பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் கூட்டம்
First Published : 18 Jun 2011 01:06:08 PM IST
Last Updated :
கொழும்பு, ஜூன் 18- பிரிட்டன் நாடாளுமன்ற கட்டடத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.இலங்கையின் போர்க்குற்றம் குறி்த்த ஐநா நிபுணர் குழு அறிக்கை, சேனல் 4 தொலைக்காட்சியின் விடியோ, தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இக்கூட்டத்தில் பிரிட்டன் தொழிலாளர் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர் என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் கூறுகையில், "நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நாங்கள் பிரகடனப்படுத்தியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இவ்வாறு எங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தமிழர்களின் அரசுக்கு கிடைத்த மறைமுக அங்கீகாரமாகவே கருதுகிறோம்." என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக