புதன், 19 மே, 2010

தமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடத்த வலியுறுத்தல்

தமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடத்த வலியுறுத்தல்

பவானி, மே 17: கோயில்களில் நடைபெறும் வழிபாட்டை தமிழ் மொழியில் தமிழர்களின் தமிழ் நெறிப்படி ஆகம வழிபாடு நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பவானியில் நடைபெற்ற தெய்வத் தமிழ் மூன்றாவது மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானியில் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் உள்பட 100 ஐம்பொன் திருமேனிகள் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தெய்வத் தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலையில் தமிழ் வழியில் அர்ச்சகர் பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டதற்கு பாராட்டும், தமிழ் வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. தமிழர்கள் தாய்மொழியான தமிழ் நெறிப்படியே வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வடமொழி வழிபாடாகவும், யாகம் சார்ந்த வழிபாடாகவும் உள்ள கோயில் வழிபாட்டை மாற்றி, ஆகம வழிபாடு தமிழர்களின் தமிழ்நெறி வழிபாடு என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நிகழ்ச்சியில், பவானி சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளைத் தலைவர் அ.தியாகராஜன் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ, சென்னை தமிழ் வழிபாட்டு மையத் தலைவர் மு.பெ.சக்திவேல் முருகனார், பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் குணசேகரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பேசினர். மேலும், வாழ்வியல் சடங்கு என்ற தலைப்பில் பெங்களூர் மதன்முரளி, கல்வியில் தமிழ் என்ற தலைப்பில் மணிவாசகர் அருட்பணி மன்றத் தலைவர் சென்னியப்பனார் உள்ளிட்டோர் சிறப்புறையாற்றினர். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், பூம்புகார் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணிவாசக்ர் அருட்பணி மன்றச் செயலர் குமாரலிங்கம் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

தமிழக மக்களின் வழிபாட்டுரிமைகளை ஆரிய நோக்கில் பார்த்துத் தீர்ப்பு கூறுவது நிறுத்தப்பட வேண்டும். அரசு தமிழர்கள் தம் தாய்மொழியில் தன்னைத்தமிழில் பாடுமாறு வேண்டிய இறைவனை வணங்குவதே முறை என்பதைத் தெளிவாக விளக்கி அனைத்துக் கோயல்களிலும் தமிழ் வழிபாடு மட்டுமே நடைபெற வகை செய்ய வேண்டும். மக்கள் விருப்பத்தில் குறுக்கே நிற்க உச்ச நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என்பதை உணர்த்தி வரும் மாநாட்டு நாளுக்கு முன்னராக மற்றொரு அவசரச்சட்டம் மூலம் தமிழ் வழிபாடு மட்டுமே தமிழ் நாட்டில் இருக்க வகை செயய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 4:46:00 AM

Kadavulae illai enbavan marrum pagutthari partri pesupavan mattumae kovilil evvaru archanai martrum poojai seiyavendum endru pesuvan. Aanal avan churchkalil aangila/french padalkal padi vazhipaduvathaiyo alladhu masoothikalil arbia mozhikalil othuvathiyo patri pesuvatharkku thunivillatha mundangal.

By kovilnesan
5/18/2010 10:32:00 PM

Why not change the Gods themselves as Karunanidhi, Stalin, Alagiri, Kanimozhi, Dhayalu, Kushbu, Jayalalitha (sorry this name is already vadamozhi sami) etc. etc. and make all the DMK MLAs and MPs as archakas so that they can get additional income by chanting potri thirunamamgal, besides their existing jobs at Parliament and Assembly praising the Tamil Gods?! The Christian Fathers will also join hands happily!!(e.g. praising of Kanimozhi by a Father)

By Sambirani
5/18/2010 5:50:00 PM

It is long since I have stopped going to temples in Tamilnadu. I pray in my house itself, which is more convenient and calm to concentrate. If each and every bakthan starts this way, there wont be any problem at all. Gods will be happier. Here one thing everybody should understand - the hyms are more important in worshipping.

By Annonymous
5/18/2010 5:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

2 கருத்துகள்:

  1. இவர்கள் உண்மையிலேயே சிவனடியார்களா ? இல்லை சிவனடியார்கள் வேடம் கொண்டுள்ள தி.க வினரா?
    தமிழில் வேள்வி என்ற கொள்கை இந்து மதத்தை மொழியால் பிரித்தாளும் சூழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. மக்கள் தங்கள் தாய் மொழியில் இறைவனை வணங்க வேண்டும் என்பது தவறா?
    தம்மைத் தமிழில் பாடுமாறறு இறைவன் சொன்னதால் தமிழில்பாடியதாக நம் மு்ன்னோர் சொன்னவற்றை அறியாதவரா நீங்கள்?
    தென்னாடுடைய இறைவனின் பெயர்தான் உங்கள் பெயர் எனில் தமிழ் வழிபாட்டைப் போற்றுவீர்!
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    பதிலளிநீக்கு