செவ்வாய், 30 அக்டோபர், 2012

படித்தால்தான் மகளிருக்குச் சமூக விடுதலை

படித்தால்தான் மகளிருக்கு ச் சமூக விடுதலை

படித்தால்தான் பெண்களுக்குச் சமூக விடுதலை கிடைக்கும் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்க மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற இந்திய ஜனநாய வாலிபர் சங்க இளம்பெண்கள் மாநில சிறப்பு மாநாட்டின் நிறைவு நாளில் அவர் பேசியது:
 அரசியல், பொருளாதாரம், பண்பாடு கலந்ததே மனித வாழ்க்கை. இதைப் புரிந்து கொண்டு போராடினால்தான் வெற்றி கிடைக்கும். குறிப்பாக, பெண்கள் படித்தால்தான் சமூக விடுதலைக்கு வழி கிடைக்கும். தமிழகத்தின் வரலாறு முழுமையாக இன்னும் எழுதப்படவில்லை. பாடங்களில் உள்ளவை மட்டுமே வரலாறு அல்ல. பள்ளி மாணவர்களுக்கான அளவில் மட்டுமே அவை எழுதப்பட்டுள்ளன.
தமிழ்ச் சமூக வரலாறு முழுமையாக எழுதப்படவில்லை என்ற நிலையில், தமிழர்களுக்கான வரலாற்று ஆதாரங்களாக இருப்பவை செப்புப் பட்டயமும், கல்வெட்டுகளுமே. மேலும், நமது வரலாற்றைப் புரிந்து கொள்ள ஆதாரமாக இருப்பவை சங்க இலக்கியங்கள்.
கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை சுமார் நானூறு, ஐநூறு ஆண்டுகள் தமிழன் எப்படி வாழ்ந்தான் என்பதற்கான குறிப்புகள் அதிலுள்ளன. பெண்கள் உலக வரலாறுகளையும், சங்க இலக்கியங்களையும் படிக்க வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் மட்டுமே தங்களுக்கான போராட்டக் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக