செவ்வாய், 30 அக்டோபர், 2012

அமெரிக்காவில் சாண்டி ப் புயலுக்கு 10 பேர் பலி

அமெரிக்காவில் சாண்டி ப் புயலுக்கு 10 பேர் பலி
அமெரிக்காவில் சான்டி புயலுக்கு 10 பேர் பலிநியூயார்க்,அக் 29-

கரிபியன் கடலில் தோன்றிய, "சாண்டி' புயல், கடந்த வாரம், பகாமாஸ் தீவுகளையும், கியூபா, ஹய்தி ஆகிய நாடுகளையும் தாக்கியது. தற்போது இந்த புயல், அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களை மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் காரணமாக, அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

30 செ.மீ., வரை மழை பெய்யும் என்பதால், பல மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள நான்கு லட்சம் மக்கள், வெளியேற்றப்பட்டு இவர்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை கடுமையாக தாக்கி உள்ள சூப்பர் சான்டி புயலுக்கு நியூயார்க்கில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். பூமிக்கு அடியில் ஓடும் ரயில் மற்றும் பஸ் சேவையும் நிறுத்தப்பட்டு விட்டது. கடும் புயல் வீசுவதால், 11 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாண்டி புயலுக்கு சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

தெருக்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கி உள்ளது. புயல் காரணமாக இதுவரை சுமார் 6800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் நியூயார்க் நகரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக