புதன், 1 ஆகஸ்ட், 2012

நன்றியுள்ளவர்களுக்கு நன்றிக் கடன்!

சொல்கிறார்கள்



நன்றியுள்ளவர்களுக்கு நன்றிக் கடன்!                           

செல்லப் பிராணிகளுக்கான பால் பொருட்கள், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் அமெரிக்காவின், "பெட்- ஏஜி' நிறுவனத்தின், ஒரே இந்திய டீலர் செல்வ ராணி: என் கணவர், தங்க நகை செய்வதில் கை தேர்ந்தவர். பெரிய அளவில், "ஆர்டர்'கள் பிடித்து, 30 பேருக்கு வேலை கொடுத்து என, வாழ்க்கை வளமாக இருந்தது. எதிர்பாராத விதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட, செய்வதறியாது திகைத்து நின்றோம். இழந்ததை மீட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். நாங்கள் நேசித்து வளர்த்த நாய்கள், அதற்கான வழியைக் கொடுத்தன. வருமானம் இல்லாத நேரத்திலும், தரமான உணவு, மருந்துகள் என, நாய்களை பராமரிக்க தவறவில்லை. இதையே வியாபாரமாக்கி விடலாம் என தோன்றவே, "சஞ்சய் மார்க்கெட்டிங்' என்ற பெயரில், "பெட் புட்' பிசினஸ் துவக்கினோம். ஆரம்பத்தில், வட மாநிலத்திலிருந்து தயாரிப்புகளை வாங்கி, விற்பனை செய்தோம். செல்லப் பிராணிகள், கால்நடைகளுக்கான மருந்து விற்பனையிலும் முறைப்படி இறங்கினோம். எதிர்பார்த்ததை விடவும், அதிக லாபம் கிடைத்தது. இன்னும் தரமான பொருளாக தேடியபோது தான், லாபத்திற்கு நிகரான தரத்தையும் கடைபிடிக்கும், வெளிநாட்டு நிறுவனத்தைக் கண்டுபிடித்தேன். எங்கள் தயாரிப்பில் முக்கியமானது, பால் பொருட்கள். பிரசவத்தின் போது, தாயை இழந்த, பிரிந்த, பல ஆயிரக்கணக்கான குட்டிகளை காப்பாற்றி இருக்கிறோம். தரம் அதிகம் என்பதால், விலையும் அதிகம் தான். எங்கள் தயாரிப்பின் மூலம், திருப்திய டைந்த நண்பர்களின் வாய்மொழி விளம்பரம் மூலம், பிசினஸ் விரிவடைந்தது. இலங்கை, வங்கதேசம் என, அக்கம் பக்கத்து நாடுகளிலிருந்தும், "ஆர்டர்'கள் வருகின்றன. அதீத உழைப்பின் மூலம், இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம். கிடைக்கும் லாபத்தில், கணிசமான பகுதியைக் கொண்டு, தெரு நாய்களை பராமரிக்க உள்ளோம்; எங்களை வாழ வைத்த ஜீவன்களுக்கு, நாங்கள் செய்யும் நன்றிக் கடன் இது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக