செவ்வாய், 31 ஜூலை, 2012

தொடரிகளில் தீ உணர்த்திக் கருவி பொருத்தப்படாதது ஏன்?

இரயில்களில் தீ எச்சரிக்கைக் கருவி அமைக்கப் படாதது ஏன்?



புது தில்லி , ஜூலை 30: இந்த ஒரு வருடத்தில் மட்டும் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தல் சம்பவம் என்பது, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் இன்றுதீப்பற்றியதுடன் நான்காவது சம்பவமாகும். ஆனாலும் ரயில்களில் தீ எச்சரிக்கைக் கருவிகள் ஏதும் பொருத்தப்பட வில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.இன்றைய தீ விபத்தில் 6 பெண்கள் 3 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் புவனேஸ்வரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை முயற்சியாக இத்தகைய தீ அலாரம் கருவி பொருத்தப்பட்டது. ஆனால், அது வேறு எந்த ரயில்களிலும் பின்பற்றப்படவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக