புதன், 26 ஜனவரி, 2011

thamaraithiru (padmasree) award to Dr.Avvai Natarasan: ஔவை நடராசனுக்கு பத்மசிரீ

தமிழறிஞருக்குத் தாமரைத்திரு விருது அளிப்பது மகிழ்ச்சி. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

எஸ்பிபிக்கு பத்ம பூஷண், அவ்வை நடராஜனுக்கு பத்ம ஸ்ரீ

First Published : 25 Jan 2011 06:40:31 PM IST

Last Updated : 25 Jan 2011 07:08:08 PM IST

புதுதில்லி, ஜன.25: மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பராசரண் கேசவ அய்யங்கார், அசிம் பிரேம்ஜி, மாண்டேக் அலுவாலியா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படுகின்றன. திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம பூஷணும், தமிழ் அறிஞர் அவ்வை நடராஜனுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.மொத்தம் 13 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 31 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 84 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2008-ம் ஆண்டில் ஹிந்துஸ்தானி பாடகர் பீம்சென் ஜோஷிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.தற்போது விருது பெற்றிருப்பவர்கள் விவரம்பத்ம விபூஷண்
  • பராசரண் கேசவ அய்யங்கார்
  • பிரஜேஷ் மிஸ்ரா
  • அசிம் பிரேம்ஜி
  • மாண்டேக் சிங் அலுவாலியா,
  • கபிலா வாத்ஸ்யாயன்
  • ஹோமை வியாரவாலா
  • விஜய் கேல்கர்
  • பல்லே ராமா ராவ்
  • எல்.சி.ஜெயின்
  • சீதாகாந்த் மஹாபத்ரா
பத்ம பூஷண்
  • வஹீதா ரஹ்மான்
  • சி.வி.சந்திரசேகர்
  • எஸ்.பி.பாலசுப்ரமணியன்
  • எஸ்.ராமச்சந்திரன்.
  • ஷ்யாம் சரண்
பத்ம ஸ்ரீ
  • எம்.கே.சரோஜா
  • ஜெயராம் சுப்ரமணியம்
  • எஸ்.ஆர்.ஜானகிராமன்
  • சிஎன்ஆர் ராகவேந்திரன்
  • மெக்கா ரபீக் அகமது
  • கைலாசம் ராகவேந்திர ராவ்
  • சிவபாதம் விட்டல்
  • அகமது அலி
  • அவ்வை நடராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக