தமிழர்கள் மீது கருத்து செலுத்தாத காங்.அரசுடன் ஒட்டி உறவாடத் துடித்ததன் மூலம் தனக்கும் தமிழர்கள் மீது பற்றோ பரிவோ இல்லை என்பதை ஒத்துக் கொண்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!
தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையே இல்லை: ஜெயலலிதா
First Published : 25 Mar 2011 03:43:40 PM IST
Last Updated : 25 Mar 2011 03:46:12 PM IST
சென்னை, மார்ச் 25- தமிழர்கள் மீது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு அக்கறையே இல்லை என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள வீரேஸ்வரத்தில் அவர் நேற்று பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.அவர் பேசியதாவது:கடந்த ஐந்து ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு, நீங்கள் ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இதில் உங்களை வெகுவாக பாதித்துள்ள பிரச்சினை விலைவாசி உயர்வு. விலைவாசியை கட்டுப்படுத்த கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? நிச்சயமாக இல்லை. மாறாக விலைவாசி உயர வழி வகுத்தார். அரிசிக் கடத்தலை ஊக்குவித்தார். பதுக்கலுக்கு பக்கபலமாக இருந்தார். டீசல், காஸ் விலை உயர காரணமாக இருந்தார். மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு ஆதரவு அளித்தார். பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள உறுதுணையாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மணல் கொள்ளை தமிழ்நாடு முழுவதும் அமோகமாக நடைபெற்றது. இன்னமும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.இந்தியாவிலேயே மக்கள் பணத்தை சுருட்டி தன் மக்களை கோடீஸ்வரர்களாக ஆக்கிய ஒரே முதலமைச்சர் கருணாநிதி தான். ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காலாவதியான மருந்து விநியோகம், விற்பனை, கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என பல வழிகளில் கருணாநிதி குடும்பத்திற்கு பணம் சென்று கொண்டே இருக்கிறது. அனைத்து அரசுத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், என்ற எண்ணம், கருணாநிதிக்கு அடியோடு இல்லை. கபட நாடகங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. கருணாநிதியால் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்யக் கூட முடியவில்லை.தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த கருணாநிதியால் முடியவில்லை. மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகம் மூலம் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களை அழித்தது தான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனை. இவற்றிற்கெல்லாம் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழர்கள் மீது அக்கறையே இல்லாத அரசு மத்திய காங்கிரஸ் அரசு. அருள்மிகு ரங்கநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழுகின்ற மக்கள், அவர்களுடைய நிலத்தை விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளதை நான் அறிவேன். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பதையும்;மழைக் காலங்களில் ஸ்ரீரங்கம் நகருக்கு ஏற்படும் வெள்ள அபாயத்தைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பதையும் ; வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருள்மிகு ரங்கநாதரை தரிசிக்க வருவதால் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதையும் உங்களுக்கு வாக்குறுதியாக அளிக்க விரும்புகிறேன். ஸ்ரீரங்கம் தான் எனது பூர்வீகம். ஸ்ரீரங்கத்திற்கு வருகின்ற போது எனது வீட்டிற்கு வருகின்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. எனது முன்னோர்கள், எனது முதாதையர்கள் இதே ஸ்ரீரங்கத்தில் தான் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள். வாழ்ந்தார்கள். இப்போது நானும் உங்களில் ஒருத்தியாக இருக்க இங்கேயே வந்துவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள்
By bala
3/25/2011 9:08:00 PM
3/25/2011 9:08:00 PM
By dinesh
3/25/2011 8:13:00 PM
3/25/2011 8:13:00 PM
By கரிகாலன்
3/25/2011 7:23:00 PM
3/25/2011 7:23:00 PM
By Nagarajan
3/25/2011 6:40:00 PM
3/25/2011 6:40:00 PM
By அப்துல் ரெஹ்மான் ச
3/25/2011 5:52:00 PM
3/25/2011 5:52:00 PM
By RAVIRAJMOHAN
3/25/2011 5:34:00 PM
3/25/2011 5:34:00 PM
By s.mani kandan
3/25/2011 5:14:00 PM
3/25/2011 5:14:00 PM
By தமிழன்
3/25/2011 3:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/25/2011 3:53:00 PM