செவ்வாய், 30 அக்டோபர், 2012

சிறப்பு க் காவல் இளைஞர் படை த் திட்டத்தை க் கைவிட வேண்டும்: இராமதாசு

சிறப்பு க் காவல் இளைஞர் படை த் திட்டத்தை க் கைவிட வேண்டும்: இராமதாசு

First Published : 30 October 2012 04:02 PM IST
தமிழக முதல்வர் நேற்று அறிவித்த சிறப்பு காவல் இளைஞர் படை திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் வழக்கம் போல அவை விதி எண் 110இன் கீழ் நேற்று அறிக்கை வாசித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக காவல்துறையினருக்கு துணையாக  சிறப்பு காவல் இளைஞர்படை என்ற புதிய பிரிவு ஏற்படுத்தபடும் என்று அறிவித்திக்கிறார். தமிழக காவல்துறையில் அதிக காலியிடங்கள் இருப்பதாலும், அவற்றை நிரப்ப அதிக காலம் ஆகும் என்பதாலும் இந்த புதிய ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்திக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வரும் நிலையில் தமிழக காவல்துறைக்கு அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தமிழக காவல்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களுக்கு இணையாக காவலர் பொதுமக்கள் விகிதத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். புதிதாக அமைக்கப்படவிருக்கும் பிரிவில் சேர்க்கப்படுபவர்கள் ரூ.7500 தொகுப்பூதியத்தில் அமர்த்தபடுவார்கள் என்பதால் இவர்கள் காவலர்களாக பயன்படுத்தபடுவதற்கு பதில் ஏற்கனவே காவல்துறையில் இருப்பவர்களின் ஏவலர்களாகவே பயன்படுத்தபடுவார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் இரவு ரோந்து, கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்தை முறைப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவித்திருப்பதன் மூலம் இவையெல்லாம் இரண்டாம் தர பணிகள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் முயன்றிருக்கிறார்.
காவல்துறை காலியிடங்களை நிரப்புவதற்கு அதிக காலம் ஆவதால் தான் இந்த புதிய படை ஏற்படுத்தப்படுவதாக முதல்வர் கூறுவதை ஏற்கமுடியாது. காவல்துறையில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு காலியிடங்கள் ஏற்படும் என்ற விவரம் அரசிடம் இருப்பதால் அதற்கேற்றவாறு முன் கூட்டியே காவலர்களை தேர்வு செய்து பணியமர்த்துவதன் மூலம் காலியிடங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
காவல் இளைஞர் படைக்கு மாவட்ட அளவில் ஆள்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமா என்பது பற்றியெல்லாம் எதுவும் தெரிவிக்கபடவில்லை. இதுபோன்று தெளிவற்ற முறையில் ஆள்தேர்வு நடந்ததால்தான் சுமார் 28,500 சத்துணவு பணியாளர்களின் நியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடைவிதித்தது என்பதை அரசு நினைவில் கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி கடந்த ஆட்சியில் நியமிக்கபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் இந்த ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்டதை போல , இந்த ஆட்சியில் நியமனம் செய்யப்படும் இளைஞர் படையினர் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீக்கப்படும் ஆபத்து உள்ளது.
எனவே, தமிழக காவல்துறையில் இளைஞர் படை என்ற பெயரில் அரைகுறை பிரிவை ஏற்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக தமிழக காவல்துறையில்
இப்போதுள்ள காலியிடங்கள் மற்றும் அடுத்த ஓராண்டில் ஏற்படக்கூடிய காலியிடங்களை கணக்கிட்டு அவற்றை நிரப்ப முழு அளவிலான காவலர்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக