www.Karka Nirka.org
நா.மோகன்ராஜ்
பதிவு செய்த நாள் : June 18, 2011முழுக்க முழுக்க “தமிழிலக்கியம்” தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் இணைய இதழ்களில் முதன்மையானதாக கருதப்படுவதில் கற்க நிற்க டாட் ஓஆர்ஜி குறிப்பிடத்தக்கதாகும். இதில் சங்க இலக்கியப் பாடல்களை அகம், புறம் எனும் பிரிவுகளில் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு பாடல்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் அளித்து பொருள் புரியாத சொற்களுக்கு அகராதி மூலம் சொல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து கட்டுரைகள் (Essays) பகுதியில் தமிழின் பெருமையை விளக்கும், ‘கமில் செவலபிள்’ போன்றோரின் ஆங்கிலக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. பழமொழிகள் (proverbs) எனும் தலைப்பில், பயன்பாட்டில் உள்ள பழமொழிகளுக்கு ஆங்கில விளக்கத்தோடு பொருள் கூறியுள்ளனர். அடுத்து சொற்களுக்கு பொருள்கூறும் அகராதி பகுதியும், நீதிக் கருத்துக்களை போதிக்கும் திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற அறநூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை எடுத்து பதிவு செய்துள்ளனர். அடுத்து ஆன்மிகம் பகுதியில், சித்தர் பாடல்கள், அருணகிரிநாதர், நம்மாழ்வார் போன்றோரின் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. ‘பிற’ பகுதியில் தமிழ் சினிமா பாடல்களில் பயன்படுத்தியுள்ள இலக்கிய வரிகளை குறிப்பிட்டுள்ளனர். இறுதியில் குறிஞ்சிப் பாட்டில் உள்ள 99 மலர்களும், ஆங்கிலப் பெயர் விளக்கத்தோடு அதன் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இணையத்தின் இடது பக்கத்தில் உ.வே. சாமிநாத அய்யர் போன்ற சில தமிழறிஞர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
வாசகர் கருத்துகள் (1)
அறிமுகத்திற்குப் பாராட்டுகள். ஆனால் வலை வரி பெரிய எழுத்துகளில் இல்லாமலும் இடைவெளி இல்லாமலும்karkanirka.org
என இருக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!