.


வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கும் ஊக்கத் தொகை : தமிழக அரசு

First Published : 09 Aug 2012 11:04:08 AM IST தினமணி


சென்னை, ஆக., 09 : மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருக்கும் ஊக்கத் தொகையாக 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யும் வகையில் 22 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் 1,359 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.மேலும், தற்போது 32 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவ பள்ளிகளுக்கு செல்லும் 2,390 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அளிக்கப்பட்டு வரும் பயண சலுகையை, அவர்களுடன் செல்லும் ஒரு துணையாளருக்கும் விரிவுப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு, நடப்பதற்கு உதவிகரமாக தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மேல் பகுதியில் வெள்ளை வர்ணமும், கீழ் பகுதியில் சிவப்பு வர்ணமும் பூசப்பட்ட மடக்கு குச்சிகளுக்கு பதிலாக ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த ஒளிரும் மடக்கு குச்சிகள் 10 லட்சம் ரூபாய் செலவில் 5,000 நபர்களுக்கு வழங்கப்படும்.தற்போது, தங்களை தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத 60 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய 77,112 நபர்களுக்கு பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்புத் தொகை இன்னும் அதிகமான நபர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக, பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

வெறித்தனமாகக் கற்றுக் கொண்டேன்!

சொல்கிறார்கள்



மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள ராஜாத்தி: என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பெண்கள்; நான் தான் மூத்தப் பெண். தாத்தா காலத்திலேயே, பிழைப்பிற்காக கேரளா போய்விட்டோம். வறுமையிலும், எங்க அப்பா, என்னை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.டாடா நிறுவனம் நடத்திய, மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்கூடத்தில், டையிங் பிளான்டில் வேலை பார்த்தேன். அங்கு என்னைப் போலவே, மாற்றுத் திறனாளியான பாலமுருகன் என்பவரை, திருமணம் செய்து கொண்டேன். கடந்த, 2004ல், பிழைப்புத் தேடி திருமங்கலம் வந்துவிட்டோம்.நான் மாற்றுத் திறனாளி தானே தவிர, சிறு வயதிலிருந்தே, துறுதுறுன்னு இருப்பேன். விளையாட்டு என்றால், மிகவும் இஷ்டம். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி அளிப்பதாக, பத்திரிகையில், விளம்பரம் பார்த்த என் கணவர், அதில் சேரும் படி ஊக்கமளித்தார்.அப்போது நான், இரு குழந்தைகளுக்குத் தாய். எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுப் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு சொல்லிக் கொடுத்ததை, வெறித்தனமாக கற்றுக் கொண்டேன்.கடந்த, 2007ல், மாநில அளவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில், பதக்கங்கள் வாங்கிக் குவித்தேன். கடந்த, 2008ல், லண்டனில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, இரு பதக்கங்களை வென்றேன்.போட்டி முடிந்து, ஊருக்கு திரும்பிய சில நாட்களில், எனக்கு உடல் நிலை பாதித்தது. மருத்துவ பரிசோதனையில், புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஒரு பக்கம் சக்கர நாற்காலியில் உள்ள கணவர்; மறுபக்கம் வறுமையில் உள்ள குடும்பம். நோயைக் குணப்படுத்தியே தீருவேன் என்று, மாதக் கணக்கில் மருத்துவமனையில் இருந்து, தேறி வந்தேன். தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கான, முதல்வர் பதக்க விருது போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளேன்.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

Sports development commission - a lazy corporation: தமிழகத்தின் சோம்பேறி வாரியம்

சொல்கிறார்கள்



மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசியப் போட்டிகளில், வீல்சேர் வாள் சண்டையில், வெண்கலப் பதக்கம் வென்ற நூர்தீன்: போலியோவால், சின்ன வயசுலேயே இரண்டு காலும் ஊனமாகிவிட்டது. இந்த உடம்பைக் கொண்டு என்ன செய்வதென்று புரியாமல், தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு, நண்பனின் ஜிம் தான் சாதனைக்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. முதல் முறை அங்கு சென்ற போது, பாடி பில்டர் ஒருவர், "தம்பி நீங்க இந்தப் பக்கம் வரக்கூடாது, கிளம்புங்க' என, கிண்டல் செய்தார். எனக்கு அப்ப வந்த கோபத்திற்கு அளவே இல்லை. 10 கிலோ எடையைக் கூட தூக்க முடியாத நான், ஆறு மாதம் ஜிம்மே கதியாக இருந்தேன். இப்போது, 100 கிலோவைக் கூட, சர்வசாதாரணமாகத் தூக்குவேன். பளு தூக்குப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான, "மிஸ்டர் தமிழகம்' பட்டத்தையும் வென்றுள்ளேன். இப்போது, பொதுப்பிரிவு ஆட்களுடனும், போட்டி போட்டு பதக்கம் வென்றுள்ளேன். நண்பர்களின் ஆலோசனைப்படி, வாள் சண்டைப் பயிற்சி பெற்று, ஆசியப் போட்டி வாள் சண்டைப் பிரிவில் பதக்கம் வென்றேன். ஆசியப் போட்டியில், வெண்கலம் வென்றதற்காக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எனக்கு முறைப்படி தர வேண்டிய, 10 லட்ச ரூபாயை ஒரு வருடமாகியும், இன்னும் தரவில்லை. மற்ற பொதுப் போட்டியாளர்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டு, ஒரு மாற்றுத் திறனாளியின் பணத்தை அபகரிக்க முயற்சி செய்வது எந்த வகையில் நியாயம்? கனடா, இத்தாலி, ஹங்கேரி என, வெளிநாடுகளில் நடந்த போட்டிகளுக்குப் போக முடியாமல் போனதற்கு இது தான் காரணம். அரசு தரும் அந்தப் பணத்தை வைத்து தான், லண்டனில் நடக்கப் போகும் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும். இப்ப என் வாழ்க்கை அரசின் கையில் தான் உள்ளது!

திங்கள், 6 டிசம்பர், 2010

மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை சமூகச் சிக்கலாக அணுகவில்லை: வைகோ குற்றச்சாட்டு

உண்மையிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு எனத் தனிததுறை அமைக்கப்பட்டதா? ஏற்கெனவே  இருந்தஉடல் ஊனமுற்றோர் நலத் துறையின் பெயர் மாற்றுத்திறனாளிகள் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பெற்று அரசால் புதிய துறை அமைத்ததாகக் காட்டப்பட்டுள்ளதா? தெளிவிற்காக இலக்குவனார் திருவள்ளுவன்

மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை சமூக பிரச்னையாக அணுகவில்லை: 
வைகோ குற்றச்சாட்டு

First Published : 05 Dec 2010 03:01:32 PM IST

Last Updated : 05 Dec 2010 03:04:53 PM IST

சென்னை, டிச.5: மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் துணை முதல்வரும், சமூக நலத்துறை அமைச்சரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைப் பேசியதில் இருந்து இந்த ஆட்சி மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை சமூக பிரச்னையாக அணுகவில்லை என்பது தெரிகிறது என மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கேள்வியும் நானே, பதிலும் நானே என்று 03.12.2010 அன்று வெளியிட்ட முதல்வர்  கருணாநிதியின் அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தொலைநோக்குடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையை படித்துவிட்டு மிகுந்த மனவேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் 5.1.2010 அன்று நடந்த கூட்டத்திற்கு பின் 27.3.2010 அன்று மாற்றுத் திறனாளிகளுக்காக தனித்துறை முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டடது.22.4.2010 அன்று முதல்வரே மாற்றுத் திறனாளிகளின் வாரியத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, மகள் கனிமொழி வாரியத்தின் ஆலோசகராகவும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வேண்டப்பட்டவர்களை வாரிய உறுப்பினர்களாக நியமித்தபின் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய கூட்டம் இதுநாள்வரை எத்தனை நடந்துள்ளது? கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என்பதை நாட்டு மக்கள் அறிய ஆவலாக உள்ளனர்.'இளைஞன்' திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னமே வருமானவரித் தொகை போக ரூ. 45 லட்சத்தை பெற்று மாற்றுத் திறனாளிகள் வாரியத்திற்காகச் செலவிட வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக வாரியத் தலைவராக இருக்கும் முதல்வர் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். இது எப்படி இருக்கிறது என்றால், அறிவாலயத்தில் இயங்கி வரும் திமுக அலுவலகத்துக்கு அதன் தலைவராக இருக்கும் கருணாநிதி, மாதந்தோறும் வாடகைப் பணத்தை அறிவாலயத் தலைவராக இருக்கும் கருணாநிதியிடம் வழங்கி வருவதைப் போன்றது. சினிமா வசனகர்த்தா கதையாசிரியர் கருணாநிதி, மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் தலைவர் கருணாநிதியிடம் கதை வசனம் எழுதி கிடைத்த பணத்தை வாரியத்தின் கூட்டம் கூட்டப்படாமல் வாரியத்தின் ஒப்புதல் இல்லாமலே செலவு செய்யக் கொடுத்துள்ளது விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை.மேலும், 4 1/2 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரத்து 466 பேர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியாயமாக கிடைக்கப்பட வேண்டிய மூன்று சதவிகித அரசுப்பணி வழங்கப்பட்டிருக்குமேயானால் 14 ஆயிரம் பேர் பயனடைந்திருக்க வேண்டும். ஆனால், பாட்டும் நானே, பாவமும் நானே என்று கேள்வி பதில் அறிக்கையில் 3,169 பேருக்கு மட்டும் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி மூன்று சதவிகித பணி வழங்கப்படாததை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படி இருக்கையில் அரசுத் துறைகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டினைக் கண்காணிக்க உயர்மட்டக்குழு அமைத்துள்ளது, மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றிடும் கண்துடைப்பு நாடகமே தவிர வேறு என்ன?அதே அறிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்காக 2010-11 ஆம் ஆண்டு ரூ. 113 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும், 3.12.2010 அன்று மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல்வரும், சமூக நலத்துறை அமைச்சரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைப் பேசியதில் இருந்து இந்த ஆட்சி மாற்றுத் திறனாளிகளின் பிரச்னையை சமூக பிரச்னையாக அணுகவில்லை என்பது தெரிகிறது. மாற்றுத் திறனாளிகள் கேட்பது சலுகைகள் அல்ல; உரிமையை கேட்கிறார்கள்; அதற்காகப் போராடுகிறார்கள்.இந்திய சிங்களப் பேரினவாத போர் வெறியால் ஈழத் தமிழர்கள் முடமாகி எண்ணற்ற மாற்றுத் திறனாளிகள் உருவாக காரணமாக இருந்துவிட்ட கருணாநிதி, பாதிப்புக்குள்ளான மாற்றுத் திறனாளிகளின் துயர் துடைக்க அறிக்கை விட்டால் தங்களைத் தலைவர்கள் என்று கருதி அறிக்கை விடுவதாக பிரச்னையைத் திசை திருப்ப நினைக்கிறார் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

Psyco, what you have done it from DAL people? Go and ask DAL people, how they are happy with DMK and Kalaiganar. If you shut your mouth, they will be happy. DMK knows what to do for them? BTW : Where were you when JJ said, she is ready to suppport CONG? Were you hiding in toilet?
By Sundar
12/5/2010 9:39:00 PM
கருணாநிதியே சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு கழ்ட்டங்க்களை உணர்த பின்னும் மாற்று திறநாளிகளுக்கு துயர் நீக்க முன் வராதது அவருடைய சுயனலத்தியே kaattukirathu
By selvarajan
12/5/2010 9:14:00 PM
எழத்தமிழர்களை பற்றி பேச admkleader ஏதேனும் இவருக்கு அனுமதி கொடுத்தற இவர் தான் முன்னுக்கு பிரானாக பேசுகிறார் என்ன செய்வது இவர் சேர்ந்திருக்கும் இடம் அப்படி யாவர் ஒன்றும் பசெக்கூடதுஎன்று தானே 2006 சட்ட சபை தேர்தலில் அம்மையார் 60 கோடி கொடுத்தார் பின்னேர் எப்படி இவர் மாற்று திறனாளிகளைப்பற்றியும் ezhath தமிழர் பற்றியும் பேசுகிறார் ஒருவேளை இப்போயுது நடைபெறப் போகும் சட்டசபை தேர்தலில் ஏதாவது கிடைக்கும் என்று பேசுகிறார் போலும்.
By swathi
12/5/2010 8:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *