ஒலிம்பிக் கனவை த் தகர்த்த வறுமை
பெங்களூரு,
ஜூலை 5 : இந்தியாவுக்காக ஆசிய போட்டியில் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற
கேரள வீரர்கள் இருவர் வெறும் 30,000 ரூபாய் இல்லாததால் இன்று இலங்கையில்
நடைபெறும் ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று
கூறியுள்ளனர்.இலங்கையில் இன்று துவங்கும் தகுதி போட்டிதான்
தாங்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான கடைசி வாய்ப்பு என்பதால்
பலரையும் உதவி கோரினோம். ஆனால் எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. விமான
டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் எங்களால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க
முடியவில்லை என்று இந்தியாவின் தடகள வீரர்கள் பி. குன்ஹுமொஹம்மத் (400
மீட்டர் ஓட்டம்), ஜோசப் ஆப்ரஹாம் (400 மீட்டர் தடையோட்டம்) ஆகிய
பிரிவுகளில் தங்கம் வென்ற வீரர்கள் தெரிவிக்கின்றனர்.லண்டன்
ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக பயிற்சி பெற்று வந்த இரு வீரர்களின்
பயிற்சியாளரான லிஜோ தோட்டன் கூறுகையில், பல்வேறு விளையாட்டு அமைப்புகளை
தொடர்பு கொண்டு இவர்களுக்கு உதவுமாறு கோரினோம். ஆனால் அனைத்து இடங்களில்
இருந்தும் சரியான பதில் வரவில்லை. இதுபோன்ற வீரர்களுக்கு அவசர காலத்தில்
உதவ அரசு முன் வரவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமாகும்.
இவர்கள் பல லட்சங்களைக் கேட்கவில்லை. வெறும் 30000 மட்டுமே கேட்டனர்.
இதனைக் கூட அளிக்க அரசு முன்வரவில்லை. நம் நாட்டில் விளையாட்டு அமைப்பில்
நிச்சயம் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மிகவும் வருத்தத்தோடு
கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக