வியாழன், 5 ஜூலை, 2012

a blind student confidence -பார்வை போனாலும் தன்னம்பிக்கை போகவில்லை







சாத்தூர்:பார்வை இழந்தும், நம்பிக்கையுடன் பி.ஏ., பட்டம் பெற்ற இளைஞர், பி.எட்., படிக்க உதவி நாடி காத்திருக்கிறார். விருதுநகர் சாத்தூர் என்.சுப்பையாபுரத்தை சேர்ந்த கனகராஜ் மகன் செல்வக்குமார், 30; பார்வையில்லாதவர். தந்தை மரம் வெட்டும் வேலை செய்கிறார். செல்வக்குமார் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பார்வை இழந்ததால், தேர்வில் தோல்வியடைந்தார். பரிசோதனை செய்த டாக்டர்கள், "பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு செயல் இழந்ததாக' தெரிவித்துள்ளனர்.கண்கள் ஒளியிழந்த நிலையில், ஆசிரியை ஒருவரின் வழிகாட்டுதல்படி, மதுரை பார்வையிழந்தோர் சங்க உதவியுடன் படிப்பை தொடர்ந்தார். தற்போது. பி.ஏ., (தமிழ்) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பி.எட்., படித்து ஆசிரியராக வேண்டும் என்ற கனவுகளுடன் உள்ள செல்வகுமார் கூறியதாவது: நான்கு தலைமுறையாக உறவுகளுக்குள் திருமணம் நடந்ததால், நோய் பாதிப்பால் தவிக்கிறேன். இளகிய மனம் படைத்தவர்களின் உதவியால், பி.ஏ., தேர்ச்சி பெற்றேன். மேலும் படிக்க வசதியின்றி தவிக்கிறேன், என்றார்.

உதவ விரும்புவோர், 99442 59993, 99441 10753 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக