செவ்வாய், 3 ஜூலை, 2012

தலைமை அமைச்சர் ஆவதற்குச் சட்டப்படித்தகுதியானவராம் சோனியா - தடம் புரளும் கலாமின் பொய்ச்சான்று

பிரதமராவதற்கு  ச்சட்டப்படி த் தகுதியானவர் சோனியா:அப்துல் கலாம்

First Published : 03 Jul 2012 02:34:14 AM IST


நொய்டா, ஜூலை 2: பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என திங்கள்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என்றார் கலாம்.  நொய்டாவில் நடைபெற்ற மருத்துவமனை செவிலியர் மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக